ஆகஸ்ட் 11, 2010

கடவுளும் நானும்


எச்சரிக்கை : இந்தப் பதிவு கடவுளை பற்றிய எனது எண்ணங்கள். கடவுள் இருக்கிறாரா என்ற தேடலோ இல்லை அதை நிரூபிக்கும் முயற்சியோ அல்ல. ஏனென்றால் . இருக்கின்ற ஒன்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகவரிகள் இல்லாதோர் இங்கு பின்னூட்டம் இட இயலாது. விவாதம் செய்ய விருப்பம் இருந்தால் முகவரியுடன் வரவும் .

 பதிவுலத்தில் எனக்குக் கிடைத்த அக்கா அப்பாவி தங்கமணி இந்த பதிவை எழுத அழைத்தார். அவருக்கு ஒரு நன்றி .

முதலில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம். எனது அக்கா சென்னைக்கு வந்து நங்கநல்லூரில் வசித்த சமயம். கல்லூரி விடுமுறையில் இங்கு வந்த நான், எனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றேன். மாலை நேரம். வழக்கம் போல் கோவிலில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. வலம்வந்து ஆஞ்சநேயரை வணங்கியப்பின் , அங்கு இருந்த ஆஞ்சநேயர் படத்திற்கு முன் தியானம் செய்ய அமர்ந்தேன். கண்மூடி அமர்ந்த சிறிது நேரத்தில் , யாரோ இராமாயணத்தில் வரும் முக்கிய பகுதியான சுந்தர காண்டத்தை சொல்வது போல் உணர்ந்தேன். மிகத் தெளிவாக , எந்த விதமான ஓசைகளும் இல்லாமல் , அந்த சுந்தரகாண்டம் மட்டுமே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் , கோவிலில் எந்த விதப் பாராயணமும் நடை பெறவில்லை, அருகிலும் யாரும் இல்லை. நான் தியானம் செய்த பொழுது ஒலித்த குரல் யாருடையது ?? ஏன் அந்த சமயம் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும். இதற்குப் பிறகு இன்று வரை இத்தகைய அனுபவம் எனக்கு நேரவில்லை. மீண்டும் ஒரு நாள் நேரலாம். அதற்கு அந்த ஆண்டவன் அருள் வேண்டும்.

எப்பொழுது கடவுளை வணங்க ஆரம்பித்தேன் ?? சிறு வயதில் எனது தாயார்தான் எனக்கு முதலில் சிறு ஸ்லோகங்களை சொல்லித் தந்தார். பிறகு, தினமும் எனது தந்தை வீட்டில் செய்யும் பூஜைகள் மூலம் இறை வழிபாடு பயின்றேன் . எனது தாய் வழி தாத்தா இந்த பூஜை விஷயங்களில் மிகக் கண்டிப்பானவர். விடுமுறைகளில் அவரிடம் பயின்றது அதிகம் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், ராமரை வணங்கி விட்டு செய்வது எனது பாட்டியின் பழக்கம்(அம்மாவின் அம்மா ). மேலும், எனது பெரிய தாத்தா வீட்டில் வருடா வருடம் நடைபெறும் சீதாக் கல்யாண உற்சவம் மற்றும் ராதாக் கல்யாண உற்சவங்கள் என்னை ஈர்த்தன . அப்பொழுது அவை ஒரு விழா என்ற அளவிலே எனைக் கவர்ந்தாலும் , போகப் போக அவற்றின் உண்மையான தத்துவம் பிடிபட ஆரம்பித்தது. இதற்கு எனது மாமா உதவினார். இப்படி ஒரு சூழலில் இருந்ததால், எனக்கு இயல்பாகவே கடவுளிடம் பிடிப்பு அதிகம்.

எல்லோருக்கும் பிள்ளையாரை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். எனது இஷ்ட தெய்வம் என்று கேட்டால் , ஆஞ்சநேயர்தான். பள்ளி காலத்தில் இருந்தே இராமதாசனிடம் எனக்கு பக்தி அதிகம். நான் வளர வளர, அதுவும் வளர்ந்து , அவர் ஒரு நண்பன் போல் இன்று இருக்கிறார். மிகக் குழப்பமான சமயங்களில் அவரிடம் ஒரு நண்பனிடம் புலம்புவது போல் புலம்புவேன். பிறகு மனது ஒரு தெளிவு பெறும். இன்று வரை கடவுளிடம், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டதில்லை.
படைத்தவனுக்குத் தெரியாதா எதை எப்பொழுது தர வேண்டும் என்று ? .


வேலைகிடைக்கும் முன் வீட்டில் இருந்த தருணம், இறை வழிபாட்டின் வேறு ஒரு அங்கத்தையும் கற்றேன். கோவிலில் இறைவனை பூஜை  செய்ய வாய்ப்பு கிடைத்த தருணம் அது. எனத்து தந்தை தர்மகர்த்தாவாக இருந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில நாட்களில், அப்பொழுது இருந்த அர்ச்சகர்கள் சில காரணங்களால் பூஜை செய்ய இயலாத நிலை. எனவே அந்த காலத்தில் கோவிலில் பூஜை செய்தேன். இது எனக்கு கிடைத்த அரும் வாய்ப்பு என்றுதான் சொல்வேன்.  அதன் மூலம் ஒரு சில நல்ல உணர்வு பூர்வமான அனுபவங்கள் கிடைத்தன.

இப்பொழுது நேரம் கிடைத்தால் கோவிலுக்கு செல்கிறேன். இல்லையேல் வாயிலில் நின்று வணங்கி விட்டு சென்றுவிடுவேன். மற்றபடி தினமும் காலையில் செய்யும் பூஜை மட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே பல தொடர் பதிவுகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இதை தொடர நான் யாரையும் அழைக்கவில்லை. யாருக்கு விருப்பம் இருந்தாலும் தொடரலாம்.

பின்குறிப்பு : தம்பி சௌந்தர் சில விஷயங்களை அவரது பதிவில் கேட்டிருந்தார். அதை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றுகொன்று சங்கிலியாக செல்லும் என்று தோணியதால் அதை இங்கு எழுதவில்லை. சந்தர்ப்பமும், இறைவன் அருளும் இருந்தால் பிறிதொரு தருணத்தில் அதை பகிர்வேன்.


என்னடா இவன் சிறிது காலம் என்று சொல்லி விட்டு ஒரு வாரத்திற்குள் வந்து விட்டானே என்று நினைக்கிறீர்களா ? தேடிய வீடு கிடைத்து விட்டது. இன்னும் இரு வாரத்தில் அங்கு குடி போவேன் . அந்த சமயம் மீண்டும் ஒரு விடுமுறை உண்டு.


அன்புடன் எல்கே

68 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

நல்ல பகிர்வு...

மனதில் உள்ளவற்றை அப்படியே கூறியிருகிறீர்கள்

சௌந்தர் சொன்னது…

கோவிலில் இருக்கும் அமைதி அனைவருக்கும் புடித்த ஒன்று...

அருண் பிரசாத் சொன்னது…

கடவுள் பற்றி உங்கள் கருத்து அருமை. அவரை விவாதப்பொருளாக மாற்ற விரும்பாதது வரவேற்கதக்கது.

வாழ்த்துக்கள். மனதில் தோன்றியதை சொல்லி இருக்கிறீர்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

உங்கள் கருத்துக்கள் ஒரு தேர்ந்த மனிதனின் இதயத்தில் இருந்து வந்துள்ளது. யார் என்ன சொன்னாலும், உங்களுக்கு சரியென பட்டதை சொல்லியுள்ளீர்கள்.

பெயரில்லா சொன்னது…

"எச்சரிக்கை : இந்தப் பதிவு கடவுளை பற்றிய எனது எண்ணங்கள். கடவுள் இருக்கிறாரா என்ற தேடலோ இல்லை அதை நிரூபிக்கும் முயற்சியோ அல்ல. ஏனென்றால் . இருக்கின்ற ஒன்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகவரிகள் இல்லாதோர் இங்கு பின்னூட்டம் இட இயலாது. விவாதம் செய்ய விருப்பம் இருந்தால் முகவரியுடன் வரவும் ."

ரொம்ப சரியா சொன்னிங்க கார்த்தி ...மிருகங்கள்கு தான் கடவுள் இருக்கா இல்லையா ன்னு தெரியாது .மனுஷ்யர்கள் நாம நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கறது உணர்ந்தே ஆகணம் ..ஆஞ்சநேயர் கோவிலில் உனக்கு நேர்ந்த அந்த அனுபவம் வாசிச்சு கண்ணுல ஜலம் வந்திடச்சு .

அருமையானா பதிவு ..இன்னும் இதேபோல நிறையை பதிவுகள் எழுத அன்புடன் வேண்டி கொள்கிறேன் ..
கார்த்தி உன்னே போல ஒரு நண்பன் எனக்கு கிடைத்ததில் நான் ரொம்ப லக்கி தான்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கவலை வேண்டாதது என்பதில் தெளிவு இருப்பதை தெளிவாக கூறியதில் மகிழ்ச்சி. நல்ல பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.

ஜெய்லானி சொன்னது…

நல்ல பதிவு :-)

VELU.G சொன்னது…

உங்கள் அனுபவங்களை ரசித்தேன்

பகிர்வுக்கு நன்றி

Jey சொன்னது…

:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

:)

கீதா சாம்பசிவம் சொன்னது…

அருமையாய் இருக்கு, அழகாயும், சுருக்கமாயும், பளிச்சுனும் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. செளந்தர் பதிவையும் பார்க்கிறேன்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

padichen, Soundhar solli iruppathum.

http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_14.html

http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_762.html
\meele koduthirukkum irandu postleyum parkkavum. kudiya varai logical vilakkam kodukka muyanRirukkiren. nanri. and this also is not for debating. just to know, that is all.

Balaji saravana சொன்னது…

//படைத்தவனுக்குத் தெரியாதா எதை எப்பொழுது தர வேண்டும் என்று ? .//
இந்த மன முதிர்வு தான் வரமாட்டேன் என்கிறது எனக்கு..
மிக நல்ல பதிவு LK :)

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

அத்தனை கருத்துக்களும் தங்களின் ஆழ்ந்த நம்பிக்கையயின் வெளிப்பாடாகவே தெரிகிறது,அதனால் இங்கு விவாதிக்க விரும்பவில்லை

மனதில் உள்ளதை அப்படியே வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் சார் :)

dheva சொன்னது…

ஆழமான உங்களின் நம்பிக்கையையும் அதை அழகாக சொல்லியிருக்கும் விதமும் அழகு பாஸ்!

வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

@வெறும் பய

எப்பவுமே அப்படிதான்

LK சொன்னது…

@வெறும் பய

எப்பவுமே அப்படிதான்

LK சொன்னது…

@சௌந்தர்
சரியாக சொன்னீர்கள்

LK சொன்னது…

@அருண் பிரசாத்

அவரை பற்றி விவாதிக்க நாம் முதிர்ச்சி அடையவில்லை என்பது என் எண்ணம்
நன்றிங்க

LK சொன்னது…

@சந்தியா

நன்றி தோழி

LK சொன்னது…

@வெங்கட்

நன்றி வெங்கட்

LK சொன்னது…

@ஜெய்
ஓகே தல

@வேலு
நன்றிங்க

LK சொன்னது…

@ஜெய் / டெரர் பாண்டியன்

நன்றிங்க

LK சொன்னது…

@கீதா மாமி

நன்றி மாமி. இன்னும் சில விஷயம் எழுதனும்னு மனசுல இருக்கு ஆனால் அவை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது எங்கோ . அதனால் நிறுத்தி விட்டேன். அந்த இரண்டும் நான் படித்து இருக்கிறேன்

LK சொன்னது…

@பாலாஜி

கண்டிப்பாக வரும். முயற்சி செய்யுங்கள்

@யோகேஷ்
நன்றிங்க

@தேவா

நன்றி பாஸ்

ப.செல்வக்குமார் சொன்னது…

//இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டதில்லை.///
இங்கேதான் நாத்திகர்கள் வேறுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..
அவர்கள் தான் கேட்டது கிடைக்கவில்லை .. அதலால் கடவுள் இல்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள் ..! உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா ..!!

சுசி சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க கார்த்திக்..

எனக்கு நம்பிக்கை இருக்கு.. கடவுள் என்பது ஒரு சக்தி.

Riyas சொன்னது…

//ஏனென்றால் . இருக்கின்ற ஒன்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை//

உண்மைதான்.. நல்ல பதிவு

Padmanaban சொன்னது…

really a good one

தெய்வசுகந்தி சொன்னது…

எண்ணங்களை அழகா எழுத்துல கொண்டு வந்துருக்கீங்க!!
//படைத்தவனுக்குத் தெரியாதா எதை எப்பொழுது தர வேண்டும் என்று ? .//

இதேதான்.. நானும் கோவிலுக்கு போய் எதுவும் கேட்டதில்லை.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல முதிர்ச்சியான எழுத்து எல்.கே. எனக்கும் சிலசமயங்களில் குழப்பமான மனநிலையில் இருந்தால் கடவுளுடன் டூ விட்டுடுவேன். அப்புறம் சமாதானமாகிடுவேன் :-)))))

ஸ்ரீராம். சொன்னது…

இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. என் நண்பர் ஒருவர் மைலாப்பூர் பாபா கோவிலில் பாபா அவரை கண் திறந்து ஒருமுறை பார்த்தது போல இருந்தது என்று சொல்லி உள்ளார். நானும் போய் பார்த்தேன். என்னை கண் திறந்து பார்க்க பாபா மறுத்து விட்டார்.

jothi சொன்னது…

//அவர் ஒரு நண்பன் போல் இன்று இருக்கிறார். மிகக் குழப்பமான சமயங்களில் அவரிடம் ஒரு நண்பனிடம் புலம்புவது போல் புலம்புவேன். பிறகு மனது ஒரு தெளிவு பெறும்.//

உங்களின் நம்பிக்கையை அழகாக எழுதி இருக்கீங்க ..எல்லோரும் கடவுளை நண்பனாக, ஆசானாக,இன்னும் எத்தனையோ விதங்களில் வைத்து வழிபடுகிறோம் ...நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்..

அபி அப்பா சொன்னது…

அழகா தெளிவா சொல்லியிருக்கீங்கப்பா! அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ரொம்ப நல்லா இருக்கு பதிவு. கீதாம்மா கருத்தை ஒத்து போகிறேன்!

Gayathri சொன்னது…

கண்டிப்பா உங்களுக்கு அந்த கடவுள் எப்போதும் துணை இருப்பார்...இறைவனை பற்றிய விஷயங்கள் மனிதனுக்கு அப்பாற்பட்டவை...அந்த சுந்தரகாண்டம் பற்றிய நிகழ்வு என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது...
கடவுள் நம்பிக்கை பற்றிய சர்ச்சையை தவிர்தமைக்கு மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...

vanathy சொன்னது…

எல்கே, நல்ல பதிவு.
அப்பாடா நீங்கள் யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை. எல்கே வாழ்க!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

மாறுபட்ட விதத்தில் உங்களின் எண்ணங்களை மிகவும் சிறப்பாக பதிவு செய்திருக்கும் விதம் சிறப்பு .

Kousalya சொன்னது…

//இன்று வரை கடவுளிடம், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டதில்லை.
படைத்தவனுக்குத் தெரியாதா எதை எப்பொழுது தர வேண்டும் என்று ? .

இது தெரியாமல் தான் பலர் இருக்கிறார்கள்...

"முண்டி அடித்து கோவிலுக்கு சென்று
கடவுளிடம் வேண்டினான்
வெளியே கழட்டி வைத்துள்ள
என் செருப்பை காப்பாற்று..."

இப்படித்தான் இருக்கிறது பலரின் பக்தி..

கலாநேசன் சொன்னது…

நல்ல பதிவு

பத்மநாபன் சொன்னது…

மிக சுருக்கமாகவும் ,தெளிவாகவும் உங்களுக்கே உரித்தான கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.அனுபவங்கள் நிச்சயம் ஒருவருக்கொருவர் மாறும்.

அதை எப்படி நேர்மறையாக எடுத்துகொள்கிறோம் என்பதில் தான் அமைதி,ஒற்றுமை எல்லாம் அடங்கி இருக்கிறது

siva சொன்னது…

முகவரிகள் இல்லாதோர் இங்கு பின்னூட்டம் இட இயலாது. விவாதம் செய்ய விருப்பம் இருந்தால் முகவரியுடன் வரவும் --

puriavillai..

LK சொன்னது…

@செல்வக்குமார்

அப்படியும் இருக்கலாம் தம்பி. நன்றிங்க

LK சொன்னது…

@சுசி

பாராட்டுக்கு நன்றி

LK சொன்னது…

@ரியாஸ்
நன்றிங்க

LK சொன்னது…

@பத்மநாபன்
முதல் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

LK சொன்னது…

@தெய்வசுகந்தி

நன்றிங்க. கேட்காமலேயே தருவான் அவன்

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க . நண்பராகிவிட்டால் இதெல்லாம் சகஜம்

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

என்னை கிண்டல் பண்ணுகிறீர்களோ ??

LK சொன்னது…

@ஜோதி
நன்றி நண்பரே

LK சொன்னது…

@ஜோதி
நன்றி நண்பரே

LK சொன்னது…

@அபி அப்பா

நன்றி அண்ணா

LK சொன்னது…

@காயத்ரி
சர்ச்சை தேவையற்றது என்று எண்ணினேன்

LK சொன்னது…

@வாணி
ஓ அப்படி எல்லாம் விட மாட்டேன். அடுத்து வேற ஒரு பதிவு காத்திருக்கு உங்களுக்கு

LK சொன்னது…

@ஷங்கர்
நன்றிங்க

LK சொன்னது…

@கௌசல்யா

உண்மைதான். என்ன பண்ண ?

LK சொன்னது…

@கலா நேசன்
நன்றிங்க

LK சொன்னது…

@பத்மநாபன்

சரியாக சொன்னீர்கள்

LK சொன்னது…

@சிவா
பெயரில்லாமல் அனானியாக வந்து பேசுபவர்களுக்கு அது

சேட்டைக்காரன் சொன்னது…

கடவுள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்வது ஃபேஷனாகி விட்ட காலத்தில், இப்படியொரு இடுகை எழுதியதற்கே உங்களைப் பாராட்ட வேண்டும் நண்பா! :-)

LK சொன்னது…

நன்றி சேட்டை எனக்குத் தெரிந்த ஒரு சில பதிவுலக நண்பர்களே அப்படித்தானே இருக்கின்றனர்.. ஒன்றும் செய்ய இயலாது

virutcham சொன்னது…

கடவுள் நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள் என்று பிரகடனப் படுத்தும் இந்த பதிவுலகில் ரொம்ப எளிமையா உங்கள் உணர்வுகளை சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.
எனக்கும் சிறிதும் பெரிதுமான சில அனுபவங்கள் உண்டு. எழுதிவிடவே நினைக்கிறேன். கொஞ்சம் சோம்பல்.
வேறு ஒரு context ல் எழுதி வைத்து இருக்கும் http://www.virutcham.com/?p=1110 இது கூட என் நம்பிக்கை சார்ந்ததே என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்ளவதில் மகிழ்ச்சி

ஸ்ரீராம். சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

என்னை கிண்டல் பண்ணுகிறீர்களோ ?//

நிச்சயமாக இல்லை கார்த்திக்... என் அனுபவத்தை நகைச்சுவை கலந்து சொன்னேன். அவ்வளவுதான்.

Mitr Friend - Bhushavali சொன்னது…

Reminds me of one of my trips to the lonely Uthiyur Hills. No one was around in heck of the place until an old man came along to be with us throughtout!!! Should I even say, he was God himself!!!

A trip New Delhi to Chandigarh
Office Outfit - Style 15

LK சொன்னது…

@விருட்சம்

கடவுள் என்று சொல்லுவது அவர்கள் உரிமை. ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை திட்டுவது கிண்டல் அடிப்பது தவறு.
உங்கள் பதிவை பார்க்கிறேன்

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா
எனக்கு சரியா புரியலை. அதனால்தான் கேட்டேன். தவறாக எண்ண வேண்டாம்

LK சொன்னது…

@பூஷா
ம்ம். இதுபோல் எல்லோருக்கு ஒரு சில அனுபவங்கள் உண்டு தோழி

அப்பாவி தங்கமணி சொன்னது…

ரெம்ப நல்லா எழுதி இருக்கே கார்த்திக். பூஜை எல்லாம் செய்து இருக்கியா, பெரிய பாக்கியம் தான்... கிரேட்...என்னோட அழைப்பை ஏற்று எழுதினதுக்கு ரெம்ப தேங்க்ஸ்...

அண்ணாமலை..!! சொன்னது…

தெய்வீக அனுபவங்கள்!
நன்றிகள்!