மே 21, 2010

திருடன் - பாகம் II

பாகம் I 

 
இப்பொழுது கதவு தட்டும் ஓசையுடன் யாரோ நடக்கும் ஓசையும் சேர்ந்து கொள்ள, மீராவின் இதயத்துடிப்பு அதிகரித்தது ...


"நான் போய் பாக்கறேன் . நீ இங்கயே இரு "


"இல்லை வேணாங்க. எனக்கு பயமா இருக்கு " , பயத்தில் அவனை நெருங்கி அவன் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்.  அவளின் அதீத பயத்திற்கு இரு நாட்கள் முன்பு நடந்த ஒரு சம்பவமும் ஒரு காரணம் . 


***************************************************************************************************************************
மாடி வீட்டிற்கு ட்யூசன் படிக்க வந்த மாணவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அதைக் கண்டாள் மீரா. அவள் வீட்டு ஜன்னலின் அருகே ஒரு பிளாஸ்டிக் பையும் அதினுள் ஒரு டப்பாவும். கிளம்பிக் கொண்டிருந்த மாணவர்களிடம் விசாரித்ததில் அவர்களது இல்லை என்பது தெரிந்தது. மாடி வீட்டு தாரிணியும் அவர்களது இல்லை என்று சொல்ல மீராவுக்கு குழப்பமும் பயமும் ஒன்றாக சேர்ந்தது. அன்றாடம் செய்திகளில் படிக்கும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தேவை இல்லாமல் நினைவுக்கு வந்தது. 
"அவர் வந்ததும் முதல் வேலையா  இதை தூக்கிப் போட சொல்லணும் ", மனதில் என்னும் பொழுதே வெங்கட் வர , "ஏங்க முதல்ல இதை போய் குப்பை தொட்டில போடுங்க ".


"வந்ததும் வராததுமா வேலையா?" அலுவலகக் களைப்பில் வெங்கட்டின் கேள்வி 
"ஆமாம் . முதல்ல அதை கொண்டு போய் போட்டுட்டு உள்ள வாங்க"
அவளை முறைத்துப் பார்த்து கொண்டே "எவன் கொண்டு வந்து வச்சானோ தெரியலை. நம்ம உசிரை வாங்கறதுக்குனே வருவாங்க எல்லாரும் " என்று முணுமுணுத்துக்  கொண்டே கொண்டு போய் போட்டான்.


"இப்ப திருப்தியா?" கோபத்துடன் கேட்ட வெங்கட்டை , ஏங்க சலிச்சுகறீங்க ? அதுல என்ன இருக்குனு தெரியாது . எதாவது குண்டு இருந்து வெடிச்சதுனா?


"ஆமாம் . நம்ம ரெண்டு பேரையும் கொல்ல யாரோ குண்டு வைக்கறாங்க "
சரி நீங்க எதுக்கு இப்ப டென்ஷன் ஆகரீங்க. விடுங்க 

***************************************************************************************************************************
இந்த சம்பவம் மீராவின் மனதில் மீண்டும் ஓடியது .


"நான் அன்னிக்கே சொன்னேன் யாரோ புதுசா வராங்கனு. அன்னிக்கு நோட்டம் பார்த்து வச்சிட்டு இன்னிக்கு வந்திருக்கணும் "


"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா. நான் ஜன்னல் வழியா பாக்கறேன் " என்று எழுந்த வெங்கட் மெதுவாக முன்னறைக்கு சென்று அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக முன் பக்கம் செல்லும் வழியை பார்த்தான். யாரும் இருக்கும் சுவடு தெரியவில்லை . எதற்கும் இருக்கட்டும் என்று டார்ச் அடித்தும் உறுதிபடுத்திக் கொண்டான்.


"யாரும் இல்ல.  பேசாம தூங்கு"
"இல்லீங்க. யாரோ வந்திருக்கா..." மீரா முடிக்கும் முன்னரே, இப்பதான் பார்த்தேன் யாரும் இல்ல. கம்முனு   தூங்கு, வெங்கட்டின் குரலில் கோபத்தின் சாயல் லேசாக தொனிக்க அரை மனதுடன் படுத்தாள் மீரா.


 மீராவுக்கு தூக்கம் வரவில்லை. அவளுக்கு மட்டும் எதோ சத்தங்கள் கேட்பதை போன்று இருந்தது. திரும்பிப் பார்த்தால் வெங்கட் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை மீராவுக்கு. நினைவுக்கு வந்த கடவுள்களை வேண்டிக்கொண்டே தூங்க முயன்றாள். எப்பொழுது  தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கியும் போனாள்.


எழுந்துடன் முந்தைய இரவு சம்பவங்கள் நினைவுக்கு வர , ஒருவித பய உணர்வுடன்

 கதவைத் திறந்து கோலமிட சென்றாள்.

" ஏங்க இங்க சீக்கிரம் வாங்க ".

அவளின் குரல் கேட்டு அதிகாலை உறக்கத்தை கெடுத்த கோபம் பாதியும் , குழப்பம் மீதியுமாய்    ஓடி வந்தான் வெங்கட் .


அங்கு ....
-தொடரும் 

21 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

gud gud! nalla kelapparaanga peethiyai...;))

அநன்யா மஹாதேவன் சொன்னது…

மறுபடியும் ஒரு சஸ்பென்ஸா? ஃப்ளோ நல்லா இருந்தது!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

ம்ம் அருமை எதிர்பார்ப்புகளை தூண்டும் வகையில் கதை நகர்கிறது . வாழ்த்துக்கள் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

ஜெய்லானி சொன்னது…

@@அநன்யா மஹாதேவன்-//மறுபடியும் ஒரு சஸ்பென்ஸா? ஃப்ளோ நல்லா இருந்தது!//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Ananthi சொன்னது…

Idukku vaaramalar thodar kadhaiyae thevalaam pola irukku.. adikkadi break podreenga.. hmmmmm

Harini Sree சொன்னது…

sooper! first time kathai ezhutharelnu sonna yaarume namba maata! :)

Chitra சொன்னது…

உங்கள் எழுத்து திறமை, இதில் கொடி கட்டி பறக்குது. சூப்பர்!

சின்ன அம்மிணி சொன்னது…

சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ்.

LK சொன்னது…

@தக்குடு
:))

@அனந்யா
நன்றி

@சங்கர்
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

@ஜெய்
::)

@ஆனந்தி
என்னது வாரமலரா ? கிண்டல்தான வேண்டாம்கறது...
@ஹரிணி

நம்பித்தான் ஆகணும். இது வரைக்கும் ஒரு பக்கக் கதைகூட எழுதினது இல்ல

@சித்ரா

பாராட்டுகளுக்கு நன்றி சித்ரா

@அம்மணி

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்க மாட்டேன். நாளைக்கு முடிச்சிடறேன்

goma சொன்னது…

அந்தக்காலத்தில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளை மதியம் 12 மணிக்கு வாசிக்கும் போது நடுங்குவது போல் இன்று உங்கள் திருடன் என்னை நடுங்க வைக்கிறான்

ஸ்ரீராம். சொன்னது…

என்னங்க, என்ன ஆச்சு..அந்த வீட்டுக் கதவு திறந்து கிடக்குதானே...ஆட்டைய போட்டாங்களா..?

LK சொன்னது…

// goma said...

அந்தக்காலத்தில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளை மதியம் 12 மணிக்கு வாசிக்கும் போது நடுங்குவது போல் இன்று உங்கள் திருடன் என்னை நடுங்க வைக்கிறான்//

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க

LK சொன்னது…

// ஸ்ரீராம். said...

என்னங்க, என்ன ஆச்சு..அந்த வீட்டுக் கதவு திறந்து கிடக்குதானே...ஆட்டைய போட்டாங்களா..?//

இப்பதான வெங்கட் எழுந்திருகார். இப்ப பார்ப்பார் இருங்க

SathyaSridhar சொன்னது…

Ennanga ithu marupadium suspense ungalukku mega serial director rukku irukka ella amsangalum irukku neenga thaaralamaa serial director try pannunga pinniduveenga kathaiyaa.... naan ninaikiren marupadium tiffin box party tiffin box ah maranthu poiduchunnu adutha episode la meet pandren..

ஸாதிகா சொன்னது…

சுவாரஸ்யமாக உள்ளது.தொடருங்கள் ஆவலுடன் உள்ளோம்.

sandhya சொன்னது…

என்னால் வெயிட் பண்ண முடியலே கார்த்தி சீக்ரமா மீதி கதை எழுத்து இல்லேல் உன் வீட்ல திருடனே அனுப்ப வேண்டி வரும் சொல்லிட்டேன் ...

LK சொன்னது…

//. naan ninaikiren marupadium tiffin box party tiffin box ah maranthu poiduchunnu adutha episode la meet pandren..//

இந்த ஐடியா நல்ல இருக்கே
இன்னும் ஒரு எபிசொட் கொண்டு போலாமே

@சாதிகா

நன்றிங்க

LK சொன்னது…

@சந்தியா

இப்படிலாம் என்னை மிரட்டக் கூடாது. நான் பாவம்

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம் ஏதோ பை கிடந்ததுக்கே பயப்படறாங்க?? எங்க வீட்டு வாசலிலே யாருதுனே தெரியாம வரிசையா வண்டிங்க நிக்கும். என்னத்தைச் சொல்றது??? பக்கத்து ஃப்ளாட் காரங்க எங்களோடது இல்லைம்பாங்க. யாருதுனே தெரியாம ஒரு சைகிள் இப்படித்தான் வாரக் கணக்கில் இருந்தது. தொடவும் யோசனை. அப்புறம் தெருவின் தாதா ஒருத்தர் எடுத்துட்டுப் போனார். சரினு விட்டுட்டோம்! :)))))))))))

LK சொன்னது…

என்ன பாட்டி பண்ண உங்க அளவுக்கு மீராவுக்கு தைரியம் இல்லையாக்கும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சஸ்பென்ஸ் மேலே சஸ்பென்ஸ் வைச்சுட்டு இருக்கீங்க. அடுத்து என்ன ஆச்சு? மூணாவது பாகத்திற்கு வெயிட்டிங் :)