Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கால் சென்டர் V

கால் சென்டரின் அமைப்பை பற்றி இந்தப் பதிவில்  பார்ப்போம். கடைநிலையில் இருந்து தொடங்குவோம் . L1 ஏஜெண்ட்ஸ்:  வரும் அழைப்புகளை ஏற்று அந்த வா...

கால் சென்டரின் அமைப்பை பற்றி இந்தப் பதிவில்  பார்ப்போம். கடைநிலையில் இருந்து தொடங்குவோம் .

L1 ஏஜெண்ட்ஸ்:

 வரும் அழைப்புகளை ஏற்று அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்வதுதான் இவர்களின் முக்கியப் பணி. என்ன பேசுகிறார்கள், வாடிக்கையாளரின் விவரம், அவர்களின் குறை என்ன அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள் போன்றவற்றை அதற்கான  மென்பொருளில் பதிந்து வைக்க வேண்டும். இந்த வேலையையும்  அவர்கள் பேசும்பொழுதே முடிக்க வேண்டும். தங்களால் முடியாத பொழுது அந்த அழைப்பை அடுத்த கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு மாற்ற வேண்டும். அல்லது அவர்களின் உதவி கொண்டு அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

 இவர்களுக்கு எந்த மாதிரி அழைப்புகள் வரும் ,அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நாலேஜ் பேங்க் உண்டு. அதில் குறிப்பிட்டபடி இவர்கள் செயல்படுவர். சில சமயம் ஒரு குறிப்பிட பிரச்சனை பற்றி அதில் எந்த தகவலும் இல்லை என்றால் கூகிள் உதவியோ அல்லது அடுத்த கட்டஏஜெண்ட்ஸ் உதவியோ நாடலாம். ஆனால், கூகுளில் வரும் யோசனைகள் சரியாக  இருக்குமா என்று உறுதி படுத்தி கொள்ளவேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்.

L2 ஏஜெண்ட்ஸ்:

  முதல்கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு உதவி புரிவதே இவர்களின் முக்கிய வேலை. ஒரு குழுவில் இரண்டு L2 ஏஜெண்ட்ஸ் இருப்பார்கள்(அணியில் உள்ள முதல்கட்ட ஏஜெண்ட்ஸ் எண்ணிகையை பொருத்து மாறுபடும் ) .L1 ஏஜெண்ட்ஸ் தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்ப்பதும் , அவர்களுக்கு உதவி செய்வதுமே இவர்களது முக்கியப் பணி. இது மட்டுமன்றி, தங்களை அழைத்த வாடிக்கையாளர்களை திரும்ப அழைத்து அவர்களுடைய பிரச்சனை சரியாகிவிட்டதா என்று சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் வாடிக்கையாளர்கள் கோபப் படும்பொழுது அவர்களை சமாளிக்கும் பொறுப்பு இவர்களுடையதே.

முன்பு குறிப்பிட்ட வாடிக்கையாளார் திருப்தி குறியீட்டு எண் சதவீதம் குறையும் பொழுது அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது இவர்களே. அந்த சமயங்களில் இவர்கள் அதிக நேரம் வேலை செய்து தீர்க்கப் படாத பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

குழுத் தலைவர் (Team Leader)

 இவருடைய முழு வேலை, இவருக்கு கீழ் உள்ள குழுவை நிர்வகிப்பது. பொதுவாக ஒரு குழுவுக்கு பத்து முதல் பதினைந்து பேர் வரை இருப்பார்கள். அவர்களுடைய தினசரி வேலைத் திறனை கண்காணிப்பது மற்றும் அவர்கள் வேலை செய்யும் விதத்தில் ஏதேனும் குறை இருப்பின், எதனால் அவர்கள் இவ்வாறு இருகிறார்கள் என்று கண்டறிந்து அதை சரி செய்வது, தினசரி ரிப்போர்ட் அனுப்புவது போன்றவை இவர்களுடைய பணி.

மேலும், இவர்கள் கீழ் வேலை செய்பவர்களின் வருடாந்திர அப்ரைசல் (appraisal) செய்ய வேண்டியது இவர்களின் முக்கிய பணி. இந்த இடத்தில்தான் இவர்களுக்கு அதிக பிரச்சனை வரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட அளவுக்கு மேல் சம்பள உயர்வு தரவேண்டாம் என்று மேனஜ்மென்ட் கூறி இருப்பார்கள். இவர்கள் அதை கடைபிடிதுதன் ஆக வேண்டும். இதனால், இவரின் கீழ் உள்ளவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.  அந்த சமயங்களில் இவர்களின் நிலை மத்தளத்திற்கு இரண்டு புறமும் இடி போன்றதாகும்.

இவருக்கு மேல் டீம் மேனஜர் இருப்பார், ஒரு இரண்டு அல்லது மூன்று டீம் லீடர்கள் இவரின் கீழ் வருவர். இவருக்கு மேல் ப்ராஜெக்ட்  மேனஜேர் இருப்பார். இதுதான் ஒரு கால் சென்டரின் அமைப்பு. இது மட்டும் அல்லது, க்வாலிட்டி டீம் , ஆபரேசன் டீம் இவையும் உண்டு. க்வாலிட்டி டீம் பற்றி ஏற்கனவே ஓரளவு பார்த்து இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் பணியாற்ற வேண்டும், யார் யாருக்கு வாரந்திர விடுப்புத் தரலாம் போன்றவை ஆபரேசன் டீம் செய்ய வேண்டிய பணிகள். பொதுவாக, வரும் அழைப்புகளில் 90% மேல் ஏற்கப்படவேண்டும். அதற்கு கீழ் போகும் பொழுது இவர்களுக்கு பிரச்சனை. எனவே, இவர்கள் எப்பொழுதும் டென்சனில் இருக்கும் நபர்கள். ஏஜெண்ட்ஸ் எடுக்கும் இடைவேளைகளை குறைப்பதும் இவர்களே.


With Love LK

29 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

//இதனால், இவரின் கீழ் உள்ளவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். அந்த சமயங்களில் இவர்களின் நிலை மத்தளத்திற்கு இரண்டு புறமும் இடி போன்றதாகும்//

நீங்க team leader தானே, அப்ப சரி....:))

தொடருங்கள் நல்ல பதிவு

சௌந்தர் சொன்னது…

நல்ல அனுபவம் தொடருங்கள்

அருண் பிரசாத் சொன்னது…

பல விசயங்கள் இருக்கு போல - தொடருங்கள்

Geetha Sambasivam சொன்னது…

grrrrrr id, password ketkuthu, unga blogum! :P

Geetha Sambasivam சொன்னது…

முற்றிலும் புதிய செய்திகள், தொடருங்கள். எந்த வேலையும் கஷ்டமில்லாமல் செய்ய முடியாது.

எல் கே சொன்னது…

@கௌசல்யா
ஆமா. இப்ப இந்த மாதிரி ஒரு பிரச்சனையில்தான் மாட்டி இருக்கிறேன் நன்றி

எல் கே சொன்னது…

@சௌந்தர்
நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@அருண்
வருகைக்கு நன்றி அருண்

எல் கே சொன்னது…

@மாமி
என்னவோ என் ப்ளோக்கு உங்களை பிடிக்கல . நன்றி

பெயரில்லா சொன்னது…

கால் சென்டர் பத்தி தெளிவாக எழுதிப் புரிய வைப்பதற்கு மிக்க நன்றி. ஆனால், பதிவின் நீளத்தை கொஞ்சம் அதிகமாக்கினால் நல்லது. சட்டுன்னு முடிக்கற மாதிரி தோன்றது.

Asiya Omar சொன்னது…

கால் செண்டர் பற்றி இப்ப டீடெயிலாக எனக்கும் தெரியும்.நன்றி.

vanathy சொன்னது…

mm..very interesting!

Swengnr சொன்னது…

TLக்கு மேலே யாரு? தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு!

ஹுஸைனம்மா சொன்னது…

நல்ல தகவல்கள். கிட்டத்தட்ட ஐடி டீம் போலவே ஸ்ட்ரக்ச்சர் போல!!

இன்னும் எழுதுங்க; வேல நேரங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எழுதுங்க.

Menaga Sathia சொன்னது…

தொடருங்கள்...நல்ல பகிர்வு!!

பத்மநாபன் சொன்னது…

கால் சென்டர் - பணி புரிவர்களுக்கு மட்டுமல்லாமால், தொடர்பு கொள்ளும் அனைவர்க்கும் ஒரு பயனுள்ள பதிவாக அமைந்துள்ளது.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல தகவல்கள்.

பெயரில்லா சொன்னது…

டீம் லீடர் நீங்க சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்

ஸ்ரீராம். சொன்னது…

கால் சென்டர்களின் மைப்பைப் பற்றி தெரிந்து கொண்டேன்... நன்றி.

Harini Nagarajan சொன்னது…

Very nice post! :)

ஜெயந்தி சொன்னது…

நல்லா விவரமா போயிட்டிருக்கு.

தெய்வசுகந்தி சொன்னது…

Interesting!!!!!!!!!!1

ஹேமா சொன்னது…

உண்மையிலேயே ஒரு புதிதான உலகம்தான் கார்த்திக்.

எல் கே சொன்னது…

@அனாமிகா
ஒவ்வொரு தலைப்பா எழுதறேன் அதனால் அப்படி இருக்கலாம். நன்றி

எல் கே சொன்னது…

@ஆசியா

நன்றி சகோதரி

@வாந்தி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@Software Engineer

சார் சொல்லி இருக்கேன் பாருங்க..

@ஹுசைனம்மா

ஆமாம். அப்படிதான் இருக்கும். நன்றிங்க

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றிங்க

@பத்மநாபன்

நன்றி சார்

எல் கே சொன்னது…

@சந்த்யா

:)) நன்றி

@ஸ்ரீராம்

நன்றி

@ஹரிணி
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க

@ஜெயந்தி
நன்றி

@ஹேமா
நன்றி

@தெய்வ சுகந்தி

நன்றிங்க