ஜூன் 05, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் III


"அய்யா ஒரு நிமிஷம் இதைப் பாருங்க "

ஏட்டின் குரல் கேட்டு திரும்பிய வேலன் , அவன் காண்பித்த பொருளை கவனமாகப் பார்த்தான்.

"சரி. இதை கவனமா எடுத்து வச்சிகோங்க. இந்த கேஸ்க்கு யூசாகும். "

"சரிங்க அய்யா".

"நீ சொல்லுயா. அந்த பொண்ணு போனப்ப அவர் வெளில வந்தாரா.??"

"இல்லீங்க அய்யா நான் சரியா பார்க்கலை. "

"சரி விடு. எப்பவும் இந்த மாதிரி பொண்ணுங்க வருவாங்களா ?"

வாட்ச்மேன் தெய்வ நாயகத்தை  பார்க்க , வேலன்,

"இங்க பதில் சொல்லுயா "

"ஆமாங்க . எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது பொண்ணுங்க வருவாங்க."

"இது உங்க பெரிய அய்யாவக்கு  தெரியுமா ?"

"இல்லீங்க. இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தெரியாது ."

"யோவ் ஏட்டு , எல்லா விசயத்தையும் முடிச்சிட்டு ஸ்டேசனுக்கு வந்து சேரு. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்தப்புறம் சொல்லு "

"சார்கிட்ட ஒரு ஸ்டேட்மென்ட்  எழுதி கையெழுத்து வாங்கிட்டு வந்திரு,. அதை இங்க கொண்டா. 

வெளியில் வந்த வேலன், தான் அலைபேசியில் யாரையோ அழைத்தார் .

"கொஞ்சம் அவசரமான வேலை. உடனடியா வர முடியுமா?"

"அரை மணி நேரத்துல நம்ம வழக்கமான இடத்தில் சந்திப்போம் "

"ஓகே "
                                        **************************

"இதை பாரு . இதைப் பத்தி உன் கருத்து என்ன ??"

"இது உங்களுக்கு எங்க கிடைச்சது வேலன் ? " , ப்ரியா வேலனின் தோழி. போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் மறுவாழ்வு மையம் நடத்தி கொண்டு இருப்பவள்.

"இன்னிக்கு ஒரு தற்கொலை பத்தி விசாரிக்க போன இடத்துல இது இருந்தது. இது அங்க வர வேண்டிய அவசியம் என்ன ? "

"என்ன வேலன் ? இது ரொம்ப சிம்பிள்.  அவன் போதை மருந்து உபயோகிக்கறவனா இருக்கலாம். "

"சரி . எதுக்கும் இதை செக் பண்ண லேப்க்கு அனுப்பறேன், அப்ப தெரியும் ".

"அதுவும் சரிதான் வேலன். இதுல உனக்கு எதாவது சந்தேகம் இருக்கா ?"

"ஆமாம் ப்ரியா. ஒரு இடத்துல மட்டும் தான் கணக்கு இடிக்குது, தற்கொலை பண்ணிக்கப் போறவன் எதுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வரணும்.??

"ஹ்ம்ம். சரியான சந்தேகம்தான். . "

"சரி வேலன் நான் கிளம்பறேன் . அப்புறம் எதாவதுனா கால் பண்ணுங்க"

                                           ***************************
"அய்யா நீங்க இல்லாதப்ப ஒரு போன் கால் வந்துச்சி "

"என்ன விசயமா?"

"அந்த பாஸ்கர் செத்தது தற்கொலை இல்லை . கொலைன்னு "

"என்னது? அந்த நம்பர கண்டுபிடிச்சீங்களா??

"அது இந்த ஒரு ரூபா போட்டு பேசற போது தொலைபேசிங்க"

"பேசினது ஆம்பளையா பொண்ணா ?"

"ஆம்பளைதாங்க"

"என்ன வயசு இருக்கும் ? எதாவது கணிக்க முடிஞ்சதா ??"

"நடுத்தர வயசு இருக்கணும் ".

"சரி. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எப்ப வருமாம்?"

"மதியம் தரோம்னு சொல்லிருக்காங்க "

"சரி. அப்படியே இதை லேப்க்கு அனுப்பி செக் பண்ண சொல்லிடு "


"அய்யா, நான் கேள்வி பட்ட இன்னொரு விஷயம் ...."

"எதுக்குயா இழுக்கற ? சொல்லு "

- பரிசு தொடரும் 

21 கருத்துகள்:

Harini Sree சொன்னது…

naan thaan first! takku takkunu scene maararathu nalla irukku! :)

Ananthi சொன்னது…

Nice interesting aa poguthu..hmm

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கதையை உரையாடல்களாக நகர்த்தியிருக்கும் விதம் அருமை..
ஒரு ஆவலை உள்ளுக்குள் வைக்கிறீர்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல நடை. விறுவிறுப்பாக போகிறது.. தொடருங்கள்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

acariyapada vaikiringa thatha, arumaiya pokuthu story!

SathyaSridhar சொன்னது…

Hmm,,thriller suspense kadhai nalla poittu irukku,,avar enna solla varaaru seekram sollunga neenga..

Kousalya சொன்னது…

அருமையாக போய்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

அநியாயத்துக்கு suspense ஏறிகிட்டே போகுதே... என்ன தான் ஆகும்னு புரியலியே? (எனக்கு ஒரு சந்தேகம் அது இப்படி வாய்ஸ் வெச்சு வயசை கண்டு பிடிக்க முடியும்,...அதை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி தரலாமே.... ஹி ஹி ஹி)

sandhya சொன்னது…

நல்ல விருவிருப்பா போகுது கதை ஆனாலும் ரொம்ப கொஞ்சமா எழுதறியே நியாயமா ..

ஜெய்லானி சொன்னது…

அருமையா இருக்கு..!!

ஸ்ரீராம். சொன்னது…

"அய்யா ஒரு நிமிஷம் இதைப் பாருங்க "
ஏட்டின் குரல் கேட்டு திரும்பிய வேலன் , அவன் காண்பித்த பொருளை கவனமாகப் பார்த்தான்//

"சரி. அப்படியே இதை லேப்க்கு அனுப்பி செக் பண்ண சொல்லிடு //

அது என்னான்னு சொன்னா நாங்களும் சேர்ந்து துப்பை துலக்குவோம் இல்லே...!

பத்மநாபன் சொன்னது…

//"எதுக்குயா இழுக்கற ? சொல்லு // பரபரப்பு எங்களுக்கும் தொத்தி விட்டது

dheva சொன்னது…

கார்திக்.... உண்மையிலேயே ஆச்சர்யபடவேண்டிய விசயம் ..கொஞ்சம் கூட தொய்வு இல்லாம விறு விறுப்பா கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் திறம் தான்....! கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் அடுத்து என்ன? என்ற ஆவலே மிஞ்சி நிற்கிறது...


சூப்பர் திரில்லார்...பாஸ்! வாழ்த்துக்கள்!

Mrs.Menagasathia சொன்னது…

mm suspenseaa irukku...keep going...

LK சொன்னது…

@ஹரிணி
இந்த வடை உனக்கே ... நன்றி

@ஆனந்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@செந்தில்

நன்றி நண்பரே..

@சாரல்

நன்றி. மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்

@கீதா பாட்டி
ரொம்ப சந்தோசமா இருக்கு பாட்டி

LK சொன்னது…

@சத்யா
பொறுங்க . அவசரபட்டா எப்படி

@ கௌசல்யா

:)))

@அடப்பாவி அக்கா
ஒரு குரலை வச்சு ஓரளவு கணிக்க முடியும். எப்பயோ புக்ல படிச்சிருக்கேன்

LK சொன்னது…

@ஜெய்

நன்றி

@ஸ்ரீராம்

அதெப்படி சொல்லிட்ட...

@பத்மநாபன்

நன்றிங்க..

LK சொன்னது…

@தேவா

பாஸ். உங்க எல்லாரோட பாராட்டும் சந்தோசமா இருக்கு. இதே நடையோட கதையே எழுதனும்னு பொறுப்பு கூடுது

@மேனகா
நன்றி மேடம்

Riyas சொன்னது…

நல்லாயிருக்கு சார்,,,

vanathy சொன்னது…

எல்கே, நல்ல விறு விறுப்பாக போகுது கதை.