மே 23, 2010

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு

இன்றைக்கு  எனது பெற்றோரின் 35ஆவது திருமண தினம். அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. வணங்குகிறேன்.  அவர்களுக்கு நீண்ட  ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

எனக்கு விருது குடுத்த ஜெய்லானிக்கு நன்றி 

***********************************************************

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு பதிவுக்கு என்னை அநன்யா அழைத்து இருந்தார்கள். அதை இப்பொழுதுதான் எழுத முடிந்தது.

சமீப காலமா புதுப் படங்கள் எதையும் நான் பார்ப்பது இல்லை. அதனால் புதுப் படங்கள் இந்த வரிசையில் இடம் பெறவில்லை என்பதை இப்பவே சொல்லிடறேன்.

1 எதிர் நீச்சல் 

 திரு. கே. பாலச்சந்தர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று. நாகேஷின் நடிப்பின் மற்றொரு பக்கத்தை நமக்கு காண்பிப்பதை இருந்தது. இப்பொழுது நகைச்சுவை நடிகர்கள் என்று கூறிக் கொண்டு அலையும் சிலர் , இவரிடம் இருந்து கற்றுக்  கொள்ளவேண்டியது நிறைய. இந்தப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாட்டை யாராலும் மறக்க இயலாது.

2. காதலிக்க நேரமில்லை

 ஸ்ரீதர் அவர்கள் இயற்றிய மற்றொரு வெற்றிப் படம்.  ஒரு காதல் கதையை மிக வித்தியாசமாக கையாண்டு இருப்பார் இதில். அதேபோல் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லு இடமும் விதமும் மிக அருமை. இந்தப் படத்தில் பாடல்களும் மிக அருமை. அவற்றில் இருந்து ஒன்று.
3 . அபியும் நானும் 

    தாய்-மகன் , தாய்-மகள் பாசக் கதைகள் தமிழ் திரை உலகில் ஆயிரம். அவற்றில் இருந்து மாறுபட்டு, ஒரு தந்தையின் பாசத்தை காட்டும் விதமாக இந்தப் படம் . இதில் பிரகாஷ் ராஜின் நடிப்பு மிக அருமை. தன் மகளின் காதலை அறிந்து வரும் கோபம் ஆகட்டும் , பின்னால்  மகளுக்காக தன்னை மாற்றிக் கொள்வதாகட்டும் அந்தப் பாத்திரத்துக்கு கனம் சேர்த்துள்ளார் அவர். இதில் இருந்து ஒரு பாடல் 
4 . தளபதி 

 தலைவர் நடிச்ச எல்லாப் படங்களும் சூப்பர் படங்கள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தப் படத்தில் , நண்பனுக்காக எதையும் தியாகம் செய்யும் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த இரு பாத்திரங்களும், மகாபாரத துரியோதனன் ,கர்ணன் பாத்திரங்களை ஞாபகப் படுத்தும்.  இதில் இருந்து ஒருப் பாடல். 5 சலங்கை ஒலி

ரஜினி படத்தை சொல்லிட்டு கமல் படம் சொல்லாட்டி எப்படி? ஒரு கலைஞனின் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்களை மிக அருமையாக சொல்லியுள்ளனர் இதில் . இதில் வரும் பாடல்களும், நடனங்களும் மிக மிக அருமை. மாதிரிக்கு ஒன்று. 6 லவ் டுடே 

விஜய் நடித்து (உண்மையா நடிச்சாருங்க இதில) வந்த படங்களில் இது ஒரு நல்லப் படம். பொறுப்பற்ற ஒரு இளைஞனாக காதலியின் பின்னால் சுத்துவதாகட்டும், தந்தை இறந்தது தெரிந்து கதருவதாகட்டும் மிக நன்றாக செய்திருப்பார் விஜய். இப்பொழுது ஏன் இவ்வாறு நடிப்பதில்லை என்று புரியவில்லை.  இதில் விஜயை விட அவரது தந்தையாக வரும் ரகுவரன் கலக்கி இருப்பார். 7 . ஆசை 

அஜித் நடித்த சிறந்தப் படம் என்றே சொல்லுவேன் இதை. மனைவியின் சகோதரியை அடைய முயற்சிக்கும் வில்லனாக பிரகாஷ் ராஜ் , அதை எப்படி முறியடித்து சுவலக்ஷ்மியை அஜித் திருமணம் செய்கிறார் என்பதே கதை. மிக அழகாக படமாகி இருப்பார்கள் இந்த கதையை.


8 . வைதேகி காத்திருந்தாள்

  கேப்டன் நடித்து வந்த ஒரு சிறந்தப் படம். திரைகதையில் பெரியப் புதுமை இல்லை என்ற பொழுதும் இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது .9 . வஞ்சிக் கோட்டை வாலிபன் 

  காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து வந்த இந்தப் படம் இதில் வரும் நடனதிற்காகவே பலரால் விரும்பப் பட்டது. இதோ வைஜயந்தி மாலாவும், பத்மினியும் ஆடும் இந்தப் போட்டி நடனத்தை பாருங்கள். 10 . அஞ்சாதே 

   இரு வேறுபட்ட குணங்களை கொண்ட நண்பர்கள் , எதிர்பாராது ஏற்படும் ஒரு சம்பவத்தால் , விரோதிகளாகவும் அதற்கு முன்பு இருந்த குணநலன்களுக்கு மாறுபட்டும் நடக்கின்றனர். என்ன காரணமோ, இந்தப் படம் எனக்கு பிடித்து இருந்தது. தொடர் பதிவுனா கண்டிப்பா யாராவது கூப்பிடணுமாம். அதனால நான் கூப்பிட போறது 

1 தக்குடு பாண்டி

2 வானதி 

3 ஹரிணி 

4 கௌசல்யா 


39 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. வணங்குகிறேன்.//

தாராளமா வாழ்த்தலாம், வாழ்த்தியும் வணங்கலாம், அரசியல்வாதிகள் அதுவும் இந்த திராவிட அரசியல்வாதிங்க சொல்ல ஆரம்பிச்சது என்னமோ அதான் சரினு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கப்பா! :P:P:P
ஈசனடி போற்றி, எந்தையடி போற்றினு முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளையே சொல்றோமே?? இனிமேலே கஷ்டப் பட்டு மாத்திக்குங்க! நறநறநறநற

கீதா சாம்பசிவம் சொன்னது…

இப்போ கோபம் குறைஞ்சு! :))))

உங்க அப்பா, அம்மாவுக்கு எங்க வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துகள். பதிவும் நல்லா இருக்கு, அநேகமா எல்லாப் படங்களுமே பார்த்தது, கடைசிப் படம் தவிர.

பெயரில்லா சொன்னது…

நல்ல தேர்வுகள் எல்.கே.

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல தேர்வுகள். எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ் சொல்லும் "நான் மாது வந்திருக்கேன்.." வசனம் மறக்க முடியாதது...

தக்குடுபாண்டி சொன்னது…

//அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. வணங்குகிறேன்.// me to LK!

unga post poodarthukku roomba time aagum sariyaa?? becos 'puliyotharaiyum thachchumammuvum' natula stop panna mutiyaathu...:)

பெயரில்லா சொன்னது…

nice choice

அநன்யா மஹாதேவன் சொன்னது…

உங்க அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!
அருமையான செலக்ஷன். வெரி வெல் டன். எனக்கும் சலங்கை ஒலி ரொம்ப பிடிக்கும். எல்லாருமே அந்த படத்தை செலக்டு பண்ணிட்டாங்கன்னு தான் விட்டு வெச்சேன்! :)
மாது வந்திருக்கேன், சேதி கேட்டோ பாட்டு, அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா எல்லாமே ஜூப்பர்!

LK சொன்னது…

@கீதா

சரி பாட்டி மாத்திக்கிறேன்

@அம்மணி

நன்றி..

@ஸ்ரீராம்
மாறாக முடியாத வசனம்

LK சொன்னது…

@தக்குடு

நிதானமா போடு அம்பி ஒன்னும் அவசரம் இல்லை
நன்றி

@சரஸ்வதி

நன்றி

@அனன்யா
வருகைக்கு நன்றி.. சேதி கேட்டோ எனக்கும் பிடிக்கும். வீடியோ கிடைக்கலை

Mrs.Menagasathia சொன்னது…

உங்கள் பெற்றோர்க்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!! நல்ல தேர்வுகள்!!

சுந்தரா சொன்னது…

உங்க பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கமும்.

படங்களோட தேர்வு அருமையாயிருக்கு.

பெயரில்லா சொன்னது…

அப்பாக்கும் அம்மாக்கும் என் வணக்கம் .இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Ananthi சொன்னது…

good collections..

Unga parents ku manamarntha vazhthukkal..

asiya omar சொன்னது…

தங்களின் தாய் தந்தையர்க்கு என் இதயங்கணிந்த வாழ்த்துக்கள்.
படங்களின் தொகுப்பு அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

உங்கள் பெற்றோருக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்துப்படமும் நல்ல படைப்புகள். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மின்மினி சொன்னது…

உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துகள். படங்கள் தேர்வு அருமை.

LK சொன்னது…

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி மேனகா

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சுந்தரா

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ஆனந்தி

LK சொன்னது…

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ஆசியா

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி மின்மினி

Chitra சொன்னது…

Congratulations for the award!

Convey our anniversary wishes to your parents.


nice songs. :-)

பத்மநாபன் சொன்னது…

உங்கள் தாய் தந்தை க்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்...நீங்கள் குறிப்பிட்ட
பெரும்பாலான படங்கள், ரசனை ஒற்றுமையை காட்டுகிறது.. அதிலும் கா.நேரமில்லை - பாலையா - நாகேஷ் அலப்பறை என்றென்றும் பசுமையாக இருக்கும்..

ஜெய்லானி சொன்னது…

தங்களின் தாய் தந்தையர்க்கு இனிய திருமன நாள் நல் வாழ்த்துக்கள்.


பட வரிசை இனிமை.....

Harini Sree சொன்னது…

Muthal vaazhthu ungal petrorukku! Irandaavathu ungalukku! :)

Miga arumayaana thervugal! Ithil pala padangal enakkum pidiththavaye.

Neenga aduththa thodar pathivuku enna azhaikkarathukkulla en computer a repair senchu yepdiyaavathu pending irukkara rendu thodar pathivayum potudaren! aamam kandippa tamizh padangal thaan podanuma?? concession yethuvum illaya?? :P

LK சொன்னது…

// Chitra said...

Congratulations for the award!

Convey our anniversary wishes to your parents.


nice songs. :-)///

நன்றி சித்ரா

LK சொன்னது…

//பத்மநாபன் said...

உங்கள் தாய் தந்தை க்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்...நீங்கள் குறிப்பிட்ட
பெரும்பாலான படங்கள், ரசனை ஒற்றுமையை காட்டுகிறது.. அதிலும் கா.நேரமில்லை - பாலையா - நாகேஷ் அலப்பறை என்றென்றும் பசுமையாக இருக்கும்..//

ஆமாம் சார் . மிக அருமையான விரசம் இல்லாத நகைச்சுவை

@ஜெய்லானி
நன்றி ஜெய்

@ஹரிணி

நன்றி. ஆமாம் தமிழ் படம் மட்டுமே. விட்டா நீ இங்கிலீஷ் படம் மட்டும்தான் போடுவ.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களது பெற்றோர்களுக்கு திருமண நாள் - எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு எல்லா அருளையும் வழங்கட்டும்.

நல்ல தேர்வு. சலங்கை ஒலி எனக்கும் பிடிக்கும்.

SathyaSridhar சொன்னது…

Unga Appa Amma vukku en iniya Thirumana naal vazhthukkal..

Neenga post panirukka ella padamum enakkum pidikkum mukyama ethir neechal rombha pidikkum.

LK சொன்னது…

Thanks nagaraj and sathyaa

Priya சொன்னது…

அம்மா அப்பாவிற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிடித்த படங்கள் அனைத்தும் அருமையான படங்கள்...

ஹுஸைனம்மா சொன்னது…

//அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.//

நானும்!! வாழ்த்துகள்!!

Harini Sree சொன்னது…

@LK sari ungaludaya vendugolukku inangi pidiththa tamizh padangal 10 pottudaren! :D :P

செந்தில்குமார் சொன்னது…

உங்கள் தாய் தந்தையர்க்கு என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு தோழரே...........

செந்தில்குமார்.அ.வெ

padma சொன்னது…

பெற்றோருக்கு வாழ்த்துக்கள் .
பத்து படங்கள் அனைத்தும் அருமை

geetha santhanam சொன்னது…

உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள். சலங்கை ஒலி ஒரு காவியம் என்று சொல்லலாம். அந்த வரிசையில் நாயகன், அன்பே சிவம்... (நான் கமல் ஹாசன் ரசிகை இல்லை என்றாலும் இந்த படங்கள் அருமையானவை என்று ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்)--கீதா

அப்பாவி தங்கமணி சொன்னது…

அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

விருதுக்கு வாழ்த்துக்கள் LK

இதுல பெரும்பாலும் எல்லாமும் என்னோட பிடிச்ச படங்களும் கூட. நல்ல தேர்வு

LK சொன்னது…

@பத்மா
நன்றிங்க

@கீதா
நானும் கமல் ரைசகன் இல்லை. இந்தப் படம் எனக்கு மிகப் பிடித்த படம்

@அப்பாவி
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

குந்தவை சொன்னது…

உங்களது பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்தையும் வணக்கத்தையும் சொல்லுங்கள். கடவுள் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

Mitr Friend - Bhushavali சொன்னது…

Salangai Olki, Abhiyum Naanum, Kaadhalikka Neramillai - I can watch them over for a 100 times or more!!!

Standing in the junction on 3 rivers
Fashion Panache - The Stripey Dress

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பாகீரதி,

பத்து படங்களும், பிடித்த காட்சிகளுடன், விளக்கத்துடன் விவரித்தது அருமை அருமை.

அருமைப் பெற்றோருக்கு இனிய மண நாள் வாழ்த்துகள்.

நல்வாழ்த்துகள் பாகீரதி
நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கார்த்திக்

தளத்தின் பெயரிலேயே பாகீரதி என அழைத்து விட்டேன்.

நல்வாழ்த்துகள் கார்த்திக்
நட்புடன் சீனா