Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கால் சென்டர் VII

கொஞ்சம் பணி சுமை காரணமாக கொஞ்ச நாளாக கால் சென்டரைப் பற்றி எழுத இயலவில்லை. இனி தொடர்ந்து இதை பற்றி எழுத முயற்சிக்கிறேன். கால் சென்டர்களில் ...

கொஞ்சம் பணி சுமை காரணமாக கொஞ்ச நாளாக கால் சென்டரைப் பற்றி எழுத இயலவில்லை. இனி தொடர்ந்து இதை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

கால் சென்டர்களில் பணி புரிய விரும்புவர்களுக்கு கல்வித் தகுதி, மொழி தகுதியை விட மேலும் ஒரு தகுதி மிக மிக முக்கியமாய் தேவை. அந்தத் தகுதி இல்லையென்றால் உங்களால் கால் சென்டரில் பணி புரிய இயலாது. நம்ம முன்னோர்கள் சொன்ன மிக முக்கியமான ஒன்று அது , பொறுமை.

அன்னிக்கே சொல்லிட்டாங்க "பொறுமை கடலினும் பெரியது " என்று . நீங்கள் பலதரப்பட்ட வாடிகையாளர்களிடம் பேச வேண்டி வரும். ஒரு சிலர் பொறுமையாக பேசுவார்கள். ஒரு சிலர் எந்த ஒரு விசயத்தையும் மிக ஜாலியாக எடுத்துக் கொள்வர். ஒரு சிலர் ஒன்றுமில்லாத விசயங்களுக்கெல்லாம் கோபப் படுவர். சிலர் அழைத்த உடனேயே கத்த ஆரம்பிப்பார். ஆனால் நீங்கள் பொறுமை இழக்க கூடாது.

நீங்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது , பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களை திட்டுவது இல்லை,. நீங்கள் எந்த நிறுவனதிற்க்காக வேலை செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தையே திட்டுகின்றனர். அதனால், இவற்றை நீங்க தனிப் பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது . ஒரு சில சமயங்களில் , உங்களை தனிப்பட்ட முறையில் சிலர் திட்டுவர். மிக மோசமான வார்த்தைகளை அவர்கள் உபயோகித்தால் நீங்கள் அவருக்கு எச்சரிகைக் கொடுக்கலாம். பின் அழைப்பை துண்டிக்கலாம் (சில நிறுவனங்களில் வேறு சில வழிமுறை இருக்கலாம்). ஆனால் நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களை திட்ட கூடாது. அவங்க என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே ஆக வேண்டும். இதுதான் மிக முக்கியமான ஒன்று.

கடந்த ஆறு பகுதிகளிலும் சர்வதேச கால் சென்டர்களை பற்றி பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் இந்திய வாடிக்கையாளர்களுக்கான கால் சென்டர்களை பற்றிப் பார்க்கலாம் .
உங்களுக்கு கால் சென்டர் பற்றிய குறிப்பிட்ட எதாவது விவரம் தேவை எனில் , பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். என்னால் முடிந்த அளவு விவரம் அளிக்கிறேன் .

With Love LK

54 கருத்துகள்

சுசி சொன்னது…

//நீங்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது , பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களை திட்டுவது இல்லை,. நீங்கள் எந்த நிறுவனதிற்க்காக வேலை செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தையே திட்டுகின்றனர். //

இது வரைக்கும் நான் யாரையும் திட்னதில்லை கார்த்திக்.

யாரும் வீட்ல இல்லை எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. நான் அவங்க ஃப்ரெண்ட்னு பொய் சொல்லி இருக்கேன்.

BalajiVenkat சொன்னது…

ayya naan thaan mothala....

BalajiVenkat சொன்னது…

arumayana thagavalgal ... aduthu intha velaigalila sera virumbuvor intha mulu thodarayum manathirkul vangikondal nallathu...

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்கள்!..

kavisiva சொன்னது…

ஆனா கால் சென்டரில் வேலைபார்ப்பவர்கள் நமக்கு சரியா பதில் சொல்லலேன்னா என்ன செய்யறது? எல்லாம் சொந்த நொந்த அனுபவம்தான் :-(.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

che...vadai poche... appuram vandhu virivaa padikkaren... (oru naal unnoda style comment...ha ha ha)

சௌந்தர் சொன்னது…

பொறுமை கடலினும் பெரியது உண்மைதான்

Gayathri சொன்னது…

கால் சென்டரில் பணிபுரியும் அனைவரும் மிக மிக பொறுமை சாலிகள்...பாவம் அவங்க வேலை அவங்க செய்றாங்க..சிலர் மிக மோசமாக கத்துவார்கள் ( கஸ்டமர் ) பொழுது போலன சும்மா மொக்கை போடலாமே!! ஹா ஹா

அருண் பிரசாத் சொன்னது…

இந்த தொடர்தான் பல நாட்களாக காணொம்னு பாத்தேன். தொடருங்கள்

ஜெய்லானி சொன்னது…

பொருமை இல்லாம நாம செய்யுற வேலை அது 100 சதவீதம் சரியா அமையாது. நல்ல பதிவு.

bandhu சொன்னது…

//ஆனா கால் சென்டரில் வேலைபார்ப்பவர்கள் நமக்கு சரியா பதில் சொல்லலேன்னா என்ன செய்யறது? எல்லாம் சொந்த நொந்த அனுபவம்தான் :-(//
இதை விட கொடுமை, எல்லா கேள்விகளுக்கும் உதவி எதுவும் செய்யாமல் கடைசியில் is there any thing else i can do for you? என்னும்போது கடுப்பாகும் பாருங்கள்...
yes .. நேரில் வா.. பளார் என்று கொடுக்கிறேன் என்று சொல்லத் தோன்றும்..

பத்மநாபன் சொன்னது…

இந்த பணியில் `` பொறுத்தார் புரொமோசன் பெறுவார் `` எனும் வகையில் பொறுமையான நல்ல விளக்கம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

// அன்னிக்கே சொல்லிட்டாங்க "பொறுமை கடலினும் பெரியது " என்று //

நூத்துல ஒரு வார்த்தை...
நல்லா எக்ஸ்ப்ளெயின் பண்ணி இருக்க... ஓ.. இனி இந்தியன் கால் சென்ட்டர்ஸ் பத்தியா... good... waiting to read.. thanks for your effort

ஹேமா சொன்னது…

ம்ம்ம்..அவங்க எங்ககூடப் பேசி விளங்க வைக்கிறதே மிக மிகப் பொறுமை !

அதோடு நான் இலங்கைத் தமிழ் என அறிந்தோ என்னவோ மிகப் பிடித்த பெயரான "தமிழ்ச் செல்வன்" என்ற பெயரோடு அறிமுகமானார் ஒருவர்.இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமோ !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வாடிக்கையாளர்களை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் போலிருக்கு..

Giri Ramasubramanian சொன்னது…

பொறுமை கடலினும் பெரிது..... நல்லா சொன்னீங்க!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல தகவல்கள்!..

எல் கே சொன்னது…

@சுசி
இன்னிக்கு வடை உங்களுக்கே ..ஆஹா எப்படிலாம் சமாளிக்கறீங்க.. யாரையும் திட்டதற்க்கு நன்றி

எல் கே சொன்னது…

@பாலாஜி ..
நீ முதல் இல்லை.. கண்டிப்பாக.. எல்லோரும் தெரிந்து கொள்ளவே எழுதுகிறேன்

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றி

எல் கே சொன்னது…

@கவிசிவா

அந்த சந்தர்ப்பங்களில் , நீங்கள் அவர்களின் டீம் லீடருக்கு அழைப்பை கொடுக்குமாறு கேட்கலாம். அவர்கள் கொடுத்துதான் ஆக வேண்டும்

எல் கே சொன்னது…

@அ.த
சரி சரி

எல் கே சொன்னது…

@சௌந்தர்

நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@காயத்ரி

நீங்க வேற, பொழுது போகாம, சும்மா கூப்பிட்டு மொக்கை போடுகிற ஆட்கள் உண்டு

எல் கே சொன்னது…

@அருண்
உங்கள் விருப்பம் நிறைவேறியதா ...

எல் கே சொன்னது…

@ஜெய்

உணமைதான் தல..

எல் கே சொன்னது…

@பந்து

ஏற்கனவே நான் சொன்னது போல், உங்களுக்கு தேவையான உதவி கிட்டவிட்டால், நீங்கள் பேசியவருக்கு மேல் அதிகாரிக்கு அழைப்பை மாற்றுமாறு கோரலாம். முதல் வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

பிரமோசன் வேற விஷயம்.. அதை பத்தி பிறகு எழுதறேன் .. நன்றி

எல் கே சொன்னது…

@தங்க்ஸ்

ஆமாம் .. இந்திய கால் சென்டரை பற்றி எழுதாட்டி, இப்ப நான் இருக்கற வேலைக்கு அவமானம்

எல் கே சொன்னது…

@சித்ரா

:)

எல் கே சொன்னது…

@ஹேமா
ஆமாம். உண்டு.. பொதுவாக சொந்தப் பெயர்கள் உபயோகித்தாலும், சில சமயம் பெயர்கள் மாறும். நன்றிங்க

எல் கே சொன்னது…

@சாரல்

கொஞ்சம் இல்லீங்க.. ரொம்ப கஷ்டம்

எல் கே சொன்னது…

@கிரி
நன்றிங்க

@வெறும்பய
நன்றி தம்பி

jothi சொன்னது…

"பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களை திட்டுவது இல்லை,. நீங்கள் எந்த நிறுவனதிற்க்காக வேலை செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தையே திட்டுகின்றனர்." உண்மை, ஆனால் ரொம்ப பொறுமை அவசியம்......!.....?

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு :(
நல்ல தகவல்கள் LK

vanathy சொன்னது…

எல்கே, நல்ல பதிவு

Kousalya Raj சொன்னது…

நல்ல பகிர்வு. தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான்....பதிவை தொடர்ந்து எழுதுங்கள்......

ஸ்ரீராம். சொன்னது…

பொறுமை... கடைசியில் மன அழுத்தம் அதிகமாகும். நல்ல விவரங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

இது வரைக்கும் நான் யாரையும் திட்னதில்லை கார்த்திக்.

யாரும் வீட்ல இல்லை எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. நான் அவங்க ஃப்ரெண்ட்னு பொய் சொல்லி இருக்கேன்//

ஹாஹாஹா சூப்பர்.. சுசி.. நல்ல போஸ்ட் கார்த்திக்..

செல்வா சொன்னது…

///நீங்கள் எந்த நிறுவனதிற்க்காக வேலை செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தையே திட்டுகின்றனர். ///
நாம கூட Airtel , Aircel திட்டுரோம்ல அது மாதிரி ..!!

செல்வா சொன்னது…

சீக்கிரமா எழுதுங்க ...
இதே மாதிரி லேட் ஆக்கிடாதிங்க..

Admin சொன்னது…

நல்ல பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே.

எல் கே சொன்னது…

@ஜோதி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@பாலாஜி

பரவாயில்லை .. நன்றிங்க

எல் கே சொன்னது…

@கௌசல்யா
கண்டிப்பா தொடருவேன் ., :))

.

எல் கே சொன்னது…

@கௌசல்யா
கண்டிப்பா தொடருவேன் ., :))

.

எல் கே சொன்னது…

@வாணி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

உண்மைதான்

எல் கே சொன்னது…

@செல்வக் குமார்

அதே அதே

எல் கே சொன்னது…

@சந்துரு

வருகைக்கு நன்றி சார்

எல் கே சொன்னது…

@சந்துரு

வருகைக்கு நன்றி சார்

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

INAMUL HASAN சொன்னது…

Dear Lk sir

unga blog address correcta match aahudu ungaluduya ovvoru postum.

ungalta pidichadae miga periya visayangalayum nunukama nalla easya puriyira maari solra style... keep it up..

PLEASE POST CONSULTANCY.. dont be late