மே 22, 2010

திருடன் - இறுதி பாகம்

பாகம் I
பாகம் IIஅவளின் குரல் கேட்டு அதிகாலை உறக்கத்தை கெடுத்த கோபம் பாதியும் , குழப்பம் மீதியுமாய்    ஓடி வந்தான் வெங்கட் .

அங்கு முன்பக்கம் செல்லும் வழியில் உள்ள மூன்று விளக்குகளும் உயிருடன் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. 

"நைட் லைட்லாம்  ஆப் செஞ்சுட்டு தான வந்தீங்க?"

"ஆமாம் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, மாடிக்கு போயிட்டு வரப்ப எல்லாம் ஆப் ஆகித்தான இருந்துச்சி ", தூக்கக் கலக்கமும், குழப்பும் இனணிந்த குரலில் வெங்கட். 


"சரி விடு வா. நேரம் ஆகுது , ஆபிஸ் கிளம்பனும் . சாயங்காலம் பார்த்துக்குவோம் "


"எனக்கு பயமா இருக்குங்க,. தனியா வேற இருப்பேன் பகல்ல. "

"எதுக்கு பயம். முன்னாடி கேட்டை பூட்டிரு. தெரியாதவங்க யார் வந்தாலும் திறக்காத. சாயங்காலம் நான் வந்தப்புறம் ., முன் பக்க மாடி வீட்ல கேட்டுப் பாக்கலாம்."


இன்னும் பயம் தெளியாத மனதுடன் , வேலைகளில் மூழ்கினாள் மீரா . வெங்கட்டுகோ அலுவலகம் செல்லும் அவசரம். 

மதிய  நேரம்  அலுவலகத்தின் வேலைகளில் மூழ்கி இருந்தான். அலைபேசியில் "பச்சை நிறமே " அலற,  அழைப்பை உயிர்ப்பிதவாறே "சொல்லு மீரா " என்றான்,


"சாயங்கலாம் சீக்கிரம் வந்துருவீங்களா ?"


"ஏன் என்ன விஷயம்? எங்கயாவது போகனுமா ?"


"இல்லைங்க . தனியா இருக்க பயமா இருக்கு "


அப்பொழுதுதான் இரவு நடந்த விஷயங்கள் நினைவுக்கு வர
"இன்னும் அதையே நினச்சிட்டு இருக்கியா ? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் எப்பவும் போலத்தான் வருவேன் ."

"சரி சீக்கிரம் வாங்க. லேட் பண்ணிறாதீங்க".


ஏழு ஆக சில நிமிடங்கள் பாக்கி. இன்னும் வராத வெங்கட்டை மனதில் திட்டியவாறே , வாயிலின் மேல் கண்ணாக நின்றுக் கொண்டு இருந்தால் மீரா. வெங்கட்டின் வண்டி சப்தம் கேட்டு வெளியில் வந்த அவளை, "சீக்கிரம் காபி கொடு. குடிச்சிட்டு முதல்ல மாடி வீட்டுக்குப் போயிட்டு வரேன் ".


அவன் தயாராகி வெளியில் செல்லவும், முன் வீட்டு பாபு வரவும் சரியாக இருந்தது,.


"வாங்க பாபு. உங்களைதான் பாக்க வந்தேன் நீங்களே இங்க வந்துட்டீங்க.  என்ன விஷயம் சொல்லுங்க "


"நேத்து நைட் யாரோ வந்த மாதிரி இருந்துச்சி. அதான் உங்களுக்கு எதாவது தெரியுமான்னு"


 "ஆமாம் நேத்து யாரோ வந்த சத்தம் கேட்டுச்சு. ஜன்னல் தட்டின மாதிரியும் இருந்துச்சி ஒரு 11 மணி வாக்கில"


"எனக்கு சத்தம் எதுவும் கேக்கல . ஆனா யாரோ டார்ச் அடிச்ச வெளிச்சம் பார்த்தேன் ."


வெங்கட்டின் மனதில் எதோ ஒன்று மின்னல் வெட்ட ,"ஒரு நிமிஷம். எத்தனை மணிக்கு நீங்க வெளிச்சத்தை பார்த்தீங்க? "


"ஒரு பத்தரை மணி இருக்கும்னு நினைக்கிறன் . "


வெங்கட்டுக்கு இப்பொழுது தெளிவாக புரிந்தது .

"பாபு ! நீங்கதான் லைட்ட போட்டதா ??"

"ஆமாம் ஏன் ??"

"திருடனும் வரல யாரும் வரல. அவங்க வீட்டு மீனுக்கு உணவுப் போட நாந்தான் டார்ச் எடுத்துட்டுப் போனேன். அப்ப அந்த வெளிச்சம் ஜன்னல் வழியா உங்க வீட்ல விழுந்திருக்கு . அதைப் பார்த்த நீங்க யாரோ வந்திருக்காங்கன்னு நினச்சு வந்து கேட்டை அசைச்சுப் பார்த்து இருக்கீங்க,. அந்த சத்தத்தைக் கேட்டு நாங்க யாரோன்னு நினைச்சு பயந்துப் போய்ட்டோம் . அவ்ளோதான் " இது வெங்கட்.
இதைக் கேட்டு மீரா , "ஆக உங்க நினைப்புல நாங்க திருடன், எங்க நினைப்புல நீங்க திருடன்னு சொல்ல, மூவரும் சிரித்தனர்.


முற்றும்

பி.கு இது எனது முதல் முயற்சி. இந்த கதையை தொடர்ந்துப் படித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி .

38 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

நல்லா விறுவிறுப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்-கீதா

Chitra சொன்னது…

நல்ல முயற்சி. அத்தனை பில்ட்-அப்புக்கு ......... இன்னும் ஸ்ட்ராங்கா முடிவு கொடுத்து இருக்கலாம். :-)

அனாமிகா துவாரகன் சொன்னது…

ha ha ha............

//அத்தனை பில்ட்-அப்புக்கு ......... இன்னும் ஸ்ட்ராங்கா முடிவு கொடுத்து இருக்கலாம். :-)//
Repeattu......

ஜெய்லானி சொன்னது…

இன்னும் இது மாதிரி நிறைய எழுதுங்க

Mrs.Menagasathia சொன்னது…

congrats,nalla irukku....continue!!

sury சொன்னது…

இல்லாத கருப்பு பூனையை இருட்டு உள்ளில் தேடுவது என்பார்கள்.
புலியை விட புலி தரும் கிலி பெரிது என்பதை
பெரிதும் உணர்த்துகிறது தங்கள் கதை.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

தக்குடுபாண்டி சொன்னது…

hahahahaha...;) yeppudi LK?? charactersoda name mattum LK & sowmya-nu maathi vaachikkatumaa??..:)

LK சொன்னது…

@கீதா சந்தானம்

பாராட்டுக்கு நன்றி

@சித்ரா

வருகைக்கு நன்றி

@அனாமிகா
வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஜெய்

நன்றி. உங்கள் ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது

@மேனகா

வருகைக்கு நன்றி

@சூரி தாத்தா

அதே அதே

@தக்குடு
கண்ணா, அது உன் இஷ்டம், என்ன பேர் வேணாலும் வச்சிக்கோ

Harini Sree சொன்னது…

Nice ending! :) Kathai bale! :)

சேட்டைக்காரன் சொன்னது…

ஒரே மூச்சில் அனைத்து பாகங்களையும் வாசித்து முடித்தேன். வெரி குட்! :-)

LK சொன்னது…

@ஹரிணி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

@சேட்டை

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

மூன்றையும் இப்பொழுதுதான் படித்தேன்! அருமை.

கலக்குங்க! :)

asiya omar சொன்னது…

ப்ளாகில் எழுதறவங்க கதை கவிதை இப்ப அசத்துறது தான் சூப்பராக இருக்கு.L.K உங்க முயற்சியும் வீண் போகலை,நல்லா தான் எழுதறீங்க.

rajan சொன்னது…

முதல் கதையிலேயே அனைவரது உள்ளங்களையும் "திருடி" விட்டீர்கள்.
அருமையான முயற்சி.

வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்

ஜெய்லானி சொன்னது…

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

LK சொன்னது…

@பலாபட்டரை ஷங்கர்

நன்றி நண்பரே, பாராட்டுக்கும், வருகைக்கும்

@ஆசியா
உண்மைதான் சகோதரி. பலர் கலக்கிட்டு இருக்காங்க. நன்றி பாராட்டுக்கும், வருகைக்கும்

@ராஜன்
நன்றி நண்பரே, பாராட்டுக்கும், வருகைக்கும்

@ஜெய்

நன்றி நண்பரே, பாராட்டுக்கும், வருகைக்கும், விருதுக்கும்

Kousalya சொன்னது…

திருடன் எப்ப வருவான் என்ன செய்ய போறான் என்று ஒரே ஆவல் தான் எனக்கு . முதல்முறையா கதை எழுதுகிறேன் என்று சொல்வதை நம்ப முடியவில்லை!!

LK சொன்னது…

நன்றி கௌசல்யா

sandhya சொன்னது…

என்ன கார்த்தி இது என்னமோ திருடன் வர போறா என்னென்னமோ நடக்க போறது என்று நினச்ச எனக்கு ஏமாற்றம் தான் ...கதை நல்லா இருந்தது இன்னும் நிறையே எழுத வாழ்த்துக்கள்

LK சொன்னது…

நன்றி சந்தியா// இல்லாத ஒன்ன இருக்கறதா நினச்சு நாம எத்தனயோ முறை பயப் படறோம் இல்லையா அதுபோலத்தான் இதுவும்

பிரசன்னா சொன்னது…

ஹீ ஹீ.. நன்றாக இருந்தது :)

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹிஹிஹி, அவங்க மட்டும் இல்லை, எல்லாருமே அ.வ.சி. அநாவசியக் கிலினாலும் அப்படியும் இருக்க முடியலை இப்போல்லாம். நல்லா இருக்கு கதை. முதல் முயற்சிக்குப் பரவாயில்லை ரகம்! :P:P:P

கீதா சாம்பசிவம் சொன்னது…

யாருங்க இந்த கீதா சந்தானம்?? ஒரே போட்டிக்கு மேலே போட்டியா இருக்கே?? நாலு வருஷமா தனிக்காட்டு ராணியா ஆட்சி புரிஞ்சுட்டு இருந்தேன். ஒருத்தர் வந்து நான் கீதா அச்சல் ங்கறாங்க. இவங்க என்னடான்னா நம்ம பேரு மாதிரியே எஸ்ஸிலே ஆரம்பிக்கறாங்க, ஒரு நிமிஷம் நான் தான் வேறே பேரிலோ வந்துட்டேனோனு நினைச்சேன். அவங்க ப்ளாகும் எண்ணச் சிதறலாம். கீதானாலே எண்ணம்தானோ?? :))))))))))))))

நல் வரவு கீதாக்கள் அனைவருக்கும்.

LK சொன்னது…

நன்றி பிரசன்னா
@கீதா பாட்டி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

எத்தனை கீதா வந்தாலும் க்ர்ர் கீதா பாட்டி நீங்க மட்டுமே.. கவலை வேண்டாம்

saraswathi சொன்னது…

romba suspsense vachu engalai ippadi emathiyaachu, good attempt

அநன்யா மஹாதேவன் சொன்னது…

appo andha night lamp uttalakkadi? adhai thelivu paduthalaiye?
//இன்னும் ஸ்ட்ராங்கா முடிவு கொடுத்து இருக்கலாம். :-)// ejjaatly!

first attemptukku very well writtennu thaan sollanum!

Vijay சொன்னது…

Nice one mate..and a nice try...keep it up...

Ananthi சொன்னது…

nice story.. kadaisiyila neenga than thirudan aaiteenga..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கன்னி முயற்சியாக இருந்தாலும் விருவிருப்பாகக் கொண்டு சென்றீர்கள். நன்றாக இருந்தது.

SathyaSridhar சொன்னது…

Congrats,,nalla kathai athulaum seekrama mudinjuduchu naan kooda oru 100 episode varumnu ninaichen..very good short n sweet ah mudichuteenga..

goma சொன்னது…

என்ன 3 அத்தியாயத்திலேயே முடிச்சிட்டீங்க...

உங்களுக்கே திகிலாயிடுச்சா

LK சொன்னது…

@சத்யாஸ்ரீதர்

அவ்வ்வ்வ் . அவ்ளோ பெரிய கதைக்கு நான் எங்க போவேன்
நன்றிங்க

@கோமா
இது ஒரு முயற்சித்தாங்க. அடுத்து ஒரு முழு நீள நாவல் எழுதும் எண்ணம் உள்ளது. கதை தயாராகிக் கொண்டு உள்ளது. விரைவில் அறிவிப்பு வரும்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

கதை சூப்பர்... சூப்பர் flow ... கதை உங்களுக்கு நல்லாவே வருது... அதுவும் எங்க நிறுத்தி படிக்கறவங்கள டென்ஷன் பண்ணலாம்னு நல்லாவே தெரியுது (ட்ரைனிங் க்ளாஸ் எதாச்சும் வெக்கற ஐடியா இருந்தா சொல்லுங்க..நானும் join பண்ணிக்கறேன்)

அப்பாவி தங்கமணி சொன்னது…

LK - suspense வெச்சு இப்படி புஸ்ஸுன்னு முடிச்சுடீங்களே... நல்ல வேலை நான் ஊர்ல இல்லாததால மொத்தமா எல்லாம் இப்ப தான் படிச்சேன்... இல்லைனா ரெம்பவே டென்ஷன் தான்... நானும் இப்படி நைட்ல சின்ன சததுக்கெல்லாம் டென்ஷன் ஆகற கேஸ் தான்...என்ன செய்ய அப்பாவி ஆச்சே?

LK சொன்னது…

@அப்பாவி

என்னை அடிக்கறதுனா அடிச்சுடுங்க. அதுக்காக இப்படிலாம் சொல்லக் கூடாது. இதுதாங்க முதல் கதை. அதுக்குள்ளார....

அன்னு சொன்னது…

ஆஹா...நல்ல த்ரில்லா இன்னும் போகும்னு பாத்தாக்க....ஆனாலும் அருமை, வித்தியாசமா நகைச்சுவையுடன் ஒரு முடிவு.

LK சொன்னது…

/ஆஹா...நல்ல த்ரில்லா இன்னும் போகும்னு பாத்தாக்க....ஆனாலும் அருமை, வித்தியாசமா நகைச்சுவையுடன் ஒரு முடிவு///

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க