மே 21, 2010

திருடன் - பாகம் I

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று . அடுக்கு மாடி வீடுகளும் ,தனி வீடுகளும் கலந்த ஒரு பகுதி. அந்த வீடு இந்த இரண்டிலும் கலக்காமல் வித்யாசமான ஒன்றை இருந்தது. முன்னால் இரு வீடுகளும் அதற்கு பின்னால் ஒரு வீடுமாய் அமைந்த ஒன்று. பின் பக்க வீடுகள் தெருவில் இருந்து பார்த்தால் தெரியாத அமைப்பு.

"மீரா !" மேல் வீட்டு தாரிணி அழைக்கும் குரல் கேட்டு வாயிலுக்கு வந்த மீரா, புதிதாய் திருமணம் ஆகி அந்த வீட்டிற்கு வந்து சில மாதங்களே ஆகி இருந்தது.

"சொல்லுங்க தாரிணி  . என்ன விசயம் என் இவ்ளோ டென்சனா இருக்கீங்க ? "

 "ஊர்ல எங்க அப்பா தவறிட்டாங்க. அவசரமா கிளம்பிட்டு இருக்கேன். போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் . ஒரு சின்ன உதவி பண்ணா முடியுமா ?"

"என்னங்க இது ? அவசரத்துக்கு உதவாம இருந்த எப்படி? சொல்லுங்க "

எங்க வீட்ல ஒரு மீன் தொட்டி இருக்கு . நாங்க எப்ப வருவோம்னு சொல்ல முடியாது .

நான் அதை வெளில கம்பி கதவுகிட்ட வைக்கறேன் . அதுக்கு தினமும் உணவு மட்டும் போட்ருங்க .
"கண்டிப்பா பண்றேங்க."

"என்ன மீரா வீடே அமைதியா இருக்கு என்ன ஆச்சு ?". இது வெங்கட் , மீராவின் கணவன் .
ஆமாங்க. மேல் வீட்ல அவசரமா ஊருக்கு போயிருக்காங்க. ஏற்கனவே , முன் பக்கம் இருக்கற வீட்டு ஓனரும் ஊர்ல இல்ல. முன்னாடி மாடி வீட்ல இருக்கறவங்க வெளில வர மாட்டாங்க. அப்புறம் யாரு? நீங்களும் நானும்தானே ?
ஹ்ம்ம். அது சரி .

ஏங்க கதவை பூட்டியாச்சா?

இப்பதான் பூட்டினேன் . ஏன் எதாவது வாங்கனுமா ?

இல்லைங்க. மாடில அவங்க வீட்டு மீனுக்கு உணவு போடணும்னு சொன்னங்க. நான் மறந்தே போயிட்டேன். ஒரு எட்டு போய் போட்டு வந்திருங்களேன்.
இது வேறயா?

சலிப்போட வெங்கட் டார்ச் எடுத்துகிட்டு மாடிக்கு போனான். சில நிமிடங்கள் பூட்டோட போராடி பின் உள்நுழைந்து மீனுக்கு உணவைப் போட்டுட்டு கதவைப் பூட்டி உறுதி செய்தப் பிறகு கீழே தன் வீட்டுக்கு வந்தான். 

இருவரும் படுத்து உறங்க முற்பட்ட சமயம். சில சப்தங்கள் கேட்க ஆரம்பித்தது. "என்னங்க சத்தம் இது? யாரோ கதவை தட்டற மாதிரி இருக்கு " கலவரமான குரலில் மீரா.
ஏன் பயப் படர? முன்னாடி இரும்பு கேட் இருக்கு அதையும் பூட்டியாச்சு ? யார் வந்து  கதவ தட்ட முடியும் ?? முன்னலாம் இப்படி பயப்பட மாட்டியே நீ ??

பழசை நினைத்து  பெருமூச்சு விட்டாள் மீரா. சிறுவயதில் இருந்தே பயம் என்பதை அறியாமல் வளர்ந்த நான் ஏன் அப்படி ஆனேன்? சில நாட்களாக அவள் அடிக்கடி தன்னைதானே கேட்டுக் கொள்ளும் கேள்வி அது.
 
இப்பொழுது கதவு தட்டும் ஓசையுடன் யாரோ நடக்கும் ஓசையும் சேர்ந்து கொள்ள, மீராவின் இதயத்துடிப்பு அதிகரித்தது ...

-தொடரும்

30 கருத்துகள்:

Kousalya சொன்னது…

திருடன் எப்ப வருவான் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.......!

Ananthi சொன்னது…

nalla aarambam..

Chitra சொன்னது…

நல்ல இடத்துல, பரபரப்பா வரும் போது ....தொடரும்....... ம்ம்ம்ம்.....

அமைதிச்சாரல் சொன்னது…

தொடருங்க..... ஆமா தொடரும் போட்டா அது தொடர்கதை இல்லையோ!!! எப்படி சிறுகதையாகும்?.

ஷஸ்னி சொன்னது…

நல்லா இருக்கே

யாதவன் சொன்னது…

அருமை...அருமை...வாழ்த்துகள்!

அனாமிகா துவாரகன் சொன்னது…

இனிமேல் யாரும் தொடரும் போட கூடாதுனு ஒரு சட்டம் கொண்டுவரணும். ஹூக்கும்.

LK சொன்னது…

@கௌசல்யா
கூடிய சீக்கிரம் வருவான் திருடன் . நன்றி

@ஆனந்தி
பாராட்டுக்கு நன்றி

@சித்ரா

அதுதாங்க ஒரு எழுத்தாளருக்கு அழகு

@சாரல்
இது சிறுகதை மாதிரி தொடர்கதை . தொடர்கதை மாதிரி சிறுகதை

@ஷஸ்னி
பாராட்டுக்கு நன்றி

LK சொன்னது…

@யாதவன்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

@அனாமிகா

இப்படிலாம் பேசக் கூடாது தப்பு
வருகைக்கு நன்றி

தக்குடுபாண்டி சொன்னது…

:)))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திருடன் - பாகம் 2 எப்ப? சீக்கிரம் போடுங்க - சஸ்பென்ஸ் தாங்கல.

பித்தனின் வாக்கு சொன்னது…

vanakkam LK nice article

ஜெய்லானி சொன்னது…

நல்ல ஆரம்பம்..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

கதை முயற்சி என்றீர்கள் . ஆனால் பல கதை கடந்தவர் போன்ற ஒரு சிறந்த தொடக்கம் . கதை மிகவும் அருமை !

SathyaSridhar சொன்னது…

Nalla irukkae kadhai,,enna mega kadhai yaa ipdi niraya break vittu konja scene liye mudichutengalae athuvum suspense scenela waiting for next episode..

LK சொன்னது…

நன்றி நாகராஜ்

@தக்குடு
:)

@சுதாகர்
நன்றி

@ஜெய்
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி

@ஷங்கர்
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
@சத்யா ஸ்ரீதர்
மெகா தொடரலாம் இல்லைங்க.

Vijay சொன்னது…

Tv mega serial'la oru 2-3 scenes mudinja odanae break varumae..adhu madhiriya idhu? 2 scene mudinjadhum thodarum pottuteenga..

அநன்யா மஹாதேவன் சொன்னது…

விறுவிறுன்னு போகுது!

sandhya சொன்னது…

இரண்டாம் பாகம் படிக்க ஆவலோடு காத்து கொண்டிரிக்கேன் ...கதை நல்லா இருக்கு ..

பிரசன்னா சொன்னது…

//ஏன் பயப் படர? முன்னாடி இரும்பு கேட் இருக்கு அதையும் பூட்டியாச்சு//

பயபுள்ளைங்க எப்போமே லேட் பிக் அப்புதான் ;)

இப்படி தொடரும் தொடரும்னு போட்டா பாவம்ல நாங்க :) பட்டுன்னு ஓடச்சிடுங்க..

Priya சொன்னது…

நன்றாக தொடங்கி இருக்கிங்க.

Mrs.Menagasathia சொன்னது…

கதை நல்லாயிருக்கு...

LK சொன்னது…

@விஜய்
மெகா தொடரா ??? நோ . எனக்கு அவ்ளோ அழுகாச்சியா கதை எழுதத் தெரியாது.

@அனந்யா
பாராட்டுக்கு நன்றி

@சந்தியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@பிரசன்னா
//பயபுள்ளைங்க எப்போமே லேட் பிக் அப்புதான் ;) //
சரிதான்
கவலைப் படாதீங்க .. ரொம்ப தொடரும் போடமாட்டேன்
@பிரியா
நன்றி

@மேனகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

goma சொன்னது…

திகில் அதிகரிக்கிறதே

கமலேஷ் சொன்னது…

நல்ல ஆரம்பம்..,,,

ஸாதிகா சொன்னது…

அடுத்த அத்தியாயம் எப்ப வரும் என்று காத்து இருக்கிறோம்.

LK சொன்னது…

@கோமா
நன்றிங்க

@கமலேஷ்

ரொம்ப நன்றி சார்
@சாதிகா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,. நாளைக் காலையில் அடுத்த பாகம் வரும்

Harini Sree சொன்னது…

super! correct aana edathula "thodarum" potu irukkel! seekrama thodarnthudungo! :)

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம் நல்ல முயற்சி, வார்த்தைச் சிக்கனமும் இருக்கு. அடுத்து என்னனு பார்த்துட்டுச் சொல்றேன்.

LK சொன்னது…

நன்றி பாட்டி