ஜூன் 14, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் IX


மருத்துவமனையில் வேலன் நுழைந்த தருணம் , விக்டர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தான். மருத்துவர்களை அணுகிய வேலன், அவனது நிலையை பற்றி கேட்டார். அவருக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பின், அவனின் மற்ற இரு நண்பர்களான விஜய் மற்றும் ஜெய்யை தனியே அழைத்து அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார். அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை யாரோ கண்காணிப்பதைப் போன்றுணர்ந்த வேலன், அவர்கள் போக அனுமதித்தார். அவர்கள் அங்கிருந்து சென்ற அதே சமயம், அவர்களுக்கு அருகே இருந்த அறையில் எதோ நடமாட்டம் கேட்டது. உஷாரான வேலன், அங்கே எட்டிப் பார்க்க, அங்கு யாரும் இல்லை. வேலனின் முகத்தில் தீவிர யோசனைக்கு அறிகுறிகள் தென்பட்டது.

 அந்த மருத்துவமனையின், தலைமை மருத்துவர் அறைக்கு சென்ற வேலன், அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். வெளியே வரும்  பொழுது அவரிடம், சில காகிதங்கள் அடங்கிய பைல் இருந்தது. அங்கிருந்து கிளம்பிய வேலன், ஜீப்பில் ஏறும்பொழுது முகத்தில் தெளிவு இருந்தது.

                                      **************************************
 ஜெய் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். யார் இவ்வாறு தனது நண்பர்களை கொலை செய்வது?? புதிதாக தொடங்க இருக்கும் பிஸ்னசில் யாரேனும் எதிரிகளா இல்லை நாம் செய்த எதோ தவறுக்காக நம்மை பலி வாங்குகிறார்களா ?? மருத்துவமனையில் வேலன் சொல்லிய செய்தி அவனை மேலும் பயமுறுத்தியது. தனது பயத்தை போக்கிக் கொள்ளவும், மாற்றத்திற்காகவும் கணிப்பொறியை உயிர்ப்பித்து, தனது மின்னஞ்சலை பார்த்தான்.  அவனுக்கு புதியதாக வந்திருந்த மின்னஞ்சலை கண்டு உறைந்துப் போனான்.
அதில் இருந்த ஒரே ஒரு வரி " பாவத்திற்கான பரிசு விரைவில் உனக்குக் கிட்டும் ".

அதே நேரம் , அவனது தொலைபேசியில் விக்டரின் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வர, நடுங்கிய குரலுடன் பேசிய அவனின் செவியில் விழுந்த வார்த்தைகள் " விக்டர் கர்த்தரிடம் சென்று விட்டான் ".


                                      **************************************
மருத்துவமனையில் இருந்து திரும்பிய வேலன், முன்பு தனக்கு ஏட்டு கொடுத்த பைலை மீண்டும் எடுத்தார். அதை மீண்டு படிக்கத் தொடங்கிய வேலனின் , முகத்தில் பல வித உணர்ச்சிகள். அதில் இருந்த முகவரியை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்ட வேலன், உடனடியாக அந்த முகவரியை பற்றி விசாரிக்க கட்டுபாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.

விக்டரின் இறப்பு பற்றிய தகவல் வர, அதை எதிர்பார்த்த வேலன் ஏட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மற்ற விசயங்களை முடித்துக் கொண்டு வர சொன்னார். 

அதே நேரம், அவரது அலைபேசியில், ஜெய்யின் அழைப்பு. தனக்கு வந்த மின்னஞ்சலை பற்றிய விவரத்தை நடுக்கத்துடன் அவருக்குக் கூறினான். தான் உடனடியாக அவனது வீட்டிற்கு வருவதாகக் கூறினார் வேலன்.

                                      **************************************
தனது நண்பர்களிடம் பேசிவிட்டு மிகத் தாமதமாக அறைக்குத் திரும்பிய ஜெய், மிகுந்த உற்சாகத்துடன் உறங்கினான். காலையில் அஞ்சலியிடம் "இன்று மாலை , எனது நண்பனின் வீட்டில் ஒரு விருந்து உள்ளது" அதற்கு நாம் இருவரும் செல்கிறோம் " என்று கிட்டத்தட்ட உத்தரவாக கூறினான்.

அன்றுடன் அந்த பயணம் முடிவதால், அஞ்சலி மனதில் ஒரு சோகம் இருந்தது. கோவைக்கு திரும்பிப் பின்னர், ஜெய்யுடன் தனிமை கிடைக்குமா என்று தெரியாதக் காரணத்தினால்.இதனால் அவன் கூறியவுடன் அன்று இரவு விருந்துக்கு செல்ல மிக மகிழ்வுடன் தயாரானாள்.

ஜெயிடம் கூட கூறாமல், தனியாக சில உடைகளை வாங்க சென்றாள். அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சித் தரவேண்டும் என்ற எண்ணத்தில், மிக நவநாகரீக உடைகள் விற்கும் கடைக்கு சென்றாள். அங்கு அவளுக்கு மிகப் பிடித்த வெண்ணிறத்தில் ஒரு உடையை தேர்ந்தெடுத்தாள்.

அவள் அறைக்குத் திரும்பவும், அவளது அக்கா அலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது. அவளது அக்காவிடம் பேசிய அவள், தான் சென்னையில் இருந்து திரும்பியவுடன், ஊருக்கு அவளை பார்க்க வருவதாகக் கூறினாள். ஊருக்கு சென்றவுடன் ஜெய்யின் பெற்றோர் அனுமதி வாங்கி தனது அக்காவிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று மனதில் எண்ணக் கொண்டாள்.
                                      **************************************
ஜெய்யின் வீட்டை அடைந்த வேலன், அவனுக்கு வந்த மின்னஞ்சலைப் படித்து உடனடியாக அதை சைபர் கிரைமுக்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு அலைபேசியில் தகவலும் கொடுத்தார்.

அப்பொழுது அவருக்கு அலைபேசியில், விக்டரை கொலை செய்யப் பயன்படுத்திய காரின் தகவல்கள் வந்தன. அதைக் கேட்ட வேலன், தனது தீர்மானம் சரி என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

-பரிசு தொடரும்

37 கருத்துகள்:

Kousalya சொன்னது…

ரொம்ப நல்லா போகிறது கதை.... வாழ்த்துகள் LK

ஜெய்லானி சொன்னது…

வண்டி டாப் கியரில் போகுது....!!!

அநன்யா மஹாதேவன் சொன்னது…

கன ஜோர்.. அடுத்த பகுதியில் நிறைவடையுமா? சீக்கிரம் போடு..

குந்தவை சொன்னது…

கார்த்திக்... உண்மைய சொல்லணும்னா... இந்த மண்டை ஓடுகளை பார்த்து தினம் தினம் எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. எங்கேயிருந்து இத புடிக்கிறீங்க.

கதை நல்ல விறுவிறுப்பா போகுது. எனக்கு இந்த தொடர்கதையிலே பிடிக்காதது ச்ஸ்பென்ஸ் தான் அதான் இது நாள் வரை படிக்காம தள்ளிவச்சிருந்தேன்.. என்ன செய்ய இந்த மண்டை ஓடுகள் பண்ணுன அட்டகாசத்தில் அம்புட்டையும் படிச்சிட்டேன். அதனால சீக்கிரமா அடுத்த பகுதியையும் எழுதிடுங்க.

மிரட்டலுடன் குந்தவை.

asiya omar சொன்னது…

ஒரு அனுபவ திகில் எழுத்தாளரின் கதையோ என்று வியக்கும் வண்ணம் உள்ளது...

LK சொன்னது…

@கௌசல்யா
தொடர்ந்து வருகை தருவது மகிழ்ச்சி

LK சொன்னது…

@ஜெய்

நன்றி :)

LK சொன்னது…

@அனன்ஸ்
சீக்கிரம் முடியும்

LK சொன்னது…

@குந்தவை

கூகுளே உதவி . அவ்வளவு பயமாவ இருக்கு ???
சீக்கிரம் முடிச்சிடறேன்,. ஆட்டோல மண்டை ஓடு அனுப்ப வேண்டாம்

LK சொன்னது…

@ஆஸியா
பாராட்டிற்கு நன்றி

Harini Sree சொன்னது…

@LK anna naan venumnaa ippave niraivu senchudavaa?? :P BTW intha kathayoda climax a kandupidichathukaaga neenga enakku thaniya yethavathu award tharanum aamam solliten! :P

தக்குடுபாண்டி சொன்னது…

gr888 going lk...:)

LK சொன்னது…

@harini

paathi sari paathi thappu so half award

@thakkudu

nandri

யுக கோபிகா சொன்னது…

ராஜேஷ் குமார்,சுபா கிரைம் கதை போலவே விறுவிறுப்பாக உள்ளது ...

LK சொன்னது…

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபிகா

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம் ரொம்பத் தான் மிரட்டறீங்க?? :D

SathyaSridhar சொன்னது…

Unga comment kku romba nandri nga kandippa naan 34 countries udaya recipes um poeda poeren...athula kandippa Argentina vum irukku enna match paarthengala jeichuduchalla...

Kadai nalla poettu irukkunga ippo Jai mela thappu illainu teriya varuthu..

பத்மநாபன் சொன்னது…

2 சீன்ல ஆரம்பிச்சு 3 , 4 , 5 சீன் வரைக்கும் கொண்டு வந்து விறு விறுப்பா எடுத்துட்டு போறீங்க ...

Mrs.Menagasathia சொன்னது…

mmm super!!

LK சொன்னது…

@மாமி
உங்களை விடவா ???

@சத்யா

நன்றிங்க

@பத்மநாபன்

நன்றி சார்

@மேனகா
:)))

vanathy சொன்னது…

LK, interesting. Waiting for the next part.

ஸ்ரீராம். சொன்னது…

கொஞ்சமாவது வாசகர்களுக்கு க்ளூ தராமலேயே வேலன் மட்டும் கண்டு பிடிப்பது என்ன நியாயம்? வண்டி விவரங்களாவது முன்னால் சொல்லியிருகக்லாமோ...அல்லது சொல்லி நான் சரியாகப் படிக்கவில்லையா?!

LK சொன்னது…

@வனாதி

நன்றி

@ஸ்ரீராம்

நீங்க இன்னும் கண்டுபிடிகலையா???

Harini Sree சொன்னது…

@LK meethi paathiyum naan kandu pidichuduven! :P BTW naan inga onnu sollanum aana sonna appattama ellaarukkum purinchudum so orey oru clue tharen nethu neenga chat la sonnatha nenachu paarunga! :P

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நண்பரே மண்டை ஒடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது . எனக்கும் மெல்ல மெல்ல பயம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது உள்ளுக்குள்.
மீண்டும் தொடரும் என்றுவேற போட்டு இருக்கீங்க . புகைப்படத்தை மாற்றதலாமே !

அப்பாவி தங்கமணி சொன்னது…

para parannu parakkudhu... going good..

LK சொன்னது…

@ஹரிணி

இல்ல இல்ல

LK சொன்னது…

@ஷங்கர்
ரொம்ப நன்றி சார். சீக்கிரம் முடிச்சிடறேன்

@அ(ட)ப்பாவி

நன்றி

கோமதி அரசு சொன்னது…

பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள்.
ஜெய் தன் தவறை உணர்ந்து விட்டான்.
மரணத்திலிருந்து தப்பிப்பானா?

LK சொன்னது…

/ஜெய் தன் தவறை உணர்ந்து விட்டான்.
மரணத்திலிருந்து தப்பிப்பானா?//

காத்திருக்கவும்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

:-|

Porkodi (பொற்கொடி) சொன்னது…

இந்திய நேரம் 6/16 விடியற்காலை 6 அல்லது 7 மணிக்குள் அடுத்த பாகம் வரலே.. லாரி டோர் டெலிவரி செய்யப்படும்.

Geetha Achal சொன்னது…

ஆஹா…என்னமா கதை எழுதி இருக்கின்றிங்க….வாழ்த்த வார்தைகள் இல்லை…

எப்பொழுதும் தொடர் கதைகள் என்றால் 3, 4 பாகம் முடியும் வரை காத்து இருந்து தான் அதனை முதல் பாகத்தில் இருந்து படிப்பேன்..

இப்பொழுதும் அப்படி தான் 4 பாகம் சேர்த்து ஒன்றாக இன்று படித்தேன்…ஆஹா திரும்பவும் என்ன ஆகும் என்று யோசிச்ச வச்சுட்டிங்களே….

சீக்கிரம் எழுதுங்க…

LK சொன்னது…

@பொற்ஸ்
அனுப்பற லாரிய ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அனுப்பு . எனக்கு அப்பதான் லாரி வேணும்


@கீதா

நன்றி மேடம்.. இன்னிக்கு அடுத்த பாகம் கண்டிப்பா வரும்

Ananthi சொன்னது…

Nice LK :)

Ananthi சொன்னது…

Nice LK :)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

மணி 9 அங்க!