Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சிரிக்க மட்டும் III

இன்னிக்கு அரசியல்ல ஒரு அடைமொழி இல்லாதவங்களே இல்லை . அதாவது பெயருக்கு முன்னாடி சிங்கம், புலி, யானை அடச்சீ தானைத் தலைவர் இப்படி எதாவது ஒண்ணு வ...

இன்னிக்கு அரசியல்ல ஒரு அடைமொழி இல்லாதவங்களே இல்லை . அதாவது பெயருக்கு முன்னாடி சிங்கம், புலி, யானை அடச்சீ தானைத் தலைவர் இப்படி எதாவது ஒண்ணு வச்சிருப்பாங்க. இப்ப நம்ம பதிவுலகம் கூட கிட்டத்தட்ட அரசியல் மாதிரி ஆகிடுச்சி. அதனால நம்ம பதிவர்கள் ஒரு சிலருக்கு இந்த மாதிரி ஒரு பெயர் வச்சா என்னனு யோசிச்சேன். அதன் விளைவே இந்த பெயர் சூட்டும் விழா.

மங்குனி அமைச்சர் (நம்ப மங்குனி இல்லீங்க . இது வேற ): மன்னா ..

அரசர் : என்ன ?

ம.அ : இன்றைக்கு பதிவர்கள் சிலருக்கு பெயர் சூட்டும் விழா. நீங்கள் தான், உங்கள் வாயால் பெயர் சூட்ட வேண்டும்.

அரசர்: அப்படியா ? செய்துவிடலாமே .. எங்கே ஒவ்வொருவராக சொல் பார்ப்போம்

ம.அ : முதலில் அனந்யா மகாதேவன் . இவர் பல பிரபல பதிவுகளை எழுதி உள்ளார். அதில் குறிப்பிடத் தக்கது பன்னீர் சோடா பற்றிய பதிவு.

அரசர் : அப்படியானால் இனி வர " சோடா " அனந்யா என்று அழைக்கப் படுவார்.

ம.அ : அருமை மன்னா. அடுத்து வருவது வாணி. இவர் பல சிறுகதைகளை எழுதி இருந்தாலும் , கெட் டுகெதர் வைத்து பதிவர்களை அழைத்து அசத்தியவர்.

அரசர் :  ஹ்ம்ம். இவர் இனி "கெட் டுகெதர்" வாணி என்றே அழைக்கப் படுவார் .


ம.அ : அந்த பதிவர் விருந்தில், முக்கிய இடம் பெற்றது அப்பாவி தங்கமணியின் இட்லி 


அரசர் : அப்படியா ? அவ்வளவு நன்றாக இருக்குமா அது ?


ம.அ : இல்லை மன்னா. அதை கண்டாலே பதிவர்கள் பல மைல்கள் ஓடிவிடுவார்கள்.


அரசர்:  இனி அப்பாவி தங்கமணி "இட்லி" தங்கமணி என்று அழைக்கபடவேண்டும். 


ம.அ : ஆஹா அருமையான பெயர் மன்னா. அடுத்து தக்குடு பாண்டி . கதை எழுதுகிறேன் என்று பெண்களின் மூக்கை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார் இவர்.


அரசர் : அப்ப இவர் இனி "மூக்கைய" பாண்டி என்றழைக்கப்படட்டும். 


ம.அ : அடுத்து வருபவர் இவர்களுக்கு எல்லாம் தலைமை பதிவர் போன்றவர். அவர் பெயர் கீதா பாட்டி இல்லை இல்லை கீதா மாமி. 


அரசர் : இவர் அருமயான பதிவுகள் இடுபவர் ஆயிற்றே. இவர் "கிர்ர்ர் " கீதா மாமி என்றழைக்கப் படட்டும்.


ம.அ : இவர் சமையல் நிகழ்ச்சிகளை ஒலி பரப்புபவர் . இவர் பெயர் ஜெய்லானி


அரசர் : யார் அந்த சுடுதண்ணி புகழ் ஜெயிலானியா?


ம.அ :: அவரே தான் மன்னா .


அரசர் : அவர் பலருக்கும் விருதுகள் அளித்திருகிறார் எனவே "விருது வள்ளல் " என்றழைக்கப் படட்டும். 


ம.அ : அடுத்து வருவது கௌசல்யா. இவர் திருமண வாழ்விற்கு பல நல்ல குறிப்புகளை தந்துள்ளார் .


அரசர்: இவருக்கு "கவுன்சுலிங்" கௌசல்யா என்ற பெயர் சூட்டுகிறேன் .


ம.அ : மன்னா, இவர் பல தொடர்களை எழுத ஆரம்பிப்பார். ஆனால் முடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்ட மாட்டார் . இவர் பெயர் தேவா .


அரசர்: அப்படியானால் "தொடரா " தேவா என்றழைக்கப் படட்டும் .


ம.அ : கடைசியாக இந்த கவிதா கதை என்று பல விசயங்களை எழுதி வரும் கார்த்திக். 


அரசர் : நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த அவருக்கு எதற்கு அடைமொழி ? வேண்டாம் .


டிஸ்கி : கொஞ்ச நாளா கொலை கதை எழுதி போர் அடிக்குது. மாறுதலுக்காக இந்தப் பதிவு. இதை படிச்சிட்டு யாரும் எதிர்வினைலாம் எழுதக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன். 





54 கருத்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Aahaaaa.. ippadi oru vilayaataaa.. naduththunga.. nadaththunga.. :)

Unknown சொன்னது…

எதிர்வினை இல்லாம எப்புடி ...
யாரவது இவருக்கு ஒரு நல்லபேரா வைங்கப்பு ...

நான் வைக்கும் பெயர் - பின்னூட்டப் புயல் .

எல் கே சொன்னது…

@ananthi
எவ்ளோ நாள் கதை எழுதறது.. போர் அடிக்குது அதான்.
நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்

அவ்வ.. அதுக்கு வேற ஒருத்தங்க இருக்காங்க .. நான் இல்ல

Kousalya Raj சொன்னது…

இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லனு நினைக்கிறேன்...! அதுதான் இப்படி !!?

பேர் கொஞ்சம் டிசெண்டா இருந்ததால, போகட்டும்.....!!!

சிரிக்கமட்டும் என்று சொன்னதால்.....:))) ரசித்தேன் !!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கடைசியாக இந்த கவிதா கதை என்று பல விசயங்களை எழுதி வரும் கார்த்திக் //

கதை ஒகே..... இந்த கவிதா யாரு? Mrs LK ப்ளீஸ் investigate ..... ஹி ஹி ஹி.... எங்களையா வம்பிழுக்கற? ஹா ஹா ஹா....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

"சிரிக்க மட்டும்"னு டாபிக் பாத்ததுமே நம்ம இட்லிக்கு சிறப்பு இடம் உண்டுன்னு எதிர்பாத்தேன்.... என்னோட எதிர்பார்ப்பு வீண் போகலை பாஸ்... (வேற எப்படி தான் சமாளிக்கறது...ஹும்...)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாணி.... அனன்யா... கீதா மாமி... தக்குடு.... யாரும் தப்பலையா... அப்ப சரி.... (கூட்டதோட கோவிந்தா போட்டே பழக்கமாகி போச்சே... ஹி ஹி ஹி)

ஜெய்லானி சொன்னது…

//அரசர் : யார் அந்த சுடுதண்ணி புகழ் ஜெயிலானியா? //

ஹா...ஹா..ஹி..ஹி..

சுடுதண்ணி புகழ் ..க்கி..க்கி..


//விருது வள்ளல் //

இது கொஞ்சம் ஓவரா இருக்கே!!!

dheva சொன்னது…

பாஸ்...... நல்லா இருக்கு உங்க.....வீர அடைமொழி விளையாட்டு.....

எல்லா சேட்டிலைட் தொலைக்காட்சிகளும் தொடர் நாடகங்கள் போடுறாங்களா... அதனால மக்களின் நாடித்துடிப்புக்கு ஏத்த மாதிரி நாமும் தொடரும்னு போடுறோம்.....(தொடர் நாடகத்துக்கு கதை எழுதலாமோ......ஹா...ஹா....ஹா)

என்னவோ போங்க.... அரசியல்வாதி ரேஞ்சுக்கு அடைமொழி கொடுத்ததால்....உங்களுக்கு ஒரு வீர அடைமொழி கொடுக்குறேன்....அது வந்து....


(தொடரும்.....அடுத்த பின்னூட்டத்திலே சொல்றேங்க.......)


தப்பிச்சு ஓடிடுடா...கைப்புள்ள......பின்னூட்டத்திலேயே தொடரும் போடதால லாரில ஆள ஏத்திட்டு தொரத்திகிட்டு வாரய்ங்கே........


கலக்கல் கற்பனை கார்த்தி..... நீங்க .. நடத்துங்க..பாஸ்!

dheva சொன்னது…

கே.ஆர்.பி. செந்தில்....." பின்னூட்ட புயல்" நான் வழிமொழிகிறேன்.....!

பின்னூட்ட புயல் கார்த்திக் (LK)

மக்கள்: வாழ்க....!வாழ்க...!

dheva சொன்னது…

கே.ஆர்.பி. செந்தில்....." பின்னூட்ட புயல்" நான் வழிமொழிகிறேன்.....!

பின்னூட்ட புயல் கார்த்திக் (LK)

மக்கள்: வாழ்க....!வாழ்க...!

Geetha Sambasivam சொன்னது…

கதை ஒகே..... இந்த கவிதா யாரு? Mrs LK ப்ளீஸ் investigate ..... ஹி ஹி ஹி.... எங்களையா வம்பிழுக்கற? ஹா ஹா ஹா...//

வழிமொழிகிறேன். எங்கே உங்க தங்கமணி?? என்னனு பாருங்க வந்து! நறநறநறநற

ஸ்ரீராம். சொன்னது…

இந்த பட்டங்களை எல்லாம் செம்மொழி மாநாடுல வச்சி கொடுக்கப் போறீங்களா?

Mythili சொன்னது…

"PINUUTAPUYAL" I also agree with this title.

செந்தில்குமார் சொன்னது…

அரசவையில்
மக்கள்-1:கடைசியா வந்தவர்க்கு மட்டும் ஏன் எந்த பரிசில் பட்டம் கொடுக்கவில்லை?
மன்னர்: அவர் தான் வேனா வேனா சொல்ராரு
மக்கள்-2: அவர் அப்படித்தான் சொல்வார் அப்ரம் எனக்கு மட்டும் ஏன் இப்படியேல்லாம் நட்க்குதுன்னு தனியா புலம்புவார் அதனால குடுத்துடுங்க அவருக்கும்..
மன்னர்: மாலைத்தென்றல் கார்த்திக் (Lk)
மக்கள்1&2 ஆஹ ஆஹ ஆஹ மன்னா ஆருமை மாலைத்தென்றல் கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்...
lkkkkkkkkkkk......
எப்புடி...

Ananya Mahadevan சொன்னது…

//கே.ஆர்.பி. செந்தில்....." பின்னூட்ட புயல்" நான் வழிமொழிகிறேன்..பின்னூட்ட புயல் கார்த்திக் (LK)// அருமையான டைட்டில். டாஷ்போர்டில் புதிய போஸ்டு வந்தவுடன் ஒரே கவ்வாக கவ்வி படித்து(ஆமாங்க நம்புங்க படிப்பான்)எல்லாருக்கும் முன்னாடி பின்னூட்டம் போட்டுவிடும் எல்.கேக்கு அருமையான பொருத்தமான பட்டப்பெயர்.
-இங்கனம்
பன்னீர் ஜோடா அநன்யா

எல் கே சொன்னது…

@கௌசல்யா

நேரம் நல்லா இருக்கு அதான் இந்தப் பட்டம் .. இல்லாட்டி....

எல் கே சொன்னது…

@அடப்பாவி அக்கா
ஒரு சின்ன மிஸ்டேக் அதுக்கு இப்படியா

எல் கே சொன்னது…

@ஜெய்
:))))

@தேவா

நன்றி பாஸ். உங்களுக்கு கொடுத்த பட்டம் சரிதான்னு நிரூபிகறீங்க

எல் கே சொன்னது…

@தேவா

யாருங்க அது ??

@கீதா மாமி
:P

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

நீங்க இவ்ளோ அப்பாவியா ??

@செந்தில்

பட்டத்திற்கு நன்றி

@மைதிலி
ஹ்ம்ம் .அடுத்து உனக்குதான் பட்டம்

@ஆனந்ஸ்
நன்றி

தக்குடு சொன்னது…

:)) irukkattum! irukkattum!!

சௌந்தர் சொன்னது…

@தேவா ரேஞ்சுக்கு அடைமொழி கொடுத்ததால்....உங்களுக்கு ஒரு வீர அடைமொழி கொடுக்குறேன்....அது வந்து....

இதை நான் வழிமொழிகிறேன்...

சௌந்தர் சொன்னது…

பின்னூட்ட பறக்கும் புயல் கார்த்திக் (LK)

மக்கள்: வாழ்க....!வாழ்க

Harini Nagarajan சொன்னது…

//கடைசியாக இந்த கவிதா கதை என்று பல விசயங்களை எழுதி வரும் கார்த்திக். // kavithaa kathai a?? yaar antha kavithaa?? mannikku theriyuma?? :P adai mozhi ellaam nalla thaan irukku aana naan thaan ungalukku yerkanave oru patta peru kuduthutene! :P

Pepe444 சொன்னது…

GREAT BLOG MY FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

சிரிச்சாச்சு :)
பின்னூட்டப்புயலாமே நீங்க :)

எல் கே சொன்னது…

@தக்குடு

:)))

@சௌந்தர்

அவ்வ எங்க இப்படி நான் பாவம்

எல் கே சொன்னது…

@Pepe444 said...

avv unga blog enna language????


@harini

athan paaru ivangaluku theriyala ithuu

எல் கே சொன்னது…

@அம்மிணி

மக்கள் சொல்றாங்க. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு இல்லையா
ஆணி ஜாஸ்தியா.. அதிகம் பார்க்க முடியல

ஜெயந்தி சொன்னது…

உங்களுக்கு நானும் ஒரு அடைமொழி தர்றேன். மர்மக்கதை மன்னன்.

ஹேமா சொன்னது…

வாழ்த்துக் கொடுத்த "பாவம் கடி கார்த்திக்"குக்கும் வாங்கிக்கொண்ட அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

பின்னூட்டப்புயல் *ஜெகா* இருக்கார்.அதான் இப்பிடிப் பேர் குடுத்திருக்கு.இது LK க்கு பொருத்தமாயிருக்கான்னு
யாராச்சும் சொல்லுங்க !

எல் கே சொன்னது…

@ஜெயந்தி

//உங்களுக்கு நானும் ஒரு அடைமொழி தர்றேன். மர்மக்கதை //

ஒரு கதைதான் எழுதி இருக்கேன் ... நன்றி

@ஹேமா

என் இப்படி முதல் முறையே என் இப்படி கொலை வெறி
வருகைக்கு நன்றி

Menaga Sathia சொன்னது…

//கே.ஆர்.பி. செந்தில்....." பின்னூட்ட புயல்" நான் வழிமொழிகிறேன்.....!// repeat...

egglesscooking சொன்னது…

Thakkuduku Mookaiya paandi ku badhila "mokka paandi" nu vakkalam nu enakku thonave illa.

vanathy சொன்னது…

எல்கே, நல்லா சிரிச்சேன். " இட்லி " தங்கமணி ஹாஹா... ஐயோ சிரிப்பு தாங்கலை. எனக்கு தங்கிலீஸ் இல் பெயர் வைத்திருப்பதால் ஸ்டைலா இருக்கு.
ஜெய்யின் பெயரும் சூப்பர்.

பெயர் சூட்டியமைக்கு நன்றி, " பின்னூட்ட சூறாவளி " எல்கே

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றிங்க

@மதுரம்

ஹஹஅஹா சூப்பர்

எல் கே சொன்னது…

@வாணி

நன்றிங்க .. எல்லோரும் சிரிச்சி மகிழ்சிய இருந்த நமக்கு சந்தோசம்தான்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

rotfl! appavi thangamani -> idli maami nu already vechache! :)

பத்மநாபன் சொன்னது…

அடைமொழிகள் அமர்க்களம்..அதிலும் பின்னுட்ட புயல் அருமை..எங்கெங்கு காணினும் எல்.கே.இந்த தமிழ் ப்ளாக் உலகத்தில்...

அஷீதா சொன்னது…

வாழ்த்துக்கள்...

அஷீதா சொன்னது…

:) நடத்துங்க.

அடுத்த பதிவுல என்னொட பெயர் வருமா? ;)

தெய்வசுகந்தி சொன்னது…

" பின்னூட்டப்புயல்" நானும் வழிமொழிகிறேன்.

GEETHA ACHAL சொன்னது…

எல்லொருக்கும் அருமையான அடைமொழி...சூப்பர்ப்.....நல்ல வேளை என்னை இதுல இழுக்கல....

எல் கே சொன்னது…

@கேடி

இட்லி மாமியவிட இட்லி தங்கமணி நல்லா இருக்கு

@பத்மநாபன்

நீங்களுமா ???

எல் கே சொன்னது…

@அஷீதா
உங்ககிட்ட அதிகம் பழக்கம் இல்லை.. அடுத்த ரௌன்ட்ல பார்த்துக்கறேன். முதல் வரவுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@சுகந்தி
இதெல்லாம் சரியில்ல, அப்புறமா உங்க வீட்டுக்கு (blog) வந்து என்ன பண்ணறேன்னு பாருங்க

எல் கே சொன்னது…

@கீதா

நீங்க எப்படி மிஸ் ஆனீங்க.. சரி அடுத்த முறை இதுல பேர் இல்லாதவங்க எல்லாம் வருவாங்க

SathyaSridhar சொன்னது…

Haa Haaa Haaa,,,nalla pathivu nga enaku en college gyabagam varuthu...

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லவேளை எனக்குப் பட்டம் இல்ல!! விருதுகளையும், பட்டங்களையும் வாரிவாரி வழங்குனதுனால, ஏன் “வள்ளல் கார்த்திக்”னு பட்டம் கொடுக்கலாமே??

எல் கே சொன்னது…

நன்றி சத்யா


@ஹுசைனம்மா

உங்களுக்கும் ஒரு பெயர் இருக்கு. அடுத்த முறை சொல்றேன்

குந்தவை சொன்னது…

கலாட்டாவை ரசித்தேன் கார்த்திக். பெயர்களும் பொருத்தமா இருக்கு.

எல் கே சொன்னது…

நன்றி குந்தவை