ஜூலை 06, 2010

அப்பாவி ரங்கமணிகள் சங்கம்

 வர வர ரங்கமணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. ஒருவர் என்னடான்னா, சமையல் பாத்திரங்களை கைப்பையில் கொண்டு சென்று தாக்குகிறார்.. இன்னொருவர், சமையல் செய்து தாக்குகிறார். எனவே அப்பாவிகளாக வாழ்கையை கழிக்கும் ரங்கமணிகளை பாதுகாக்க "அப்பாவி ரங்கமணிகள் சங்கம் " துவங்கப் படுகிறது

கடைசியாக, கனடாவில் இருக்கு ரங்கமணி, தன் தங்கமணி பிறந்தநாள் விருந்தாக இட்லியை செய்து கொடுமைப் படுத்தினார் என்றும், பெங்களுருவில் இருக்கும் ரங்கமணி ஒருவர் பாட்டு கூடப் பாடமுடியவில்லை எனவும் புலம்பியதன் விளைவே இந்த சங்கம் உடனடியாகத் துவங்கப் படுவதின் காரணம்.

ரங்கமணிகளை குறிவைத்து எழுதப் பதிவு எழுதும் தங்கமணிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முதலில் முடிவு செய்யப் பட்டுள்ளது. குறைந்தப் பட்சமாக எதிர் பதிவு சங்கத்தின் சார்பாக எழுதித் தரப்படும்.  எதிர்பதிவு எழுதியும் மாறாத பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை சங்கத்தின் பொதுக்குழு தீர்மானிக்கும். ரங்கமணிகளை ஆதரிக்கும் சில  தங்கமணிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தி விருது வழங்கப்படும்.

சங்கத்தின் தலைவராக, அபுதாபியில் , கஷ்டப்படும் ரங்கமணி தேர்வாகி உள்ளார். நான் பொருளாளராகவும், நமது அமீரக சிங்கம் தேவா செயலாளரகவும் இருப்பார்.உறுப்பினர் சேர்க்கை அதி தீவரமாக நடைபெறுகிறது. முதலில் சேரும் ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஆயுள் கால சந்தா இலவசம். விரைவில், அகில உலகமெங்கும் கிளைகள் திறக்கப்படும்.

விரைவில், கல்யாணம் செய்துகொண்டு ரங்கமணிகள் ஆகப் போகிறவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கு என்று சந்தாவில் தனி சலுகை குடுக்கப்படும். உறுப்பினர் ஆக விரும்புவர்கள்  தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி appavirangamanigal@gmail.com

சங்கத்தின் விலாசம்
அப்பாவி ரங்கமணிகள் சங்கம்,
அப்பாவி தெரு, ரங்கமணிகள் நகர், சென்னை.

இனி ரங்கமணிகள் மேல் தொடுக்கப் படும் தாக்குதல்கள் கடுமையாக எதிர்க்கப் படும்.

டிஸ்கி : இதற்கு எதிர் வினைகள் வந்தால், கடுமையாக பதில் வினைகள் தொடுக்கப்படும்
என்று அன்புடன் கூறிகொள்கிறேன்.

பி.கு பின்னூட்டம் இடுவதில் பிரச்சனை உள்ளதால் அனானி கமென்ட் அனுமதித்து உள்ளேன் .பின்னூட்டத்தில் உங்கள் பெயருடன் போடவும். நன்றி 

With Love LK

78 கருத்துகள்:

Kousalya சொன்னது…

இப்படியெல்லாம் நீங்க கிளம்பினா நாங்க என்ன செய்வது? யார் எல்லாம் இதில் உறுப்பினர்கள் ஆகிறார்கள் என்று முதலில் பார்க்கவேண்டும்?

கலக்குங்க friend ?

வேற என்ன சொல்ல?

Vidhoosh(விதூஷ்) சொன்னது…

சங்கத்து தலைவி என்னை கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக சுயம்பு சங்கம் உருவானதை கடுமையாக எதிர்க்கிறேன்... இது எந்த ஊர் ஞாயம் என்று கேட்கிறேன்..

இன்னொரு அப்பாவி தங்கமணி.

பெயரில்லா சொன்னது…

இதென்ன புது கலாட்டாவா இருக்கே ...உங்க அப்பாவி ரங்கமணி சங்கத்துக்கு என் வாழ்த்துக்கள் ..நான் ரங்கமணிகளை ஆதரிக்கும் தங்கமணி தான் இப்பவே சொல்லிட்டேன்

Vidhoosh(விதூஷ்) சொன்னது…

ஒரு பெண்ணை ரங்கமணிகள் சங்கத்துக்கு தலைவியாக சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று சொன்னால், ஆணாத்திக்கவாதி பெண்ணியம் போன்ற சவுக்குகள் கொண்டு விளாரபடுவீர்கள் என்று கொடும் எச்சரிக்கையையும் தங்கமணீஸ் சார்பாக விடுத்துக்கிறேன்.
தங்கமணி சங்கத்துல இருக்கும் "அடிப்போடி"

பெயரில்லா சொன்னது…

இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவர்கள் தங்கமணிகள் அல்ல என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

kggouthaman சொன்னது…

என்னையும் சேர்த்துக்குங்க தங்கமணியால் தலைவலி வந்து அவதிப் படுகிறேன் தினமும்.

Priya சொன்னது…

ச்ச... பாவம்தான் இந்த ரங்கமணிகள். ம்ம்.. சங்கம் ஆரம்பிக்கும் அளவிற்கு கொடுமைகள் நடக்கிறதா?!!!

ஹேமா சொன்னது…

கார்த்திக் இப்பிடி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு.....நீங்களேதான் உசுப்பேத்துறீங்கன்னு நினைக்கிறேன்.உங்களுக்குத்தான் இட்லி எறி நடக்கும்.
பாத்திட்டே...இருங்க !

குந்தவை சொன்னது…

சங்கம் பல உறுப்பினர்களை கொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

இப்படிக்கு ஒரு அப்பாவியிலும் அப்பாவி தங்கமணி.

( தங்கமணிகளே உங்கள் ரங்கமணிகள் அப்பாவியாக இல்லாவிட்டால்.. அவரை எப்பாடு பட்டாகிலும் அப்ப்பாவியாக்கி உறுப்பினர் ஆக்க கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்)

LK சொன்னது…

அப்பாவி ரங்கமணிகள் சங்கத்திற்கு எதிராக, யாரோ சில தங்கமணிகள் சேர்ந்து செய்த சதியின் காரணமாகத்தான் பின்னூட்டம் வரவில்லை.

ப.செல்வக்குமார் சொன்னது…

யாருங்க அந்த ரங்கமணியும் , தங்கமணியும் ...??

குந்தவை சொன்னது…

சங்கம் பல உறுப்பினர்களை கொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

இப்படிக்கு ஒரு அப்பாவியிலும் அப்பாவி தங்கமணி.

( தங்கமணிகளே உங்கள் ரங்கமணிகள் அப்பாவியாக இல்லாவிட்டால்.. அவரை எப்பாடு பட்டாகிலும் அப்ப்பாவியாக்கி உறுப்பினர் ஆக்க கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்)

அபி அப்பா சொன்னது…

சபாஷ் கார்த்தி சபாஷ்!எதிர்பதிவு போடும் ரங்கமணிகளுக்கு சங்கத்தின் சார்பாக ஒரு மம்பட்டியான் போர்வையும், நெளிஞ்ச வெண்கல லோட்டாவும் இலவசமாக தரப்படும் எனவும் வாக்களித்தால் நான் எதிர் பதிவு எழுதி தர தயார். (பின்னே எழுதி குடுத்துட்டு வீட்டுக்கு போனா திண்ணை தானே கதி)

அபிஅப்பா சொன்னது…

கார்த்தி பிள்ளையார் சுழி போட்டு தொடங்கு....அதனால இப்ப தான் படிச்சேன் விதூஷக்காவின் ஷம்ஷயம்ன்னு ஒரு பதிவு. நீங்க கூட அங்க போய் உங்க வருத்தத்தை தெரிவிச்சு வந்தீங்களே அந்த பதிவுக்கு எதிர் பதிவு போட்டு ஆட்டத்தை ஆரம்பிக்கவும்:-)) என் ஆசீர்வாதங்கள்! (இந்த விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும்)

விதூஷ் சொன்னது…

காலையில் போட்ட கமெண்டு காக்கா தூக்கிட்டு போனதால இப்போ மறுபடி ...

யாரைக் கேட்டு சங்கம் ஆரம்பிச்சீங்க. குறைஞ்ச பட்சம் அப்பாவி தங்க்ஸ் தலைவி கிட்டயாவது கேட்டீங்களா.. எல்லாம் நல்லா இல்லே...

மீட்டிங்கு கீட்டிங்குன்னு போயிட்டு வடையும் சமோசாவும் சாப்ட்டுட்டு, ஜீராத்தண்ணி, சுக்கு காப்பின்னு கேட்டுண்டு வந்தா, தொலைச்சு புடுவோம் தொலைச்சு... ஆமாம்..

என்ன, நான் சொல்றது கேக்கறதா.. :))

விதூஷ் சொன்னது…

பிரபல நடிகர் பிரசாந்து சங்கத்தில் இனஞ்சுட்டாரான்னு அறிந்து கொள்ளும் ஆவலோடு இருக்கிறேன்.

விதூஷ் சொன்னது…

அபி அப்பாவுக்கு.. அதிலேயும் என்ன கௌரத.. அலுமினியம் சொம்பு தான் தங்கமணிகள் சங்கத்தில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது

பெயரில்லா சொன்னது…

kousalya...

என்ன இப்படி கிளம்பிட்டீங்க ? வீட்டல இதை முதலில் சொல்லிடீங்களா? இருக்கட்டும் உங்கள் சங்கத்தில் யார் எல்லாம் இணைகிறார்கள் என்று பார்கிறேன்.....?!

கலக்குங்க friend...??! வாழ்த்துகள்!!

வேற என்ன சொல்ல நண்பரா போய்டீங்க......

ambi சொன்னது…

எல்கே, உனக்கு ரெம்ப தான்பா தைரியம்.
கையும் களவுமா மாட்டிகிட்டா அப்புறம் என் சொந்த கடையே ஜப்தி ஆயிடும். இங்க சேரலாமா?னு எதுக்கும் வீட்ல கேட்டு வந்து சொல்றேன். :))

ஜெயந்தி சொன்னது…

தங்கமணிகள் டீம் இப்பவே தொடங்கீட்டாங்களே எப்படி எதிர் பதிவு போடுவீங்க?

KayKay சொன்னது…

Ipidiellam pesittu pona raathiri palya soru kooda poda maatanga. athuvumillama sori naai koodathan paduthu thoonganum. angayum picha kaaran edatha share panna maatan. odambukku aagathu, sangatha kalainga..

-- Krishna

தெய்வசுகந்தி சொன்னது…

வீட்ல அனுமதி வாங்கிட்டீங்களா? அப்புறமா வீட்டுக்குள்ள போக முடியாத நிலமை வந்துரப்போகுது. எதுக்கும் பாத்து நடந்துக்குங்க!! சொல்லறத சொல்லியாச்சு :-)

sriram சொன்னது…

நல்ல முடிவு கார்த்திக். வர வர இந்த Aunty களின் அலப்பறை தாங்க முடியல. நம்மள நாமதானே காப்பாத்திக்கணும். முக்கியமா கனடாவில இருக்கும் ஒரு ரங்குவையும், சியாட்டிலில் இருக்கும் ஒரு ரங்குவையும் நான் கட்சிக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன், எனக்கு என்ன பதவி கொடுப்பீங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பெயரில்லா சொன்னது…

கார்த்தி நான் எழுதின பதில் ஏன் போடலே ?

பெயரில்லா சொன்னது…

@ அப்பாவி தங்கமணி -
//ரங்கமணிகளை பாதுகாக்க "அப்பாவி ரங்கமணிகள் சங்கம் " துவங்கப் படுகிறது//
இதெல்லாம் உனக்கே கொஞ்சம் அநியாயமா தெரியல... ரங்கமணிகள் அண்ட் அப்பாவி doesn't go together... ஹா ஹா ஹா... நாலு பேரை கேட்டு பாரு... உனக்கே புரியும்... வேணுமா அப்பாவிகளை அலைகளைக்கும் ரங்கமணிகள் சங்கம்னு வெச்சுக்கோ... நோ problem

// நான் பொருளாளராகவும்//
டம்மி பதவி எல்லாம் மத்தவங்களுக்கு, காசு பாக்குற பதவி உனக்கா... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது.... ஹையோ ஹையோ

ஒரு விசயம் சொல்லட்டுமா... நீங்க (ரங்க்ஸ்க) எல்லாம் இப்படி சங்கம் வெச்சு தான் அப்பாவிகன்னு prove பன்ணனும்... ஆன தங்கமணிகள் அப்பாவிகள்ங்கறது implied & universal truth you know (ஹி ஹி ஹி....)

//கடைசியாக, கனடாவில் இருக்கு ரங்கமணி, தன் தங்கமணி பிறந்தநாள் விருந்தாக இட்லியை செய்து கொடுமைப் படுத்தினார் என்றும்//
ஹலோ, இந்த கொடுமை புடிச்ச ஊர்ல வந்து தள்ளினதும் இல்லாம, இட்லிய செஞ்சு குடுக்கறதே பெருசு... இதுல கொடுமை கிடுமைனு பேசினா நல்லா இல்ல சொல்லிட்டேன்... 33 % அரசாங்கம் குடுத்தாலும் ஒரு நாளாச்சும் தங்கமணிய உக்காரவெச்சு சமைச்சு போடுங்க அப்புறம் பாப்போம் நீங்க அப்பாவிகளா படுபாவிகளானு... ஆனா ஒரு கண்டிஷன்... kitchen போர்க்களம் எல்லாம் ஆக கூடாது ஒகே... (எல்லாம் சொந்த அனுபவம் தான்...ஹும்...)

//பெங்களுருவில் இருக்கும் ரங்கமணி ஒருவர் பாட்டு கூடப் பாடமுடியவில்லை எனவும் புலம்பியதன் விளைவே இந்த சங்கம் உடனடியாகத் துவங்கப் படுவதின் காரணம்//
அது எல்லாம் போது நலம் கருதி அவிக தாங்க்ஸ் அந்த ஊரு மொத்தத்தையும் காப்பாத்தி இருக்காக... இல்லேனா ஏற்கனவே குளோபல் வார்மிங் இருக்கே... அப்புறம் universal வார்மிங் ஆய்டாது... என்ன நான் சொல்றது... சரிதானே சக அப்பாவி தங்கமணிகளே...

அப்பாவி தங்கமணி சொன்னது…

//Kousalya said...யார் எல்லாம் இதில் உறுப்பினர்கள் ஆகிறார்கள் என்று முதலில் பார்க்கவேண்டும்//

Good point... பாத்துட்டு அவங்க வீட்டு அம்மணிகளுக்கு எல்லாம் மெமோ அனுப்ப வேண்டும்... கரெக்ட் தானே கௌசல்யா

அப்பாவி தங்கமணி சொன்னது…

//விதூஷ் said... யாரைக் கேட்டு சங்கம் ஆரம்பிச்சீங்க. குறைஞ்ச பட்சம் அப்பாவி தங்க்ஸ் தலைவி கிட்டயாவது கேட்டீங்களா.. எல்லாம் நல்லா இல்லே...//

விதூஷ்... நீங்க ரெம்ப நல்லவங்க....

Harini Sree சொன்னது…

Intha vishiyam manniku theriyuma?? Ippadikku Harini! :P

சுசி சொன்னது…

அடுத்த தொடர்பதிவுக்கும் உங்களை கூப்டுறதா முடிவே பண்ணிட்டேன்.

- சுசி.

Mrs.Menagasathia சொன்னது…

சங்கம் வேற ஆரம்பித்தாச்சா???

பெயரில்லா சொன்னது…

ரங்குஸ்சுக்காக இரண்டு பதிவே போட்டு எல்லா தங்க்ஸோடயும் சாபத்தை (சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் என்ற சாபம் தான்) வாங்கிக் கட்டிக்கிட்ட எனக்கு ஒபாமாவையே கூப்பிட்டு ஒரு பாராட்டு விழா நடத்தனும். சரியா?

ஜெய்லானி சொன்னது…

ஐயா என்னையும் ஆயுள் சந்தா உறுப்பினரா சேத்துக்கோங்க . இப்பவெல்லாம் இட்லியை கண்டாலே குலை நடுக்கம்தான். பேரை கேட்டாலே ஜுரம் 102 டிகிரி அடிக்குது .
அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெய்லானி சொன்னது…

அய்யோ விட்டு போச்சேபாதி கமெண்ட்.

இப்படிக்கு
பாதிக்க பட்டோர் சங்கம்.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. ( வர பயம்தான் காரணம் )

GEETHA ACHAL சொன்னது…

இது எல்லாம ரொம்ப ஒவராக தெரியவில்லை...

ஹேமா சொன்னது…

கார்த்திக்...காலேலயே பின்னூட்டம் போட்டிட்டுப் போனேன்.காணல !

பின்னூட்டங்களைப் பாத்தா இந்த ரங்கமணிகள் எல்லோரும் பாவமானவங்களோ !

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ithukku minus vote epdippaa poduradhu???? :P

dilu irundhaa abudhaabi rangamani serattum, paakkaren!

பெயரில்லா சொன்னது…

பாதீங்களா பாதீங்களா இந்த அநன்யாக்காவோட அடாவடித்தனத்தை. பாவம் மாமா. ஆனாலும் அப்பாவித் தங்கஸ் அப்பாவி தங்கஸ் தான். இப்படி எல்லாம் மெறட்டல. ஹி ஹி.

LK சொன்னது…

@கௌசல்யா
உறுப்பினர் பட்டியல் வெளியிடப்படாது :))

LK சொன்னது…

@விதூஷ்

தங்கமணி சங்கதுக்குதான் நீங்க தலைவி . எங்க சங்கத்துக்கு இல்லை

LK சொன்னது…

@சந்தியா

நன்றி.. உங்களை மாதிரி ஆட்கள்தான் தேவை . நன்றி

LK சொன்னது…

பாருங்க நண்பர்களே.. எப்படிலாம் மிரட்டல் விடறாங்க

LK சொன்னது…

@அம்மிணி
இந்த மாதிரி சொன்ன நம்புவோமா?? பயந்து போய்தான் நேத்து சதி பண்ணிடீங்க கமன்ட் வரமா??
நன்றிங்க

LK சொன்னது…

@கௌதம்
கண்டிப்பா ..

@ப்ரியா

பாருங்க பிரியா , இந்த அக்ரமதுக்கு ஒரு முடிவு கட்டனும் .. வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஹேமா

நடக்காது. எங்க வீடு அம்மணி சொல்லித்தான் இந்த பதிவு போட்டேன்.

@குந்தவை

வாழ்த்துக்கு நன்றி

LK சொன்னது…

@செல்வா
இப்படி அப்பாவியா இருக்கீங்களே ?? ரங்கமணி = புருஷன் (அப்பாவி) தங்கமணி = மனைவி ( அடப்பாவி )

LK சொன்னது…

@அபி அப்பா

ஏன் பயப் படறீங்க.. இலவசமா தங்கும் விடுதி உண்டு ..

LK சொன்னது…

@அபி அப்பா
பண்ணிடலாம். விடுங்க

Kousalya சொன்னது…

அப்பாவி தங்கமணி...

/Kousalya said...யார் எல்லாம் இதில் உறுப்பினர்கள் ஆகிறார்கள் என்று முதலில் பார்க்கவேண்டும்//

///Good point... பாத்துட்டு அவங்க வீட்டு அம்மணிகளுக்கு எல்லாம் மெமோ அனுப்ப வேண்டும்... கரெக்ட் தானே கௌசல்யா?///

மெமோ மட்டும் இல்ல... இன்னும் வேற, வேற,வேற ......!!?

ஆனா இந்த LK உறுப்பினர் லிஸ்ட் குடுக்க முடியாது என்று சொல்லிட்டாரே..!?

geethasmbsvm6 சொன்னது…

ரங்கமணிகளை ஆதரிக்கும் சில தங்கமணிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தி விருது வழங்கப்படும்.//

ஹிஹிஹி, நேத்திக்கு முயன்று பார்த்துட்டுப் போயிட்டேன், இத்தனை பேர் பின்னூட்டங்களும் பிரச்னை இல்லாமல் வந்துச்சா?

அப்புறம் அந்த விருது ஏதோ சொல்லி இருக்கீங்களே, அதை எனக்குக் கொடுத்துடுங்க. நான் எப்போவுமே ரங்குகளை ஆதரிப்பேன். வேணும்னா அநன்யா அக்காவைக் கேட்டுப் பாருங்க. :D

அமைதிச்சாரல் சொன்னது…

//LK said...
@ஹேமா

நடக்காது. எங்க வீடு அம்மணி சொல்லித்தான் இந்த பதிவு போட்டேன்.//

நீங்க சங்கம் ஆரம்பிக்கிறதுக்கே தங்கமணி அனுமதிச்சாத்தான் முடியும்.. இதிலிருந்தே தங்கமணிகளோட சக்தியை தெரிஞ்சுக்கோங்க :-))))))))))

Jana சொன்னது…

Nice...CHEERS!!!

LK சொன்னது…

@விதூஷ்
நீங்க பரிந்துரை செஞ்சா ??? அதெல்லாம் முடியாது

LK சொன்னது…

@விதூஷ்

யார்கிட்ட கேக்கணும் ?? நாங்களே அதையும் தருவோம்

@அம்பி
ஏன் இவ்வளவு பயம்? முதல் வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஜெயந்தி
இதுக்கெல்லாம் நாங்க பயப் பட மாட்டோம்

@கிருஷ்ணா
ஏன் ஏன் இவ்வளவு பயம். சங்கம் உங்களுக்கு ஆதரவு தரும். முதல் வருகைக்கு நன்றி பாஸ்

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
அப்படில்லாம் ஆகாது அம்மணி

@பாஸ்டன் அண்ணாச்சி

சரியா சொன்னீங்க . அமெரிக்க கிளைத் தலைவர் பதவி உங்களுக்கே

@சந்தியா
நேத்து கொஞ்சம் பிரச்சனை ப்லாகேர்ல

LK சொன்னது…

@அடப்பாவி அக்கா

//ரங்கமணிகள் அண்ட் அப்பாவி doesn't go together.//
இல்லையே அன்னிக்கு அனன்யா போட்ட படம் இங்க போட்டு இருக்கணும். மிஸ் பண்ணிட்டேன் ..

//தங்கமணிகள் அப்பாவிகள்ங்கறது implied & universal truth you க்நொவ்//

பொய் பொய்

//நீங்க அப்பாவிகளா படுபாவிகளானு.//
உன்னவிட நல்ல இட்லி செய்வோம்

LK சொன்னது…

@அடப்பாவி

அதெல்லாம் நடக்காது

@ஹரிணி

தெரியுமே.. ஏன்??

LK சொன்னது…

@சுசி

தாராளமா கூப்பிடுங்க..

LK சொன்னது…

@மேனகா

ஆரமிச்சாச்சு

@அனாமிகா
கண்டிப்பா. உங்களுக்கு குடுக்கமா

LK சொன்னது…

@ஜெய்
கண்டிப்பா நீங்க ஆயுள் கால உறுப்பினர்

@கீதா அச்சில்
இல்லையே

LK சொன்னது…

@ஹேமா
அது ப்ளாகர் ப்ராப்ளம். ஆமாங்க நாங்க எல்லாரும் அப்பாவிகள் தான்.

LK சொன்னது…

@அனன்யா
இப்படிலாம் மிரட்டின சட்ட நடவடிக்கை எடுப்போம் :P

LK சொன்னது…

@கீதா மாமி
கண்டிப்பா தரேன்

@அமைதி சாரல்
அப்படி தப்பா நினைக்ககூடாது. ரங்கமணிகள் அப்பாவின்னு அவங்களுக்கு தெரியும் ....

LK சொன்னது…

@jana

nandri

vanathy சொன்னது…

சங்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு அப்படி என்னப்பா கொடுமை நடந்திச்சு?? இதைப் படிக்கும் ரங்கமணிகள் பொங்கியெழுக!!!!!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

//முக்கியமா கனடாவில இருக்கும் ஒரு ரங்குவையும், சியாட்டிலில் இருக்கும் ஒரு ரங்குவையும் நான் கட்சிக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன், எனக்கு என்ன பதவி கொடுப்பீங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

Canada ரங்கு is in not reachable mode....ha ha ha

LK சொன்னது…

@வாணி
ஆதரவுக்கு நன்றி

LK சொன்னது…

@அடப்பாவி

அதெல்லாம் எப்படி வரவழைக்கனும்னு எனக்கு தெரியும்

ஸ்ரீராம். சொன்னது…

அடைமொழியில் ஒரு சிறு திருத்தம்....!! என்னுடைய சஜெஷன் "ஐயோ பாவம் ரங்கமணிகள் சங்கம்"...!!!

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

கண்டிப்பா மாத்திடலாம்

Ananthi சொன்னது…

sangam aarambikkara alavukku pocha unga nilama..?? achachoooo...

paathu, sangathula yedhum prachnanna engakitta thaan varanum.. :D :D

Porkodi (பொற்கொடி) சொன்னது…

boston sriram comment paarthu, en rangu "aiyiyo i have no idea who he is, no mistake on my part!!"nu 1st floorku oditare? enna panlam? :P

LK சொன்னது…

@ஆனந்தி
அதெல்லாம் வரமாட்டோம்

@கேடி
உனக்கு விஷயம் தெரியாதா , முதல் மாடியில் இருந்து அவர் எனக்கு மெயில் அனுப்பி உறுபினர் ஆய்ட்டார் .