ஆகஸ்ட் 22, 2010

நண்பர்களே செய்வீர்களா ?

இதை இந்தப் பதிவில் படித்தேன்.

பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..

பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.

பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....

அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:

தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

பிரபல பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...

இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..

இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம். எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...

செய்வீர்களா நண்பர்களே.!!!!


அன்புடன் எல்கே

36 கருத்துகள்:

asiya omar சொன்னது…

நானும் இந்த மெயில் பார்த்தேன் எல்.கே.நிறைய பேருக்கு ஃபார்வேர்ட் செய்தேன்,அந்தக்ககுழந்தையின் படத்தையும் சகோ . இணைத்து இருக்கலாமே.

துளசி கோபால் சொன்னது…

அடப் பாவமே:(

Kousalya சொன்னது…

பெற்ற மனம் ஒரு இடத்தில் தவிக்க...இந்த குழந்தை, பெற்றவளை எண்ணி தவிக்க...?! :((

ஒரு சிலரின் சுயநலத்திற்கு இந்த மாதிரி ஒன்றும் அறியா குழந்தைகள் பலியாகுவது துயரம்..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நன்றி கார்த்திக்...!

அருண் பிரசாத் சொன்னது…

கண்டிப்பாக பாஸ்

சுசி சொன்னது…

பிள்ளையாரே.. பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

கலாநேசன் சொன்னது…

about one year back, i received the same mail and forwarded to all.

Maduraimohan சொன்னது…

நிச்சயம் என்னால் ஆனா உதவிகளை செய்கிறேன் :)

வானம்பாடிகள் சொன்னது…

கண்டிப்பாக கார்த்திக்.

சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக பகிர வேண்டும். ஒரு தாயின் வேதனையும்... ஒரு சேயின் வலிகளும் விரையில் தீர இறைவனை பிரார்த்திப்போம்.

மதுரை சரவணன் சொன்னது…

குழந்தையின் புகைப்படம் இருப்பின் விரைவில் நாம் கண்டுபிடித்து கொடுக்க முடியும்... பகிர்வுக்கு நன்றி. ப்திவுலகம் இது போன்று நன்மைகள் புரிவதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

oh sad, I support this

ஜெய்லானி சொன்னது…

எனக்கு ””நான் கடவுள் படம்””தான் நினைவுக்கு வருது . ச்சே..எப்படிதான் மனசு வருதோ....!!

GEETHA ACHAL சொன்னது…

என்ன கொடுமை...சீக்கிரம் குழந்தை பெற்றோருடன் சேர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்...நன்றி...

முகிலன் சொன்னது…

எல்.கே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டீர்களா? சில நேரங்களில் தவறான செய்தியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள்.

நான் என் பதிவில் உங்கள் பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி தேவை.

Kousalya சொன்னது…

ithai en thalaththil podukiren.

http://kousalya2010.blogspot.com/2010/08/blog-post_23.html

LK சொன்னது…

@தினேஷ்

தாராளமாய் தொடருங்கள். இது நண்பர் வசந்தின் பதிவில் இருந்து தொடர்கிறது

@கௌசல்யா

தொடர்ந்ததற்கு :))

Chitra சொன்னது…

May God bless her to reunite with her family.

சௌந்தர் சொன்னது…

நிச்சயம் செய்வோம்

அமைதிச்சாரல் சொன்னது…

இதை நான் என் பதிவில் காப்பி பேஸ்ட் செஞ்சுக்கலாமா?? அனுமதி தேவை.

Jaleela Kamal சொன்னது…

படிக்கும் போது வேதனையா இருக்கு
சீக்கிரம் அந்த குழந்தை பெற்றோருடன் சேர ஏக வல்ல ஆண்டவனை வேண்டுவோம்.

LK சொன்னது…

@saaral

anumathi ellam etharkku, post podunga

Sriakila சொன்னது…

இதை ஜெயந்த் (வெறும்பய) அவர்களும் எனக்கு அனுப்பியிருந்தார். அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்திருக்கிறேன்.

ரமேஷ் சொன்னது…

இது குறித்து உண்மையான தகவல்களை அறிய இந்த இணைப்பைப் பாருங்கள் நண்பரே

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_23.html

கீதா சாம்பசிவம் சொன்னது…

துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்..//

அவனும் இப்படிக் கடத்தி வரப்பட்டுப் பிச்சைக்காரனா ஆனவனோ என்னமோ! :( மனசுக்கே வேதனையா இருக்கு. என்னோட பதிவிலேயும் போடறேன். இதை உங்க பதிவுக்கு வரதை விட அங்கே கம்மிதான் என்றாலும் இங்கே பார்க்காதவங்க அங்கே பார்க்க முடியுமே!

LK சொன்னது…

அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு வதந்தி என்பது இப்பொழுதுதான் தெரிந்தது. அனைவரையும் சிரமப் படுத்தியதற்கு மன்னியுங்கள் ....

பெயரில்லா சொன்னது…

பூஜா சீக்ரமா அவ அம்மா அப்பா கிட்டேசென்று அடைய கடவுள் கிட்டே பிரார்த்தனை பண்ணறேன் ...

ரமேஷ் சொன்னது…

நண்பரே இது உண்மையான தகவல் அல்ல..இது குறித்து விபரம் அறிய...இந்த இணைப்பைப் பாருங்கள்...

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_23.html

dheva சொன்னது…

We can pray to the God Boss.....

and really appreciated your concern....!

ஹேமா சொன்னது…

உண்மையா இப்பிடி...கார்த்திக் !

மங்குனி அமைசர் சொன்னது…

அந்த குழந்தைக்கு நல்லது நடக்கும் சார்

அப்பாவி தங்கமணி சொன்னது…

ச்சே.... எப்படி தான் மனசு வருதோ இப்படி பிள்ளைகள பிச்சை எடுக்க செய்ய.. பிள்ளை பெற்றோரிடம் சேர ஆண்டவனை வேண்டுகிறேன்...

சேட்டைக்காரன் சொன்னது…

நண்பரே!

இது ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த செய்தி! இன்னும் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாதபோதிலும், அந்தக் குழந்தை பெரிய மனது கொண்ட ஒரு தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு....

http://www.hoax-slayer.com/105-17.shtml

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

பிள்ளையை பிரிந்த தாய் மனது எப்படி தவிக்குமோ.. சே.. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. குழந்தையை கடத்திய கயவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?...

கண்டிப்பாக எல்லோரும் உதவி செய்யமுன் வரவேண்டும்..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

குழந்தை விசயத்துல கூட விளையாடுகிறாங்களே.. என்ன மனுசங்க.. நானும் இதை உண்மையென நம்பி பதிவு வெளியிட்டேன். பின்னர் உண்மையறிந்து உடனே டெலிட் செய்துவிட்டேன்..

ஸ்ரீராம். சொன்னது…

ஓ...பதிவைப் பார்த்து உணர்ச்சி வசப் பட்டு பின்னர் பின்னூட்டங்கள் படித்துத் தெளிந்தேன்...