Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

இவர்கள் யார் ???

சமீபத்தில் நிறைய பதிவுகள் தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பகுதியை பற்றி எழுதப்பட்டன. எனக்குத் தெரிந்து எல்லா திரட்டிகளிலும் இதுதான் நிலைமை. ஒரு ச...

சமீபத்தில் நிறைய பதிவுகள் தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பகுதியை பற்றி எழுதப்பட்டன. எனக்குத் தெரிந்து எல்லா திரட்டிகளிலும் இதுதான் நிலைமை. ஒரு சில விசயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்று புரியாதப் புதிராக இருக்கிறது .

ஒரு சிலர் ஓட்டு மட்டும் இட்டு செல்கின்றனர். அவர்கள் எந்தப் பின்னூட்டமும் இடுவது இல்லை. தமிளிஷில் ஓட்டு போட்டவர்கள் ஐடி பார்க்க இயலும். அவ்வாறு சென்று பார்த்தாள் அவர்கள் எந்தப் பதிவும் இடாதவர்களாக இருக்கிறார்கள். வெறும் ஓட்டு மட்டுமே போடுகிறார்கள். அதுவும் வெவ்வேறு நேரத்தில் அல்ல. அடுத்தடுத்து வருகிறது.

இது எதோ எனது பதிவில் மட்டும் நடக்கிறது என்று நினைத்தேன். பின்பு நமது அமீரக சிங்கம் தேவா கூட பேசினப் பிறகுதான் தெரியுது பலரது பதிவுகளில் இவர்கள் ஓட்டு இடுகிறார்கள் என்று. அதேப் போல் அடுத்ததுதான் இவர்கள் ஓட்டுகள் இருக்கும் .

 யார் அந்தப் புண்ணியவான் அல்லது புண்ணியவான்கள் ??  யாருக்காவது தெரியுமா ?? கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ப்ளீஸ். கண்டுபிடிச்சி தரவங்களுக்கு சிறந்த ஒற்றர் என்ற பட்டத்தை தரலாம்னு இருக்கேன்.
With Love LK

38 கருத்துகள்

dheva சொன்னது…

பாஸ் தேடலை இந்தப் பக்கம் திருப்பிவிடலாம் என்று இருக்கிறேன்...ஹா..ஹா..ஹா..! யார் இவர்கள்!

Kousalya Raj சொன்னது…

:)

Gayathri சொன்னது…

இதெல்லாம் வேர நடக்குதா நல்லது

Harini Nagarajan சொன்னது…

ohh ithellaam note panreengala?? good work! :P

சௌந்தர் சொன்னது…

அது தமிழ்ஷ் ஆட்கள் தான்.செய்கிறார்கள் எனக்கும் இப்படி தான் நடக்குது

எல் கே சொன்னது…

@தேவா

அதைதான் நான் கேக்கறேன் ,,,

எல் கே சொன்னது…

@கௌசல்யா

:)))

எல் கே சொன்னது…

@காயத்ரி

ஆமா. நீங்க புதுசு அதான் தெரியல

எல் கே சொன்னது…

@ஹரிணி

காயத்ரிக்கு சொன்ன அதே பதில்தான் உனக்கும்

எல் கே சொன்னது…

@சௌந்தர்

அப்படியா.. எதுக்கு இப்படி பண்றாங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

CBCID விசாரணை போட்டுடலாம் சாரே... ஒகேவா... ஏன் இந்த திடீர் ஆராய்ச்சி? சும்மா கேட்டேன்...

தெய்வசுகந்தி சொன்னது…

கார்த்திக், பதிவு போட மேட்டர் கிடைக்கலையா, அல்லது ஆணி கம்மியா இருக்கா!!
இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் பண்ணறதால கேட்டேன்.

vanathy சொன்னது…

எல்கே, விடுங்க. எனக்கும் அடிக்கடி நடக்குது. நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதாவது பரவாயில்லை. சிலர் கமன்ட் எழுத சோம்பல் பட்டு, பிறரின் கமன்டை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்து விடுகிறார்கள். நான் கமன்ட் எழுத சோம்பலாக இருந்தால் பிறகு ஆறுதலாக வந்து கமன்ட் போடுவது என்று ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.

ஜெயந்தி சொன்னது…

கண்டுபிடிச்சு எனக்கும் சொல்லுங்க.

நிலாமதி சொன்னது…

யார் இவர்கள்....புண்ணியவான்கள் ....புண்ணியவதிகள் என்று திருத்தி விடுங்கோ..சத்தியமாய் நான் இல்லப்பா அந்த தொழில் நுட்பம் எல்லாம் நமக்கு தெரியாது .நாம கத்துக்குட்டி ( சும்மா வேடிக்கைக்காக் ) .

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ஹே இது எல்லாம் பெரிய விஷயம் அல்ல.

நானே பல பதிவுகளை படிப்பேன், வாக்கு அள்ளிப்பேன், பின்னோட்டம் இட நேரமிருக்காது, மனம் இருக்காது தமிழில் தட்டச்சு செய்ய சோம்பேறி தனம் போன்றவை.

சில பதிவுகள் எல்லாம் தலைப்பு, உள்ளே என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிக்கும் முன்பே வாக்கு அளித்து விடுவேன், ரஜினி கமல் படங்கள் எப்படி நான் வழக்கமாக பார்க்க போவேனோ அதே போல இந்த பதிவர்களின் பதிவிற்கு வாக்கு அளித்து விடுவேன்- உதாரணம்- அய்யனார், பவா , லேகா, ரோசா வசந்த், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றோர்.

சில நாட்களில் நேரம் அதிகம் இருக்கும், அப்போது தமிழில் பொறுமையாக தட்டச்சு செய்து பிநோட்டம் இடுவேன் ஆனால் வாக்கு அளிக்க மறந்து போய் அடுத்த பதிவு போய் விடுவேன்.

திரட்டியில் ஐம்பது வாக்குகள் வாங்கினால் நமக்கு தங்கத்தில் மகுடம் கிடைக்க போவதில்லை, அதே போல இரண்டு வாக்குகள் வாங்கினால் நாம் ஒன்றும் டெபாசிட் பணம் இழக்க போவதில்லை.

சில பதிவுகளை படிக்கும் பொழுதே இன்னொரு ஜன்னலில் தமன்னாவின் போட்டோ காலரி பார்த்துக் கொண்டும் இருப்பேன், அப்போது நோ பின்னூட்டம், ஒன்லி வாக்குகள்.

School of Energy Sciences, MKU சொன்னது…

இதில் ஓன்றும் ஆச்சரியம் இல்லை LK, நான் கூட துவக்கத்தில் வெறும் ஓட்டு மட்டும் தான் போடுவேன். எது எப்படியோ நம் பதிவை வெளிச்சத்துக்கு கொண்டு வர்றாங்கல்ல?

School of Energy Sciences, MKU சொன்னது…

அது போக, Tamilish ல, ஒரே நேரத்துல ரெண்டு பேரு (same IP) அடுத்தடுத்து login செய்து vote பண்ண முடியாது.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

சீக்கிரம் கண்டுபிடிச்சு எனக்கும் சொல்லுங்க...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல ஆராய்ச்சிதான்..

ஹேமா சொன்னது…

நானும் கவனித்திருக்கிறேன் கார்த்திக்.சிலசமயம் பதிவுகள் வைத்திருக்காமல்
ரசிக்க மட்டும் வருவார்களோ !

ஸ்ரீராம். சொன்னது…

திரட்டியில் ஐம்பது வாக்குகள் வாங்கினால் நமக்கு தங்கத்தில் மகுடம் கிடைக்க போவதில்லை, அதே போல இரண்டு வாக்குகள் வாங்கினால் நாம் ஒன்றும் டெபாசிட் பணம் இழக்க போவதில்லை"//

ராம்ஜி யாஹூவின் வரிகளை ஆமோதித்து வழிமொழிகிறேன்.

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

அப்படிலாம் இல்ல அம்மணி, இது மேட்டர் வேற. சொல்றேன்

எல் கே சொன்னது…

@வானதி
நான் அதை ஒத்துக் கொள்வேன்.. சில சமயம் நானே ரீபிட் போடுவேன். ஆனால் சம்பந்தமே இல்லாம ஒட்டு போடறது யாருன்னு புரியல

எல் கே சொன்னது…

@அப்பாவி
கடைசியா சொல்றேன் அதை.

எல் கே சொன்னது…

@ஜெயந்தி
சொல்றேன்

@ராம்ஜி

அண்ணே, நமக்கு வருகின்ற கருத்துக்கள்தான் முக்கியம். இதை நான் பதிவில் போட்டதற்கு காரணம், ஒரு சிலர், என்னமோ, அந்த பதிவை போடுபவர்களே கள்ள ஒட்டு போடுவது போன்று கூறி வருகிறார்கள் . அதனால்தான் இந்த குறிப்பிட்ட நபர்கள் யார் என்று அறிய முற்பட்டேன்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா, ராம்ஜிக்கு சொன்ன அதே பதில்தான். நன்றி

எல் கே சொன்னது…

@நிலாமதி
அவ்வளவு பயமா ??? கண்டிப்பா கண்டுபிடிக்கலாம். நன்றிங்க

எல் கே சொன்னது…

@வில்சன்..
அதுசரி...அப்படியா, எனக்குத் தெரிந்து அவ்வாறு இல்லையே ... அதை நான் இன்று சரி பார்க்கிறேன்

எல் கே சொன்னது…

@குரு
கண்டிப்பா சொல்றேன்

எல் கே சொன்னது…

@சாரல்
ஹிஹி

@ஹேமா
அபப்டி இருந்தாலும் பரவாயில்லை. பல நபர்கள் ஒரு குறிப்பிட மணித் துளிகள் இடைவெளியில் ஓட்டுப் போடுகின்றனர். இதை நேட்ட்று உறுதிப்படுத்திய பிறகே பதிவிட்டேன். இந்த பதிவிரிக்கும் அவ்வாறேசெய்துள்ளனர்

pinkyrose சொன்னது…

கொஞ்சமாச்சும் புரியுற மாதிரி சொல்லுங்க பாஸ்...

நாங்க புது ஆளுங்க...ப்ளீஸ்!

Geetha Sambasivam சொன்னது…

இதுக்குத் தான் நான் பொதுத் தேர்தலில் கூட ஓட்டுப் போடறதில்லை! எதுக்கு வம்பு?? :))))))))))))

பெயரில்லா சொன்னது…

நானும் பல முறை பின்னூட்டம் போட முடியாட்டியும் பதிவு பிடிச்சிருந்தா ஓட்டு மட்டும் போடுவது உண்டு

செல்வா சொன்னது…

பட்டமெல்லாம் வேண்டாம் .. எதாவது சம்திங் கொடுத்தா கண்டுபிடிக்கலாம் ..

எல் கே சொன்னது…

@ரோஸ்
போகப் போக புரியும்

@மாமி
அவ்

@அம்மிணி
நான் சொல்றத புரிஞ்சிகல, நீங்க ஒட்டு போட்ட, நீங்க ஏற்கனவே சப்மிட் பண்ண உங்கப் பதிவு இருக்கு. அனால் அப்படி எதுவும் இல்லாம வெறும் ஓட்டு மட்டும் போடறவங்களை தேடறேன்

@செல்வகுமார்
எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை . கண்டுபிடிங்க

அனு சொன்னது…

எல்.கே. சார்,

எனக்கு சொந்தமாக ப்ளாக் கிடையாது.. எழுதுவதை விட படிப்பதில் ஆர்வம் அதிகம்.. அதனால், தமிழிஷில் வரும் பதிவுகளை படித்து பிடித்திருந்தால் ஓட்டு போடுவேன்.. நான் அவ்வளவாக எந்த பதிவையும் சப்மிட் பண்ணியதும் இல்லை..

ராம்ஜி சொன்ன மாதிரி பிடித்த சிலருடைய பதிவுகளைப் பார்த்த உடனே ஓட்டு போட்டு விட்டு ஓய்வாக இருக்கும் போது தான் படிப்பேன்.. (eg. dheva) தமிழில் தட்டச்சு செய்வது கஷ்டமாக உள்ளதால் பின்னூட்டங்களும் அவ்வளவாக போடுவதில்லை.. template பின்னூட்டங்கள் போடுவதிலும் ஆர்வமில்லை..

ஸோ, பின்னூட்டம் போடாவிட்டாலும் (அ) போஸ்ட் சப்மிட் பண்ணாவிட்டாலும் ஓட்டு போடுவதை நான் அந்த பதிவரின் எழுத்துக்கு நான் தரும் ஆதரவாகவே கருதுகிறேன்.. இதில் எதுவும் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை..

எல் கே சொன்னது…

@அனு
நான் சொல்றத நிறைய பேர் சரியா புரிந்து கொள்ளவில்லை,. நேரம் இல்லாத சமயத்தில், வெறும் ஓட்டு மட்டும் போடுவது நானும் செய்வதுதான். ஒரு குறிப்பிட கால நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஓட்டுக்கள் விழுகின்றன. அந்த குறிப்பிட ஐடிக்கள் யாருடையது என்பதுதான் என்கேள்வி