ஜூன் 11, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VII


அழகுத் தேவதையாக வந்த அஞ்சலியை மொய்க்காத கண்களே அந்த அலுவலத்தில் இல்லை. அன்று  ஜெய் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் என்ற எண்ணம் அஞ்சலியின் மனதில் ஒரு பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

தான் நினைத்தது உண்மையெனில் தன்னை விட அதிர்ஷ்டஷாலி  யாரும் இல்லை என்ற எண்ணமும் அவள் மனதில். இதனால் மனதை மகிழ்ச்சி ஆட்சி செய்துக் கொண்டிருந்தாலும், ஒரு மூலையில் இனம் புரியா கவலை ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன யோசித்தும் அவளுக்கும் அதன் காரணம் புரியவில்லை.

 இந்த சிந்தனையால்  இருமுறை ஜெயின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. அதனால் அதை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை பார்க்க முயன்றாள். இருந்தும் ஏனோ மனம் வேலையில் லயிக்க வில்லை. மாலை அறைக்கு திரும்பியவுடன் கட்டிலில் சோர்வுடன் விழுந்தாள்.  தான் தோழியுடன் பேசினால் மனம் ஓரளவு சரியாகும் என்று அவளது தோழிக்கு போன் பண்ண எண்ணும்பொழுது , ஜெயின் அழைப்பு.

"இரவு சாப்பாட்டிற்கு வெளியில் போகிறோம். ரெடியா இரு "

மறுத்து சொல்ல எண்ணி பேச ஆரம்பித்த அஞ்சலி, இறுதியில் ஒத்துக்கொண்டாள்.

மனம் சோர்வாக இருந்ததால் பெரிதாக அலங்காரம் பண்ண பிடிக்கவில்லை. மிக சாதாரணமாக கிளம்பினாள். அறையில் இருந்து கிளம்பி ஹோட்டலை அடையும் வரை இருவரும் பேசவில்லை. ஹோட்டலில் வண்டியை பார்க் செய்யும் பொழுது ,

"அஞ்சலி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல "

"ம்ம்." சுவாரஸ்யம் இல்லாமல் அஞ்சலி.

"அது என்னனு தெரிஞ்சிக இஷ்டம் இல்லையா?"

"எப்படியும் நீங்க சொல்லுவீங்கன்னு தெரியும் ஜெய். சொல்லுங்க என்ன விஷயம் அது ?"

"இன்னும் கொஞ்ச நேரம் பொறு,. உனக்கே தெரியும் "

"ஹ்ம்ம். "

                                                           *******************************

ஸ்டேசனுக்குள் நுழைந்த வேலன் , மிகுந்த குழப்பத்தில் இருந்தார். இந்த கேசில் உருப்படியாக எந்த விதத் தகவல்களும் கிடைக்க வில்லை. கிடைக்கும் தகவல்களும் எந்த வித முடிவுக்கும் நம்மை இட்டு செல்லவில்லை.  அப்பொழுதுதான் அவருக்கு அந்த ரிப்போர்ட் கண்ணில் பட்டது.  அதில் இருந்த தகவல்தான் அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.

பாஸ்கரின் வீட்டில் இவர் எடுத்த அந்த ஊசியில், போதை மருந்தும், விஷமும் கலந்து உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஊசியில் உள்ள கை ரேகை, பாஸ்கரின் கைரேகை அல்ல.

இதை மீண்டும் மீண்டும் படித்த வேலனின் மனதில், குற்றவாளி அந்தப் பெண்தான் என்பது ஊர்ஜிதமானது . அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பெண்ணை பார்த்த ஒரே சாட்சி அந்த வாட்ச்மேன். அவனோ சரியாகப் பார்க்கவில்லை என்று சொல்கிறான்.

"யோவ் ஏட்டு, அந்த பாஸ்கரோட பிரெண்ட்ஸ் மும்பைல இருந்து வந்த உடனே  இங்க வர சொல்லுயா "

"சரிங்க அய்யா ".

                                      *******************************************
"அஞ்சலி , எனக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசத் தெரியாது . நேரடியா சொல்றேன். ஐ லவ் யூ ".

இதை சொல்லி அஞ்சலியின் முகத்தைப் பார்த்தன் ஜெய். அதில் மகிழ்ச்சியும் குழப்பமும் சேர்ந்த உணர்ச்சி தண்டவமாடிக்கொண்டு இருந்தது.

"ஏன் அஞ்சலி? என் மேல நம்பிக்கை இல்லையா? வழக்கமா பணக்கார பசங்க பண்ற மாதிரி பண்ணிடுவேன்னு பயமா? "

"இல்லை ஜெய். உங்கமேல நம்பிக்கை இல்லாட்டி நான் தனியா உங்க கூட வந்திருப்பேனா ?. என்னனு தெரியாத ஒரு கவலை மனசில ஜெய். எனக்கு சொல்லத் தெரியல "

"கவலைப் படாத. இதப் பார்த்தா உனக்கு கவலை ஓடிடும் " சொல்லிக்கொண்டே சிறு பாக்சை அவளிடம் கொடுத்தான் .

அதை வாங்கி திறந்த அஞ்சலியின் கண்கள் வியப்பில் விரிந்தன. அதனுள் அழகிய சிறு வைர மோதிரம் நட்சத்திரத்தைப் போல மின்னிக் கொண்டிருந்தது. மோதிரத்தை அதில் இருந்து எடுத்த ஜெய், அவளது சிவந்த விரல்களை மெதுவாகப் பற்றி அதில் அணிவித்தான்.

அவனது முதல் தீண்டலில் அவள் மெய்சிலிர்த்த அஞ்சலி, தன்னிலை அடையும் முன் , அவள் எதிர்பாராத அந்தத் தருணத்தில், அவனது இதழ்கள் அவளது கைகளில் பதிய அவள் கண்கள் அனிச்சையாக மூடின. அவளது உடல் சிலிர்த்தது. தன்னை மறந்து இருந்தவளை ஜெயின் குரல் இவ்வுலகிற்கு அழைத்தது.

"என்ன அதுக்குள்ள கனவா ?"

"இல்லை." வெட்கத்தில் அவளது குரல் மெலிதாக ஒலித்தது.

"ஜெய், கண்டிப்பா என்னை ஏமாத்த மாட்டீங்களே ?" கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.

"முட்டாள் மாதிரி பேசாத . உன்னை ஏமாத்த நினச்ச , எதுக்கு நான் காதலிக்கறேன்னு சொல்லணும். அதுக்கு எத்தனையோ வழி இருக்கு . என்னை நம்பு. எங்க வீட்ல என்னை மீறி எதுவும் நடக்காது. ஊருக்கு போன உடனே அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடறேன் ".

"இருந்தாலும் மனசுல ஒரு பயம் இருக்கு ஜெய் " சொல்லியவாறே அவனது தோள்களில் சாய்ந்துக் கொண்டாள் அஞ்சலி.

"டோன்ட் வொரி அஞ்சலி. எல்லாம் நல்லபடியா நடக்கும் " அவளது தலையை அணைத்தவாறு சொன்னான் ஜெய்.

கனவில் மிதந்தவாறே சாப்பிட்டு அறையை அடைந்த அஞ்சலி , நான்கு மாதங்களில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள். தான் அன்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் இருந்த வித்யாசத்தை எண்ணியவாறே தூங்கி போனாள்.

தூக்கத்தில் வந்த கனவுகள் அவளது குழப்பமான மனதை பிரதிபலித்தது. காதல் வயப்பட்ட பெண்ணின் மனதை பிரதிபலிக்கவில்லை அவளது கனவுகள்.

ஒரு சிலருக்கு பின் நிகழப்போவது கனவில் வரும். ஒருவேளை அவளது கனவுகள் அதை சொல்கின்றதோ ??

-பரிசு தொடரும்

33 கருத்துகள்:

asiya omar சொன்னது…

as usual very interesting.

Kousalya சொன்னது…

ஜெய், அஞ்சலி இரண்டு பேரில் யார் குற்றவாளி ? அதை எனக்கு மட்டும் சொல்லிடுங்க....!

மங்குனி அமைச்சர் சொன்னது…

"ஏன் அஞ்சலி? என் மேல நம்பிக்கை இல்லையா? வழக்கமா பணக்கார பசங்க பண்ற மாதிரி பண்ணிடுவேன்னு பயமா? "///


இது மட்டும் நாடகத்தனமா இருக்கு ,

அருமையா இருக்கு சார்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ennadhu!!!3 minutesla 3 commentsa!!! what the hell????

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ம்ம்ம்ம்... அப்புறம்?

Chitra சொன்னது…

Porkodi (பொற்கொடி) said...

ennadhu!!!3 minutesla 3 commentsa!!! what the hell????


....... LK பாஞ்சி பாஞ்சி போடுற பின்னூட்டங்களுக்கு மூணு நிமிடங்களில் முப்பதே விழணும் ........நீங்க வேற......

Harini Sree சொன்னது…

Miga arumai! seekrama mudichchudunga! naalaikkum break kuduthudaatheenga! :P

sandhya சொன்னது…

கதை நல்லா போகுது ஏன் கொஞ்சமா எழுதரை? அஞ்சலி தான் கொலை காரியா?

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கீதா சாம்பசிவம் சொன்னது…

thodara, ithu enna id, password ellam ketkuthu??? sign in pannitu thane vanthiruken???

thenammailakshmanan சொன்னது…

தொடர் கதையா அருமை LK

ஜெய்லானி சொன்னது…

தொடர் ..தொடர் ..தொடருங்க ..அருமை..!!

தக்குடுபாண்டி சொன்னது…

yes boss!...;)

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோதரி

@கௌசல்யா

சரி சொல்லிட்ட போச்சு

@அமைச்சர்

சரி அமைச்சரே சரி பண்ணிடறேன் இனிமே

@பொற்ஸ்
நோ பொறாமை

LK சொன்னது…

@பொற்ஸ்

அப்புறம், விழுப்புரம்

@சித்ரா

உங்களை விடவா ,.. எந்த பதிவுக்கு போனாலும் சித்ரா பின்னூட்டம் முதல்ல இருக்கும்

@ஹரிணி
வார இறுதி விடுமுறை கொடுக்கலாம்னு இருக்கேன்

LK சொன்னது…

@சந்தியா
இன்னும் இன்னும் நல்ல முயற்சி பண்ணுங்க

@மாமி
கூகுளின் சதி ....

@தேனம்மை
ரொம்ப நாளைக்குப் பிறகு வரீங்க. நன்றிங்க

@ஜெய்

நன்றி சார்

@தக்குடு
:)))

Mythili சொன்னது…

Lk Sir,

Where you have kept the full script? please enakumattum mudivu sollunga...

very interesting

mythili

LK சொன்னது…

@mythili

full scripta ungakitta iruntha kodungalen

thanks

Ananthi சொன்னது…

Very nice.. story narration.. eliya nadaiyil nalla irukku.. vazhthukkal.

Ananthi சொன்னது…

Wowwwww.. 100 Followers...

Vazhthukkal LK :)

LK சொன்னது…

நன்றி ஆனந்தி :)

நன்றி அருண் பிரசாத் ( 100th follower)

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல விறுவிறுப்பு...

sriram சொன்னது…

நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

பத்மநாபன் சொன்னது…

நெருங்கிட்டிங்க போல இருக்கு...

பதிவுகளும் சதம் தாண்டி , தொடர்வாசகர்களும் சதம் தாண்ட...கலக்கிறிங்க எல்.கே..வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி சொன்னது…

கதை நல்லா போகுது பாஸ்... (கொலை கதை எல்லாம் எழுதினா இப்படி தான் கூப்பிட தோணுது...ஹி ஹி ஹி)
ஆனா இன்னும் கொஞ்சம் பெருசா எழுதலாமே
கனவை பத்தி இப்படி எல்லாம் சொல்லி பயபடுத்த கூடாது ஆமா....(நானே கனவு கனவுன்னு பயந்து போய் இருக்கேன்...)

vanathy சொன்னது…

very interesting, LK.

ஸ்ரீராம். சொன்னது…

கைல முத்தம் கொடுத்தா வெட்கம் வருமா என்ன..! அஞ்சலிதான குற்றவாளி...ஜெய் நல்ல வாளிதானே...?

LK சொன்னது…

@மேனகா
நன்றி

@பத்மநாபன்

வாழ்த்துகளுக்கு நன்றி

@அப்பாவி
ஹிஹி ..

@வானதி
நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம் ஸ்ரீநிவாசன்

நன்றி சாரி

@ஸ்ரீராம் அண்ணா
இன்னும் நல்லா யோசிங்க

BalajiVenkat சொன்னது…

Hi LK... ungalukula inum niraya maranchu kidakkku... very good attempt... i read the whole serious just now .... i smelled the culprit, but small confusion.. adutha pathivu poteengana kandu pudchuduvennu ninnaikiren... papam... Keep rockding.

SathyaSridhar சொன்னது…

Ennanga,,naan ennavoe kolaiyaali aambalai nnonna Jai ya irukkumoennu ninaichen ipppa ennadaanna oru ponnu kathai kulla varaalae,,hmm seekram climax sollunga..

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ரயில் தண்டவாளம் மாதிரி ரெட்டைச்சவாரி ரொம்பவும் வேகம் தான். திறமையா கதை சொல்லும் ஆற்றல் உனக்கு இருக்கு.. சூப்பரா போகுது.
சித்ரா அம்மையார் சொன்னதை வழி மொழிகிறேன்.

LK சொன்னது…

@பாலாஜி
நன்றி

@சத்யா

இன்னும் இன்னும் கொஞ்சம் குழம்புங்க

@அனன்ஸ்
நன்றி :)))