Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பதிவுலக போராட்டம்

இன்னிக்கு ஒரு பதிவை எழுதி அதை பப்ளிஷ் பண்றதுக்குள்ள எவ்வளவு சிரமம் ? முதல்ல மின்சாரம் இருக்கணும். அப்புறம் இணைய இணைப்பு இருக்கணும். இதையெல்ல...

இன்னிக்கு ஒரு பதிவை எழுதி அதை பப்ளிஷ் பண்றதுக்குள்ள எவ்வளவு சிரமம் ? முதல்ல மின்சாரம் இருக்கணும். அப்புறம் இணைய இணைப்பு இருக்கணும். இதையெல்லாம் தாண்டி பதிவை எழுதி பப்ளிஷ் பண்றப்ப தமிழிஷ் நல்ல நிலைமைல இருக்கணும். இல்லாட்டி அதில் யாரும் ஓட்டு போட மாட்டாங்க .

இன்னும் அலுவலகத்தில் இருந்து பதிவு போடுகின்ற  பதிவர்களாக இருந்தால்  மேலாளர் தொந்தரவு இல்லாமல்  இருக்கணும்.  இப்படி பலவித பிரச்சனைகளுக்கு இடையே நமது பதிவர்கள் இருப்பதால், பதிவர்கள் சார்பா ஒரு சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்பது என்றும் அதை அரசாங்கம் நிறைவேற்றாத பட்சத்தில்  தமிழகமே அதிரும் வண்ணம் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் பொதுக் குழு (யார் யார் உறுப்பினர்னு சின்ன புள்ளத் தனமா கேக்ககூடாது ) முடிவு பண்ணி இருக்கு.


நமது கோரிக்கைகள் :


பதிவர்களின் வீட்டிற்கு இருபத்துநான்கு மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும். மக்களுக்காக எவ்வளவு இன்றியமையாத அவசியமான பதிவுகள் போட வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாட்டி மக்கள் பணி தடைப் படுமே அதுக்காகத்தான் இதை கேட்கிறோம்.

பதிவர்கள் அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரவேண்டும், அனைத்து மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி அளித்த அரசுக்கு இலவச இணைய இணைப்பு வழங்குவது ஒரு பெரிய காரியம் அல்ல. இதுவும் மக்கள் பணி தங்கு தடையின்றி நடை பெற வேண்டுமே என்ற ஒரு எண்ணத்தில்தான் கேட்கிறோமே தவிர எதோ நாங்கள் இணையத்தில் இலவசமாக உலா வர அல்ல.

அலுவலகத்தில் இருந்து பதிவுகள் இடும் நண்பர்களின் நலனிற்காக தினமும் அலுவலக நேரத்தில் பதிவிற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் வேறு வேலைகள் செய்ய கட்டாயப் படுத்தக் கூடாது. ஏனென்றால் இப்பொழுது அலுவலகத்தில் இருந்து பதிவிடும் நண்பர்கள் மிகவும் சிரமப்பட்டு யாரும் பார்க்ககூடாது என்று மறைத்து மறைத்து எதோ திருட்டு வேலை செய்வது போன்று மறைத்து ஒளித்து செய்ய வேண்டி உள்ளது.

இந்த கோரிக்கைகள் மிக மிக எளிதான ஒன்றாகும். நாங்கள் என்ன ராஜ்ய சபா சீட்டா கேட்கிறோம் இல்லை ஆட்சியில் பங்குக் கேட்கிறோமா வெறும் மூன்று கோரிக்கைகள்தான் . அதை இந்த அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், ஏற்கனவே சொல்லியப் படி மாபெரும் போராடும் நடைபெறும்.

பி.கு : இதற்கு மாபெரும் ஆதரவு உலகெங்கிலும் இருந்து வந்துக் கொண்டுள்ளது,. அமீரகப் பெண் பதிவர்கள் சார்பில், அனன்யா இந்தப் போராட்டத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார், மேலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பதிவர்கள் சார்பில் ப்ரியாவும், கனடா நாடு பதிவர்கள் சார்பில், அப்பாவி தங்கமணியும் வாழ்த்து செய்திகளை அனுப்பி உள்ளனர். மிக முக்கியமாக, அம்பத்தூர் பதிவர், நமது கீதா பாட்டி இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை சொல்லி உள்ளார்.

டிஸ்கி : இது சிரிக்க மட்டும்

48 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

ஆசை தோசை அப்பள்ள வடை ...நல்லா இருக்கு ..

Kousalya Raj சொன்னது…

எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்பதை இந்த பின்னூட்டம் மூலமாக தெரியபடுத்துகிறேன்... ! போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்....!!

Ananya Mahadevan சொன்னது…

சூப்பர் கார்த்திக். அருமையான கற்பனை. எப்படி இப்படி எல்லாம்? டமிலிஷ்ல என்னமோ தொந்திரவு. வோட்ட முடியலை!

இதுல இருந்து என்ன தெரியுது மக்களே? இந்த எல்.கே ப்ளாக்ஸ் படிச்சுண்டு, வோட்டு போட்டுண்டு, பின்னூட்டம் போட்டுண்டு, புதுசா போஸ்டுக்கு ஐடியா தேடிண்டு, இதே தான் இவனுக்கு முழு நேர வேலைன்னு உங்களுக்கு தெரியலை? :))) ஆனா, நிஜம்மாவே சூப்பர் ஐடியா.. ஒரு மனு தட்டி விடு. .பார்க்கலாம்!

வாழ்த்துக்கள்!

அமைதி அப்பா சொன்னது…

டிஸ்கி : இது சிரிக்க மட்டும்//

ஆரம்பத்திலிருந்து மகிழ்ச்சியா படிச்சிட்டு வந்தேன். சரி, அரசாங்கமும் நம்ம கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் அப்படின்னு நினைச்சு படிச்சா, கடைசில இது சிரிக்க மட்டும்னு சொல்லி அழ வச்சிட்டீங்களே.
நன்றி.

தக்குடு சொன்னது…

//அலுவலக நேரத்தில் பதிவிற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும்// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நித்யம் நீங்க வேலை பாக்கர்தே(ஆபீஸுக்காக) ஒரு மணி நேரம்தான்னு கேள்விப்பட்டேன்...:)

சுந்தரா சொன்னது…

//பதிவர்கள் அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரவேண்டும், அனைத்து மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி அளித்த அரசுக்கு இலவச இணைய இணைப்பு வழங்குவது ஒரு பெரிய காரியம் அல்ல. //

சூப்பர்!!! :)

Kasu Sobhana சொன்னது…

பதிவுலக கோரிக்கைகள் போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்று, எல்லா பதிவர்களும் அந்த ஆனந்தத்தில் திளைக்க வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணும விரதம் இருக்க நாங்கள் தயார்!

குந்தவை சொன்னது…

//அலுவலகத்தில் இருந்து பதிவுகள் இடும் நண்பர்களின் நலனிற்காக தினமும் அலுவலக நேரத்தில் பதிவிற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் வேறு வேலைகள் செய்ய கட்டாயப் படுத்தக் கூடாது. //

என்ன ஒரு நல்ல மனசு...

கார்த்திக் நீங்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சீங்கன்னு வச்சிக்கோங்க.... எனக்கு கண்டிப்பா ஒரு வேலை போட்டு தரணும் என்று இப்பவே ஒரு application போட்டுக்கிறேன்.

dheva சொன்னது…

நியாயமான கோரிக்கைகள் எழுப்பியிருக்கும் நண்பர் கார்த்திக்கின் பதிவினை நான் வழி மொழிகிறேன். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் துபாட் எட்டாவது வட்ட கிளை சார்பாக உண்ணாவிரத போராட்டமும் மேலும் கவனிக்காத பட்சத்தில் உலக பதிவர்களை திரட்டி அகில உலகமும் ஸ்தமிபிக்கும் வகையில் பேரணியும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா....தம் புடிச்சி எழுதிட்டேன் கார்த்திக்...இப்போ சிரிச்சுக்கிறேன்...ஹா ஹா...ஹா....!

எல் கே சொன்னது…

@சந்தியா

நன்றி :)

@கௌசல்யா
உங்க ஊர்லயும் போராட்டம் நடத்துங்க

@அனன்யா
நன்றிஹை

@அமைதி அப்பா
இதுக்குத்தான் கீழ இருந்து படிக்கணும்னு சொல்றது

எல் கே சொன்னது…

@தக்குடு
நீ அதுகூட பண்ணாம மூக்கு ஆராய்ச்சியில் இருக்கிறாய் என்று கேள்விப் பட்டேன்

@சோபனா

அந்த உண்ணும் விரதப் போராட்டத்துக்கு நம்ம அப்பாவியோட இட்லி வரும்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

எல் கே சொன்னது…

@சுந்தரா

நன்றி


@குந்தவை

கண்டிப்பா

@தேவா

நன்றிங்க. பெரிய அளவுல இருக்கணும் போராட்டம் இப்பவே சொல்லிட்டேன். காசை பற்றி கவலை வேண்டாம்.

Geetha Sambasivam சொன்னது…

மிக முக்கியமாக, அம்பத்தூர் பதிவர், நமது கீதா பாட்டி இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை சொல்லி உள்ளார்.//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலைமையே நாங்க தான்! ஆதரவு நீங்க தெரிவிக்கணுமாக்கும்!!!!:P:P:P

Geetha Sambasivam சொன்னது…

மிழகமே அதிரும் வண்ணம் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் பொதுக் குழு (யார் யார் உறுப்பினர்னு சின்ன புள்ளத் தனமா கேக்ககூடாது ) முடிவு பண்ணி இருக்கு.//

க்ர்ர்ர்ர்ர்ர்ர் பொதுக்குழு,அந்தக்குழு, இந்தக்குழு எல்லாமே நாங்க தான் இங்கே. நாங்க சொல்ற தீர்மானத்தை நீங்க ஆதரிச்சு ஓட்டணும், அதை விட்டுட்டு..............

butterfly Surya சொன்னது…

hahaha.. நல்லாயிருக்கு.

உடனே களத்தில் இறங்கணும். செம்மொழி மாநாட்டுகுள்ள மேட்டர முடிக்கணும்..

Asiya Omar சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

இவ்வளவு கேட்டவரு, அப்பிடியே அரசாங்கம் சார்பில் வாரம் ரெண்டு பதிவும் கேட்டுருக்கலாம்! யோசிக்க முடியல சார்!

தோழி சொன்னது…

எனது ஆதரவும் உண்டு... ! போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்....!!

பத்மநாபன் சொன்னது…

இதற்கு ஓமன் நாட்டு கிளை கழகத்தின் ஆதரவும் வாழ்த்தும்...

ஜெயந்தி சொன்னது…

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

S Maharajan சொன்னது…

சார் போராட்துல என்னையும் சேர்த்து கொள்ளுங்கோ!

துபாய் கிளை மன்றம்

Sukumar சொன்னது…

ரொம்ப முக்கியமான பிரச்சினை சார்.. எங்கே போறது யார்கிட்ட கேக்குறதுன்னு தவிச்சிக்கிட்டிருந்தேன்.. சீக்கிரம் அரசு ஒரு முடிவு எடுக்கனும்... நாங்க உங்களைதான் சார் நம்பிக்கிட்டிருக்கோம்....

ஹுஸைனம்மா சொன்னது…

/பதிவர்கள் அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரவேண்டும்,//

இணைப்பு மட்டும் இலவசமாத் தந்துட்டு, அவங்க குடும்ப கம்பெனியிலதான் “மோடம்” வாங்கணும்னு கண்டிஷன் போடாம இருந்தாச் சரி!!

ஜெய்லானி சொன்னது…

சீக்கிரம் ஒரு சின்னம் + கொடி உருவாக்குங்க......

பத்மா சொன்னது…

இதுக்கு ஒரு கூட்டம் கூட்டுங்களேன் :))

Priya சொன்னது…

கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் பண்ணும் அளவிற்கு பதிவுகலம் வந்தாச்சா!? வெல்!

பல நாட்டு பெண்மனிகளின் அதரவு இருப்பதால் கண்டிப்பா இந்த போராட்டம் வெற்றி பெறும்:)

அன்புடன் மலிக்கா சொன்னது…

என்னையும் ஆதரவார்களில் ஒருவராக இணைச்சுக்கோங்க. அந்த கரண்ட் தொல்லை இங்கேயும் தொத்திக்கிச்சு. பதிவுகல தேரோட்ட ஸ்ஸ்ஸ் போராட்ட தலைவர் வாழ்க!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சவுதி அரேபியா சார்பில் நம்மோட ஆதரவும் உண்டு கார்த்திக்.. நல்ல யோசனைதான்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆஹா....ஆரம்பிச்சிட்டங்கையா...

எல் கே சொன்னது…

@பாட்டி
இப்படிலாம் அறிக்கை விட்ட, உங்களை பதவி நீக்கம் பண்ணிடுவோம்

@சூர்யா

கண்டிப்பா . இல்லடி மாநாட்டு சமயத்தில போராட்டம் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஆசியா

நன்றிக்கா

@பருப்பு

வேண்டாம். வேண்டாம். அத நாமலே செய்யலாம்.

@தோழி
வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரீங்க

@பத்மநாபன்

இத பாருங்க, தோஹா கிளை மட்டும் ஆதரவு தரள. என்ன பண்ணலாம்

எல் கே சொன்னது…

@ஜெயந்தி
நன்றிங்க

@மகாராஜன்

கண்டிப்பா

@படமா

கூட்டம் கூடி முடிவு எடுத்தாச்சு

@சுகுமார்

நன்றிங்க... கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருவோம்

முதல் வரவுக்கு நன்றி


@ஹுசைன் அம்மா

சரியா சொன்னீங்க

@ஜெய்
வேலை நடந்து கொண்டு இருக்கிறது

@பிரியா

நன்றிங்க

@மலிக்கா
அப்படியா அப்ப அவசியம்தான்

எல் கே சொன்னது…

@ச்டார்ஜன்

நன்றிங்க

@ஸ்ரீராம்

:)

hayyram சொன்னது…

மின்சாரக் கோரிக்கை பெரிய கோரிக்கை தாங்க. எனது ஆதரவும் உண்டு. அன்புடன்
ராம்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//தினமும் அலுவலக நேரத்தில் பதிவிற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் வேறு வேலைகள் செய்ய கட்டாயப் படுத்தக் கூடாது//

என்னாது!!.. வெறும் ஒரு மணி நேரம்தானா????. அஞ்சாறு மணி நேரம் வேணும்ன்னு கேக்கத்தெரியாத எல்.கே ப்ளாக்கை மொதல்ல ஹேக் பண்ணுங்கப்பா :-))))).

அப்றம், அரசாங்கமே இலவச லேப்டாப்பும் கொடுக்கணும்ன்னு ஒரு கோரிக்கையை சேர்த்துக்கோங்க.

எல் கே சொன்னது…

@சாரல்

உங்க கோரிக்கைகளும் ஏற்கப்பட்டது. அதுக்காக என்னோட தளத்தை ஹேக் செய்யும் முயற்சியா ??? நான் அப்பாவிங்க

அமைதி அப்பா சொன்னது…

@அமைதி அப்பா
இதுக்குத்தான் கீழ இருந்து படிக்கணும்னு சொல்றது //

மிகவும் ரசித்தேன் சார்.
நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நியாயமான கோரிக்கைகள். அரசு ஆவன செய்யும் என நினைக்கிறேன்.

ரோஸ்விக் சொன்னது…

இதுக்கு அவனுக ராஜ்யசபா சீட்-டே கொடுத்துருவாங்க... :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஹா ஹா ஹா... சூப்பர்... எப்படி இப்படி எல்லாம்... போராட்டம் தானே... நடத்திட்டா போச்சு... (வெவரமா எங்க பேரை எல்லாம் கோத்துவிட்டுடீங்க... போலீஸ் புடிச்சா எங்களையும் சேத்து இல்ல பிடிக்கும்....நல்லா பிளான் பண்ணித்தான்யா பண்றாய்ங்க....ஹா ஹா ஹா...)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//அலுவலகத்தில் இருந்து பதிவிடும் நண்பர்கள் மிகவும் சிரமப்பட்டு யாரும் பார்க்ககூடாது என்று மறைத்து மறைத்து எதோ திருட்டு வேலை செய்வது போன்று மறைத்து ஒளித்து செய்ய வேண்டி உள்ளது//

ROFTL..........

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//LK Said -
@தக்குடு
நீ அதுகூட பண்ணாம மூக்கு ஆராய்ச்சியில் இருக்கிறாய் என்று கேள்விப் பட்டேன்//

எவ்ளோ தான் சிரிக்கறது... ஹா ஹா ஹா... முடியல... முடியல...

prince சொன்னது…

என்னது நம்ம கார்த்திக் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போறாரா? தானை தலைவன் பாகீரதி வாழ்க??


வெற்றிபெற்றால் நாங்களும் உடன் வருவோம் தோல்வியடைந்தாலும் வருவோம் சுடுகாடுவரை அதுக்கு மேல நீங்க பார்த்துக்குங்க...

(பி கு)தலைவருக்கு ஏதும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல..

எல் கே சொன்னது…

@ரோச்விக்

:))))

@நாகராஜ்
சொல்லுங்க, உங்க ஊர்லயும் ஒரு போராட்டம் நடத்தலாம்

@அப்பாவி அக்கா
அதெப்படி தனிய போறது ....

@பிரின்ஸ்
ஏன் ஏன் இந்தக் கொலை வெறி

Harini Nagarajan சொன்னது…

//எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நித்யம் நீங்க வேலை பாக்கர்தே(ஆபீஸுக்காக) ஒரு மணி நேரம்தான்னு கேள்விப்பட்டேன்...:)// hahahaha unmai unmai unmaye! :P

Harini Nagarajan சொன்னது…

//இந்த கோரிக்கைகள் மிக மிக எளிதான ஒன்றாகும். நாங்கள் என்ன ராஜ்ய சபா சீட்டா கேட்கிறோம் இல்லை ஆட்சியில் பங்குக் கேட்கிறோமா //

ithil siru pizhai irukkirathu! yeppadi irukkanumna "naanga yenna yethir katchi aarambichu perumbaanmai kamichu )*#@) kanakkula panam kekkaroma?? :P " ithaan ippa trend.
Courtesy: Guru Sihyan (new film)

neenga en problem-a vittuteenga. pathivargalukku ilavasama nallaa work panra computer or laptop ilavasama kudukkanum. matrum 3 allathu 4 maathaththirkku oru murai free service panna aalai anuppa vendum! :P

எல் கே சொன்னது…

@harini
adutha kattap porattam athukkuthaan