ஜூன் 12, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VIII

அடுத்த நாள் காலை , பாஸ்கரின் நண்பர்கள் வந்துவிட்டதாகவும், மாலைக்குள் அவரைப் பார்க்க வருவதாகவும் வேலனுக்கு செய்தி வந்தது. அதற்குள், அவருக்கு சைபர் கிரைம் அறிக்கையும் கிடைத்தது.

அதில் அவருக்கு கிடைத்த தகவல் , " மொபைல் போனை இணைய இணைப்பிற்கு உபயோகப் படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் இரண்டு சிம் கார்டுகளில் இருந்துதான் அனைத்து இணைய பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளது என்றும், அந்த  சிம் கார்ட் IMEI  எண்களும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உடனடியாக அந்த  நிறுவனத்திற்கு தொடர்புக் கொண்டார் வேலன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு  சிம் கார்டுகளை பற்றி சொல்லி விவரங்கள் கேட்டார். அந்த இரண்டு எண்களுமே ப்ரீ பெய்ட் எண்கள் என்றும், அவற்றை வாங்கியவர்கள் முகவரியும் கொடுத்தனர். மேலும், அந்த இரண்டு எண்களும் இரு நாட்களாக உபயோகப் படுத்தப் படவில்லை என்ற தகவலும் கொடுத்தனர்.அந்த இரண்டு கார்டுகளை விற்ற முகவர் விலாசத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டார் வேலன்.


எப்படியும் அவர்கள் கொடுத்துள்ள முகவரி தவறாக இருக்கும் என்பது வேலனின் எண்ணம். அது அந்த முகவரிக்கு சென்ற பொழுது உறுதியானது. அந்த முகவரின் கடைக்கு சென்று விசாரித்தப் பொழுது , ஒரு ஆண்தான் இந்த இரண்டு கார்டுகளையும் வாங்கியதாகவும், அவரை அதற்கு முன்பு பார்த்ததில்லை எனவும் கூறினார்.

அங்கிருந்து ஸ்டேசனுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது , நூறடி ரோட்டில் ஒரு விபத்து. விபத்தில் அடிப்பட்டவரின் முகத்தை பார்த்த வேலன் அதிர்ந்தார்.  காரணம் அங்கு விபத்தில் அடிபட்டவன் , பாஸ்கரின் நண்பன் விக்டர்.

  "எவ்ளோ நேரம் ஆச்சு ? எப்படி நடந்தது ? யாரவது பார்த்தீங்களா ?"

 "இப்பதான் சார் ஒரு பத்து நிமிஷம் இருக்கும் .ஒரு வெள்ளை கலர் குவாலிஸ் இடிச்சிட்டு பறந்திருச்சு சார். "

"வண்டி நம்பர் யாரவது நோட் பண்ணீங்களா ? ஆம்புலன்ஸ் இன்பார்ம் பண்ணியாச்சா??"

" வண்டி  நம்பர் நோட் பண்ணா முடியலை சார். ஆம்புலன்ஸ் இன்பார்ம் பண்ணியாச்சு "

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து  சேர, விக்டரை அதில் ஏற்றி முதல் உதவி செய்தவாறே , அலறிக்கொண்டு பறந்தது . மத்தியக் கட்டுபாடு அறையை அழைத்த வேலன், நூறடி ரோட்டில் இருந்து வரும் அனைத்து வெள்ளை நிற குவாலிஸ் கார்களையும் நிறுத்தி விசாரிக்க சொன்னார்.

இதை முடித்து விட்டு, விக்டரின் வீட்டிற்கு செய்தி சொல்லி அவர்களை, குறிப்பிட்ட மருத்துவமனைக்கு செல்ல சொன்னார். அதன் பின் அவரும் மருத்துவமனைக்கு சென்றார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த விகடர் உயிர்வாழ போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் அவனது பெற்றோரும் , மற்ற இரண்டு நண்பர்களும் வந்து சேர்ந்தனர். சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது பெற்றோரிடம் வேலன் கேட்டக் கேள்வி "வீட்டில் கார் இருக்க, விக்டர் எதற்கு பைக்கில் சென்றான் ?"

"வீட்ல கார்  இருந்தாலும் அவன் தனியா போறதா இருந்தா பைக்லதான் போவான். காலைலதான் வந்து சேர்ந்தான். அதுக்குள்ள எதோ போன் வந்துச்சு . சீக்கிரம் வரேன்னு போனான். இப்படி ஆகிடுச்சி ."

வேலனின் மொபைலுக்கு கட்டுபாட்டு அறையில் இருந்து அழைப்பு  வர , அவர்கள் சொன்ன செய்தி கேட்டு , "சரி உடனடியா அதைப் பத்தி விசாரிக்க சொல்லுங்க. நான் இப்ப அங்கப் போறேன் ".

                                                              *****************************
 முதல் நாள்  நிகழ்ச்சிகளின் விளைவாய், தூக்கம் தொலைத்த விழிகளுடன்  அலுவலகம் செல்ல தயாரானாள் அஞ்சலி.

அன்று அலுவலகத்தில், முதல் நாள் நிகழ்ச்சிகளை மறந்தவனாய் ஜெய் பணியாற்றினான். இவளிடம் அதைப் பற்றி எதையும் பேசாமல் , வேலை சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பேசினான். மனதிற்குள் "இந்த ஆண்களே இப்படிதான் , வேணும்னா மட்டும்தான் பேசுவாங்க " அவனை திட்டியவாறே தனது வேலையில் மும்முரமானாள்.

மாலை கிளம்புமுன் அவளை அழைத்த ஜெய், "அஞ்சு, இன்னிக்கு கொஞ்சம் வெளில போற வேலை இருக்கு. நான் அறைக்கு வர லேட் ஆகும். எனக்காக காத்திருக்க வேண்டாம். நீ சாப்பிட்டு விட்டு தூங்கு " என்று சொல்ல, அதற்கு மறுமொழி கூற விளைந்த அஞ்சலியை இடை மறித்த ஜெய் " நீ கிளம்பலாம் " என்று கூறினான்.

கோபத்துடன் அங்கிருந்து சென்றாள் அஞ்சலி . அவள் கோபத்துடன் செல்வதைப் பார்த்து புன்னகையுடன் அங்கிருந்து அகன்றான் ஜெய்.
                                          

                                              *****************************
 மேட்டுபாளையம் ரோட்டில் ஒரு ஓரமாக நின்ற அந்த காரை கவனித்த வேலன், "நம்பரை செக் பண்ணீங்களா ?" அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கேட்டான்.

"ஆர்.டி.ஓ ஆபீஸ்க்கு இன்பார்ம் பண்ணி இருக்கோம் சார். பத்து நிமிசத்துல மறுபடியும் கூப்பிடறேன்னு சொன்னாங்க "

"யாரு உங்களுக்கு இன்பார்ம் பண்ணங்க இந்த காரை பத்தி ?"

"கண்ட்ரோல் ரூம்ல இருந்து நியூஸ் வந்துச்சு சார். இந்த ரோட்ல வழக்கமா ரோந்து போற நேரத்துல இந்த கார் நின்னுகிட்டு இருந்துச்சி . உடனே சந்தேகப் பட்டு இங்க பக்கத்தில விசாரிச்சப்ப யாருக்கும் இதை பத்தி   தெரியலை. யாரோ ஒரு ஆள் இறங்கி காரை பூட்டிட்டு போறதப்  பார்த்திருக்காங்க. யாரும் நெருக்கதிலப் பார்க்கல. காரை பூட்டினவன், இங்க இருந்து நடந்து போயிருக்கான். "

"சரி. இந்த கார் இங்கயே இருக்கட்டும். இது அவனோட காரா இருந்தா கண்டிப்பா வருவான். இங்க கண்காணிப்பு இருக்கட்டும் வெளில தெரியாத அளவுக்கு. "

திரும்பவும் மருத்துவமனைக்குத் செல்லத் துவங்கிய வேலன் மனதில் கண்டிப்பாக இது ஒருவர் சம்பந்தப் பட்ட விஷயம் அல்ல. இரண்டோ அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட நபர்களோ சேர்ந்துதான்  பண்ணி இருக்கணும். அவர்கள் யாராக இருந்தாலும், இந்த நால்வரால் பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும்.   அதேப் போல், அவர்களுடைய அடுத்த குறி , மீதமிருக்கும் இருவரில் ஒருவராக இருக்கவேண்டும் . அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கணும் என்று எண்ணியவாறே சென்றார்.

                                          *****************************
அறையில் கோபமும் , சோகமும் கலந்து இருந்த அஞ்சலியின் அலைபேசி விடாமல் அலறிக் கொண்டிருந்தது. அவள் இருந்த மனநிலையில் யாரிடமும் பேச இஷ்டப் படவில்லை.  தொடர்ந்து அது அலற, ஒரு கட்டத்தில் அலைபேசியை எடுத்து அதில் வந்த எண்களைப் பார்த்தாள். எதுவும் பழகிய என்னாகத் தெரியாததால் அலைபேசியை அணைத்து ஒருபக்கம் வைத்தாள்.

ஜெய்யின் அன்றைய  நடவடிக்கைகளை எண்ணிப் பார்த்தாள். பின் தனக்தானே சமாதானம் சொல்லிகொண்டாள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எத்தனையோ கவலைகள் உண்டு. நம்மை மட்டுமே எண்ண  வேண்டும் என்று நினைப்பதுத் தவறு என்று எண்ணியவாறே, சாப்பிட சென்றாள்.

அதே சமயம், ஜெய், தனது நண்பர்களுடன் மிக மும்முரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தான்.


-பரிசு தொடரும்

35 கருத்துகள்:

Harini Sree சொன்னது…

naan thaan first! periya post a pottathukku nandri! :) as usual super

அமைதிச்சாரல் சொன்னது…

சஸ்பென்ஸ் கூடிக்கிட்டே இருக்கு...

asiya omar சொன்னது…

எல்.கே.கதை பயங்கர விறு விறுப்பாக போய் கிட்டு இருக்கு.

கோமதி அரசு சொன்னது…

கார்த்திக்,இப்போது தான்’ பாவத்தின் பரிசு’ படிக்க நேரம் கிடைத்தது.

ஒவ்வொரு பாகமும் நல்ல சஸ்பென்ஸ்.

அடுத்து என்ன என்று படிக்க ஆவலை தூண்டும் கதை அமைப்பு.

முடிவு நான் ஊகித்த முடிவா என்று தெரிய ஆவல்.

Matangi Mawley சொன்னது…

very interesting... exciting-a poguthu!

ஜெய்லானி சொன்னது…

@@@ அமைதிச்சாரல்--//

சஸ்பென்ஸ் கூடிக்கிட்டே இருக்கு..//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

LK சொன்னது…

@ஹரிணி
வடை உனக்கே.,. நன்றி

@சாரல்

நன்றிங்க

@ஆசியா

பாராட்டுக்கு நன்றி

LK சொன்னது…

@கோமதி

நன்றி மேடம். தொடர்ந்து வந்துப் பாருங்க அப்ப தெரியும்

LK சொன்னது…

@மாதங்கி
நன்றி

@ஜெய்

நன்றி தல

Kousalya சொன்னது…

interesting.....!

அன்புடன் மலிக்கா சொன்னது…

கதையில் திடுக் கூடிக்கிட்டேயிருக்கு. அடுதது என்ன ஆவலை தூண்டுகிறது.

Mrs.Menagasathia சொன்னது…

ம்ம் நல்ல விறுவிறுப்பு..........

Porkodi (பொற்கொடி) சொன்னது…

:)))) sooooofer.. waiting waiting waiting..

Software Engineer சொன்னது…

வணக்கம், என்னுடைய முதல் பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

மதுரை சரவணன் சொன்னது…

இன்று தான் இக் க்தை ப்ற்றி அறிந்தேன் . நல்ல விறு விறுப்பு . அருமை . வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@கௌசல்யா

:))

@மலிக்கா
நன்றிங்க

LK சொன்னது…

@மேனகா

வரவுக்கு நன்றி

@பொற்ஸ்
டாங்கீஸ்

LK சொன்னது…

@Software Engineer

வரவுக்கு நன்றி . கண்டிப்பா பார்கறேன்

@சரவணன்

நன்றிங்க

ஸ்ரீராம். சொன்னது…

அடுத்த பலி யாருங்க...

Ananthi சொன்னது…

Nice :-)

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நீங்களே சொல்லுங்க

@ஆனந்தி

நன்றி :)

vanathy சொன்னது…

எல்கே, மிகவும் நல்லா இருக்கு. எப்ப அடுத்த பாகம்????

அநன்யா மஹாதேவன் சொன்னது…

இந்த பகுதிக்கு போட்ட படம் நிஜம்மாவே பயம்மா இருக்கு!
எல்லாம் இருக்கட்டும், //அந்த முகவரின் கடைக்கு சென்று விசாரித்தப் பொழுது , ஒரு ஆண்தான் இந்த இரண்டு கார்டுகளையும் வாங்கியதாகவும், அவரை அதற்கு முன்பு பார்த்ததில்லை எனவும் கூறினார்.// இதான் கொஞ்சம் இடிக்குது.. அதெப்படி எவ்ளோ பேர் ப்ரீபெய்டு கார்டு வாங்குறாங்க. நினைவு வெச்சுக்கறது யதார்த்தமா இல்லையே? லாஜிக் ஓட்டையெல்லாம் பார்க்க கூடாது.. பார்க்கலாம்.. இதுலேயும் நல்ல ஸ்பீடு!

LK சொன்னது…

@அனன்ஸ்
யார் கார்ட் வாங்கினாலும், அதை அவர்கள் ஒரு நோட்டில் எழுதி வைப்பார்கள். இப்பொழுது எழுதி வைத்தே ஆக வேண்டும். அதை உறுதி படுத்திக் கொண்ட பின்னரே இதை எழுதினேன்

:)))

LK சொன்னது…

@வானதி

இன்னிக்கு எழுதறேன்

பத்மநாபன் சொன்னது…

படிச்சிட்டே இருக்கிறோம்...படம் ரொம்ப பயப்படுத்துகிறது,,,,

LK சொன்னது…

நன்றி பத்மநாபன் சார்

sandhya சொன்னது…

நல்லாருக்கு ...நேத்து படிக்க முடியலே சாரி கார்த்தி ...மீதி படிக்க ஆவலோடு வெய்டிங் ..

அமைதிச்சாரல் சொன்னது…

//யார் கார்ட் வாங்கினாலும், அதை அவர்கள் ஒரு நோட்டில் எழுதி வைப்பார்கள். இப்பொழுது எழுதி வைத்தே ஆக வேண்டும்.//

சில முன்னெச்சரிக்கை பார்ட்டிகள் அட்ரஸ் முதக்கொண்டு கேக்கிறாங்க..

LK சொன்னது…

@சாரல்

அது நல்லதுதான

BalajiVenkat சொன்னது…

ithuku thaan ethum olara koodathunu solrathu .. ippa paaru kada routey mathittaru... read it in vadivelu style...

story is thrilling .. keep it up the good work...

தக்குடுபாண்டி சொன்னது…

Photo yellam yengenthu raasaa pudikkareengaa?? :)) kadhai nalla irukku sir!!

LK சொன்னது…

@பாலாஜி

ஹஹா

@தக்குடு
கூகிள் துணை

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா...கொலை கொலையா முந்திரிகாயா போயிட்டு இருக்கே... நல்லா போகுது... சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க...

LK சொன்னது…

/..கொலை கொலையா முந்திரிகாயா போயிட்டு இருக்கே... நல்லா போகுது... சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்//

வரும் வரும்