ஜூன் 06, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் IV

காலை பத்து மணி. என்ன முடிவு வருமோ என்று எதிர்பார்த்து செல்போனை நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டு இருந்தாள் அஞ்சலி.

அறையின் நிசப்தத்தை கொன்று அலறியது  செல்போன்.

மிகுந்த டென்சனுடன் அதை உயிர்பித்த அஞ்சலி ,"சொல்லுங்க சார்" என்றால் நடுங்கும் குரலுடன்.

"நீங்க வேலைக்கு  தேர்வு ஆகி இருக்கீங்க . வாழ்த்துக்கள் " எதிர் முனையில் பிரகாஷ்.

" தேங் யூ சார்".

"நீங்க நாளைக்கு வேலையில் சேர வேண்டி இருக்கும் . தயாரா இருங்க "

"ஓகே சார். கண்டிப்பா "

போனை துண்டித்த அஞ்சலி, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

உடனடியாக அக்காவிற்கு போன் செய்து விசயத்தை சொன்னாள். அவள் அக்காவும் இவளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாள்.

தனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக அந்த வேலையை நினைத்தாள் அஞ்சலி. பாவம் அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை விதியின் போக்கு.

                                               **************************
மறுநாள் காலை . முதல் நாள் வேலைக்கு செல்லும் உற்சாகத்தில் அஞ்சலி.  உடலுடன் இரண்டாம் தோலாய் ஒட்டிய ஜீன்சும், அதற்கு பொருத்தமான ஒரு குட்டை டாப்சும் அணிந்து , அலுவலகத்தில் நுழைந்த பொழுது, அவளை கண்டு பெருமூச்சு விடாதோர்  சொற்பம்.

தனது அறையில் அமர்ந்து இருந்த ஜெய், இவளைக் கண்டவுடன் மகிழ்ந்தான்.  உடனடியாக இன்டர்காமில் பிரகாசை அழைத்த ஜெய் "பிரகாஷ், அந்த அஞ்சலியை என் அறைக்கு அனுப்புங்கள் ".

ஜெய், பணத்தில் புரளும் இளைஞன் என்றாலும், படிப்பும், நிர்வாகத் திறமையும் உள்ளவன் . அவன் நிர்வாகத்தில் அவர்களது தொழில் முன்னேற்றம் கண்டதால், அவனது தந்தை அவனது சொல்லுக்கு அதிகம் மறுப்பு சொல்வது இல்லை.

"மே ஐ காம் இன் சார்?"

"வாங்க அஞ்சலி. உக்காருங்க. உங்களுக்கு  என்ன வேலை ? எவ்வளவு சம்பளம்? விவரம் தெரியுமா ?"

"இல்லை சார். இப்பதான் வந்தேன். நீங்க இங்க வர சொன்னதா சொன்னாங்க"

"ஓகே. உன்னோட வேலை காரியதரிசி . எனக்கும் என் அப்பாவுக்கும். சம்பளம் மத்தவிவரம் உங்களுக்கு பிரகாஷ் சொல்லுவார் "

"அடிக்கடி நீங்க வெளியூர் போக வேண்டி இருக்கும். பிரச்சனை ஒன்னும் இல்லையே ?"

"இல்லை சார். நான் ஹாஸ்டல்லதான் தங்கி இருக்கேன். அதனால பிரச்சனை இல்லை."

"இனிமே ஹாஸ்டல் வேண்டாம். நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கு . அங்கேயே தங்கிக்கலாம். சில சமயம், நைட் லேட்டா போக வாய்ப்பு இருக்கு,. அப்ப ஹாஸ்டல்ல உனக்கு பிரச்சனை வரக்கூடாது. "

"ஓகே சார். நீங்க எப்படி சொல்றீங்களோ . அப்படியே பண்ணிக்கறேன்".

"ஓகே நீங்க போகலாம். மத்த விவரம் எல்லாம், பிரகாஷ் சொல்லுவார்".

" தேங் யூ சார்"

அஞ்சலி  செல்ல இருந்த அந்தத் தருணம் ,
"அஞ்சலி ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ?"

"இல்லை சார் சொல்லுங்க. "


"'இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு . உங்க வேலைக்கும் இது சரியா பொருந்தி இருக்கு."

 " தேங் யூ சார்"  வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அங்கிருந்து வெளியில் சென்றாள் அஞ்சலி.

 அவள் செல்லுவதே பார்த்துக் கொண்டு இருந்த ஜெயின் முகத்தில் மீண்டும்ஒரு குரூரப் புன்னகை.
                                             **************************

அஞ்சலி வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஓடின. அந்த நான்கு மாதங்களும் அஞ்சலிக்கு  மிக வேகமாக சென்றது போல் ஒரு நினைப்பு. ஜெய் அவளிடம் காட்டிய நெருக்கம் அவளுக்கு பெருமையாக இருந்தது. தன்னைப் போன்ற புதியதாக சேர்ந்த ஒருவரிடம், அந்த நிறுவனத்தின் வாரிசு நெருக்கமாக பழகுவது தனக்கு கிடைத்தப் பரிசு என்று எண்ணினாள் விவரம் அறியா அந்தப் பேதை.

அன்றும் வழக்கம் போல் ஜெய் இன்டர்காமில் " அஞ்சலி , இன்னிக்கு நைட் நாமசென்னை போறோம் . ஒரு முக்கியமான விசயத்துக்காக . தயார இருங்க "


"ஓகே சார், நான் ரெடி ஆகிடுவேன் ."

அவளுடைய வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் பயணத்துக்கு தயாரானாள் அவள்.

-பரிசு தொடரும் 

28 கருத்துகள்:

asiya omar சொன்னது…

கதை விறு விறுப்பாக போகுது எல்.கே.

அமைதிச்சாரல் சொன்னது…

கதை பை-பாஸ் ரோட்டில் போறமாதிரி பயணிக்குது.

Harini Sree சொன்னது…

nice aduththa partku waiting! :)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தொடரும் போடாமல் விட்டதால் கதை முடிவு இதுவல்லவே எனக் குழம்பினேன்

தக்குடுபாண்டி சொன்னது…

nallaa kondu pooreenga LK!...:)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

இந்த எழுத்து ஸ்டைல் ரொம்ப சூப்பர் எல்.கே. ஆல்ட்டர்னேட் அத்தியாயங்களில் விறுவிறுப்பா கதை பயணிக்கும் விதம் அருமை! கலக்கறே போ! நான் சொல்லிக்கொடுத்தாப்புல அப்படியே எழுதி இருக்கியே.. வெல்டன்.. :P:P:P
jokes apart, a job well done.

அன்புடன் மலிக்கா சொன்னது…

கதை படிக்கப்படிக்க சுவாரசியமாக இருக்கு கார்த்திக். அருமை

sandhya சொன்னது…

நல்லா போகுது ஆனா சஸ்பென்ஸ் தான் தாங்க முடியலே

geetha santhanam சொன்னது…

ம்ம்ம், கலக்கறீங்க. விறுவிறுப்பா போகுது உங்கள் தொடர்கதை.--கீதா

LK சொன்னது…

@ஆசியா
நன்றி

@சாரல்

எனக்கு குறுக்கு சந்துப் பிடிக்காது

@ஹரிணி
நாளைக்கு வரும்

LK சொன்னது…

@செந்தில்
தவறுக்கு மன்னிக்கவும்

@தக்குடு
நன்றி

@அனன்ஸ்
உண்மையிலயே சந்தோசமா இருக்கு

LK சொன்னது…

@மலிக்கா
நன்றிங்க

@சந்த்யா

சஸ்பென்ஸ் இல்லாம எப்படி

Kousalya சொன்னது…

அருமை!!

Mrs.Menagasathia சொன்னது…

super.. very interesting...

பத்மநாபன் சொன்னது…

திக் ...திக்....திக் ...தொடரட்டும் ....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

கதை அருமை.........

அமைதிச்சாரல் சொன்னது…

பை-பாஸ் ரோட்டில் போறமாதிரி என்றால் செம ஸ்பீடா,விறுவிறுப்பா போகுதுன்னு அர்த்தம். அங்கே போட வேண்டிய ஸ்மைலி அவசரத்தில் விட்டுப்போச்சு :-)))))

LK சொன்னது…

@கௌசல்யா
:))

@மேனகா
தொடர் வருகைக்கு நன்றி

@உளவு

நன்றிங்க

LK சொன்னது…

@பத்மநாபன்

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@சாரல்

புரிந்தது..,
:))))

கலாநேசன் சொன்னது…

கதை அருமை

LK சொன்னது…

நன்றி கலாநேசன்

vanathy சொன்னது…

எல்கே, நல்லா இருக்கு. இம்பூட்டு வேகமா எழுதினா எப்படி? நான் கொஞ்சம் மெதுவா வந்து தான் கருத்து சொல்ல முடியுது. லேட்டானாலும் வந்து படிச்சுடுவோம்ல.

//நான் சொல்லிக்கொடுத்தாப்புல அப்படியே எழுதி இருக்கியே.. வெல்டன்.. //

//@அனன்ஸ்
உண்மையிலயே சந்தோசமா இருக்கு//
நான் வேறு பதிலை எதிர்பார்த்தேன். சே! சப்பென்று ஆகி விட்டது.

ananthi subbiah சொன்னது…

Ungalukku nallavae kadhai elutha varuthu.. nice

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர் flow ... கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு... nice ...

SathyaSridhar சொன்னது…

Hmm,,,enna Jai thaan villana kathai nalla poittu irukku,,adutha epdisode um ippave padikka poeren soo naan romba neram wait panna tevai ilaye,,

dheva சொன்னது…

தலையே வெடிச்சுடும் போல இருக்கு பாஸ்....சஸ்பென்ஸ் தாங்கல.... நான் நேரே உங்க வீட்டுக்கே வந்திடுவேன்....போல!

SathyaSridhar சொன்னது…

Anjali epdi ippadi appaavi ya irukka,,, jai nallavana kettavana seekram sollunga paa,,, chennai kilamba poerangala...

SathyaSridhar சொன்னது…

Anjali epdi ippadi appaavi ya irukka,,, jai nallavana kettavana seekram sollunga paa,,, chennai kilamba poerangala...