ஜூன் 03, 2010

பாவத்தின் பரிசு பாகம் II

அஞ்சலி, ஒருமுறை பார்த்தோரை திரும்பப் பார்க்க வைக்கும் இளம் பெண்.  பட்டம் முடித்து வெளி உலகில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சி. பெற்றோரை இளம் வயதில் இழந்து அக்காவால் வளர்க்கப்பட்டவள்.  

எப்பொழுதும் , உற்சாகத்துடன் வலம்வரும் அஞ்சலி, அன்று மிகவும் டென்சனாக , குழப்பமாக இருந்தாள். அன்று காலையில் அவள் சென்ற வேலைக்கான நேர்முகத் தேர்வின் முடிவை எண்ணியே அவளின் அந்தக் குழப்பமும் டென்சனும்.

"ஏன்  டல்லா முகம்லாம் வாடிப் போய் ??? என்ன ஆச்சு?" கேள்விக் கணைகளுடன் அவளது அறைத் தோழி ப்ரியா.

"இல்லடி இன்னிக்கு இன்டர்வியு போனேன்ல .. முடிவு இன்னும் சொல்லல . ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன்னு சொல்லிட்டாங்க . அதான் ஒரே டென்சன் "

"ஏண்டி இதுக்கு இவ்ளோ டென்சன். எப்படியும் சொல்லப் போறாங்க. இதுதானே உனக்கு முதல் இன்டர்வியு. இது இல்லாட்டி இன்னொன்னு "

"இல்லடி . எவ்வளவு நாள் அக்கா காசுல செலவு பண்றது . அதுவும் இல்லாம, நாம சம்பாதிச்சா யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம் "

"ஹ்ம்ம் . அது சரி ".

                                      **************************************
"பிரகாஷ் , யாரை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணிடீங்களா ?"

"ஆமாம் சார். இந்த 5  பேரை நான் முடிவு பண்ணி இருக்கேன் . நீங்க ஓகே பண்ணியாச்சுனா அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிடலாம். "

"பிரகாஷ் நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெளில இருங்க "

"அப்பா இன்னிக்கு வந்த இந்த பொண்ணையும் சேர்த்து செலக்ட் பண்ணுங்க "

"ஏன்டா, உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதாவது ?"

"இல்லப்பா அந்த மாதிரி எதுவும் இல்லை. எனக்கு வேற ஒருத்தர் மூலமா அந்தப் பொண்ணைத் தெரியும். கொஞ்சம் கஷ்டப் படுற குடும்பம். அதான் சொன்னேன் . வேற ஒன்னும் இல்லை."

"வாழ்க்கையில் முதல் முறையா ஒரு உருப்படியான ஒரு வேலை பண்ணி இருக்க. குட்"

"பிரகாஷ் , அந்த லிஸ்ட்ல இருக்கறவங்களோட , அஞ்சலிக்கும் சேர்த்து இன்பார்ம் பண்ணிடுங்க "

"இப்ப திருப்தியாடா?" இண்டர்காமை கீழே வைத்தவாறே.

"தேங்க்ஸ் டாட்"

முகத்தில் ஒரு வித குரூர சிரிப்புடன் வெளியேறினான் ஜெய்.

-பரிசுகள் தொடரும்

27 கருத்துகள்:

சேட்டைக்காரன் சொன்னது…

உம்! திகில் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். வெயிட்டிங்!

Kousalya சொன்னது…

இது திரில்லர் கதையா, காதல் கதையா, குடும்ப கதையா இன்று தெரியவில்லை . ஆனால் விறுவிறுப்பாக போகிறது...!! நல்ல நடையில் கதை இருக்கிறது வாழ்த்துக்கள் LK...!

அநன்யா மஹாதேவன் சொன்னது…

tension ஜாஸ்தியாகுது.. ரொம்பவுமே சுருக்கிட்டியோ? 50 வரிகளுக்குளே அடுத்த பகுதி எழுதியெ ஒரே கதையாசிரியன் நீயாத்தான் இருப்பே.. இருந்தாலும் நல்லா இருக்கு.. அடுத்த பகுதி எப்புடு?

Ananthi சொன்னது…

hmmm.. previous part kum idukkum connection puriyala.. but interesting..

Harini Sree சொன்னது…

Good good! ipdi kuttaya kozhapina thaan meeen pidikka mudiyum! :)

Harini Sree சொன்னது…

Oru chinnaaaaaaaaa vendugol. paavaththin parisunu neenga podara terror photos-a konjam maathalaam. enna maari chinna kozhanthel bayanthu poiduvaa! :P

asiya omar சொன்னது…

பாகம் 1 ,பாகம்-2 கதை வேறு வேறு ரூட்டில் இருக்கு,அதற்கும் இதற்கும் என்ன தொடர்போ,அவனவன் மண்டையை பிய்ச்சுக்கணுமா ?எல்.கே.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல நடையில் கதை இருக்கிறது. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்....

தக்குடுபாண்டி சொன்னது…

MMM, great going LK!..:)

LK சொன்னது…

@கௌசல்யா

படிங்க உங்களுக்கே புரியும்

@சேட்டை
நன்றிங்க

@அனன்ஸ்
நேத்து நைட் எழுதி வச்சேன் . காலைல வீட்ல நெட் இல்ல. அதான் அப்படியே போட்டுட்டேன்

LK சொன்னது…

@ஆனந்தி
தொடர்ந்து படிங்க புரியும்

@ஹரிணி
எல்லாம் சரி. அது யாரு கொளந்தை ????

@ஆசியா
அதெல்லாம் வேண்டாம். தொடர்ந்து படிச்சா புரியும்

LK சொன்னது…

@@வெங்கட்

நன்றிங்க

@தக்குடு
நன்றி

SathyaSridhar சொன்னது…

Kadhai nalla poittu irukunga,,thiruppu munai ah ethir paarthuttu irukken..

SathyaSridhar சொன்னது…

Hmm,,kadai nalla poittu irukku thiruppu munai ethirpaarthuttu irukken...

யாதவன் சொன்னது…

பாவத்தின் பரிசு அருமை

sandhya சொன்னது…

ஏன் கார்த்தி இவ்ளோ குட்டியா எழுதரே ?பிராணன் எடுக்காதே மீதி கதைக்கு வெய்டிங் .

ஜெய்லானி சொன்னது…

//முகத்தில் ஒரு வித குரூர சிரிப்புடன் வெளியேறினான் ஜெய். //

பாஸ் நீங்களும் என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலதானே !!

:-)))

Mrs.Menagasathia சொன்னது…

த்ரில்லிங்கா நல்லாயிருக்கு எல்கே!!

vanathy சொன்னது…

நல்ல விறுவிறுப்பாக இருக்கு. அஞ்சலி பெயர் நல்லா இருக்கு. என் மகளின் பெயரும் அதே.


// previous part kum idukkum connection puriyala//
எனக்கும் அதே.

Harini Sree சொன்னது…

//எல்லாம் சரி. அது யாரு கொளந்தை ????//

hehehe public a kekkapdaathu! enakku publicuity (publicity) pidikaathu! :P

ஸ்ரீராம். சொன்னது…

தொடருங்கள்..படிப்போம்..(பாகம் ஒன்று பாகம் இரண்டு என்று வருமா? அத்தியாயம் ஒன்று என்று எழுதலாமோ? பல அத்தியாயங்கள் சேர்ந்ததுதானே ஒரு பாகம்..?)

பத்மநாபன் சொன்னது…

கதை பத்திக்கிச்சு எல்.கே..

Mitr Friend - Bhushavali சொன்னது…

Oh My God!!! Ippudi pogum'nu nenakkalappa!!!

Thanthondrimalai Kalyana Venkatramanar Temple
Fashion Panache - Crochet Top to Office

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இது திரில்லர் கதையா, காதல் கதையா, குடும்ப கதையா இன்று தெரியவில்லை//

எனக்கும் Ditto இதே கமெண்ட் வந்துருக்கு... (ஒரு வேள கமெண்ட்ஐ கூட கட் பேஸ்ட் போட ஆர்ம்பிசுட்டங்களா... ஹி ஹி)

நல்லா போகுது கதை... எனக்கு கொஞ்சம் கொஞ்சம் யூகிக்க முடியுது... பாப்போம் நான் நெனைக்கற மாதிரி போகுதான்னு... (நீ மட்டும் தான் டென்ஷன் பண்ணுவியா...நாங்களும் பண்ணுவோம்ல....)

Jokes apart... good going. Looking to read next part soon

LK சொன்னது…

@சத்யா

தொடர்ந்து வாங்க

@ யாதவன்
நன்றி

@சந்தியா
பொறுமை

@ஜெய்
இல்ல இல்ல

LK சொன்னது…

@மேனகா
நன்றி

@வாணி
அப்படியா ?? தொடர்ந்து படித்தால் புரியும்

@ஹரிணி
:))))

@ஸ்ரீராம்
தவறு திருத்தப் படும்

LK சொன்னது…

@பத்மநாபன்
தண்ணிய ஊத்துங்க

@தோழி
:))

@அப்பாவி
இத டெம்ப்ளட் பின்னூட்டம்னு சொல்லுவோம்