Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

காஞ்சி

கடந்த  வெள்ளியன்று   எனது பெற்றோர் மற்றும் எனது தந்தையுடன் எங்கள் கடையில் இருப்பவர் குடும்பத்துடன்  சென்னை வந்திருந்தனர். எனது தந்தை அம்பத்...


கடந்த  வெள்ளியன்று   எனது பெற்றோர் மற்றும் எனது தந்தையுடன் எங்கள் கடையில் இருப்பவர் குடும்பத்துடன்  சென்னை வந்திருந்தனர். எனது தந்தை அம்பத்தூரில் இருக்கும் ஒரு ஹோமியோ மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதால் மாதம் ஒரு முறை வருவார். இந்த முறை வெள்ளி சனியாக அமைந்ததால், சனியன்று காஞ்சி செல்லலாம் என்று வெள்ளி இரவு முடிவு செய்தோம். சனி இரவே அவர்கள் சேலம் திரும்ப வேண்டி இருந்தது. எனவே மதியம் காஞ்சியில் இருந்து திரும்பினால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து சனி காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.

முதலில் காமாட்சி அம்மனையும் பின் ஈஸ்வரனை தரிசித்து நேரம் இருப்பின் மற்ற கோவில்களுக்கு செல்லலாம் என்பது பிளான்.  சென்னையில் இருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூரை தாண்டும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீபெரும்புதூரை கடந்தப்பின் வழியில் ஒரு விபத்து. லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனால் முக்கால் மணி நேரம் தாமதமாக காஞ்சி சென்றடைந்தோம்.

அப்பொழுதே ஒன்பது மணி ஆகிவிட்டது. எனவே காலை உணவை முடிப்போம் என்று ஒரு ஓட்டலில் நுழைந்தோம். ஏன்டா போனோம்னு ஆகிடுச்சி. அவங்க கொடுத்த வடைய வச்சி ஒரு போராட்டத்தை கலைக்கலாம். அவ்வளவு அருமை . நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம். எதோ சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு கிளம்பினோம். அந்த ஓட்டல்ல உருப்படியான ஒரு விஷயம் பெண்களுக்கு கொடுத்து இருந்த இட ஒதுக்கீடு. கல்லா பெட்டி தவிர மற்ற இடங்கள் முழுக்க பெண்கள்தான்.

ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி, முதலில் அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கு எங்களை வரவேற்க கணபதியார் காத்திருந்தார். எங்களை கண்டவுடன் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அவருக்கு இரண்டு வாழைபழங்களை குடுத்து விட்டு அங்கிருந்த அம்மன் சந்நிதி நோக்கி சென்றோம். இந்த கணபதியார் மிக குறும்புக்காரர். கோவிலுக்கு நுழைவோர் அவரை கண்டுக்கொள்ளாமல் சென்றால், தன் துதிக்கை மூலம் அவர்களை இழுத்து அவரை பார்க்க செய்துவிடுவார்.

அம்மன் சந்நிதியில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். இங்கு சிறப்பு தரிசனம் இல்லை. (இப்பொழுது இல்லை முன்பு இருந்ததாக எனக்கு நினவு இல்லை ). எனவே வரிசையில் அனைவருடன் இணைந்து மெதுவாக சென்றோம். சரியாக அம்மனை தரிசிக்கும் வேலையில் , மின்வெட்டு. அதனால், சாதாரண விளக்கு ஒளியில் அம்மன் முகம் ஜொலிக்க ஆனந்த தரிசனம். அன்று என்னவோ , மக்களை விரட்டும் ஆட்கள் அங்கு இல்லை. எனவே நின்று நிதானமாக ஒரு ஐந்து நிமிடம்  தரிசித்தோம். பின்பு வரிசையில்  இருந்து அகன்று, அம்மன் சந்நிதி எதிரே இருக்கும், மண்டபத்தில் இருந்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் தரிசனம். பின்பு அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வெளியே வந்தோம். தங்க விக்ரகமாக காமாட்சி இருந்ததை சொல்லப்படும் பங்காரு காமாட்சி சந்நிதியும்  பார்த்து கிளம்பும் தருணத்தில், திவ்யா மீண்டும் யானை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் யானைகள் இருக்கும் கொட்டடிக்கு சென்றோம். அப்பொழுது யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். எங்களை கண்ட மகிழ்ச்சியில் ஒரு கணேசர் பாதம் தூக்கி ஆடத் துவங்கி விட்டார். உச்சி வெயில் கால்களை பதம் பார்க்கத் துவங்கியதால், அங்கிருந்து ஒரே ஓட்டமாக கோவிலுக்கு வெளியில் வந்தோம். அப்பொழுதே மணி நடுப்பகலை எட்ட அரைமணிநேரம் இருந்தது. காஞ்சியில் உச்சிவேலைக்கு பிறகு கோவில்கள் சாத்தப்படும். எனவே அங்கிருந்து கிளம்பி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தோம்.

எப்பொழுதும் அம்மன் கோவிலில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கூட்டம் குறைவாக இருக்கும். அன்றும் அப்படியே. இங்கும் நல்ல தரிசனம். பின்பு இந்தக் கோவிலின் புகழ்பெற்ற மாவடியை வலம் வந்து கிளம்பினோம். அப்பொழுது மணி பன்னிரண்டாகி விட்டது. எனவே அதற்கு மேல் எந்த கோவிலையும் பார்க்க இயலாது.

பின், காஞ்சி சங்கரமடம் சென்றுவிட்டுக் கிளம்பலாம் என்று அங்கு சென்றோம். நாங்கள் அங்கு செல்லவும், சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடியும் நேரமும் சரியாக இருந்தது. எனவே சிறிது நேரம் அங்கு காத்திருந்து பிரசாதம் பெற்றோம்.

கிளம்பும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்.

-தொடரும்
With Love LK

47 கருத்துகள்

dheva சொன்னது…

உங்க கூடவே...காஞ்சிபுரம் எங்களையும் கூட்டிடு போன மாதிரி இருக்கு பாஸ்...! முதியவர் எதுக்கு கூப்பிட்டாரு...?????? ஒரே சஸ்பென்ஸ்

சீக்கிரம்...வெயிட்டிங்...!

கௌதமன் சொன்னது…

ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள். சில எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சென்றால் / சென்றாள் போன்றவைகள்.
வாழ்த்துகள்.

Asiya Omar சொன்னது…

இரண்டு நாளாக எல்.கே காணாமல் போன காரணம் இதுதானோ,இதிலும் சஸ்பென்ஸ்.ஆகா..

Vidhoosh சொன்னது…

:)

Geetha Sambasivam சொன்னது…

//அம்மன் சந்நிதியில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். இங்கு சிறப்பு தரிசனம் இல்லை. (இப்பொழுது இல்லை முன்பு இருந்ததாக எனக்கு நினவு இல்லை ). //

அங்கே இருக்கும் குருக்கள் தெரிஞ்சவர்னால் கிட்டே போய்ப் பார்க்கலாம். :D காலை ஏழு மணிக்குள் சென்றோமென்றால் சந்நிதிக்கு அருகே நின்று தரிசிக்க முடியும். உள்ளே அரூப லக்ஷ்மியைப் பார்க்கணும்னால் தெரிஞ்சவங்க இருந்தால் தான்.

//தங்க விக்ரகமாக காமாட்சி இருந்ததை சொல்லப்படும் பங்காரு காமாட்சி சந்நிதியும் பார்த்து கிளம்பும் தருணத்தில், //

பங்காரு காமாக்ஷி இருந்திருக்கிறாள். முகலாயர் படை எடுப்பில் இருந்து பங்காரு காமாக்ஷியைக் காக்கவேண்டிக் காஞ்சி மடாதிபதி அவளை எடுத்துக்கொண்டு தஞ்சை ஜில்லா உடையார் பாளையம் ஜமீனுக்குச் சென்று அங்கே பங்காரு காமாக்ஷியோடு தாமும் சில வருடங்கள்(?) இருந்தார். எத்தனை வருடங்கள் என்பதைச் சரியாப் பார்த்துச் சொல்றேன். அப்புறம் அங்கே இருந்து தஞ்சை மன்னர் அழைப்பில் தஞ்சை சென்று, மன்னர் அங்கேயே மடம் அமைத்துத் தங்கச் சொல்லி வேண்ட, காவேரிக்கரையில் மடம் அமைக்க விரும்புவதாய்ச் சொல்லி, மன்னனைச் சமாதானம் செய்யவும், அல்லது தஞ்சையின் பெருமையை உயர்த்தவுமோ? தெரியலை, பங்காரு காமாக்ஷியை அங்கே பிரதிஷ்டை செய்தார். மன்னனும் மடாதிபதியின் ஆணைப்படி அங்கே காமாக்ஷி குடி இருக்கக் கோயில் ஒன்று கட்டிக் கொடுத்தான். அங்கே வழிபாடுகளை ஏற்படுத்திவிட்டு ஆசாரியார் கும்பகோணத்திற்கு வந்து காவேரிக்கரையில் மடம் ஏற்படுத்திக்கொண்டு தங்கினார். மடம் இருக்கும் தெரு இன்றும் மடத்துத் தெரு என்ற பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அவருக்குப் பின்னர் வந்த சங்கராசாரியார்கள் அனைவருமே கும்பகோணத்திலே தங்கி இருந்து மடத்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர். பல வருடங்கள் கும்பகோணத்தைத் தலைமை இடமாய்க் கொண்டு செயல்பட்டதால், "கும்பகோணம் ஸ்வாமிகள்" என்றும் அழைக்கப் பட்டனர். சமீபத்தில் 85,86 வருடங்கள் வரையிலும் கும்பகோணமே முக்கிய நிர்வாக தலமாகச் செயல் பட்டு வந்தது. மற்ற விபரங்கள் கொடுத்தால் போர் அடிக்கும். அதனால் சுருக்கமாய்ச் சொல்லிட்டு நிறுத்திக்கிறேன். :D


//காஞ்சியில் உச்சிவேலைக்கு பிறகு கோவில்கள் சாத்தப்படும்//

அநேகமாய் இந்தியாவின் எல்லா ஊர்களிலேயும் உச்சிக்கால வழிபாட்டுக்குப் பின்னர் நடை சாத்துவாங்க, மாலை மூன்றரை மணிக்குப் பின்னர் சில கோயில்களிலும் சில கோயில்களில் ஐந்து மணி போலும் நடை திறக்கப் படும்..

பெயரில்லா சொன்னது…

காஞ்சி புரம் அம்மன் கோவிலில் நான் இது வரைக்கும் போனதில்லை இப்போ இந்த பதிவு படிச்சப்போ அம்மனே பார்த்த மாதிரி ஒரு பீலிங் ..நன்றி கோவில் போட்டோ எதிர்பார்த்தேன் ..ஏன் எடுக்கலை?
"கிளபும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்."எதுக்கு கூப்பிட்டா என்று நான் சொல்லட்டுமா பிரசாதம் கொடுக்க தானே ????ஹி ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

"அவங்க கொடுத்த வடைய வச்சி ஒரு போராட்டத்தை கலைக்கலாம். அவ்வளவு அருமை . நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம்."
இது சூப்பர் கமெண்ட் தான் ...பாவம் தங்கமணி

யானை போட்டோ நல்லா இருக்கு பா ...அந்த போட்டோ லே தெரியற அந்த குட்டி தலை நம்ம திவ்யாகுட்டி தானே

எல் கே சொன்னது…

@தேவா
எல்லாம் உங்க கிட்ட இருந்துகத்துகிட்டதுதான்

எல் கே சொன்னது…

@கௌதமன்
நன்றி. திருத்திக்கொண்டேன்

எல் கே சொன்னது…

@ஆசியா
ஒரு நாள்தான் காஞ்சி. மறுதினம் வீட்டில் ஓய்வு. நன்றி சகோதரி

எல் கே சொன்னது…

@விதூஷ்
நன்றி :))

@மாமி
அதுமட்டும் அல்ல, அங்கு இருக்கும் நபரிடம் ஒரு காந்தி நோட்டை கொடுத்தால் உள்ளே அனுப்புவார். எனக்கு விருப்பம் இல்லை. மேடம் கும்பகோணத்தில் இருந்த விஷயம் அறிந்த ஒன்று. அனால் பங்காரு காமாஷி தஞ்சை சென்றது தெரியாது.

@சந்தியா
கிட்டத் தட்ட சரிதான். ஆனால் தவறு. தங்கமணி ஒன்னும் நினைக்கமாட்டாங்க. திவ்யாவேதான்

சௌந்தர் சொன்னது…

@கீதா சாம்பசிவம் யாருப்பா அது இங்க வந்து பதிவு போடுறது

Geetha Sambasivam சொன்னது…

@செளந்தர், எல்லாம் ஒரு விளம்பரந்தேன். அரசியலிலே இதெல்லாம் ஜகஜமுங்க! :))))))))))))

ஸ்ரீராம். சொன்னது…

முதல் படத்தில் இடது ஓரம் சற்று மேலே தூக்கி எடுக்கப் பட்டிருந்தால், அல்லது எடிட் செய்திருந்தால் நேரில் புகைப் படம் எடுத்தது போலிருக்கும். ஆனந்த தரிசனம்.

எல் கே சொன்னது…

@சௌந்தர்
எங்க தலைவிய பார்த்து என்ன கேள்வி கேட்கறீங்க

@ஸ்ரீராம்

அண்ணா, ஒரு நாலஞ்சு எடுத்தேன். எதுவும் சரியாக அமையவில்லை. இது ஒன்றுதான் திருப்தியா இருந்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும், பதிவும் நன்றாக உள்ளது. முதியவர் கூப்பிட்டு என்ன சொன்னார்னு சீக்கிரம் சொல்லிடுங்க, சரியா.

sound balu சொன்னது…

nanum kanchipuram than neenga sonna hotel --------- apatdithan neenga kocchukatheenga ........

sound balu சொன்னது…

en peru balu .......

ungalukku virupam iruntha unga email id kodunka na sila photos mail pannuren , kamathiamman urchavar matrum adhi sankarar rare photos ... ok va my rmail id : mjagguu@gmail.com

GEETHA ACHAL சொன்னது…

காஞ்சீபுரம் எனது தாத்தா ஊர்...எனக்கு மிகவும் பிடித்த கோவில்...சரி...முதியவர் எதற்கு உங்களை கூப்பிட்டார்...கூடவே சஸ்பெஸும்....

Harini Nagarajan சொன்னது…

solla maranthutten padangal miga arumai! :)

Harini Nagarajan சொன்னது…

ithulayum thodarum a?? :P neenga aniyayathukku suspense kathai padichu kettu poi irukeenga :P

Miga arumayaaga kanchi pathi solli irukeenga.

பத்மா சொன்னது…

waiting

தெய்வசுகந்தி சொன்னது…

என்னங்க இதுவும் தொடரா?????? நாங்களும் கூட வந்த மாதிரி இருக்குது!!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

@ கீதா மாமி - இது எல்லாமும் எனக்கு புதுசா கேக்கற விசயம் தான். Thanks for sharing

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

பெரியாவாளோட மெழுகு சிலை ரெம்ப தத்ரூபமா இருக்கு....thanks for sharing LK

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கிளம்பும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்
-தொடரும்//

அடப்பாவி .... இதுலயுமா suspense ... நான் பரவாஇல்ல... இனிமே யாரும் என்னை திட்ட கூடாது சொல்லிட்டேன்... ஆமா...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம்//

LK வோட தங்கமணிக்கு இட்லி செய்யறதே மறந்து போய் கல்லு கல்லா இட்லி வரணும் LK பல்லு எல்லாம் கொட்டி போகணும்னு நான் சாமிக்கு வேண்டிக்க போறேன் இரு... இப்ப என்ன பண்ணுவ... இப்ப என்ன பண்ணுவ... வடை அவ்ளோ மோசமாவா இருந்தது...?????? ஹி ஹி ஹி - அப்பாவி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

உங்க எழுத்து ஸ்டைல் ரொம்ப வேகமா அழகாயிட்டே இருக்கு. பயணக் கட்டுரை எழுதறதும் அதன் மூலம் படிப்பவர்களையும் கூட இருப்பது போல் உணர வைப்பதும் ஒரு கலை, நல்லாவே செய்றீங்க எல்.கே!

தக்குடு சொன்னது…

வெரி குட் உருப்படியான கார்யம்!

பனித்துளி சங்கர் சொன்னது…

அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள் . யானை புகைப்படம் நீங்கள் எடுத்ததுதானா?தொடருங்கள் மீண்டும் வருவேன் யார் உங்களை அழைத்த முதியவர் என்று அறிந்துகொள்ள. பகிர்வுக்கு நன்றி !

ஹேமா சொன்னது…

சீக்கிரம் சீக்கிரம்.பொங்கல் வடை சுண்டல் எல்லாம் இருக்கா கார்த்திக் !

பத்மநாபன் சொன்னது…

உங்கள் பதிவு விரைவில் காஞ்சிபுரம் செல்லும் ஆவலை தூண்டுகிறது.

padmaja சொன்னது…

I am sorry, not able to express in Tamil, but I can read and enjoy.. this read was pretty interesting..I liked this blog very much.

vanathy சொன்னது…

எல்கே, நல்லா இருக்கு பயண கட்டுரை. கல்லாவில் பெண்களை நம்பி விடமாட்டார்கள்.

ஹையோ! தங்ஸின் இட்லிக்கு வந்த வாழ்வைப் பாருங்கப்பா. தங்ஸ் கொஞ்சம் ஆடிப்போய் ( நிலநடுக்கத்தால் ) இருக்கிறார். பார்த்தால் சந்தோஷப்படுவார்.

எல் கே சொன்னது…

@வெங்கட்
சொல்லிடறேன்

@பாலு
நன்றிங்க. என்னோட மின்னஞ்சல் இங்கயே இருக்கே.

@கீதா அச்சில்
ஓ அப்படியா.. நன்றிங்க

எல் கே சொன்னது…

@ ஹரிணி
அதுக்கு முழு காரணம் நம்ம அப்பாவி தங்க்ச்தான். நன்றி

@பத்மா
காத்திருங்க. நன்றி

@தெய்வ சுகந்தி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி
ஆமா.ரொம்ப மோசம் . நன்றி. அந்த மெழுகு சிலைய உருவாக்கினவர் ரொம்ப அனுபவித்து செய்து இருக்கிறார்.

@கேடி
பாராட்டுக்கு நன்றி

@தக்குடு
நன்றி

எல் கே சொன்னது…

@ஷங்கர்
அனைத்து படங்களும் நான் எடுத்ததே . நன்றி

@ஹேமா

அதெல்லாம் இல்ல.. நன்றிங்க

@பத்மநாபன்
சென்று வாருங்கள். போக வேண்டிய இடம்தான்

எல் கே சொன்னது…

@பத்மஜா

பரவாயில்லை. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@வாணி
நிஜமாவே அன்னிக்கு எனக்கு அப்பவியோட இட்லி ஞாபகம்தான், நன்றிங்க

Mythili சொன்னது…

LK sir, ithukuma thodarum?.. antha periyavar lunch-ku thane kupitar..

குந்தவை சொன்னது…

நிம்மதியா சாமி கும்பிட்டமான்னு இல்லாம... அதென்ன தொடரும்?
கணேஷரின் சேட்டை நன்றாக இருக்கின்றது.

குந்தவை சொன்னது…

அப்படியே திவ்யாவின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம்.

அபி அப்பா சொன்னது…

கார்த்தி அம்மாம்பெரிய யானைக்கு தம்மாத்தூண்டு வாழைப்பழம் கொடுத்துட்டு அதை பிளாக்ல வேற பீத்திகிறீங்களா? இந்த விஷயம் அந்த யானைக்கு தெரிஞ்சா என்னா ஆகும்? நல்ல வேளை டீஸ்பூன்ல பால் குடுக்காம இருந்தீங்களே!

கார்த்தி கடைசியா ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கீங்க. ஆனா அந்த முதியவரே ஈஸ்வரன் தான் அப்படீன்னு பின்னே தான் தெரிஞ்சுதுன்னு சொல்லிடகூடாது ஆமா சொல்லிட்டேன். இது அந்த முதிய்வர் மேல சத்தியம்:-))

எழுத்து நடை நல்லா இருக்குப்பா!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்குப்பா. நானும் மூணு வருஷத்துக்கு முன்னே திருப்பதி, காளஹஸ்தி எல்லாம் போயிட்டுவரும்போது, காஞ்சிபுரமும் போயிட்டு வந்தேன். ஆமா... உங்க தங்க்ஸுக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தீங்களா?...

எல் கே சொன்னது…

@சாரல்

ஒரு சில இடங்கள் என் கண்ணுக்குத் தெரியாது . நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

பெரியவர் என்ன சொன்னார்...
சீக்கிரம் சொல்லுங்க??

எல் கே சொன்னது…

@குந்தவை
காரணமாகதான் போடவில்லை

@அபி அப்பா
அதுக்குன்னு வாழை மரமா தரமுடியும் ?

@ஆனந்தி
நன்றிங்க