Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

திவ்யாவின் பக்கம் III

முன்பெல்லாம், குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பார்கள். இப்ப அது நேர்மாற இருக்கு. தினமும், திவ்யா சொல்ற கதையை கேட்ட பின்தான் தூக்கம் வரு...


முன்பெல்லாம், குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பார்கள். இப்ப அது நேர்மாற இருக்கு. தினமும், திவ்யா சொல்ற கதையை கேட்ட பின்தான் தூக்கம் வருகிறது. அவள் சொல்லும் கதையை அவள் மொழியிலேயே சொல்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு ஆனை இருந்துச்சாம். அது ஜோ ஜோ பண்ண போச்சாம் . அப்புறம் என்ன ஆச்சாம் ?. அங்க ஒரு முதலை இருந்துச்சாம். அது ஆனை காலை லபக்குனு பிடிச்சிருச்சாம். அப்புறம் ஆனை என்ன பண்ணது ?(இது நான் ). ஆனை , உம்மாச்சிய கூப்டுசாம். எப்படி கூப்டது ?(இது என் மனைவி ). "ஆதி மூலமே நு கூப்டுச்சு.(இங்க இரண்டு கையையும் தலைக்கு மேல் தூக்கிப்பா ) அப்புறம் என்ன ஆச்சாம் , உம்மாச்சி வந்து ஆனைய காப்பாத்திடாராம் .

ஒரு ஆனை நடந்து போனுச்சாம். அப்பா, அது கால்ல முள் குத்திடுசாம். உவ்வா ஆய்டுச்சாம். அது அழுதுச்சாம் . அப்ப ஒரு கொங்கு (குரங்கு ) வந்து முள்ளை எடுத்து விட்டுசாம் . உடனே ஆனை, கொங்கை பாத்து " thank you my friend " சொன்னுச்சாம்.,

எப்படி இருந்தது திவ்யாவின் ஆனை கதை ??. இந்த மாதிரி இன்னும் ஒரு சில கதைகள் இருக்கு. தினமும் அனைத்து கதைகளையும், ஆக்சனுடன் சொன்ன பிறகே தூங்குவாள்


அன்புடன் எல்கே

62 கருத்துகள்

அருண் பிரசாத் சொன்னது…

So Sweet.

சௌந்தர் சொன்னது…

அப்ப ஒரு கொங்கு (குரங்கு ) வந்து முள்ளை எடுத்து விட்டுசாம் . உடனே ஆனை, கொங்கை பாத்து " thank you my friend " சொன்னுச்சாம்.,//

இது பழைய கதை....இந்த கதைய யார் சொல்லி தந்தது

செல்வா சொன்னது…

நிச்சயம் மழழை மொழி கேட்க இனிமையாகத்தான் இருக்கும் ..
தொடருங்கள் ..!!

அபி அப்பா சொன்னது…

அருமை கார்த்தி! வீடியோ ரெக்கார்டு பண்ணி வையுங்க!

Priya சொன்னது…

மழலை மொழியில் கதை கேட்பது ஒரு வரமாகவே நினைக்கிறேன்.
இனிமையானது அந்த நிமிடங்கள்!

kavisiva சொன்னது…

மழலை இனிமை :-)

settaikkaran சொன்னது…

திவ்யாப்பாப்பா சமத்துப்பாப்பா! என்ன அழகா கதை சொல்லுது? குட்கேர்ள்!

கோவை குமரன் சொன்னது…

very nice....you are having a beautiful moments.....enjoy ...........எனக்குமிகவும் பிடித்தது குழந்தைகளுடன் விளையாடுவது..

பெயரில்லா சொன்னது…

படங்கள் எல்லாம் க்யூட்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கதை நடைக்கு 80 மார்க்,படத்துக்கு 100 மர்க்.

ஹேமா சொன்னது…

ஒரு கவிதை கதை சொல்லுது !

Matangi Mawley சொன்னது…

:D hee..hee...

"kuzhalinithu yaazhinithu.." kural nenavu varuthu! :D romba yosichchu thaan sollirukkaar thiruvaar thiruvalluvar!

ஜெய்லானி சொன்னது…

கதை கேட்டு எனக்கும் தூக்கம் வருது இப்ப :-))

Kousalya Raj சொன்னது…

குழந்தைகளுடன் இருக்கும் போது நாமும் அவர்களை போலவே மாறிவிடுகிறோம் சில நேரம்... :)))

Menaga Sathia சொன்னது…

so sweet papa!!

yeskha சொன்னது…

பாப்பா ரொம்ப பழைய கதையா சொல்லுது... புது கதை ஏதும் இல்லயா?

சுசி சொன்னது…

எங்க வீட்ல நாங்க டர்ன் வச்சு சொல்லிக்குவோம்..

அருமையான கதைகள் கார்த்திக்.. வாழ்ந்து பாருங்க.

பத்மநாபன் சொன்னது…

திவ்யா சிக்கிரம் ப்ளாக்குல அப்பாவுக்கு போட்டியா கதை சொல்ல வந்துடு ..வந்துடு...

dheva சொன்னது…

//ஆதி மூலமே நு கூப்டுச்சு.(இங்க இரண்டு கையையும் தலைக்கு மேல் தூக்கிப்பா ) அப்புறம் என்ன ஆச்சாம் , உம்மாச்சி வந்து ஆனைய காப்பாத்திடாராம்//

படிக்கும் போதே பாப்பாவை தூக்கி கொஞ்சணும் போலத்தான் இருக்கு...எப்டி கூப்பிட்டுச்சாம்னு நேர்ல பாக்கும் போதும் கேக்குறேன் பாஸ்........

So Sweet..............& Cute....lots of kisses to ...........kuti pappa!

தக்குடு சொன்னது…

//திவ்யா சிக்கிரம் ப்ளாக்குல அப்பாவுக்கு போட்டியா கதை சொல்ல வந்துடு ..வந்துடு//

athey, athey sabapathey!!..:))

divya kutty!apdiyaavathu unga nainavooda mokkailenthu viduthalai kadaikkatum yellarukkum..:) LOL

சாந்தி மாரியப்பன் சொன்னது…

திவ்யாக்குட்டியை தினமும் கதை சொல்லச்சொல்லுங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

மழலை மொழியில் கதை கேட்பது ஒரு வரம்.

இனிமையானது அந்த நிமிடங்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

சூப்பர் கதை கார்த்தி... சீக்கரம் திவ்யா ப்ளாக் எழுத வந்துடுவா போல இருக்கு... கதை சொல்ற ஸ்டைல் அதை prove பண்ணுது... ஹா ஹா ஹா...வழக்கம் போல கலக்கல் திவ்யா பக்கம்

GEETHA ACHAL சொன்னது…

குழந்தைக்கு சுத்தி போடுங்க...குட்டிக்காக ஒரு ப்ளாக் தனியாக ஒபன் செய்தால் நல்லா இருக்கும் அல்லவா....

Unknown சொன்னது…

//உடனே ஆனை, கொங்கை பாத்து " thank you my friend " சொன்னுச்சாம்.,//

so cute.

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

குழந்தைகளின் மழலை கேட்க இனிமையா இருக்கும். என் மகளின் மழலையை நானும் மிகவும் ரசிப்பேன். நல்ல பதிவு.

பெயரில்லா சொன்னது…

உங்க செல்ல ராஜகுமாரியின் கதை ரொம்ப அருமை ரசித்தேன் கார்த்தி ..கமெண்ட் எழுத லேட் ஆச்சு சாரி ..கிருஷ்ணா இப்ப தான் உட்கார விட்டா ..
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கார்த்தி

கொழந்த சொன்னது…

என் ப்ளாக்ல முதல் "Follower"ஆ சேர்ந்தது, உண்மைலேயே ரொம்ப சந்தோசமாகவும்-நாமும் எழுதலாம்னு ஊக்குவிப்பதாய் இருந்தது. நீங்க மற்ற ரெண்டு ப்ளாக்தான் எழுதுறீங்கன்னு நெனச்சு பதில் போடல. எதேச்சையாக இப்பதான் இந்த ப்ளாக்உம் எழுதுறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். நன்றி

எல் கே சொன்னது…

@அருண்

வடை உங்களுக்கே

எல் கே சொன்னது…

@சௌந்தர்
பழைய கதை ஆனாலும் நல்ல கதை

எல் கே சொன்னது…

@செல்வக் குமார்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@அபி அப்பா
அவ போட்டோ எடுக்கவே நான் கஷ்டப் படறேன் இதுல வீடியோ எங்க

எல் கே சொன்னது…

@ப்ரியா

உண்மைதான்... மிக அருமையான தருணங்கள்

எல் கே சொன்னது…

@கவிசிவா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சேட்டைக்காரன்

என்னது சமத்தா ? அவ பண்ற குறும்பு தாங்காது தலை

எல் கே சொன்னது…

@குமரன்

அனைவருக்கும் அது பிடிக்கும்..

எல் கே சொன்னது…

@அம்மிணி

நன்றி. உதவி கூகிள் ஆண்டவர்

எல் கே சொன்னது…

@செந்தில்

ஆசிரியரா ??

எல் கே சொன்னது…

@ஹேமா

அடடே

எல் கே சொன்னது…

@மாதங்கி

உண்மைதான்

எல் கே சொன்னது…

@ஜெய்

அப்ப படுக்கை போட்டு தூங்கவும்

எல் கே சொன்னது…

@கௌசல்யா

உண்மைதான் :)

ஜெயந்தி சொன்னது…

குழந்தையோட கதையை எங்களையும் ரசிக்க வச்சிட்டீங்க.

Geetha Sambasivam சொன்னது…

சமத்துக்குட்டி!

Geetha Sambasivam சொன்னது…

வேறே என்ன கதை சொல்லுவா??

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@எஷ்கா
பழைய கதைகளில் நீதி உள்ளது . புதிய கதைகளில் ??

எல் கே சொன்னது…

@சுசி

ஓ. இங்கயும் உண்டு. இப்போதைக்கு அவ ராஜ்ஜியம்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ஏன் இந்த கொலை வெறி

தெய்வசுகந்தி சொன்னது…

Soooo sweet! Enjoy!!!!!!!!11

ஸ்ரீராம். சொன்னது…

குழந்தையின் மழலையைக் கேட்க, ரசிக்க சந்தோஷம்தான்.. ஹேமாவின் வரிகளை ரசித்தேன்.

ஸாதிகா சொன்னது…

மழலை கதை சொல்லி மெய்மறக்க வைத்துவிட்டீர்கள்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

//அப்ப ஒரு கொங்கு (குரங்கு ) வந்து முள்ளை எடுத்து விட்டுசாம் . உடனே ஆனை, கொங்கை பாத்து " thank you my friend " சொன்னுச்சாம்.,///

s, Friendship Day.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகு... :))

எல் கே சொன்னது…

@ஜெயந்தி

அனைவரும் ரசிக்கவே இந்தப் பகிர்வு

எல் கே சொன்னது…

@கீதா மாமி

தனித் தனியா போடறேன்,. அப்பப்ப

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

உண்மைதான் அண்ணா

எல் கே சொன்னது…

@சாதிகா
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ...

எல் கே சொன்னது…

@மாதவன்

உண்மைதான். அழகா தொடர்பு பண்ணிடீங்க. நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

மா.குருபரன் சொன்னது…

கொஞ்சும் மழலை..... கதை கேட்க ஆசையாக இருக்கிறது நண்பரே..