ஜூன் 09, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VI


"அஞ்சலி நாம் போறது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதுக்கேத்தமாதிரி  உன்  டிரஸ் இருக்கணும். புரிஞ்சதா ??"

"எஸ் சார், புரிஞ்சது ".

"ஓகே குட்.  அப்ப நீ ஒரு மூணு மணிக்கு கிளம்பிடு. வீட்ல போய் ரெடியா இரு . நான் ஒரு 7.30க்கு வந்து பிக்கப் பண்ணிக்கறேன். "

"ஓகே சார் ."

கனவில் மூழ்கியே அன்றைய தினத்தை முடித்தாள். மதியம் மூணு மணிக்கு வீட்டிற்கு சென்ற அவள், தன்னிடம் இருந்த உடைகளில் சிறந்த உடைகளை தேர்ந்தெடுத்து பேக்  செய்து வைத்தாள். பின் தனது சகோதரிக்கு போனில் விசயத்தை சொன்னாள்.

அவள் குளித்து விட்டு, அப்பொழுதுதான் மலர்ந்த மல்லிகை போல், உடையணிந்து ஹாலுக்கு வருவதற்கும், வாசலில் ஜெயின் கார் ஒலி கேட்பதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே வந்த ஜெய் அவளைப் பார்த்து பிரமித்து நின்றான்.

"வாவ். யூ லுக்  கிரேட்  அஞ்சலி "

"தேங்க்ஸ் சார். கிளம்பலாமா?'

"ஹ்ம்ம் யா."

அவர்கள் கிளம்பி தெருவை கடப்பதற்கும் , மழை ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருந்தது. மழையின் நடுவே, மிக மெதுவாகத்தான் கார் சென்றது.

"அஞ்சலி, நான் ஒண்ணு சொல்லனும்னு நினைக்கிறன் "

"சொல்லுங்க ஜெய். "

" வேண்டாம், அது சஸ்பென்சா இருக்கட்டும். சென்னைக்கு போனப்புறம் சொல்றேன் "

"ஓகே உங்க இஷ்டம். "

இதற்குள் அவர்கள் ரயில்வே ஸ்டேசனை நெருங்கி இருந்தார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டேசனுக்குள் செல்வதற்குள் இருவரும், முழுவதும் நனைந்து இருந்தார்கள். பிளாட்பார்மை இருவரும் அடைவதற்கும், ரயில்  வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஏ.சி கம்பார்ட்மெண்டை தேடி ஏறினார்கள்.

"அஞ்சலி, போய் டிரஸ் மாத்திருங்க. இல்லாட்டி காய்ச்சல் வந்திரும். ஈர உடைல ஏ.சில ட்ராவல் பண்ணா "

உடை மாற்றிக்கொண்டு , டிஷர்ட் மற்றும் முக்கால் பேண்டில் வந்த அஞ்சலியை பார்த்த ஜெயின் முகத்தில் மீண்டும் அந்தப் புன்னகை.

ரயில் புறப்பட்டு  சென்னையை நோக்கி ஓடத் துவங்கியது . அஞ்சலியின்  வாழ்க்கையும் அதனுடனே ஓடத் துவங்கியது. இதை உணராமல், சிறு குழந்தைப் போல் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

காலை ஆறு மணிக்கு சென்னையை அடைந்தனர். ஏற்கனவே அவன் நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருந்ததால், அங்கிருந்த கார் வந்து காத்து இருந்தது. இருவருக்கும் தனித்தனி  ரூம் புக் பண்ணி இருந்தான். தனது அறையில் நுழைந்த அஞ்சலி, ஜெயின் குணத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டு இருந்தாள். அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும் என்று எண்ணி கொண்டு இருந்தவளை, இன்டர்காம் இந்த உலகக்கு இழுத்தது.

"அஞ்சலி, சீக்கிரம் ரெடி ஆகிடுங்க. நாம அந்த கம்பெனிக்கு ஒன்பது மணிக்கெல்லாம் போகணும் . நான் சொன்னத மறக்க வேண்டாம் "

"கண்டிப்பா   மறக்க மாட்டேன் சார்."

"குட்".

குளித்து முடித்து தனது அலங்காரங்களை முடித்து கண்ணாடியில் பார்த்த அஞ்சலி திருப்தி அடைந்தாள் . லேசாக தனது அழகைக் கண்டு கர்வமும் கொண்டாள். வழக்கம் போல் உடலைக் கவ்வும் ஜீன்ஸ் பேண்ட்டும், ஸ்லீவ்லெஸ் டாப்சும் அணிந்து கிளம்பினாள்.

                                        ***************************
பழைய கேஸ்களை படித்த வேலன்  , குழப்பத்தில் இருந்தப் பொழுது , மருத்துவமனையில் இருந்து அவருக்கு போன் வந்தது. 

அவர்கள் சொன்ன விஷயம் இதுதான். பாஸ்கரன் உபயோகப் படுத்தியது மிகக் கொடிய விஷம், போதை மருந்தில் கலந்து அதை உபயோகப்படுத்தி உள்ளார் . இது அவ்வளவு எளிதா வெளில கிடைக்காது.

"அப்ப , இது கொலைதான் . பண்ணவங்க யாராக இருந்தாலும் மருத்துவத் துறைல சம்பந்தப் பட்டவங்களாகத்தான் இருக்க முடியும் . எதுவாக இருந்தாலும், சைபர் கிரைம் டீமோட அறிக்கை கிடைக்கற வரைக்கும் இதுல ஒன்னும் பண்ணா முடியாது " இவ்வாறு முடிவுக்கு வந்த வேலன், பாஸ்கரோட மொபைல ஆராய முற்பட்டான்.

அவனுக்கு அதில் எந்த வித உபயோகமான தகவலும் இல்லை. அதில் இருந்த எண்கள் முழுதும் அழிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த மொபைல் கம்பெனிக்கு கிளம்பினார். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாஸ்கருக்கு கடைசியாக வந்த அழைப்புகளின் எண்களைப் பற்றிய விவரங்களைப் பார்த்தார். அதில் இருந்தவை அனைத்தும் தொலைபேசி (லேண்ட்லைன்) எண்களே.

வேலனுக்கு மேலும் அயர்ச்சியே ஏற்பட்டது. பொதுவாக, லேண்ட்லைன் எண்கள் எல்லாம் பொது தொலைபேசியாகவே இருக்கும். எதற்கும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று, அந்த எண்களை சம்பந்தப் பட்ட துறைக்கு அனுப்பி விட்டு, ஸ்டேசனுக்கு சென்ற வேலனுக்கு அங்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

-பரிசு தொடரும்

28 கருத்துகள்:

asiya omar சொன்னது…

கதை பயங்கர இண்ட்ரெஸ்டிங்,இந்த படங்களை தேர்வு செய்ய எப்படி தோன்றியது.முதலில் பார்க்க பயமாக இருந்தது.இப்ப பழகிவிட்டது,இது பூச்சான்காட்டின்னு சமாதானம் செய்து கிட்டேன்.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

செம விறுவிறுப்பு.. சீக்கிரம் அடுத்த பகுதி வரட்டும்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அடுத்த பகுதி சீக்கிரம் ...

Riyas சொன்னது…

ஆஹா...

Harini Sree சொன்னது…

thool! oru maathiriya naan kathaya kandupidikka aarambichutten! naan kandupidicha kathaya thaan neenga ezhuthareengalanu paapom! :P

Porkodi (பொற்கொடி) சொன்னது…

என்னங்கய்யா ஒரு ஒருத்தர் கடையா ஏறி இறங்க எவ்வளவு நேரமாகுது? சும்மா வந்து எங்க ஆள காணோம்னு கேட்டா ஆகிடுச்சா?

எல்லாரும் அடுத்த பகுதி, விறுவிறுப்புன்னு சொல்றதை பாத்தா ஏதொ தொடர்கதை போலருக்கு? கோதாவுல குதிச்சாச்சா? :D

sandhya சொன்னது…

சஸ்பென்ஸ் தாங்க முடியலே சாமி ....

Kousalya சொன்னது…

அடுத்தது என்ன......??

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம் நல்ல திரில்லிங்காக் கொண்டு போறீங்க, ஒரு மாதிரி யாரு கொன்னாங்கனு கண்டு பிடிச்சுட்டேன். வெரிஃபை பண்ணணுமே??? :D

SathyaSridhar சொன்னது…

Hmm,,kathai nalla thrilling aah irukunga epdium anjali thaan heroine athaala avangala kolla maatengannu ninaikiren paavam sir avala thappikara maadiri ezhuthidunga..

சேட்டைக்காரன் சொன்னது…

நண்பரே, இதற்கு முந்தைய பகுதிகளையும் வாசித்து விட்டு, இதற்கு இப்போது தான் வந்தேன். திகில் கதை எழுதுவது ஒரு அபாரமான கலை! வாழ்த்துக்கள்!

(இன்னும் கொஞ்சம் பகுதியை பெரிதாக இடலாமோ?)

Chitra சொன்னது…

Present sir!

Mrs.Menagasathia சொன்னது…

உள்ளேன் ஐயா!! சீக்கிரம் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....

dheva சொன்னது…

கார்த்திக்...@ க்ரைம் மன்னன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன்..... இதற்காக ஒரு ஸ்பெசல் விருது டிசைன் செய்து கொண்டுள்ளேன்...!

Super thiriller nga...!

வாழ்த்துக்கள் பாஸ்!

Mythili சொன்னது…

waiting for part VII, supper.
mythili

LK சொன்னது…

@ஆசியா

சும்மா என் கதைல உருப்படியா எதுவும் இல்லாட்டி , இதுவாது இருக்கட்டுமேனு போட்டேன். நன்றிங்க

@அனன்ஸ்
சீக்கிரம் போடறேன்

@செந்தில்
கண்டிப்பா சீக்கிரம் வரும்

@ரியாஸ்
ஓஹோ

LK சொன்னது…

@சந்தியா
:)))

@போர்ஸ்

சரி சரி. எதோ உன் தயவுல நானும் ஸ்டார்ட் பண்ணிட்டேன்,. இது ரெண்டாவது ஸ்டோரி

@கௌசல்யா
நாளை பார்க்கவும் .

LK சொன்னது…

@கீதா மாமி

நன்றி.

@ஹரிணி

பார்போம்

@சத்யா
அவ்ளோ ஒன்றியாச்சா அஞ்சலி கூட ??

LK சொன்னது…

@சேட்டைக்காரன்
நன்றி தல.. கண்டிப்பா பெருசா எழுதறேன்


@சித்ரா

செல்லாது

@மேனகா
சீக்கிரம் வரும்

@தேவா
நன்றி பாஸ்

அப்பாவி தங்கமணி சொன்னது…

கலக்கலா போகுது... அந்த ஆளு.... சரி சரி.. நான் யுகிச்சத சொல்லி வெறுப்பேத்தல விடு... செம சுவாரஸ்யமா போகுது... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...

LK சொன்னது…

நாளை காலை வரை காத்திருக்கவும் அ(ட)ப்பாவி அக்கா

பத்மநாபன் சொன்னது…

என்ன நடக்குமோன்னு ஒரு பக்கம் கதை...மறுபக்கம் சுறுசுறுப்பான துப்பறிதல்...திர்ல்லிங்காக போகிறது...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நண்பரே இன்றுதான் உங்களின் கடந்த பதிவுகளை வாசித்து முடித்தேன் , எதிர்பார்ப்பை
தூண்டும் வகையில் கதையை நகர்த்தும் விதம் மிகவும் அருமை . தொடருங்கள் மீண்டும் வருவேன்

LK சொன்னது…

நன்றி பத்மநாபன்

நன்றி ஷங்கர்

vanathy சொன்னது…

LK, super!

LK சொன்னது…

thanks vanathy

அமைதிச்சாரல் சொன்னது…

செம விறுவிறுப்பா இருக்கு.

Ananthi சொன்னது…

hmmm.. kadhai thodarchi nalla irukku..