Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பதிவுலகமும் நானும்

  இன்னிக்கு பதிவெழுத எந்த விசயமும் சிக்க வில்லை. என்ன செய்யலாம்னு யோசித்துக் கொண்டிருந்தப்ப, நம்ம அமைதி அக்காவோட பதிவு வந்துச்சு .சரின்னு ப...


 இன்னிக்கு பதிவெழுத எந்த விசயமும் சிக்க வில்லை. என்ன செய்யலாம்னு யோசித்துக் கொண்டிருந்தப்ப, நம்ம அமைதி அக்காவோட பதிவு வந்துச்சு .சரின்னு பார்த்த கடைசியா நம்மளை தொடர் பதிவெழுத சொல்லிருந்தாங்க. ஆஹா, இதை இதை தான் எதிர் பார்த்தேன் அபப்டின்னு டக்குனு எழுதிட்டேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
எல்கே

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என்னுடைய உண்மை பெயரின் சுருக்கமே எல்கே . அலுவலகத்தில் எனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தான எல் மற்றும்   எனது பெயரின்  முதல் எழுத்தான கே  இரண்டையும் இணைத்து எல்கே என்று அழைப்பார்கள். ஆர்குட் மற்றும் முகப்பக்கதிலும் நான் அந்தப் பெயரிலே இது வரை அறியப்பட்டுளேன். எனவே அந்தப் பெயரையே இங்கும் உபயோகிக்கறேன். 
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

எனக்கு தமிழ் பதிவுலகம் பற்றி எதுவும் தெரியாது. நான் என் மனதிற்கு பட்டதை ஆங்கிலத்திலும் ,தங்க்ளிஷிலும் எழுதிக் கொண்டு இருந்தேன். எனது நண்பர் வினோத் அவர்கள், வல்லியம்மாவின் நாச்சியார் பதிவிற்க்கான சுட்டியை தந்தார். பின் அங்கிருந்து துளசி டீச்சர் பதிவு, கீதா மாமி பதிவு என்று செல்ல ஆரம்பித்தேன். நான் தமிழில் எழுத காரணமாக இருந்தது இந்த மூவர் மற்றும் அமைதி சாரல். இவர்கள் சொன்னதற்கு பிறகே தமிழில் எழுத ஆரம்பித்தேன் 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாரும் செய்யறதுதான். மேலே சொன்னவர்களின் பதிவிருக்கு சென்று பின்னூட்டம் இட்டேன். பின் தமிழ்மணம்,தமிழிஷ் போன்றவற்றில் இணைத்தேன். அவ்வளவே. மற்றபடி இந்தப் பிரபலமா இல்லையான்னு நான் கவலைப் படுவது இல்லை. இது ஒரு பரந்த வெளி. இங்கு அனைவருக்கும் இடம் உண்டு. நாம் எழுதுவது நன்றாக இருந்தால் படிப்பார்கள் இல்லையேல் கடைய காலி பண்ண வேண்டித்தான்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 நிறைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் விளைவுகள்  இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

கண்டிப்பா எதுவும் சம்பாதிக்கவில்லை. (நல்ல நட்புக்களைத் தவிர) நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன், அவ்வளவுதான் .
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 மூன்று வலைப்பூக்கள் உள்ளன .
பாகீரதி - இந்தப் பதிவு,. இதுதான் முதன்மையானது 
photo blog - நான் எடுக்கும், ரசிக்கும் படங்களை பகிர்வதற்கு 
வேலை வாய்ப்பு - எனக்கு வரும் வேலை வாய்ப்பு செய்திகளை பகிர்ந்து கொள்ள. இது ஆங்கிலத்தில் இருக்கும் 
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

 ஒரு சிலரின் எழுத்துக்களை கண்டு பிரமித்து உள்ளேன். கோபம்,தேவை இல்லாமல் சண்டை போட்டுக் கொள்ளும் பதிவர்களின் மேல்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிழ் பதிவுலகம் பற்றி நான் அறியாத காலத்தில் எனக்கு பின்னூட்டம் இட்ட பூஷா . அவரும் ஒரு பதிவரே. ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர். தமிழில் நான் எழுத ஆரம்பித்தப் பிறகு எனக்கு பின்னூட்டம் இட்டு  உற்சாகம் அளித்தவர்கள், அண்ணாமலையான், அமைதிச்சாரால், துளசி டீச்சர், கீதா மாமி, வல்லியம்மா , ஹரிணி, சின்ன அம்மிணி  ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னத்த சொல்ல ??? ஏற்கனவே ஓரளவுக்கு என்னை பற்றி தெரியும். இதுக்கு மேல சொல்லி டேமேஜ் ஆக விரும்பலை. 

இதை தொடர நான் அழைப்பது 

 கௌசல்யா
அமீரகப் போர்வாள் தேவா 
அப்பாவி தங்கமணி 
கீதா மாமி 
அபி அப்பா

  
அன்புடன் LK

73 கருத்துகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஆஹா... ஏற்கனவே புதுகை அக்கா இதே தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சுடாக... இப்போ ரெண்டாவது அழைப்பும் வந்தாச்சு...சீக்கரம் போட்டுடறேன் கார்த்தி.

//இன்னிக்கு பதிவெழுத எந்த விசயமும் சிக்க வில்லை//
இது ரெம்ப அநியாயமான statement .... உங்களுக்கேலம் எழுத விசியமா இல்ல.. நான் தான் ஒண்ணுமில்லாம மொக்கை போட்டுட்டு இருக்கேன்...

நல்ல தொடர் பதிவு

Kousalya Raj சொன்னது…

பேட்டி அருமை, உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.

//கண்டிப்பா எதுவும் சம்பாதிக்கவில்லை. (நல்ல நட்புக்களைத் தவிர)//

இதை விட வேற என்ன வேண்டும். இந்த காலத்தில் நல்ல நட்பை பெறுவதுதான் சிரமம்.

தொடர் பதிவிற்கு என்னை அழைத்ததுக்கு நன்றி.

dheva சொன்னது…

பாஸ்... அங்க சுத்தி இங்க சுத்தி இந்த தொடர் நம்மகிட்ட வரக்கூடாதுன்னு நினைச்சேன்...வந்திடுச்சே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி...எழுதலாம்...பாஸ் !

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பேட்டி அருமை...

நல்ல பதிவு...

சௌந்தர் சொன்னது…

பேட்டி உங்களை பற்றி ஏற்கவவே தெரியும்...இருந்தாலும் இன்னும் தெரிந்து கொண்டேன்...பாப்போம்.
கௌசல்யா
அமீரகப் போர்வாள் தேவா இவங்க எப்படி போடுறாங்க பாப்போம்

சுசி சொன்னது…

நல்லாருக்கு கார்த்திக்..

வடை போச்சே.. நான் இதே தொடருக்கு உங்கள கூப்டலாம்னு இருந்தேன் :(

dheva சொன்னது…

தம்பி செளந்தர்....ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல..!

காத்திக்...... நீங்க பாட்டுக்கு ஒரு பக்கம் ஆரம்பிச்சு வச்சுட்டு அமைதியா அடுத்த வேலை பாக்குறீங்க...பத்திகிட்டு எரியுது பாஸ்!

அருண் பிரசாத் சொன்னது…

உங்களை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். நன்றாக இருந்தது

சௌந்தர் சொன்னது…

@@@@ dheva said...உங்களை தான் நான் ஏற்கனவே பேட்டி எடுத்து விட்டேன் ந

Geetha Sambasivam சொன்னது…

மறுபடியும் சங்கிலியால் பிணைத்துவிட்டீர்களா?? :))))) நல்லா இருக்கு பதிவு. பளிச் னு வந்திருக்கு பதில்கள் எல்லாம்.

@ஏடிஎம், ஏடிஎம்முக்கு ரெண்டு அழைப்பா? அப்போ ரெண்டு தரமா எழுதப் போறாங்க?? சரி, சரி, அவங்க ஆப்ப்ப்ப்ப்பீச்ச்ச்ச்சு வேலையே அதானே! செய்யட்டும்! :)))))))))))

Chitra சொன்னது…

very nice replies..... :-)

Geetha Sambasivam சொன்னது…

grrrrrrr id, password marupadiyum ketkuthe! :P

vasu balaji சொன்னது…

நல்ல பதில்கள்:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Ella repliesum nalla irukku :-)
vazhthukkal..

பத்மநாபன் சொன்னது…

பதிவுலகை கையாளும் விதத்தை பதில்களாக அளித்தது அருமை எல்.கே.

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...இதுதான் கார்த்திக் !

நசரேயன் சொன்னது…

தொடர் பதிவுக்கு இவ்வளவு போதும்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான பதில்கள் கார்த்திக். வாழ்த்துகள்

அபி அப்பா சொன்னது…

கார்த்தி இந்த தொடர் பதிவிலே உள்ள பதில்கள் எல்லாம் சிம்பிள் அண்ட் பெஸ்ட். நல்லா வந்திருக்கு பதிவு!என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி. கண்டிப்பா எழுதறேன் கார்த்தி.

அபி அப்பா சொன்னது…

\\Blogger கீதா சாம்பசிவம் said...

மறுபடியும் சங்கிலியால் பிணைத்துவிட்டீர்களா?? :))))) நல்லா இருக்கு பதிவு. பளிச் னு வந்திருக்கு பதில்கள் எல்லாம்\\
கீதாம்மா வெள்ளை பேக்ரவுண்ட் இருப்பதால் பளிச்சுன்னு இருக்குன்னு சொல்ல வர்ரீங்களா?

Radhakrishnan சொன்னது…

இயல்பான பதில்கள்.

ஜெய்லானி சொன்னது…

உண்மை உண்மையை தவிர வேறில்லை...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//மற்றபடி இந்தப் பிரபலமா இல்லையான்னு நான் கவலைப் படுவது இல்லை. இது ஒரு பரந்த வெளி. இங்கு அனைவருக்கும் இடம் உண்டு. நாம் எழுதுவது நன்றாக இருந்தால் படிப்பார்கள் இல்லையேல் கடைய காலி பண்ண வேண்டித்தான்//

அதே.. அதே. தொடர்ந்ததுக்கு நன்றி.

@ சுசியக்கா.. வடையை சுட்டவுடனேயே எடுத்துக்கிட்டு ஓடணும்.. என்னைமாதிரி :-))))))

Prathap Kumar S. சொன்னது…

//உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?//

ஏம்பா... இதுல அந்த மேட்டரை சொல்லிருக்கலாமே.... உண்மையச்சொல்ல வெட்கத்தப்பாரு...

Prathap Kumar S. சொன்னது…

//அமீரகப் போர்வாள் தேவா //

இப்படி போடுன்னு மாம்சு சொன்னாரா....
எல்லாத்தையும் தாங்கிட்டேன்.. மேலே சொன்னதைத்தான் தாங்கிக்க முடில...

ஒருத்துரு அமீரக விடிவெள்ளிங்கறாரு...நீரு போர்வாள்ன்றீரு... மாம்சுக்கு அமீரக மன்னரை சந்திக்கும் நாள் வெகுதுரம் இல்லை....

Prathap Kumar S. சொன்னது…

//காத்திக்...... நீங்க பாட்டுக்கு ஒரு பக்கம் ஆரம்பிச்சு வச்சுட்டு அமைதியா அடுத்த வேலை பாக்குறீங்க...பத்திகிட்டு எரியுது பாஸ்!//

மாம்சு...பார்த்து சூதனமா இருங்க... உங்களுக்கு ஏதாச்சும் ஒணணுனா...நான் மட்டும்தான் பக்கத்துல இருக்கேன்...அதை மற்ந்துடாதீங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.
நல்ல தொடர் பதிவு.

Gayathri சொன்னது…

ஹாய் அருமையா இருக்கு...பதில்கள் எல்லாமே நல்ல இருக்கு...என்ன எல்லா கேள்வியுமே சுலபமா இருக்கே...யாரு கேள்வி தாளினை தயாரித்தது???

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு வணக்கம் இதுநாள் வரை உங்களின் பதிவுகள் பற்றி நன்கு தெரியும் . இன்று உங்களைப் பற்றியும் நன்கு அறிந்துகொண்டேன் . சிறப்பான அறிமுகம் . பகிர்வுக்கு நன்றி . இந்த பதிவை தொடரப் போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல பதில்கள்!!!

vanathy சொன்னது…

எல்கே, நல்லா இருக்கு. கொஞ்ச நாட்களாக ஒரே வேலை அதனால் ப்ளாக் பக்கம் வந்து பின்னூட்டம் கொடுக்க நேரம் வரவில்லை.

எல் கே சொன்னது…

@அ.த

வடை உனக்கே . ஏற்கனவே கூபிட்டச்சா. நான் கவனிக்கவில்லை. உண்மையிலேயே எனக்கு எந்த விசயமும் எழுத தோணவில்லை.

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கௌசல்யா

தெரிந்து கொண்டதற்கு :)).. உண்மைதான்.. நல்ல நட்பு இன்று அரிதான ஒன்று

எல் கே சொன்னது…

@தேவா
அதெப்படி உங்களை விட முடியும். நீங்கதான் சங்க செயலாளர் ஆச்சே.

எல் கே சொன்னது…

@வெறும்பய

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சௌந்தர்
அதுக்குத்தான் நானும் காத்திருக்கிறேன்

எல் கே சொன்னது…

@சுசி
நீங்க ஏற்கனவே ஒரு தொடர் எழுத சொன்னீங்க அது இன்னும் எழுதலை. விரைவில் எழுதுகிறேன் ..

வடைக்கு முந்திக்கனும்

எல் கே சொன்னது…

@தேவா
பத்திகிச்சா . அதுதான் வேணும்

எல் கே சொன்னது…

@அருண்

தொடர்ந்து வருகை தந்து ஊக்குவிப்பதற்கு நன்றிகள் பல

எல் கே சொன்னது…

@கீதா மாமி

அமாம். மறுபடயும்தான்,.. அப்பாவி தங்கமணி அவ்வளவு பிரபலம் ஆய்ட்டாங்க.

எல் கே சொன்னது…

@சித்ரா
நன்றிங்க...

எல் கே சொன்னது…

@பாலா
நன்றி சார்

எல் கே சொன்னது…

@ஆனந்தி
வாழ்த்துகளுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றி சார்

எல் கே சொன்னது…

@ஹேமா

எது ??? என்னங்க இது ஒரு புதிர் போடறீங்க

எல் கே சொன்னது…

@நசரேயன்
நீங்க சொன்னா சரி. தொடர்ந்து வாங்க பாஸ். சடனா வரீங்க அப்புறம் வரதில்லை. இதெல்லாம் சரியில்லை

எல் கே சொன்னது…

@ச்டார்ஜன்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@அபி அப்பா

நன்றி அண்ணா. சீக்கிரம் எழுதுங்கள்
//வெள்ளை பேக்ரவுண்ட் இருப்பதால் பளிச்சுன்னு இருக்குன்னு //

ஹஹாஹ்

எல் கே சொன்னது…

@ராதாக்ருஷ்ணன்
நன்றி சார்

எல் கே சொன்னது…

@ஜெய்
ஆமாம் தல

எல் கே சொன்னது…

@சாரல்
எனை அழைத்ததற்கு நன்றி.

எல் கே சொன்னது…

@சாரல்
எனை அழைத்ததற்கு நன்றி.

எல் கே சொன்னது…

@நாஞ்சில்

எது பிரதாப் ?? அதுக்குதான் இவ்வளவு எழுதறேன். அது நடக்க மாட்டேங்குது
//.நான் மட்டும்தான் பக்கத்துல இருக்கேன்./

அதுதான் கவலையா இருக்கு

எல் கே சொன்னது…

@குமார்
நன்றிங்க

@காயத்ரி

நன்றிங்க.. சென்னையில் அனைவரும் நலமா ?? நானும் அதைதான் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைக்கமாட்டேங்கரங்கா

எல் கே சொன்னது…

@பனித்துளி சங்கர்

நன்றி சார்..

@தெய்வ சுகந்தி
நன்றி சுகந்தி

@வாணி
இதில் என்ன இருக்கு, எப்ப நேரம் இருக்கோ அப்ப வாங்க. நன்றி

ஸாதிகா சொன்னது…

தேர்ந்தெடுத்து அருமையான பதிலகளை தந்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் எல்.கே

மங்குனி அமைச்சர் சொன்னது…

சாரி சார் , நான் கொஞ்சம் லேட் ........
உண்மையில் நண்பர்கள் நிறைய்ய கிடைத்துள்ளனர்

பெயரில்லா சொன்னது…

பேட்டியும் பதிலும் நல்லா இருந்தது கார்த்தி

பெயரில்லா சொன்னது…

"6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கண்டிப்பா எதுவும் சம்பாதிக்கவில்லை. (நல்ல நட்புக்களைத் தவிர)"

அந்த நட்பு லிஸ்டில் நானும் இருக்கே இல்லே ??

dheva சொன்னது…

நாஞ்சில்...@

மாப்பு.....என்னைய வச்சு நல்லாத்தான் காமெடி பண்றாங்க.... இன்னைக்கி பாரு போர்வாள்னு சொல்றாரு கார்த்திக்......

கூப்பிட்டா நீ தானே ஒடி வருவா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

தக்குடு சொன்னது…

/// உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?// ஹலோ இதுக்கு பதில் நான் சொல்லட்டுமா LK?? குத்து மதிப்பா இப்போதைக்கு 100 ப்ளாக்ல அருமையாக சொன்னீர்கள்! அழகாக செய்தீர்கள்! வாழ்த்துக்கள்! இந்த மாதிரி வாசகங்களோட முதல் கமண்ட் போட்டு வடை பிரசாதம் வாங்கிண்டு வந்துண்டு இருக்கார் LK. அவங்களுக்கும் வேற வழியே இல்லாம பதில் மரியாதை பண்ணர்துக்கு இவரோட ப்ளாக்குக்கு வராங்க...;PP ஒரு கட்டத்துல நாம பதிவை பப்ளிஸ் பண்ணர்துகுள்ள வடையை கவ்விடுவார்....;)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எழுத வந்த கதை! - பகிர்வுக்கு நன்றி நண்பரே.

செல்வா சொன்னது…

///சரின்னு பார்த்த கடைசியா நம்மளை தொடர் பதிவெழுத சொல்லிருந்தாங்க///
உங்களையும் விட்டு வைக்கலையா ...?

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழர் ..மேலும் தொடருங்கள் ..

அமைதி அப்பா சொன்னது…

கண்டிப்பா எதுவும் சம்பாதிக்கவில்லை. (நல்ல நட்புக்களைத் தவிர)//

சரியான பதில். பாராட்டுக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கீதா சாம்பசிவம் said... @ஏடிஎம், ஏடிஎம்முக்கு ரெண்டு அழைப்பா? அப்போ ரெண்டு தரமா எழுதப் போறாங்க?? சரி, சரி, அவங்க ஆப்ப்ப்ப்ப்பீச்ச்ச்ச்சு வேலையே அதானே! செய்யட்டும்! :))))))))))) //

மாமி நீங்களுமா எனக்கு எதிரா... என்ன கொடும இது? ஒரு தரம் எழுதினாலே ஓடி போய்டுவாங்க நம்ம மக்கள். ஏற்கனவே சுய புராணம் ஓவர்னு ஒரு பேச்சு இருக்கு... இதுலே ரெண்டு வாட்டி எழுதினா ரெட் கார்டு தான் போங்க... ஹா ஹா ஹா

எல் கே சொன்னது…

@சாதிகா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சந்த்யா
அதில் என்ன சந்தேகம் ?>>

எல் கே சொன்னது…

@தக்குடு
எலேய் இன்னிக்கு பதிவு போடுவ்தானே, அப்ப வச்சிக்கறேன் கச்சேரிய

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றிங்க

@செல்வா

இல்லை பாஸ்

எல் கே சொன்னது…

@நீயோ

நன்றி

vinothamanavan சொன்னது…

பேட்டி நன்றாக இருந்தது...

GEETHA ACHAL சொன்னது…

நல்லா எழுதி இருக்கின்றிங்க...சூப்பர்ப்...