ஜூன் 22, 2010

கால் சென்டர் II

கால் சென்டரில் வேலை கிடைத்த உடன், நீங்கள் அத்துறைக்கு புதியவராக இருப்பின் குறைந்த பட்சம், இரண்டு மாதங்கள் பயிற்சி இருக்கும். முதலில் ஆங்கில பயிற்சி. ஏற்கனவே ஆங்கிலம் தெரியுமே எனக்கு எதுக்கு பயிற்சி என்று கேட்பவர்களுக்கு, இது முழுக்க முழுக்க நீங்க எந்த நாட்டு மக்களுக்கு உதவி புரிய உள்ளீர்களோ அந்த நாட்டு ஆங்கிலத்திற்கான பயிற்சி.


 அடிப்படை ஆங்கிலம், பிறகு அங்கு பேசப் படும் ஆங்கிலம், அவர்களின் பொதுவான உரையாடல் தன்மை போன்றவை அதிக அளவில் சொல்லித் தரப்படும். இதுமட்டும் இல்லாது, அந்த நாட்டின் கலாசாரம், எந்த மாதிரி வார்த்தைகளை நீங்க உபயோகிக்கக் கூடாது போன்றவையும் சொல்லித் தரப்படும். இந்தப் பயிற்சியின் இறுதியில் ஒரு தேர்வு இருக்கும். உங்களை ஒரு அறைக்கு அனுப்பி விடுவார்கள், அங்கு ஒரு தொலைபேசி இருக்கும், நீங்கள் உள்ளே சென்றவுடன் அதில் அழைப்பு வரும். உங்களுக்கு பயிற்சி கொடுத்தவரே பேசுவர் . நீங்கள் அப்பொழுது நன்றாக தெளிவாக பேசவேண்டும். அப்பொழுதுதான் இதை தாண்டி அடுத்தகட்ட பயிற்சிக்கு செல்ல முடியும். (இங்க பிட் , காப்பி அடிக்க வாய்ப்பே இல்லை ). இந்த கட்டத்தில் ஒரு சிலர் கழட்டி விடப் படுவர்.


அடுத்த கட்டம், நீங்க எதற்கு சேவை அளிக்கப் போகிறீர்களோ அதை பற்றிய பயிற்சி, அதாவது, கணிப்பொறி ,மென்பொருள் இப்படி எதற்கு சேவையோ அது சம்பந்தப் பட்ட பயிற்சி இருக்கும்.  இது முடிந்தப் பிறகு மறுபடியும் ஒரு தேர்வு இருக்கும். (இங்க காப்பி அடிக்க முடியும் ). இங்கும் சிலர் வடிகட்டப் படுவர்.


இதற்கு அடுத்த கட்டம்தான் நீங்கள் அழைப்புகளை பேசும் சமயம். இரண்டு கட்டப் பயிற்சி முடிந்து வந்தாலும், அடுத்ததாக ஒரு பயிற்சி இருக்கும். ஏற்கனவே அங்கு வேலை செய்பவர்கள் அருகில் அமர சொல்லி, அவர்கள் பேசுவதை கவனிக்க சொல்லுவர். உங்களுக்கும் ஒரு ஹெட் செட் தரப் படும். இது ஒரு இரண்டு அல்லது மூன்று தினம் நடக்கும். அதன்பிறகுதான் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரிடம் பேசத் தொடங்குவீர்கள்.


என்னதான் பயிற்சி இருந்தாலும், முதல் அழைப்பை பேசுகையில் ஒரு வித நடுக்கம் இருக்கும். பல பேருக்கு முதல் கால் மிகபெரிய சவாலாக இருக்கும். நான் பேசிய முதல் வாடிக்கையாளர் இரண்டு நிமிடங்களில் வேறு ஒருவரிடம் பேச வேண்டும் என்று கத்த ஆரம்பித்துவிட்டார். இந்தத் தருணத்தில், நீங்கள் பயப்படுவது சகஜம். நீங்கள் இருக்கும் குழுவில் உதவி புரிவதற்கு என்று ஒருவர் இருப்பார். அவரிடம் நிலையை சொல்லி அவருக்கு அந்த அழைப்பை மாற்றிவிடுங்கள். இந்த நிலை முதல் இரு நாட்களில் சகஜம். இதனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. ஆனால் பலர் இந்த கட்டத்திலேயே பயந்து வெளியேறுகின்றனர்.


இதற்கு முக்கிய காரணமே, கால் சென்டரை பற்றி செவி வழியாக பரப்பப்படும் தவறான தகவல்கள். எந்த ஒரு வேலையும் எளிது அல்ல. பொதுவாக கால் சென்டர் என்பது எளிதான வேலை போல் வெளியில் பரப்பபட்டுள்ளதே இதற்கு காரணம். வேலையில் இருக்கும் எட்டு மணி நேரமும் உங்களுடைய முழு கவனமும் அதில் இருக்க வேண்டும், இல்லையெனில், அதுவே நீங்கள் பணியை இழக்கக் காரணம் ஆகி விடும்.


நீங்கள் செய்யும் சிறு தவறும் கவனிக்கப் படும். நீங்கள் செய்யும் தவறுகளை கவனிக்கவே ஒரு குழு உண்டு. அவர்கள் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீமை சேர்ந்தவர்கள். இவர்கள் வேலையே நீங்கள் செய்யும் தவறை கண்டுபிடிப்பதே. ஒரு சில தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு சில தவறுகள் பேடல் எர்ரர் (Fatalerror ) என்றழைக்கப் படும். அத்தகையத் தவறுகள் செய்தால் உடனடியாக திரும்பவும் பயிற்சிக்கு அனுப்பப் படுவீர்கள்.


டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்

48 கருத்துகள்:

Kousalya சொன்னது…

//நான் பேசிய முதல் வாடிக்கையாளர் இரண்டு நிமிடங்களில் வேறு ஒருவரிடம் பேச வேண்டும் என்று கத்த ஆரம்பித்துவிட்டார்//

நல்ல ஆரம்பம்...! :))

மிகவும் நன்றாக உள்ளது உங்கள் விளக்கம். மிகவும் பயனுள்ள பதிவு.

thodarattum....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே. கால் சென்டர் பற்றிய பலபேருடைய தப்பான அபிப்ராயங்கள் அகல பெரிது உதவும் உங்கள் பதிவு.

ப.செல்வக்குமார் சொன்னது…

varaverkkathakka pathivu.. innum ezhuthunkal...!!

♠புதுவை சிவா♠ சொன்னது…

"முதல் அழைப்பை பேசுகையில் ஒரு வித நடுக்கம் இருக்கும்"

அந்த நடுக்கம் இருக்க கூடாதுன்னு நான் முதல் நாள் வேலைக்கு போகும் முன் தேவாங்கு கையாள மந்திரித்த தாயத்தை கையில கட்டிகினு போனதை மறக்க முடியாது......

:-))

Harini Sree சொன்னது…

migavum arumai! thittu vaangi aarambicha pani nandraaga odugirathunu sollunga! :P

அரவிந்தன் சொன்னது…

அன்பின் கார்த்திக்,

கால் செண்டர் குறித்து ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு நேரம் இருக்கும் படியுங்கள்

http://nattunadappu.blogspot.com/2004/03/blog-post_27.html

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Ananthi சொன்னது…

hmmm.. avanga avanga idaththula irundhu paatha thaan.. puriyum..

nice :)

LK சொன்னது…

@கௌசல்யா

//நல்ல ஆரம்பம்...! :))//

ஆமாம்

LK சொன்னது…

@வெங்கட்
கண்டிப்பாக அதற்க்குத்தான் இந்தப் பதிவு

@செல்வக்குமார்

நன்றி

LK சொன்னது…

@சிவா

நீங்களுமா ??

@ஹரிணி

சரிதான்.. நல்ல கைராசி அவருக்கு

LK சொன்னது…

@அரவிந்தன்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

@ஆனந்தி

சரியா சொன்னீங்க. ககபோ

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பதிவுங்க..இப்போதான் நானும் இதனை பற்றி தெரிந்துக்கொண்டேன்.நன்றி!!

asiya omar சொன்னது…

நானும் கால் செண்டரில் வேலை வாங்குவது ஈசின்னு நினைச்சிருந்தேன்,அம்மாடி இது பெரிய வேலை போல.

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இங்க காப்பி அடிக்க முடியும்//

சொந்த அனுபவமா பாஸ்.....ஹா ஹா ஹா

(Jokes apart - good going.... neatly explained process by process... keep up the good work)

சௌந்தர் சொன்னது…

எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்//

ஆறு வருடம் அனுபவம் தவறு இருக்காது தலைவா..........

LK சொன்னது…

@மேனகா
ரொம்ப நன்றிங்க

LK சொன்னது…

@ஆசியா

இன்னும் இருக்கு, இதுக்கே இப்படினா

LK சொன்னது…

@சௌந்தர்

அப்படி இல்லை. நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்ககூடும்

அருண் பிரசாத் சொன்னது…

நன்றாக செல்கிறது. தொடருங்கள்

பெயரில்லா சொன்னது…

உங்க வேலை நல்ல சுவாரச்சியமான வேலை போல் தெரியறது ...எனக்கு பிடிச்சிருக்கு ..

Software Engineer சொன்னது…

சரளமா, ஒரு நண்பரிடம் பேசுவதுபோல் எழுதிகிறீர்கள்! இரண்டு பதிவும் முன்னோட்டம்தான் என்று நினைக்கிறேன்! மேலும் விரிவடையும் என்று எண்ணுகிறேன்! வாழ்த்துக்கள்!

அநன்யா மஹாதேவன் சொன்னது…

கார்த்திக்,
ஸ்டெப் பை ஸ்டெப் ரொம்ப அருமையா எழுதி இருக்கே!

இந்த மொழித்திறன், செயல்பாட்டு பயிற்சி எல்லாம் முடிஞ்சப்புறம் கால்ஸ் எடுக்கறதுக்கு முன்னாடி இருக்கற பகுதியை ட்ரான்ஸிஷன்னு சொல்வாங்க. சில கம்பெனிகள்ல நெஸ்டிங்னு சொல்றாங்க. இந்த ட்ரான்ஸிஷன் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்கள் ஒரு வாரத்துல லைவ் கால்ஸ் எடுக்க சொல்லிடுவாங்க. ஆனா டெல் மாதிரி ஜெயண்டுகள், ஒரு மாத காலம் ட்ரான்ஸிஷன்ல வெச்சுட்டாங்க. ட்ரான்ஸிஷன்ல சர்ப்ரைஸ் கால்ஸ் எடுக்க சொல்லுவாங்க. அதுக்கு எவால்யூவேஷன் இருக்கும்! எதுக்கு சொல்ல வர்றேன், முதல் மாசம் சம்பளம் வாங்கும் வரை இந்த வேலை நிச்சியம் இல்லை!
என் தம்பி, எஞ்சினியரிங் படிச்சுட்டு, கேம்பஸ்ல கிடைக்காம கொஞ்ச நாள் கால் செண்டர் போனான். அவனுக்கு இதெல்லாம் ரொம்ப அலட்சியம். அப்புறம் ஒரு மாசத்துக்கப்புறம் சொல்றான், அக்கா, ரொம்ப கஷ்டம், எப்படிக்கா நீங்க இத்தனை வருஷம் குப்பை கொட்டினீங்க.. உங்க பொறுமைக்கு என் வணக்கங்கள்ன்னு சொன்னான்.
இண்டர்னேஷனல் கால் செண்டர்களின் வேலை நேரம் மிகவும் கஷ்டமானது. கிரேவ்யார்டு ஷிஃப்டுகளில் உடம்பு பாடாய்ப்படுத்தும். இரவு 1 மணிக்கு ஆரம்பித்து காலை 9 வரை நீடிக்கும் இந்த ஷிஃப்டில் கொடூரமாய் தலை வலிக்கும்! வீடு வந்து சேர மதியம் 12 மணி ஆகும். பயோ க்ளாக் எனப்படும் உடல் கடியாரம் கன்னா பின்னா என்று இம்சை பண்ணும். மிகவும் சிரமத்துக்கு இடையில் செய்யும் வேலை என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

தெய்வசுகந்தி சொன்னது…

Good going............

ஹேமா சொன்னது…

கார்த்திக் இப்போதான் இரண்டு பதிவுகளும் வாசித்தேன்.
ஒரு கதை கேட்பதுபோல இருக்கு.
அனுபவங்கள் புதுமைதான்.

Chitra சொன்னது…

பொதுவாக கால் சென்டர் என்பது எளிதான வேலை போல் வெளியில் பரப்பபட்டுள்ளதே இதற்கு காரணம். வேலையில் இருக்கும் எட்டு மணி நேரமும் உங்களுடைய முழு கவனமும் அதில் இருக்க வேண்டும், இல்லையெனில், அதுவே நீங்கள் பணியை இழக்கக் காரணம் ஆகி விடும்.

.....ha,ha,ha,ha,ha,ha.... Then, how do you manage your blog, commenting on other blogs (mostly being the first one), facebooking, chatting...... You contradict yourself, friend..... ha,ha,ha,ha,ha....

LK சொன்னது…

//
.....ha,ha,ha,ha,ha,ha.... Then, how do you manage your blog, commenting on other blogs (mostly being the first one), facebooking, chatting...... You contradict yourself, friend.....//

citra i am talking about in international call center and i am not international call center anymore. i am in domestic segement moreover i am not the l1 agent who takes calls

LK சொன்னது…

@அருண்

நன்றி

@சந்த்யா

அப்ப வாங்க எனக்கு இங்க ஒரு ஆள் குறையுது

LK சொன்னது…

@Software Engineer said...

நன்றி நண்பரே


@அனன்ஸ்

இத இததான் எதிர்பார்த்தேன் உன்கிட்ட.. இதை வச்சே ஒரு பதிவு போடலாம்

ஸ்ரீராம். சொன்னது…

பதிவும், அநன்யாவின் பின்னூட்டமும் ரொம்ப உபயோகம்...தெரிந்து கொள்ள உதவின..

LK சொன்னது…

@hema

nandri thanks for reading

LK சொன்னது…

@dheivasuganthi

nandri

LK சொன்னது…

@sreeram

nandri

தக்குடுபாண்டி சொன்னது…

intha workukku nadulla daily 2 post apparam 60-65 comments in other blogsla pootundu vellaiyaiyum neenga paakkareelnaa unmailaiyee periyaaaaaa vishayamthaan LK!...:P

Endrum vambudan,
Thakkudu

ஜெய்லானி சொன்னது…

பாஸ் எந்த வேலையும் ஈஸி இல்லை. கஷ்டம்தான் . அது செய்பவரின் திறமையை பொருத்து பாக்குறவங்களின் கண்னுக்கு ஈஸியா தெரியும்.

அதுக்கு பேருதான் எக்ஸ்பீரியன்ஸ்..

நல்ல பதிவு தொடருங்கள்...தொடர்கிறோம்...

Jaleela Kamal சொன்னது…

நெஜமாவே நீங்கள் எழுதிய பிறகு தான் கால் செண்டர் பணி பற்றியே அறிந்து கொண்டேன்

புரியாத ஒரு புதிய தகவல் பற்றி இடுகை இட்டமைக்கு.நன்றி எல்.கே.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

thodar mannan agitinga boss.. :-)

அமைதிச்சாரல் சொன்னது…

என் கஸின் ஒருத்தன் பெங்களூரில் வேலை பார்த்தான். அதனால ஓரளவு தெரியும். ஆனா.. உங்க இடுகையில் நிறைய தெரிஞ்சுக்க முடியுது. இன்னும் விரிவாக பகிர்ந்து கொள்ளுஙகள். நெறைய பேருக்கு உபயோகப்படும்.

குந்தவை சொன்னது…

கண்டிப்பா எனக்கு இது கஷ்டமான வேலைதான்... சீரியஸா பேசிக்கிட்டே இருப்பதை என்னால் கற்ப்பனை கூட பண்ணி பார்க்கமுடியவில்லை.

geetha santhanam சொன்னது…

கால் செண்டர் பணி பற்றி விவரமாக எழுதியிருக்கிறீர்கள். மேலும் படிக்க ஆவலாய் இருக்கிறது.--கீதா

ஹுஸைனம்மா சொன்னது…

கால் சென்டர் வேலை குறித்து விவரமா எழுதிருக்கீங்க.

கால் செண்டர்களின் அசாதாரணமான வேலை நேரம் குறித்தும், அதன் பாதிப்புகள், வேலைப் பளு மற்றும் உள்ள இன்னபிற சிரமங்கள் குறித்தும், அதை மறக்க வைக்கும் பணியின் நன்மைகள் (like salary structure)குறித்தும் எழுதுங்கள்.

அங்கு வேலை செய்பவர்கள்மீது பரவலாகச் சொல்லப்படும் சில குற்றச்சாட்டுகள் குறித்தும் ஒரு இடுகை எழுதினால் உங்கள் தரப்பும் புரியுமே! (தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்).

Chitra சொன்னது…

/////citra i am talking about in international call center and i am not international call center anymore. i am in domestic segement moreover i am not the l1 agent who takes calls/////


..... OH! I was just kidding!

LK சொன்னது…

@ஜலீலா

நன்றிங்க

@தக்குடு
உனக்கு விளக்கம் பின்னால் அளிக்கப் படும்

@கேடி
:))

LK சொன்னது…

@ஜெய்
சரியா சொன்னீங்க

@ சாரல்

நன்றி .

@குந்தவை
பேசுவது எளிதல்ல

LK சொன்னது…

@ஹுசைனம்மா

கண்டிப்பா எழுதறேன். வரவுக்கு நன்றி

@சித்ரா

:))

malar சொன்னது…

கால் சென்டர் வேலை என்றதும் வரும் போன் களுக்கு பதில் சொல்லனும் என்று தான் நினைத்தேன் ..இது சரிபட்டு வராது வேலையை வேண்டாம்னு சொல்லிற வேண்டியது தான் ....

கீதா சாம்பசிவம் சொன்னது…

போனபதிவையும் படிச்சேன், பின்னூட்டம் போடமுடியலை, இந்தப் பதிவும் படிச்சேன், நிச்சயமாய்த் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள். எங்க உறவுப் பெண் இந்த வேலையின் நேரமும், அசாதாரணமான வேலைப்பளுவும் தாங்க முடியாம வேலையை விட்டுட்டா. ஓரளவுக்கு இது பற்றித் தெரியுமானாலும் உங்களோட விளக்கங்கள் இன்னும் புரிய வைக்கிறது.

ஜெய்லானியை ரிப்பீட்டுப் பண்ணறேன். எந்த வேலையுமே சுலபம் அல்ல./

தாக்குடுவுக்கு வேறே வேலை இல்லை, பதில் எல்லாம் கொடுக்காதீங்க! :P

LK சொன்னது…

@மலர்

உண்மைதான் அவ்வளவு எளிதல்ல ,நன்றி

@கீதா மாமி

நன்றி மாமி, தக்குடுகு யாரு பதில் சொல்றா

Life is beautiful!!! சொன்னது…

LK sir ennoda blogku varugai thanthathuku migavum nanri :) Time kidaikumbothu kandipa padikaren.