ஜூன் 07, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் V


"எதுக்குயா இழுக்கற ? சொல்லு "

"இல்லீங்க, அந்த பையன் அவ்வளவு நல்லவன் இல்லீங்க. நிறைய பொண்ணுங்க விசயத்துல பிரச்சனை ஆகி இருக்குங்க."

"இது வரைக்கும் எதாவது கேஸ் புக் ஆகி இருக்கா?

"இல்லீங்க. எல்லாத்தையும் காசு கொடுத்து விசயத்தை மூடிருவாங்க. ஆனா ஒரே ஒரு கேஸ்ல மட்டும் அப்படி பண்ணமுடியல. ஆனா அப்புறம் அந்த புகாரை கொடுத்தவங்க காணாமல் போய்ட்டாங்க. அதனால மேற்கொண்டு எதுவும் பண்ணமுடியலை. "

"சரி. எனக்கு அதை பத்தின விசயம் முழுக்க மதியம் வேணும்"

"சரிங்க ."

:"நான் மறுபடியும் அந்த பாஸ்கர் வீட்டுக்கு போய் ஒரு முறை அந்த அறையை சோதனை பண்றேன் . எதாவது விசயம் கிடைக்கும்"
    
                                              ******************************
பாஸ்கரின்  அறை  முழுதும் அலசி ஆராய்ந்த வேலன், எதுவும் உருப்படியாக கிடைக்காத எரிச்சலில் இருந்தார்.  கடைசியாக அங்கு இருந்தக் கணினியை  இயக்கினார்.

அதை நோண்ட நோண்ட , அவரின் முகம் , சூரியனை கண்ட தாமரையாய் மலரத் துவங்கியது. அதே சமயம், அவரின் அலைபேசி அவரை அழைக்க, அதில் அவரது ஏ.சி .

"அந்த பாஸ்கர் கேஸ் என்ன ஆச்சு ? வெறும் தற்கொலைதான ?"

"இல்லீங்க . இது கொலை. "

"என்னயா உளர்ற?

"உளறல சார் . இப்பதான் மறுபடியும் அந்த பாஸ்கர் அறைய தேடிகிட்டு இருந்தேன், அப்ப அவனோட கணினில சில முக்கிய விஷயம் கண்டுபிடிச்சேன்.  எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க சார். இந்த கேசை முடிச்சிடலாம். அது வரைக்கும் இது கொலைன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார் ."

"சரி ஓகே. ஆனால் கவனமா இருங்க. இது பெரிய இடத்து விஷயம். "

"கண்டிப்பா சார் ".

                                    ******************************

"பாலா, இதுதான் நான் சொன்ன சி.டி. இதுல அந்த கணிணி, அதில் இருந்த  மெயில் எல்லாம் இருக்கு"

"ஓகே சார். நீங்க கேட்ட விவரம் எல்லாம் இன்னும் நாற்பத்தெட்டு  மணி நேரத்தில உங்ககிட்ட  இருக்கும்  "

"நன்றி . இது ரொம்ப முக்கியம்,  வெளில விஷயம் தெரியக் கூடாது ".

"கண்டிப்பா. நீங்க கவலைப் படவேண்டாம். "

                                                 ******************************
  "அய்யா, நீங்க கேட்ட விவரம் முழுக்க , இதுல இருக்கு "

  "குட்"

 அதைப் படிக்க படிக்க , அவருக்கு அந்த கேஸ் மேலும் பல குழப்பங்களை உண்டு பண்ணுமோ என்று தோணியது .

"எங்கே சென்றாள் அந்தப் பெண் ?  காணவில்லை என்றால்  ஏன் யாரும் புகார் குடுக்க வில்லை ?"

"ஏட்டு, இந்தப் பொண்ணு நமக்கு புகார் கொடுத்த வாரத்தில இருந்து ஒரு ரெண்டு வாரத்திற்குள் , சிட்டில எதாவது , தற்கொலை, கொலை கேஸ் இருக்கானு விவரம் வேணும், உடனடியா கண்ட்ரோல் ரூம்க்கு போன் பண்ணி விவரம் வாங்கு."

அதிலும் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை.

அப்பொழுது. ....

-பரிசு தொடரும் 

24 கருத்துகள்:

அன்னு சொன்னது…

ண்ணா,

அப்பாவியோட இட்லி மாதிரி இல்லாம, நல்ல இட்லியா செஞ்சு தர்றேன்...எனக்கு மட்டும் முழு கதை ப்ரிவியூ கொஞ்சம் அனுப்பி வைங்களேன்? ப்ளீச்ச்ச்....

Kousalya சொன்னது…

சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை....! அடுத்த பதிவையும் இன்றே வெளி இட வழி ஏதும் இல்லையா??

asiya omar சொன்னது…

கதை சூப்பராக போகுது எல்.கே.

தக்குடுபாண்டி சொன்னது…

naaladiyaar maathiri 4 para kadhai yeluthi usuppethum LK! down down!...:) konjam perisa yeluthungo Lk! kannitheevu maathiri roomba konjamaa irukku.

கீதா சாம்பசிவம் சொன்னது…

வேறே வழியில்லாமல் தாக்குடுவை ஆமோதிக்க வேண்டி இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P

அநன்யா மஹாதேவன் சொன்னது…

//Naaladiyaar maathiri 4 para kadhai yeluthi usuppethum LK! down down!...:) konjam perisa yeluthungo Lk! kannitheevu maathiri roomba konjamaa irukku.// தக்குடு வாழ்க.. தக்குடு வாழ்க..
தக்குடுவை ஆதரித்த மாத்தா கீத்தானந்த மயி வாழ்க வாழ்க! ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா.. :)

ரெண்டே ரெண்டு வரி எழுதிட்டு நடுவுல ஃபுல்லா அட்வர்டைஸ்மெண்டு போடுற பத்திரிக்கைகள் மாதிரி,10 நிமிஷம் டைட்டில் சாங், 17 நிமிஷம் விளம்பரங்களுக்கு நடுவுல, 6 நிமிஷம் ஓடுற க்ரைம் ஹார்ரர் சஸ்பென்ஸ் இன்வெஸ்ட்டிகேட்டிவ் த்ரில்லர் மாதிரி இருக்கு.. மருவாதியா இதுக்கு ப்ராய்ச்சிதமா ஒரு நாளைக்கு ரெண்டு ரெண்டு பகுதியா போட்டுடு.. இல்லாட்டி என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது... (எப்புடி எல்லாம்... )

LK சொன்னது…

அன்னு
வேண்டாம் வேண்டாம்.. நான் சீக்கிரம் கதைய முடிச்சிடறேன்

கௌசல்யா
முயற்ச்சிக்கிறேன்

ஆசியா
நன்றி

LK சொன்னது…

@தக்குடு

:))

@கீதா பாட்டி

கர்ர்ர்ர்

@அனன்ஸ்
நீயுமா

ஒரு சில காரனதினால்தான் என்னால் பெரியதாக எழுதவில்லை

Harini Sree சொன்னது…

naan sollanumnu nenachatha ellaarum sollitaa! neenga seekarama kathaya mudikkarennu solrathaala naan merkkondu ungala yethuvum solla virumbala! :P Nalla break vittu vittu beethiya kelapareenga!

sandhya சொன்னது…

மீதி கதை சீக்கரமா போடு இல்லேனா

Mrs.Menagasathia சொன்னது…

ம்ம்ம்ம் அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க...

பத்மநாபன் சொன்னது…

பரிசு யாருக்குன்னு படிச்சிட்டுத்தான் இருக்கிறோம் ....

dheva சொன்னது…

ராஜேஸ் குமார் நாவல் படிக்கிற மாதிரியும் இருக்கு...த்ரில்லர் மூவி பாக்குற மாதிரியும் இருக்கு. உங்களிடம் கதையை சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும் லாவகம் இருக்கிறது. பாஸ்...

ஒவ்வொரு பதிவு முடிவிலும்...அடுத்த பதிவு எப்போன்னு...மண்டைய பிச்சுக்க வேண்டியதா இருக்கு....!

த்ரில் மன்னனு ஒரு அவார் ரெடி பண்ரேன் உங்களுக்கு!

ஸ்ரீராம். சொன்னது…

LK said,

ஒரு சில காரனதினால்தான் என்னால் பெரியதாக எழுதவில்லை"//

ஃபான்ட் சைஸ் சொல்லவில்லையே...! நீளமா எழுதினா சீக்கிரம் முடிஞ்சிடும் ஓகேயா..?
அனு மாதிரி பயமுறுத்த மாட்டேன்...எனக்கு அனுப்புங்க முழுக் கதையும்...சரியா எழுதி இருக்கீங்களான்னு செக் பண்ணிட்டு அனுப்பிடறேன்..!

SathyaSridhar சொன்னது…

Enna Sir,,, anjali Jai kooda kilambinaala illaya,,kadhai movement paartha,,thriller story ah irukku... seekram Anjali thapichala illaya nnu sollunga..

Gangaram சொன்னது…

kadhai patttaya kilapputhu thala...
i read all the 5 parts in a day.... when is next :)..

LK சொன்னது…

@சந்த்யா
சீக்கிரம் போடறேன்

@தேவா
நன்றி பாஸ்

@மேனகா
நன்றி

@பத்மநாபன்
நன்றி சார்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி பாஸ். சீக்கிரம் அனுபறேன்

@சத்யா
நாளைக்கு தெரியும்

@கங்காராம்
நன்றி சார். தொடர்ந்து வாங்க

அப்பாவி தங்கமணி சொன்னது…

//அன்னு said...
ண்ணா,
அப்பாவியோட இட்லி மாதிரி இல்லாம, நல்ல இட்லியா செஞ்சு தர்றேன்...எனக்கு மட்டும் முழு கதை ப்ரிவியூ கொஞ்சம் அனுப்பி வைங்களேன்? ப்ளீச்ச்ச்.... //

அடபாவிங்களா... எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க இப்படி...? இருங்க இருங்க எல்லாருக்கும் பார்சல் அனுப்பறேன்..

அப்பாவி தங்கமணி சொன்னது…

//ஒரு சில காரனதினால்தான் என்னால் பெரியதாக எழுதவில்லை//

இது கூட suspense ஆ?

அப்பாவி தங்கமணி சொன்னது…

//அதைப் படிக்க படிக்க , அவருக்கு அந்த கேஸ் மேலும் பல குழப்பங்களை உண்டு பண்ணுமோ என்று தோணியது//

எங்களுக்கும் இதை படிக்க படிக்க அப்படி தான் தோணுது...

இந்த சஸ்பென்ஸ் வெக்கறது... மண்டை காய வெக்கறது எல்லாம் நான் patent பண்ணினது... எப்போ ஆள் ஆளுக்கு பண்ண ஆரம்பிச்சுடாங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போடணும்... இல்லேன்னா அனன்யா என்ன பண்ணுவானு அவளுக்கே தெரியாது... (நெஜமாவே தெரியாதாம்.... ஹி ஹி ஹி)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

// தக்குடுபாண்டி said...
naaladiyaar maathiri 4 para kadhai yeluthi usuppethum LK! down down!...:) konjam perisa yeluthungo Lk! kannitheevu maathiri roomba konjamaa irukku.

Jun 7, 2010 9:53:00 AM

கீதா சாம்பசிவம் said...
வேறே வழியில்லாமல் தாக்குடுவை ஆமோதிக்க வேண்டி இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P

Jun 7, 2010 10:51:00 AM

அநன்யா மஹாதேவன் said...
//Naaladiyaar maathiri 4 para kadhai yeluthi usuppethum LK! down down!...:) konjam perisa yeluthungo Lk! kannitheevu maathiri roomba konjamaa irukku.// தக்குடு வாழ்க.. தக்குடு வாழ்க..
தக்குடுவை ஆதரித்த மாத்தா கீத்தானந்த மயி வாழ்க வாழ்க! ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா.. :)

ரெண்டே ரெண்டு வரி எழுதிட்டு நடுவுல ஃபுல்லா அட்வர்டைஸ்மெண்டு போடுற பத்திரிக்கைகள் மாதிரி,10 நிமிஷம் டைட்டில் சாங், 17 நிமிஷம் விளம்பரங்களுக்கு நடுவுல, 6 நிமிஷம் ஓடுற க்ரைம் ஹார்ரர் சஸ்பென்ஸ் இன்வெஸ்ட்டிகேட்டிவ் த்ரில்லர் மாதிரி இருக்கு.. மருவாதியா இதுக்கு ப்ராய்ச்சிதமா ஒரு நாளைக்கு ரெண்டு ரெண்டு பகுதியா போட்டுடு.. இல்லாட்டி என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது... (எப்புடி எல்லாம்... )
//

வேற வழியே இல்லாம நான் இவங்க 3 பேரையும் ஆதரிக்க(!!) வேண்டியிருக்கே, எல்.கே படுத்தாதீங்க, (எல்லா பாகத்தையும் ஒரே வேகத்துல படிக்க 8 நிமிஷம் கூட ஆகல!) கொஞ்சம் பெரிசா எழுதுங்க!!!!

கதை சூப்பர்னு தனியா சொல்லணுமா என்ன, இவ்ள பேரு தவியா தவிக்கறதை பாத்தாலே..

Porkodi (பொற்கொடி) சொன்னது…

//இந்த சஸ்பென்ஸ் வெக்கறது... மண்டை காய வெக்கறது எல்லாம் நான் patent பண்ணினது... எப்போ ஆள் ஆளுக்கு பண்ண ஆரம்பிச்சுடாங்க... //

பார்றா.. வேண்டாம் அ.த. வீணா எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற எழுத்தாளினியை சொரிஞ்சு விடாதீங்க..

அப்பாவி தங்கமணி சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said...
பார்றா.. வேண்டாம் அ.த. வீணா எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற எழுத்தாளினியை சொரிஞ்சு விடாதீங்க.. //

Porkodi (பொற்கொடி) said...
//இந்த சஸ்பென்ஸ் வெக்கறது... மண்டை காய வெக்கறது எல்லாம் நான் patent பண்ணினது... எப்போ ஆள் ஆளுக்கு பண்ண ஆரம்பிச்சுடாங்க... //

ஐயோ...தெய்வமே... உங்கள நான் சொல்லுவனுங்களா? நான் ஏதோ அப்படி இப்படி தேத்தி கடை ஓடிட்டு இருக்குங்கம்மணி... ஹி ஹி ஹி