Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கால் சென்டர் III

குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் நீங்கள் பேசுவதை எப்பொழுது கேட்கிறார்கள் என்று தெரியாது. நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட அவர்கள் அதை கேட...

குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் நீங்கள் பேசுவதை எப்பொழுது கேட்கிறார்கள் என்று தெரியாது. நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட அவர்கள் அதை கேட்கலாம் . இதை கால் பார்ஜிங் (call Barging) என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப் படும். எனவே அவர்கள், நீங்கள் அழைப்பை பேசி முடித்த பின் கூட அதை கேட்டு நீங்கள் எவ்வாறு அந்த அழைப்பில் பேசியுள்ளீர்கள் என்று சரி பார்ப்பார். அவர்களிடம் இருந்து உங்களுக்கு குவாலிட்டி ரிப்போர்ட் வரும்பொழுதுதான் உங்கள் கால் பார்ஜ் செய்யப்பட்டது என்று உங்களுக்குத் தெரியவரும்.


இவர்கள் மட்டும் இல்லாமல், மொழி நிபுணர்கள் குழு ஒன்று இருக்கும். இவர்கள் வேலை  நீங்கள் பேசும்பொழுது எவ்வாறு பேசுகிறீர்கள். வாடிக்கையாளரிடம் பணிவாக பேசுகிறீர்களா இல்லை கோபமாக பேசுகிறீர்களா உங்களுடைய மொழி ஆளுமை எவ்வாறு உள்ளது போன்றவற்றை கண்காணிப்பது. தவறு செய்தால் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் கிட்ட இருந்துகூட தப்பிக்கலாம் ஆனால் இவர்களிடம் இருந்து தப்பிப்பது கடினம். ஒரு முறை ஒரு வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கோபமாக பேசியதற்காக என்னை மறுபயிற்சிக்கு அனுப்பினார்கள் இந்த குழுவினர்.


ஒரு அழைப்பில் பல விசயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதில் தொடங்கி எப்படி பேசுகிறீர்கள், எப்படி அழைப்பை முடிகிறீர்கள் என்பது வரை அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறைக்கான கால் சென்டர்களில் பேசும் நேரம் மாறுபடும். சராசரியாக எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதே முக்கியம். ஒரு சில அழைப்புகள் ஐந்து நிமிடங்களில் முடியலாம். ஒரு சில அழைப்புகள் ஒரு மணி நேரம் கூட நீடிக்கும்.  எனவே சராசரி நேரம் கணக்கு செய்யப்பட்டு அதுவே கவனிக்கப் படும். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முக்கியத்துவம் தருவார்கள். நீங்கள் அதிக நேரம் பேச பேச அவர்களுக்கு செலவு அதிகம்.


தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் அவர்கள் மையத்தை அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வே படிவம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். அனைத்து வாடிகையாலர்களுக்கும் இது போகாது. ஒரு வாடிக்கையாளர் எந்தக் காரணத்திற்காக அழைக்கிறாரோ அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது என்று நீங்க அங்கு உள்ள மென்பொருளில் குறிப்பிட்டால் மட்டுமே இந்த சர்வே படிவம் செல்லும். அதை அவர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் இது ஒரு முக்கிய அங்கம் ஆகும். வார இறுதி நெருங்க நெருங்க இந்த டென்சன் அதிகம் ஆகும். காரணம் எந்த ஒரு நாளிலும் இந்த வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் 90% இருக்க வேண்டும் . வாடிக்கையாளர் உங்கள் சேவையை 1-10 வரை உள்ள அளவீட்டில் மதிப்பிட்டு அனுப்பி இருப்பார். 6 அல்லது அதற்கு மேல் என்றால் பிரச்சனை இல்லை. அதற்கு கீழ் என்றால் அது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப் படும். வெள்ளிவரை நன்றாக இருக்கும், அதன்பின்  இரு எதிர்மறை சர்வே வந்தால் போதும். வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் இறங்கி விடும். இதை பற்றி மேலும் விவரங்கள் அடுத்தப் பதிவில் சொல்கிறேன். 


விளக்கம் 


ஜலீலா அவர்கள் சத்யராஜ், வடிவேலு நடித்த ஒரு படத்தை பற்றி சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், அனைத்து கால் சென்டர்களிலும் அமெரிக்க பெயர்கள் உபயோகிக்கப் படுவது இல்லை. அப்படியே உபயோகித்தாலும், அந்தப் பெயர் வாடிகையாளர்களுக்கு மட்டுமே. உங்கள் அலுவலத்தில் உங்களுடய நிஜப் பெயரிலே மட்டுமே அறியப்படுவீர்கள். நான் முதலில் இருந்த ப்ராஜெக்டில் ஜான் என்றப் பெயர் உபயோகித்தேன். அந்த ப்ராஜெக்டை பொறுத்தவரை நாங்கள் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக சொல்ல வேண்டும். அதனால் அந்தப் பெயர். பிறகு ஒரு முன்னணி கணிப்பொறி நிறுவனத்திற்காக வேலை செய்தேன் அப்பொழுது எனது நிஜப் பெயரான 
"கார்த்திக்" என்பதையே உபயோகித்தேன்.



டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்



52 கருத்துகள்

தக்குடு சொன்னது…

ok Mr. John...:)

Vidhoosh சொன்னது…

கால் சென்டர் பணியில் இருப்பவர்களுக்கு அரசு பொது விடுமுறைகள் இல்லை என்றே நினைக்கிறேன். அல்லது ஸ்வாப்பிங் முறையில் விடுமுறை எடுத்துக் கொள்வீர்களா?

சாதாரணமாகவே இந்தியாவில் பரவலாகவே கர்ப்பமுற்ற/பிரசவித்த பெண் பணியாளர்களுக்கு அவர்களுக்கு உண்டான விடுமுறை சம்பளத்துடன் அனுமதிக்கப் படுவதில்லை. கால் சென்டர்களில், அதுவும் ஒரு ஆள் போனால் இன்னொருத்தர் என்று இருக்கும் காம்படீஷனில், இந்நிலையில் (கர்ப்பிணி) உள்ள பெண் பணியாளர்கள் (திறமைசாலிகளாகவும்) இருந்தால் அவர்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள். மேலும், வொர்க் பிரேக் எனப்படும் இடைவேளைகள் சரியான முறையில் அனுமதிக்கப் படுகிறதா?

அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்னும் என்னென்ன பெயரில் அறியப்பட்டீர்கள் சொல்லுங்களேன். சுவையான, தேவையான தகவல்கள் - தொடருங்கள் நண்பரே.

சௌந்தர் சொன்னது…

நல்ல தகவல்கள் தொடருங்கள்

Asiya Omar சொன்னது…

சிலர் எழுத்து போரடிக்கும்,அருமையாக எழுதறீங்க,ஜமாய்ங்க...படிக்கணும்னு ஆவல் ஏற்படுது.

செல்வா சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் .. பயனுள்ள தொடர் ..

எல் கே சொன்னது…

@தக்குடு

:)

@வித்யா
பொது விடுமுறைகள் இல்லை. சுழற்சி முறையில் எடுத்துக் கொள்ளலாம். அதை பற்றி இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@வெங்கட்
இது மட்டுமே உபயோகித்தேன். வேறு பெயர் இல்லை

எல் கே சொன்னது…

@சௌந்தர்

நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@ஆசியா
பாராட்டுக்கு நன்றி

Geetha Sambasivam சொன்னது…

தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் அவர்கள் மையத்தை அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வே படிவம் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.//

இது மிக முக்கியமான ஒன்று. என்றாலும் பெரும்பாலான தொழில் நுட்ப கால் செண்டர்கள் இந்த சர்வே படிவம் அனுப்பறதே இல்லைனும் கேள்வி. அருமையான தகவல்கள். முற்றிலும் புதிய கோணம்.

பெயரில்லா சொன்னது…

நல்ல தொடர் எல்.கே. நேரமின்மை காரணமா எல்லா பதிவுக்கும் வர முடியலை. ஆனா கண்டிப்பா வார இறுதில படிப்பேன்.

எனக்கு இந்த கால் செண்டர் வேலைனாவே பயம். Abusive வாடிக்கையாளர்கள் அதிகம் .

எல் கே சொன்னது…

@அம்மிணி

நன்றி. நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை.

@கீதா மாமி
//இந்த சர்வே படிவம் அனுப்பறதே இல்லைனும் கேள்வி.//

அதில் வேறு சில விசயங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு முறையை உபயோக்கின்றனர்,. ஒரு சர்வே சென்று தொண்ணூறு நாட்களுக்குள் மற்றொரு சர்வே செல்லாது.

பாராட்டிற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

சரி ஜான் நல்ல இருக்கு உங்க வேலை பத்தின விஷயங்கள் எல்லாமே...அப்புறம் சத்யராஜ் நடிச்ச அந்த சினிமாவில் அமெரிக்க பத்தியும் அப்புறம் கால் சென்ட்டர் வேலை பத்தியும் நல்ல ஒபினியன் வர மாதிரி ஒன்னும் சொல்லல்லே கிண்டல் பண்ணற மாதிரி தான் இருந்தது...ஆனா நீங்க எழுதறது பார்த்த பிறகாவது இந்த வேலையே பத்தி கெட்டது சொல்லறவங்க யோசிக்கட்டும்

Ananya Mahadevan சொன்னது…

//ஒரு முறை ஒரு வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கோபமாக பேசியதற்காக என்னை மறுபயிற்சிக்கு அனுப்பினார்கள் இந்த குழுவினர்.// உங்க கம்பெனி பரவாயில்லை. இது ஒரு ப்ளண்டர். எனக்கு தெரிஞ்ச கால் செண்டரா இருந்தா ஸ்ட்ரெயிட் அவே, டெர்மினேஷன் தான். ஆஃப் கோர்ஸ் இது க்ளெயிண்ட் பாலிஸியை பொறுத்த விஷயம்! இருந்தாலும் நம்ம இண்டஸ்ட்ரீல கஸ்டமர் இஸ் தி கிங். அவங்க என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போட்டுட்டுத்தான் நம்ம விஷயத்தை சொல்லணும்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வேறு பெயர் எந்தெந்த நாடுகளுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. கொஞ்சம் சொல்லுங்க.

எல் கே சொன்னது…

@சந்த்யா

நன்றி. சொல்றவங்க சொல்லிகிட்டேதான் இருப்பாங்க.

எல் கே சொன்னது…

@அனன்ஸ்
அது அவுட் ஆப் வாரண்டி கேஸ்.

எல் கே சொன்னது…

@சாரல்

நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்கனு நினைக்கிறேன். எந்த அமெரிக்க பெயர் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். பிரபலங்களின் பெயர் உபயோகிக்கக் கூடாது. அந்த நிறுவனத்தின் பாலிசியை பொருத்து இந்தியப் பெயரோ அமெரிக்கப் பெயரோ உபயோகிக்கலாம்

வடுவூர் குமார் சொன்னது…

கொஞ்சம் கோபமாக பேசியதற்காக
வாடிக்கையாள‌ர் நோக்கில் அந்த‌ க‌ம்பெனியின் பெய‌ர் உடைந்திருக்கும்!! Damage Done.
ஒரு முறை ஏர் டெல் இணைய‌ இணைப்பு ப‌ற்றி என‌க்கு தேவையான‌ விப‌ர‌ங்க‌ள் கேட்ட‌ போது தேவையில்லாம‌ல் காத்திருக்க‌ வைத்து நேர‌த்தை இழுத்த‌டித்தார்க‌ள் அத‌ற்கு நீங்க‌ள் சொல்லிய‌ நேர‌ விஷ‌ய‌ம் தான் என்று இப்போது புரிந்த‌து.பல‌ருக்கு குறுகிய‌ அறிவே இருக்கு ஆதாவ‌து ஏர்டெல் மோட‌ம் லின‌க்ஸில் வேலை செய்யும் என்றால் "ரெ ஹேட்" ம‌ட்டுமே தெரியும் அதைத்தாண்டி உபுண்டு என்றால் அவ்வ‌ள‌வு தான்.தேவையான‌தை கேட்டு நாமே அத‌னோடு விளையாடி ச‌ரி செய்ய‌வேண்டும்.
தெரிய‌வில்லை என்றால் அதை ஏன் ஒத்துக்கொள்ள‌ மாட்டேன் என்கிறார்க‌ள் என்று புரிய‌வில்லை.த‌லையை சுற்றி காதை தொடுவ‌து ப‌ல‌ ச‌மய‌ம் விஷ‌ய‌ம் தெரிந்த‌ வாடிக்கையாள‌ரை எரிச்ச‌ல‌டைய‌வே செய்கிற‌து.

Ananya Mahadevan சொன்னது…

//சாதாரணமாகவே இந்தியாவில் பரவலாகவே கர்ப்பமுற்ற/பிரசவித்த பெண் பணியாளர்களுக்கு அவர்களுக்கு உண்டான விடுமுறை சம்பளத்துடன் அனுமதிக்கப் படுவதில்லை. கால் சென்டர்களில், அதுவும் ஒரு ஆள் போனால் இன்னொருத்தர் என்று இருக்கும் காம்படீஷனில், இந்நிலையில் (கர்ப்பிணி) உள்ள பெண் பணியாளர்கள் (திறமைசாலிகளாகவும்) இருந்தால் அவர்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள். மேலும், வொர்க் பிரேக் எனப்படும் இடைவேளைகள் சரியான முறையில் அனுமதிக்கப் படுகிறதா?// அன்பு விதூஷ், ஆமாம், என்னுடைய ப்ராஸஸ் ட்ரெயினர் சவிதா, கர்ப்பமா இருந்தபோது தான் எங்களுக்கு பயிற்சி எடுத்தாங்க. அப்புறம் அவங்க டெலிவரி முடிஞ்சு வந்து வேலையை தொடர்ந்தாங்க. அது பெர்ஃபாமன்ஸை பொறுத்த விஷயம்ன்னாலும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுறது!நீங்க சொல்ற மாதிரி கட் த்ரோட் காம்பட்டிஷன் இருக்கறதுனால அந்த வேலையை செய்ய நூறு பேர் ரெடியா காத்துண்டு இருப்பாங்க. இருந்தாலும் இது முழுவதும் கம்பெனி, ஹெச்.ஆர், ப்ராஸஸ் மேனேஜர், ஆப்பரேஷன்ஸ் மேனேஜர், டீம் லீடர் இவர்களின் கலந்தாலோசிப்பு முடிவைப் பொறுத்த விஷயம்!

Ananya Mahadevan சொன்னது…

வடுவூர் குமார் அவர்களே,

//தேவையான‌தை கேட்டு நாமே அத‌னோடு விளையாடி ச‌ரி செய்ய‌வேண்டும்.
தெரிய‌வில்லை என்றால் அதை ஏன் ஒத்துக்கொள்ள‌ மாட்டேன் என்கிறார்க‌ள் என்று புரிய‌வில்லை.த‌லையை சுற்றி காதை தொடுவ‌து ப‌ல‌ ச‌மய‌ம் விஷ‌ய‌ம் தெரிந்த‌ வாடிக்கையாள‌ரை எரிச்ச‌ல‌டைய‌வே செய்கிற‌து//
ரொம்பவும் சரி. ஒவ்வொரு ஏஜண்டுக்கும் அவங்க ஸ்கோப் ஆஃப் ஆப்பரேஷன்ஸ் நியமிச்சு இருப்பாங்க. அதைத்தாண்டி அவங்க தெரிஞ்சு வெச்சுக்கவேண்டிய அவசியம் இல்லை.பல டெக்னிக்கல் கால் செண்டர்களில் முதல் அடுக்கு ரெண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு இப்படி அடுக்கு வாரியா டெக்னிகல் டீம்கள் வெச்சிருப்பாங்க. உங்களுக்கு தேவையான விடை கிடைக்காவிட்டால் நீங்க நேரடியா கேக்க வேண்டிய கேள்வி,” யாரால் எனக்கு உதவ முடியும்?” (who can help me in this regard)ஒரு வேளை ஏஜெண்டு எடக்காக பேசினால் கட்டாயம் நீங்க அவர் மேனேஜரிம் பேசணும்ன்னு சொல்லியே ஆகணும். கஸ்டமர் கோவிச்சுண்டாத்தான் சீரியஸா எதையும் எடுத்துப்பாங்க சில பேர். அதை கஸ்டமர்கள் அட்வாண்டேஜா எடுத்துண்டு தான் ஆகணும்.

@LK,

இந்த கட்டுரை முழுவதும் எம்ப்ளாயீ பெர்ஸ்பெக்டிவ் என்று வைத்துக்கொண்டாலும், கஸ்டமர் பெர்ஸ்பெக்டிவா ஒரு பதிவு எழுதணும். ஏன்னா நாம எல்லாருமே ஏதாவது ஒரு தருணத்தில வாடிக்கையாளர்களா தான் இருக்கோம்.கன்ஸிடர் பண்ணுவியா?

Ananya Mahadevan சொன்னது…

//@அனன்ஸ்
அது அவுட் ஆப் வாரண்டி கேஸ்// கண்ணா, அது எவுட் ஆஃப் வாரண்டியா இருந்தாலும் எனி கஸ்டமர் இஸ் எ பொடென்ஷியல் கஸ்டமர். கஸ்டமர் ரிடன்ஷன் ரூல் படி நாம அவங்களை அவமான படுத்தினா அவங்க நம்ம கிட்டே திரும்பி வர மாட்டாங்க.

Ananya Mahadevan சொன்னது…

எல்.கே,
நான் கால் செண்டர்களில் பணி புரிஞ்சது கொஞ்ச காலமே தான்னாலும் அதி வேகமான என் கரீயர் வளர்ச்சியினால எனக்கு இந்த இண்டஸ்ட்ரீ ரொம்ப இஷ்டம். வெற்றிக்கனியை சுவைக்க தந்த கால்செண்டர் வேலைய நான் மறக்க மாட்டேன். நிறைய விஷயங்கள் மறந்திருந்தேன். உன் கட்டுரையை படிச்சப்புறம் எல்லாமே மறுபடியும் நினைவுக்கு வந்திடுச்சு. ரொம்ப நன்றி!
பழைய நினைவுகளை கிளறியமைக்கும், எனக்கும் இதெல்லாம் தெரியும்ன்னு கான்ஃபிடென்ஸ் கொடுத்தமைக்கும் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்!

அருண் பிரசாத் சொன்னது…

சில technical விசயங்களையும் சொல்லுங்கள். அதாவது, எப்படி கால் ஒதுக்கப்படுகிறது, எப்படி Monitor செய்கிறார்கள், etc

நன்றாக செல்கிறது, தொடருங்கள்

VELU.G சொன்னது…

மிக அருமையான தகவல்கள்

எல் கே சொன்னது…

@குமார்
உங்களுக்கு அனன்யா அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். நன்றி

எல் கே சொன்னது…

@அனன்யா
மிக சிறப்பாக விளக்கம் பல தந்தமைக்கு நன்றி. உன்னுடைய கொட்ரிக்கை பரிசீலிக்கப்படும்

எல் கே சொன்னது…

@அருண்

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

@வேலு

நன்றி saar

Ananya Mahadevan சொன்னது…

தொடர...

Menaga Sathia சொன்னது…

நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்,நன்றி எல்கே!!

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்கள்!! டெக்னிகல் விஷயமும் விரிவா எழுதுங்க!!! சும்மா தெரிஞ்சுக்கத்தான்.

கோமதி அரசு சொன்னது…

கால் சென்டர் பணிப் பற்றிய விபரங்கள் அடங்கிய 3 பதிவுகளும் படித்தேன்.

நன்றாக எழுதி உள்ளீர்கள்.

அந்த வேலைக்கு செல்ல ஆசை படுபவர்களுக்கு நல்ல விளக்கம்,நல்ல உதவி.சம்பந்தபடாதவர்களுக்கு உங்கள் வேலையில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் விளங்கிவிடும்.

மேலும் விபரங்கள் அறிய ஆவல்.
நன்றி.

ஜெய்லானி சொன்னது…

நல்ல பதிவு

Indian சொன்னது…

Interesting posts.

Some one mentioned of two perspectives, that of customer and agent/CSA/CSR. I handle yet another perspective; that of developing software used by CSA to handle customer (typically known as back-end). Software has to take care of call routing, screen usability, call recording, transaction process flow, system performance, high availability etc etc. When the call stretch due to system performance, we'll be grilled in the back-end.

Anyway keep going.

Harini Nagarajan சொன்னது…

John saar enga computer praaablam pannuthu yenna pannalaam?????? :P

ஸாதிகா சொன்னது…

சுவாரஸ்யமான பகிர்வு

ஹேமா சொன்னது…

என்னுடன் இந்தியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன் தமிழ்ச்செல்வன்,
ராஜேஷ் என்பவர்கள் இப்படித்தான் தொடர்பு கொண்டிருப்பார்களோ ?எப்படி எங்கள் தொலைபேசி இலக்கங்களைப் பெறுகின்றார்கள் ?

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்ப சுவாரஸ்யமாகச் செல்கிறது...தொடருங்கள்... இன்னும் இன்னும் அறியக் காத்திருக்கிறோம்.

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றிங்க

@தெய்வ சுகந்தி
கண்டிப்பா எழுதறேன்

@கோமதி

நன்றிங்க.

@ஜெய்
நன்றி தல

எல் கே சொன்னது…

@இந்தியன்
நல்ல விளக்கம். ஆனால் அவை மென்பொருள் சார்ந்தது

@சாதிகா

வருகைக்கு நன்றி


@ஹரிணி
தூக்கி குப்பைல போட்டுட்டு புதுசு வாங்கு

எல் கே சொன்னது…

@ஹேமா

இப்படித்தான் பேசி இருப்பாங்க, தொலைபேசி எங்கள் அங்கிர்க்கும் தொலைதொடர்பு நிறுவனங்களில் இருந்து பெறப் படும்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

hmmm.. niraya theriatha visayam solliyirukkeenga..

thanks..mr.john :)

Mythili சொன்னது…

good going. best wishes

பத்மநாபன் சொன்னது…

மிக ரசனையாக எழுதுகிறீர்கள். துறை சார்ந்தவர்களுக்கு மிக,மிக பயனாக இருக்கும்.எங்களை போன்றவர்களுக்கு அத்துறையில் என்ன நடக்கிறது என்பதும் புரிய வைக்கிறிர்கள்..

ஹுஸைனம்மா சொன்னது…

இன்னும் எழுதுங்க, நிறையத் தெரிஞ்சுக்க விரும்புறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஓ....இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? ம்.. சொல்லு சொல்லு..
Thanks

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//வேறு பெயர் எந்தெந்த நாடுகளுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது//

என்னுடைய தம்பி ஒருத்தர் பெங்களூரில் கால்செண்டரில் இருந்தார். அவருடன் பேசும்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் கேட்டேன். ஏனென்றால் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளுக்கு இந்த சேவை உண்டா என்று எனக்கு தெரியாது.தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்.

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
நன்றிங்க

@அப்பாவி
இன்னும் இருக்கு

@சாரல்
உண்டு. முக்கியமா அமெரிக்க அப்புறம் இங்க்லாந்து .

dheva சொன்னது…

Gr8 Post Boss...!

Actually i was reading from the I part...and its really like a wonderful guide for a people who wants to join in this field.

Even for me... it was diff scene because of that Sathya Raj movie where the showed the wrong informaion about the call centers.

Now am wondering that so many diffculities are to..get going with call centers.....

I really appreciate your superb effort which got through ur experince.......

Amazing...Boss simply superb.....and i learnt somthing for sure....!

ஜெயந்தி சொன்னது…

//Mrs.Menagasathia said...
நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்,நன்றி எல்கே!//
:)

எல் கே சொன்னது…

@ஆனந்தி

நன்றிங்க

@மைதிலி
:))

@பத்மநாபன்

நன்றி சார்

@தேவா
நன்றி பாஸ்.

@ஜெயந்தி

:))