Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கால் சென்டர் IV

விதூஷ் அவர்கள் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின்  விடுமுறைகளை பற்றி கேட்டிருந்தார். அதை பற்றி இன்று பார்ப்போம். பொதுவா இந்தியாவில், அரசா...

விதூஷ் அவர்கள் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின்  விடுமுறைகளை பற்றி கேட்டிருந்தார். அதை பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவா இந்தியாவில், அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு நிறைய விடுமுறைகள் உண்டு. விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலும், அதிலும் பல வகை உண்டு, உதாரணமா, கேசுவல் விடுப்பு , சிக் (sick) விடுப்பு என்று உண்டு. தனியார் துறைகளிலும் இத்தகைய விடுப்புகள் உண்டு. ஆனால் கால் சென்டர்களில் இத்தகைய பிரிவுகள் இல்லை. இருப்பது ஒரே வகைதான், கேசுவல் விடுப்பு மட்டுமே. வருடத்திற்கு இத்தனை நாள் என்று உண்டு. அதற்கு மேல் எடுத்தால் அந்த நாளுக்கு சம்பளம் இல்லை.


அடுத்து வார விடுமுறைகள். மக்களிடம் உள்ள எண்ணம் என்றால், கால் சென்டர்கள் வார இறுதியில் செயல்படுவது இல்லை. அது தவறு. இது அனைத்து கால் சென்டர்களுக்கும் பொருந்தி வராது. நுகர்வோருக்கு சேவை அளிக்கும் அத்தனை கால் செண்டர்களும் வார இறுதியில் மிக பரபரப்பாக இருக்கும். அன்று வேலை அதிகமாக இருக்கும். கம்பெனிகளுக்கு (corporate support) சேவை அளிக்கும் கால் சென்டர்களுக்கு மட்டுமே வர இறுதி விடுமுறை சாத்தியம்.

வாரம் இரண்டு நாட்கள் விடுப்பு என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஒரு வாரம் வெள்ளி , சனி இருக்கும் பிறகு திங்கள் செவ்வாய் என மாறும். எனவே கால் சென்டரில் வேலை செய்பவர்கள் வார இறுதியில் என்ஜாய் செய்கின்றனர் என்று எண்ணினால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

சில சமயம், இந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதும் மாறும். பொதுவாக டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் அதிக அழைப்புகள் இருக்கும். காரணம், வெளிநாடுகளில் அப்பொழுது விடுமுறை அதிகம். எனவே இதற்காக விடுமுறைகளில் கைவைப்பார், வாரம் ஒரு நாள் விடுமுறை என மாற்றுவர் . ஒரு முறை, நான் மாதம் முழுதும் விடுமுறை இல்லாமல் உழைத்தேன்.முடியாது என்று சொன்னால் வெளியே போ என்று சொல்லி விடுவர். எனவே வேறு வழி இல்லை.

அடுத்து பொது விடுமுறைகள்.அனைத்து நிறுவனங்களும் அவர்கள் நிறுவனத்தின் பொது விடுமுறைகள் தினத்தை அறிவிக்க வேண்டும். இது சட்டம். எனவே இவர்களும் அறிவித்து இருப்பார். ஆனால், அந்த தினங்களில் விடுப்பு கிடைக்காது. அதற்கு பதில் ஒரு தினத்திற்க்கான சம்பளமோ இல்லை அன்று வேலை பார்த்ததற்காக வேறு நாட்களில் விடுப்போ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பண்டிகை தினங்களில் விடுமுறை என்பது அணிக்கு அணி மாறுபடும். அந்த அணித் தலைவர் அனுமதித்தால் ஒருவரோ அல்ல இருவரோ விடுமுறை எடுக்க முடியும். வருடம் முழுவதும் உழைத்துத்தான் ஆக வேண்டும். பண்டிகையாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டும். வேறு வழி இல்லை.

அடுத்து பேறு கால விடுமுறை. அதை பற்றி அனந்யா அவர்கள் பின்னூட்டத்தில் மிக விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே இங்கு போடுகிறேன்.

"அன்பு விதூஷ், ஆமாம், என்னுடைய ப்ராஸஸ் ட்ரெயினர் சவிதா, கர்ப்பமா இருந்தபோது தான் எங்களுக்கு பயிற்சி எடுத்தாங்க. அப்புறம் அவங்க டெலிவரி முடிஞ்சு வந்து வேலையை தொடர்ந்தாங்க. அது பெர்ஃபாமன்ஸை பொறுத்த விஷயம்ன்னாலும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுறது!நீங்க சொல்ற மாதிரி கட் த்ரோட் காம்பட்டிஷன் இருக்கறதுனால அந்த வேலையை செய்ய நூறு பேர் ரெடியா காத்துண்டு இருப்பாங்க. இருந்தாலும் இது முழுவதும் கம்பெனி, ஹெச்.ஆர், ப்ராஸஸ் மேனேஜர், ஆப்பரேஷன்ஸ் மேனேஜர், டீம் லீடர் இவர்களின் கலந்தாலோசிப்பு முடிவைப் பொறுத்த விஷயம்"


இதை விட சிறப்பாக என்னால் சொல்ல இயலாது. எனவேதான் அதை அப்படியே இங்கே போட்டேன்.


அடுத்த பதிவில் கால் சென்டரின் அமைப்பு(company structure)  எப்படி பட்டது என்பதை பார்ப்போம். 

43 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

ரொம்ப நன்றாக எழுதுறீங்க. நன்கு புரியும்படி இருக்கிறது. தொடருங்கள்...

Unknown சொன்னது…

விடுமுறைகள் இல்லாத வேலை.. வெறுப்பானதுதான்

தக்குடு சொன்னது…

Hmm, good info.....:)

சௌந்தர் சொன்னது…

விடுமுறைகள் இல்லாத வேலையா என்ன உலகம் இது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”அரசாங்க அலுவலகங்களில் நிறைய விடுமுறை உண்டு” - விடுமுறை இருந்தாலும், அன்றும் வேலை சில விதிவிலக்குகள் உண்டு. வேலை செய்து தான் ஆகவேண்டும். தகவல்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சவாலான வேலைதான். அரசாங்க வேலையிலும், விடுமுறையா இருந்தாக்கூட.. மேலதிகாரி சொன்னா சிலசமயம் அப்பவும் வேலைசெய்ய வேண்டி வரும்.

VELU.G சொன்னது…

இப்படியெல்லாம் இருக்கிறதா?

பகிர்விற்கு நன்றி

Menaga Sathia சொன்னது…

ஓஒ விடுமுறை இல்லன்னா போர்தான்...

அபி அப்பா சொன்னது…

இப்ப தான் இந்த பாகம் படிச்சேன். மீதி பாகங்களும் படிக்க தூண்டுது. நானெல்லாம் லீவ் குடுக்காட்டி செம கடுப்பாகி செம கடுப்பாகி செம கடுப்பாகி..........விஜய் மாதிரி டாய்லெட்ல போய் அழுதுடுவேன்:-))

பெயரில்லா சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு ..நன்றி

ஜெய்லானி சொன்னது…

//ஒரு முறை, நான் மாதம் முழுதும் விடுமுறை இல்லாமல் உழைத்தேன்.முடியாது என்று சொன்னால் வெளியே போ என்று சொல்லி விடுவர். எனவே வேறு வழி இல்லை.//


இது மாதிரி நான் ஒரு தடவை பார்த்து பைத்தியம் பிடிக்காத குறைதான் . வாரத்தில் கண்டிப்பாக எப்படியும் ஒரு நாள் லீவு அவசியம் .

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

kastam thaan polirukku..! nice :)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

very insightful post/series..

ஸ்ரீராம். சொன்னது…

புதிய பல தகவல்கள்...தொடருங்கள்...

தெய்வசுகந்தி சொன்னது…

present sir!!!!!!

dheva சொன்னது…

Organization Chart....கொடுங்க...கொடுங்க...ஆர்வமா இருக்கிறேன்..பார்க்க...intresting Boss!

Harini Nagarajan சொன்னது…

leave paththi vilaa vaariya pinni eduthuteenga. mukkiyama training period la leave a kedaikkaathu! apdiye eduthaalum sambalam cut aayidum. oru naal leave pota kooda cab driver la irunthu tea boy varaikkum kepaan yen varala nu??

ஜெயந்தி சொன்னது…

:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

oh my god.... so much troubles in this job? kastam thaan.... no sick leave? that is so bad... nice write up LK....

Swengnr சொன்னது…

படிக்கும்போதே பாவமா இருக்கு! பந்தாவா கார்ல போறது மட்டும்தான் உலகத்துக்கு தெரியுது. என்ன பண்றது சம்பாதிக்க வேண்டி இருக்கே?

Unknown சொன்னது…

எல்.கே, அநன்யா சொன்னது ஒரு உதாரணமே ஒழிய விதி என்ன என்பதல்ல..

விதிப்படி பேறுகால விடுப்பு எத்தனை நாள்?

நான் இந்தியாவில் பணியாற்றிய ஒரு எம்.என்.சியில் 2 மாதம் விடுப்பும் பிரசவத்துக்கு முன்னால் ஒரு ஆறுமாதம் அழுத்தம் அதிகமில்லாத வேலையும், விடுப்பு முடிந்து வந்ததும் 6 மாதம் அழுத்தமில்லாத வேலையும் கொடுப்பார்கள். கால் செண்டர்களில் எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//விடுமுறைகள் இல்லாத வேலை.. வெறுப்பானதுதான்//

naanum 3 varusam velai pathten

ஹேமா சொன்னது…

ஒரு புதிய உலகத்தின் கதை சொல்வதைக் கேட்கும் உணர்வோடு வாசித்துக்கொண்டிருக்கிறேன் கார்த்திக்.

பெயரில்லா சொன்னது…

இளம் வயதுக்காரர்களுக்கு இந்த வேலை பொறுந்தும். நீண்ட நாட்கள் இந்த வேலையில் இருப்பது கடினம்.

பத்மா சொன்னது…

விடுமுறை இல்லாமல் வேலை பார்ப்பது கொஞ்சமா என்ன? ரொம்பவே கஷ்டம் தான் ..
இக்கரைக்கு அக்கரை பச்சை..
விடுமுறை இருந்தால் சம்பளம் கம்மி
சம்பளம் நல்ல இருந்தால் கஷ்டங்கள் ஜாஸ்தி ..
இதான் life

Vidhoosh சொன்னது…

தமிழ் மணத்தில் இணையலையா?

Vidhoosh சொன்னது…

நன்றி கார்த்திக்.
எனக்கு வரும் சில மொழிபெயர்ப்பு ப்ராஜக்டுகளில், கால் சென்டருக்கான transliteration வகைகளும் வரும். முக்கால் வாசி கேள்விகளுக்கு கிளிப்பிள்ளை போல் ஒரே மாதிரி பதில் சொல்லவே தயார் செய்யப் படுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே தெரியும்.

எனக்கு இன்னும் சில கேள்விகள் இருக்கு.. கோவிச்சுக்காம தெளிவு படுத்தணும்னு கேட்டுக்கறேன். (ரொம்ப படுத்தறேனோ?)

1. சொந்த மூளையை/ஆறாம் அறிவை பயன் படுத்த அனுமதி உண்டா?

2. கொஞ்சம் சுய சிந்தனை உடையவர்கள் இந்த வேளையில் தாக்கு பிடிக்க முடியுமா?

3. நான் பெரும்பாலும் இந்த மாதிரி கால் சென்டர் முதல் லெவல் எக்சிகூடிவ்களிடம் எரிச்சலடைந்து கத்துவது இல்லை. ஆனால் ரொம்ப பொறுமையை சோதிக்கும் அளவுக்கு ஒரே மாதிரியே பேசிக் கொண்டிருப்பார்கள். பி.பீ. எகிறும் எனக்கு. இருந்தாலும் ரொம்ப பொறுமையாக ஒவ்வொரு முறை பேசும் போதும் விளக்கி கொண்டிருப்பேன். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், என் தொலைபேசி என்னை வைத்துக் கொண்டு என் வரலாற்றையே கண்டு பிடிக்கும் போது, ஒரு சாதாரண complaint history கண்டு பிடிக்க முடியாமல் monotonous voice-ஸில் கடுப்பேத்துவது ஏன் ஏன் ஏன்? ஒரு பணியாளருக்கு வாடிக்கையாளரின் பிரச்சினையை அணுக சொந்த மூளையை பயன்படுத்தும் அனுமதி உண்டா?

செல்வா சொன்னது…

கால்சென்டர் பற்றிய உங்களது பதிவுகள் அருமை ...!! தொடர்ந்து எழுதுங்கள் .. காத்திருக்கிறேன் ...

Matangi Mawley சொன்னது…

சனி ஞாயர் விடுமுறை எல்லா ஐ டி துறையிலும் ஒன்று தான் போலும்!
இது ஒரு நல்ல தொடர்.. பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது!
தொடருங்கள்...

Asiya Omar சொன்னது…

ரொம்ப இண்ட்ரெஸ்டிங்.எவ்வளவு விஷ்யம் இருக்கு.உபயோகமான தொடர்.

Geetha Sambasivam சொன்னது…

அநன்யா சொல்லி இருப்பது பொதுவான ஒன்று. ஆனால் எல்லா கால் செண்டர்களுக்கும் இது பொருந்துமா?

Geetha Sambasivam சொன்னது…

பல விஷயங்களும் புதியவை. பேறுகால விடுப்புப் பற்றிச் சரியாச் சொல்லலையோனு தோணுதே?

எல் கே சொன்னது…

@கௌசல்யா
வருகைக்கு :))

@செந்தில்
உண்மைதான் . வருகைக்கு :))

@தக்குடு

:))

எல் கே சொன்னது…

@சாரல்/ வெங்கட்

உண்மைதான் மறுக்கவில்லை. அனால் மாதம் முழுவதும் அப்படி வராது இல்லையா ??

@மேனகா
ஆமாம்

@வேலு
வருகைக்கு நன்றி

@அபி அப்பா
ஹஹா :)

எல் கே சொன்னது…

@ஜெய்


@ஆனந்தி
வருகைக்கு நன்றி

@கேடி
நன்றி

@ஸ்ரீராம் அண்ணா
நன்றி

@தெய்வ சுகந்தி
நன்றி

எல் கே சொன்னது…

@தேவா
கண்டிப்பா

@ஹரிணி
கேப் டிரைவர்தான் தொல்லை

@ஜெயந்தி
:)

@அப்பாவி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@முகிலன்

வருகைக்கு நன்றி. அனன்யா சொன்னது விதி அல்ல. இப்பொழுது என்ன விதிமுறை இருக்கிறது என்பதை நான் அறிந்து சொல்கிறேன். (இப்ப நான் இருப்பது domestic callcenter. Rules will change)

எல் கே சொன்னது…

@Software Engineer

exactly :((

எல் கே சொன்னது…

@ரமேஷ்
எப்படி ? நான் ரெண்டு வருஷம் எஸ்கேப்

எல் கே சொன்னது…

@ஹேமா

நன்றிங்க

@அம்மிணி
சரிதான் நன்றிங்க

@பத்மா

சரியாய் சொன்னேங்க.. வருகைக்கு நன்றி

@விதூஷ்
ஒரு சிரமும் இல்லை. கேள்விகள் வருவது எனக்கு ஊக்கம் அளிக்கிறது மேலும் எழுத. கண்டிப்பாக ஒரு பதிவு போடுகிறேன் இதற்கு.

ஒரு சில சமயம், தமிழ்மணம் ரொம்ப மெதுவாக இருக்கிறது. இதனால், ப்ளாக் படிப்பதில் பிரச்சனை வருகிறது. அதனால் அதை நீக்கி விட்டேன்.

எல் கே சொன்னது…

@செல்வகுமார்

நன்றிங்க

@மாதங்கி
உண்மைதான். நன்றி

@மாமி
விரிவாக மறுபடியும் சொல்கிறேன்

@ஆசியா

நன்றி சகோதரி

ஹுஸைனம்மா சொன்னது…

இங்கேயும் கால் செண்டர்கள்ல சில சமயம், எத்தனை கை மாறிப் போனாலும் பிரச்னைக்கு வழி சொல்லாமா, “வி வில் கால் யூ பேக்” இல்லன்னா, “ப்ளீஸ் செண்ட் மெயி டு தி ஐடி”தான்.. கோவமும் வரும்; பாவமாவும் இருக்கும்; நம்ம எதாவடு கோவமாச் சொல்லி, அது ரெக்கார்ட் ஆகி, அவங்களுக்கு பிளாக் பாய்ண்ட் ஆகிடக்கூடாதேன்னு விட்டுடறது.

இன்னும் எழுதுங்க..

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
அதற்க்கு காரணம் உண்டு. சில சமயம் அவர்களுக்கு அதற்க்கு பதில் தெரியாமல் இருக்கலாம் அல்லது அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.