ஜூன் 29, 2010

காஞ்சி - II

நாங்கள் கிளம்பும் சமயம் ஒரு முதியவர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு ஒரு அறுபது வயதை தாண்டியவர் போல் தென்பட்டார். நெற்றி நிறைய திருநீறும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து பார்பவர்கள் வணங்கும் வண்ணம் இருந்தார்.

நான் அருகில் சென்றவுடன், என் குழந்தையை அழைத்து வரசொன்னார். திவ்யா வந்தவுடன் அவள் கையில், ஸ்ரீலட்சுமி உருவமும் தாமரையும் பொறித்த ஒரு சிறு தங்கக் காசை கொடுத்து ஆசிர்வதித்தார். எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை (எங்களுக்கும்தான்)  அளித்தது.

ஒரு வழியாக  சென்னைக்கு கிளம்ப பேருந்து நிலையம் வந்தோம்.அப்ப மணி இரண்டை தாண்டி விட்டது. எனவே எல்லோரும் பழச்சாறு குடித்துவிட்டு , சென்னை சென்று உணவருந்த முடிவு செய்தோம். சென்னையும் வந்து சேர்ந்தோம்.எப்பொழுதும் காஞ்சி சென்று திரும்பும்பொழுது மிகக் கடினமாக இருக்கும். பேருந்து கிடைப்பதில் தாமதம்
ஆகும். அன்று எல்லாம் நல்லபடியாக ஆனதே என்று நினைத்தோம்.

 ஒரு நான்கரை மணி அளவில். கோயம்பேட்டில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து நூறடி ரோட்டில் SRM university அருகே இறங்கவும், கனமழை துவங்கவும் சரியாக இருந்தது.வீட்டருகே வந்தும், வீட்டிற்க்கு செல்ல இயலாமல் மாட்டிக் கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், அங்கிருந்த பள்ளி ஒன்றில் நின்று கொண்டிருந்தோம் . இதில் வேறு, அந்த பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் தீடிர் என்று மத்தாப்பு மழை பொழிந்தது. ஒரு பயத்துடனே அங்கு நின்று கொண்டிருந்தோம்.

ஆறு மணி அளவில் மழை நின்றவுடன் ,முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து வீடு திரும்பினோம். மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் விரைவில் சந்திக்கிறேன்

 With Love LK

39 கருத்துகள்:

Kousalya சொன்னது…

முந்தைய பதிவும் இப்போதுதான் படித்தேன், நிறைவாக இருக்கிறது. உங்களுடன் நானும் பயணித்ததுபோல் ஒரு உணர்வு வருகிறது....! அருமை!!

தக்குடுபாண்டி சொன்னது…

sooooooo nice...:)

asiya omar சொன்னது…

நல்ல அனுபவம்.மகளுக்கு அதிர்ஷ்டம்.

குந்தவை சொன்னது…

பெரியவங்க ஆசிர்வாதம் கிடச்சது மனசுக்கே ஒரு நிறைவான சந்தோஷத்தை கொடுத்திருக்கும். எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

Vidhoosh(விதூஷ்) சொன்னது…

அருமையான பகிர்வு.

மழைல நல்லா மாட்டிக் கொண்டீங்க போலருக்கு. :(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. இவ்வளவு சீக்கிரம் பயணம் முடிந்து விட்டதே என்ற எண்ணமும் வந்தது....

சௌந்தர் சொன்னது…

நல்ல அனுபவம்.
இதில் வேறு, அந்த பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் தீடிர் என்று மத்தாப்பு மழை பொழிந்தது//
நல்ல வேலை உங்களுக்கு ஒன்னும் ஆகலை

Gayathri சொன்னது…

ரொம்பவே அருமயா இருக்கு..

Gayathri சொன்னது…

அவார்டு குடுக்கனும்னா எப்படி குடுக்கனும் ?? நான் பதிவுலகத்துக்கு புதுசு..

LK சொன்னது…

@கௌசல்யா
வருகைக்கும் கருத்துக்கும் :))

LK சொன்னது…

@தக்குடு
:))

@ஆசியா
ஆமாம் . நன்றிங்க..

LK சொன்னது…

@குந்தவை
உண்மைதான். நன்றிங்க

@விதூஷ்
ஆமாங்க. நல்லா மாட்டிகிட்டோம்

LK சொன்னது…

@வெங்கட்
விரைவில் பெரிய கட்டுரை வருமாறு ஒரு பயணம் அமையணும்னு வேண்டிகோங்க

@சௌந்தர்
நன்றி தம்பி

LK சொன்னது…

@காயத்ரி
நன்றி. ஒரு அவார்ட் நீங்க டிசைன் பண்ணனும், அப்புறம் அதை யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் தரலாம்
இதை பாருங்கள்
http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html

dheva சொன்னது…

எங்களையும் காஞ்சிபுரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்ப வந்து மழையில நனைய வச்சிட்டீங்க பாஸ்.....!

நல்ல அனுபவப் பகிர்வு....!

பெயரில்லா சொன்னது…

நல்ல பயண அனுபவம் ..திவ்யா குட்டிக்கு தங்ககாசு கொடுத்த பெரியவர் யார் ?

Gayathri சொன்னது…

awards ready but how to give ??

LK சொன்னது…

@காயத்ரி
முதலில் ஒரு பதிவு போடுங்கள், யார் யாருக்கு கொடுக்கப் போகிறீர்களோ அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் பதிவிற்கான லிங்குடன் போடுங்கள். பின் அவர்களின் பதிவில் சென்று அந்த விருது கொடுத்து இருக்கும் பதிவின் லிங்க் கொடுத்து வந்து பெற்றுக் கொள்ளுமாறு பின்னூட்டம் இடுங்கள் .

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பகிர்வு!! மகள் அதிர்ஷ்டசாலிதான்...

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாவ்... லக்கி திவ்யா குட்டி. மழையும் கூட வருணரின் ஆசீர்வாதம்னே எடுத்துக்கலாம்... நல்ல பயண அனுபவ பகிர்வு

Software Engineer சொன்னது…

நல்ல திருப்பத்தில் நிறுத்தி விட்டீர்கள்! அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பயண அனுபவம்...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

கடைசில எங்க சாப்பிட்டீங்க என்ன சாப்பிட்டீங்க.. அதை சொல்லாம என்ன வெங்காயம் பதிவுங்கறேன்?

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல அனுபவம்!!!!!!

Harini Sree சொன்னது…

அடடே காசு கொடுத்தது பத்தி என் கிட்ட இருந்து கூட மரச்சுட்டேளே! மிக அருமையான பயணம்.

Mitr Friend - Bhushavali சொன்னது…

Rain rain go away.
Come again another day!!!

Choolanur Peafowl Sanctuary
Office Style - 12

GEETHA ACHAL சொன்னது…

குழந்தை மிகவும் அதிர்ட்ஷ்சாலி தான்...மிகவும் சந்தோசம் தான்....SRM University யிற்கு பக்கத்தில் எங்கு இருக்கின்றிங்க...நான் SRM University தான் MCA Dept.யில் 2 வருடம் Lecturerஆக வேலை பார்த்தேன்...எங்க வீடும் பெருங்களத்தூரில் தான் இருக்கின்றோம்...

ஹேமா சொன்னது…

உங்களோடு சேர்த்துப் பயணிக்க வைத்தீர்கள் கார்த்திக்.ந‌ன்றி.

LK சொன்னது…

@தேவா
நன்றி

@மேனகா
ஆமாம்

LK சொன்னது…

@அப்பாவி
அப்படியும் சொல்லலாம். நன்றி

@software engineer
பாஸ் அவ்ளோதான் முடிஞ்சு போச்சு

LK சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றி

@கேடி
வீட்ல வந்து காபி குடிச்சோம் .

LK சொன்னது…

@ஹரிணி
மறந்து போச்சு . நன்றி

@தெய்வ சுகந்தி

நன்றி

LK சொன்னது…

@பூஸா
நன்றி

@கீதா அச்சில்
நான் சொல்றது நூறடி ரோடில் இருக்கும் சிட்டி காம்பஸ்

LK சொன்னது…

@ஹேமா
நன்றிங்க

Ananthi சொன்னது…

குழந்தையை பெரியவர் ஆசீர்வதித்தது குறித்து மகிழ்ச்சி..!!

Nice trip experience.. thanks for sharing..!

LK சொன்னது…

@ஆனந்தி
நன்றிங்க

ஜெய்லானி சொன்னது…

நல்ல அனுபவம்

Mythili சொன்னது…

Very nice experience, antha periyava aservadham Divya-ku eppavum kidaikavendum.

அமைதிச்சாரல் சொன்னது…

எதிர்பாராவிதமா கிடைச்ச ஆசிர்வாதம், அதிர்ஷ்டம். ரொம்ப நிறைவா இருக்கு.