ஜூன் 01, 2010

பாவத்தின் பரிசு பாகம் I


சோம்பலாய் மலரும் ஞாயிறு காலை கோவை மாநகருக்கு அன்று மிக பரபரப்பாய் விடிந்தது. உள்ளூர் தொலைக்காட்சிகள் "சற்று  முன் கிடைத்தத் தகவலாய்" அந்த செய்தியாய் அதை மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.  அதிகாலையில் அந்த சம்பவம் நடந்ததால் பத்திரிகைகள் அதைப் பற்றி சத்தம் போடாமல் மௌனம் சாதித்தன. ஆனால் அந்த மௌனம் அன்று மட்டுமே என்று சொல்வது போல் , காந்திபுரத்தின் நான்காவது வீதியில் நிருபர்களும், தொலைக்காட்சி காமெராக்களும் ஆக்கிரமித்து இருந்தன.  இத்தனை பரபரப்புக்கும் காரணம்  பாஸ்கர் . கோவையில் பிரபல தொழிலதிபரான தெய்வ நாயகத்தின் ஒரே மகன் , ஞாயிறு விடியற்காலையில் தற்கொலை செய்துக் கொண்டதே.

ஒரே ஊரில் இருந்தாலும் , இந்த வீட்டை மகனுக்காக கொடுத்து இருந்தார். செய்தி அந்த பகுதியில் மிக விரைவாக பரவ, தெய்வ நாயகத்தின் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர். அங்கு வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வேலன், செய்ய வேண்டிய சம்ப்ரதாயங்களை செய்ய ஆரம்பித்தார். 


"யோவ் ஏட்டு , யாரும் எதையும் தொடலியே ??"
"இல்லீங்க "
" போட்டோக்ராபருக்கு சொல்லியாச்சா ?"
" வந்துகிட்டு இருக்காருங்க . கை ரேகை நிபுணரும் வந்துகிட்டு இருக்காருங்க "


"சார் , உங்களுக்கு மனசு கஷ்டம்தான் இருக்கும். ஆனால், நீங்க சொல்ற பதிலா வச்சுதான் இந்த கேச முடிக்க முடியும் "

"சொல்லுங்க இன்ஸ்பெக்டர், என்ன வேணும் ?"

"உங்க பையனுக்கு காதல் எதாவது உண்டா ??"

"இல்லீங்க அந்த மாதிரி எதுவும் இல்லை. இருந்திருந்தா நானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே. "

"எதாவது பெரிய அளவுல வியாதி இருந்து ..... "

"இல்லை சார் அப்படி எதுவும் இல்லை. வீட்லயே ஒரு ஜிம் இருக்கு . அதுவும் இல்லாம மாதம் ஒரு முறை கண்டிப்பா மெடிக்கல் செக்கப் பண்ணிடுவான் அவன். "

"பாஸ்கரோட நெருங்கிய நண்பர்கள்  யாருன்னு சொல்ல முடிமா ?"

"தாராளமா . அவன் , விஜய், ஜெய் அப்புறம் விக்டர் நாலு பேரும்தான் எப்பவும் ஒட்டுக்கா இருப்பாங்க. பள்ளிகூடத்தில இருந்தே நண்பர்கள். இவங்க நாலு பேரும் சேர்ந்து புதுசா எதோ பிஸ்னஸ் செய்யப் போறதா சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சி . இவன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன். இப்படி பண்ணிட்டான். "

"அந்த நாலு பேரும் இப்ப எங்க?"

" அவங்க ஒரு வாரமா ஊர்ல இல்லை. அந்த பிஸ்னஸ் சம்பந்தமா மும்பை போயிருக்காங்க. இவனும் அவங்கக் கூடத்தான் போனான். நேத்து தான் திரும்பி வந்தான். அவங்க இன்னிக்கு வந்திருவாங்க. "

"ஏட்டு அந்த வாட்ச்மேனக் கூப்பிடு "
"அய்யா கும்பிடறேனுங்க "

"நேத்து எத்தனை மணிக்கு பாஸ்கர்  வீட்டுக்கு வந்தார்? அவர் கூட யாரவது வந்தாங்களா ??

"எப்பவும் போல ஒரு பத்து மணி சுமாருக்கு வந்தாருங்க.  அவர் கூட .....?

"ஏன் தயங்கற ? எதுவா இருந்தாலும் சொல்லு ."

"அவர் கூட ஒரு பொண்ணு வந்துச்சு . "
"அந்தப் பொண்ணு எப்படி இருந்தா? இதுக்கு முன்னாடி வந்திருக்கா இங்க ??"

"இல்லீங்க நான் பாக்கள, முகத்தை துப்பட்டா போட்டு மூடி இருந்துச்சி . ஒரு மூணு மணிக்கு அந்தப் பொண்ணு கிளம்பி போய்டுச்சு "

"அப்ப பாஸ்கர்  வெளில வந்தாரா ?? நீ பார்த்தியா ??

"அய்யா ஒரு நிமிஷம் இதைப் பாருங்க " 

- பரிசு தொடரும்


30 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சுவாரஸ்யமான ஆரம்பம்..

ஜெய்லானி சொன்னது…

மீண்டும் தொடரா!! கிரைம் கதை இண்டிரஸ்டிங்கா போகுது...

sandhya சொன்னது…

தொடக்கமே நல்லா இருக்கு .மீதி கதை படிக்க ஆவலோடு காத்திடிருக்கேன்.

asiya omar சொன்னது…

தொடர் ஆரம்பமே த்ரில்லாக இருக்கு.தொடர்ந்து எழுதுங்க.அருமை. இணைத்திருந்த படத்தை பார்த்து கொஞ்சம் பயந்திட்டேன்.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

LK,
செம்ம சுவாரஸ்யமா இருக்கு கதை! எப்புடிப்பா இப்புடி எல்லாம்? சூப்பர்! அடுத்த பார்ட் சீக்கிரம் வரட்டும்.
:) வாழ்த்துக்கள்.

தக்குடுபாண்டி சொன்னது…

//உங்க பையனுக்கு காதல் எதாவது உண்டா//

//உங்க பையனுக்கு காதல் எதாவது உண்டா //

both are same LK!....:))) good try! keep it up!

dheva சொன்னது…

கார்த்திக்....சொல்லவே.. இல்லை...! அற்புதமான கதை எழுதும் திறனுக்கும் நீங்க சொந்தக்காரர...! ஆரம்பமே தலைவர் அறிமுக சீன் மாதிரி பட்டய கிளப்புது...! தொடர்ந்து எழுதுங்கள் விடாம படிக்கிறோம்!

கலக்கல் தொடருக்கு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருவிருப்பான தொடக்கம். அடுத்த பாகம் படிக்க ஆவலுடன்.....

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஆரம்பமே அசத்தலாய் இருக்கு கார்த்திக். தொடந்து அசத்துங்க..

geetha santhanam சொன்னது…

மேலும் படிக்க ஆவலைத் தூண்டும் ஆரம்பம்.--கீதா

கீதா சாம்பசிவம் சொன்னது…

mmmm என்ன நடந்துச்சுனு புரிஞ்சுது. தொடருங்க, சரியா இருக்கானு பார்த்துக்கறேன். :))))

யாதவன் சொன்னது…

நல்ல படைப்பு

Priya சொன்னது…

நல்லா ஆரம்பிச்சு இருக்கிங்க! தொடருங்கள்.... காத்திருக்கிறோம்.

Mrs.Menagasathia சொன்னது…

நல்லாருக்கு,தொடருங்கள்...

LK சொன்னது…

@செந்தில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@ஜெய்
ஆமா. இப்ப இருக்கற நிலைமைல வேற எதையும் போட முடியாது பயமா இருக்கு

@சந்தியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@ஆசியா
இந்தத் தொடர் முடியற வரைக்கும் அதை நீங்க பார்க்கணும்

@அனன்ஸ்
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@தக்குடு
புரியல தம்பி

@தேவா
உண்மைலேயே அவ்ளோ நல்லா இருக்கா ? நன்றி தல

@வெங்கட்

நன்றிங்க

@மலிக்கா
நன்றிங்க சகோதரி

@கீதா சந்தானம்

நன்றி

@பாட்டி
இல்லையே நீங்க நினைக்கறது இல்லையே

@யாதவன்
நன்றி

@பிரியா

நன்றிங்க

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர்.... (நல்ல எடத்துல நிறுத்தி படிக்கரங்களை டென்ஷன் பண்ற கலை உனக்கு நல்லாவே வருது... கீப் இட் அப்...ஹா ஹா ஹா)

நானே அதிசியமா ஒரு கிரைம் ஸ்டோரி எழுதலாம்னு இப்ப தான் போட்டேன்... அதுக்குள்ள போட்டியா... ஹும்......

பத்மநாபன் சொன்னது…

எங்கூர் ராஜேஷ்குமார் மாதிரி கோவை..காந்திபுரம்னு ஆரம்பிச்சிருக்கிங்க...சஸ்பென்ஸும் அவர மாதிரியே வச்சுருக்கிங்க ...த்ரில் கெளப்ப வாழ்த்துக்கள்....

Ananthi சொன்னது…

அவார்ட் வாங்கினதுக்கு தகுந்த மாதிரி.. கதை எழுதி கலக்குறீங்க..!
நல்ல தொடக்கம்.. வாழ்த்துக்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

ஆஹா.. இங்கேயும் க்ரைமா.. இப்பத்தான் அப்பாவியோட பதிவுல இருந்து தப்பிச்சு ஓடிவந்தேன் :-))))

நடத்துங்க... ஆரம்பமே சுவாரஸ்யமா இருக்கு.

padma சொன்னது…

carry on waiting

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

vanathy சொன்னது…

very interesting. continue..

LK சொன்னது…

@அப்பாவி

அக்கா நான் கேக்க வேண்டிய கேள்வி இது

@பத்மநாபன்

அவ்ளோ பெரிய ஆள் கூடலாம் கம்பேர் பண்ணாதீங்க. வருகைக்கு நன்றி

@ஆனந்தி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

LK சொன்னது…

@சாரல்
அபாவியோட இட்லிகிட்ட இருந்துதானே ???

நன்றிங்க


@பத்மா
நன்றி

@சங்கர்

நன்றி

@வானதி
நன்றிங்க

Kousalya சொன்னது…

ஆரம்பமே அசத்தலா இருக்கு கலக்குங்க....

LK சொன்னது…

@கௌசல்யா

வருகைக்கும் கருத்துக்கும் :):)

Harini Sree சொன்னது…

Thodakkam sooper! :)

அப்பாதுரை சொன்னது…

விறுவிறுப்பான தொடக்கம்... மற்றதையும் படிக்கிறேன்.

>>"அந்த நாலு பேரும் இப்ப எங்க?"
மூணு பேரும்?

LK சொன்னது…

@அப்பாதுரை

தவறி சுட்டி காண்பித்ததற்கு நன்றி