மே 06, 2010

அரியலூர் உப்புமா


அரியலூர் உப்புமாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னா ஒரு 15  வருஷம் பின்னாடி போவோம். 1995 ஆம் வருடம் கோடை விடுமுறை. அப்ப அமெரிக்கால இருந்து என்னோட மாமா வந்திருந்தார் . அவருக்கு ஒரு ஆசை தமிழ்நாட்ல இருக்கற ஒரு சில கோவிலுக்கு போயிட்டு வரணும்னு. அவருக்கோ இங்க சரியாய் வழிலாம் தெரியாது . சரி யாரை கூட்டிகிட்டு போறதுன்னு யோசிச்சார். அப்போதைக்கு வெட்டியா இருந்தது (அப்பவுமானு கேக்ககூடாது ) நானும் என்னோட இன்னொரு மாமா பையனும்தான். நாங்க ரெண்டு பேரும் ஒரே வயசு. அதிகமா எந்த இடத்துக்கும் போனது இல்லை.  இன்னும் சரியாய் சொல்லப் போனா எங்க அம்மாவை விட்டுட்டு நான் எங்கயும் போனது இல்லை . (இப்ப சேலம் போய் ஒரு வருஷம் ஆச்சு :(  )

ஒரு வழியா சேலத்தில இருந்து கிளம்பி சிதம்பரம் போய் அங்க இருந்து மாயவரம் கும்பகோணம் வழியா தஞ்சாவூர் வந்தோம். அங்க தெரிஞ்ச குடும்ப நண்பர் வீட்ல தங்கி இருந்தோம் . கோவிலுக்கு போயிட்டு வரப்ப , எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டு எதோ பொருள் வாங்கனும்னு என் மாமா போய்ட்டாரு . ஏன்டா அப்படி சொன்னோம்னு ரொம்ப பீல் பண்ணாரு  அப்புறமா. அப்படி என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா ? ரொம்ப சரியா தப்பான பாதைல போய்ட்டோம். தனியா போனவே ரொம்ப சீக்கிரம் வந்திருவோம் . இதுல கூட ஒருத்தன் வேற. அவன் ஒரு வழி சொல்ல நான் இன்னொரு வழி சொல்ல , கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேரம் சுத்தினோம் . அப்புறம் எங்க மாமாவே எங்களை கண்டுபிடிச்சிட்டார் . பாவம் அவர் எங்களை திட்டவும் முடியல . சின்ன பசங்க பாருங்க . ஊரு விட்டு ஊரு வேற கூட்டிகிட்டு வந்திருக்கோம்னு அமைதியா இருந்தார்.

(எங்கடா உப்புமான்னு கேக்கறது காதில விழுது. அடுத்தது அதைத்தான் சொல்லப்போறேன்).

இப்படி எல்லா இடத்தையும் சுத்திட்டு கடைசியா நாங்கப் போனது அரியலூர்ல
இருக்கற என் சித்தி வீட்டுக்கு. நாங்க போன நேரம் சித்தி ஊர்ல இல்லை. இரவு போறப்பவே வெளில சாப்ட்டுட்டு போய்ட்டோம். அதனால அப்ப உணவு பிரச்சனை இல்லை. காலைல ஒரு  ஆறு மணிக்கு எந்திருச்சேன். என் சித்தப்பா மட்டும்தான் எழுந்திருந்தார். மத்தவங்க நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. சும்மா சொல்லக் கூடாது அட்டகாசமான ஒரு காபி கொடுத்தார். சரி காலைல சாப்பிட உப்புமா பண்ணலாமான்னு கேட்டார் . சரி அவர்தான பண்ணப் போறார் நமக்கென்ன அப்படின்னு யதார்த்தமா தலைய ஆட்டினேன்

 நீயும் வா அப்படின்னு என்னையும் கூட்டிகிட்டு சமையலறைக்குப் போனார். அவர் ஒவ்வொரு பொருளா கேட்க , நானும் எடுத்துக் கொடுத்தேன். ஒரு வழியா உப்மாவும் ரெடி ஆய்டுச்சி. ஆனா, எனக்கு எதையோ போடாம விட்டுட்டோம்னு ஒரு எண்ணம்.  உப்பு சரியா இருக்கான்னு சாப்பிட்டுப்  பாருன்னு கொஞ்சம் கொடுத்தார். வாய்லப்  போட்டபுறம்தான் தெரியுது , உப்பைப் போடவே இல்லைன்னு, அப்புறம் என்ன பண்றது, கொஞ்சம் தண்ணில உப்பை கரைத்து அதை உப்புமாவில் ஊத்தி கொஞ்ச நேரம் அடுப்புல வச்சி இறக்கினோம். அப்பவும் உப்பு சரியா கலக்கல. இன்னிக்கு வரைக்கும் அவங்க வீட்டுக்கு கூப்பிடறப்ப நான் சொல்றது " நீங்க எதுவும் தராட்டி பிரச்சனை இல்ல ஆனா உப்புமா மட்டும் வேண்டாம் " .

இப்ப தெரிஞ்சதா அரியலூர் உப்புமாவைப் பத்தி .

உப்பு காரம் போட்டு பண்ணா உப்புமா . ஆனா சர்க்கரை போட்டு பண்ணா கேசரின்னு சொல்றோம், இனிப்பு உப்புமானுதான சொல்லணும் ?????

34 கருத்துகள்:

SathyaSridhar சொன்னது…

Oru uppuma kku ipdi oru periya flash back poeyi katha kalakshebamae seithuteenga poenga,, enna intha upma neenga seithathaa illa unga manavi seithathaa inga uppu correcta poetengalla...

சேட்டைக்காரன் சொன்னது…

போட்டுக் கிண்டோ கிண்டுன்னு கிண்டிட்டீங்க! :-))

Harini Sree சொன்னது…

Upma picture nalla irukkum pothe nenachen kadaisee varaikkum recipe solla porathu illanu! :P

பாலமுருகன் சொன்னது…

//அரியலூர் உப்புமாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னா ஒரு 15 வருஷம் பின்னாடி போவோம்.//

ஏங்க, பின்னாடி போனா தடுக்கி விழுந்துர மாட்டோம்?
சும்மா... ஹிஹி..

கீதா சாம்பசிவம் சொன்னது…

அடுத்த பதிவு சாப்பாடு பத்தி இருக்கக் கூடாது ட்டேளா??

கீதா சாம்பசிவம் சொன்னது…

அஜித் லெட்டர்!! முதல்லே தங்கமணியை வரச்சொல்லுங்க, ஊருக்குப் போனாலும் போனாங்க, உங்க தொல்லை தாங்கலை, தாத்தா, நான் அழுதுடுவேன். உப்புமாவிலே உப்பு அப்புறமா சேர்த்தாலும் ஒண்ணும் ஆகாது. ரொம்ப ஆசாரமானவங்க அடுப்பிலே இருந்து கீழே இறக்கிட்டுத் தான் அரை உப்புச் சேர்ப்பாங்க. அதனால் உப்புமாவிலே உப்புச் சேராதுங்கற கதை எல்லாம் என் கிட்டே வேண்டாம், தெரியுதா??

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அரியலூர்ல இல்ல எங்க உப்புமா பண்ணாலும் ‘உப்பு’ போடாட்டா “ஹே! மா” ன்னு சொல்ற மாதிரி தான் இருக்கும்.

வெங்கட் நாகராஜ்

பெயரில்லா சொன்னது…

உப்புமா போட்டோ எடுத்தவர் யாரா இருந்தாலும் சூப்பர் போடோக்ராபர் தான். நானும் தான் பண்ணுவேன் உப்புமா காக்கை கூடி சீண்ட மாட்டா. பார்த்தாலே சாப்பிட தூண்டற உப்புமா இப்போ தான் பார்க்கறே..

egglesscooking சொன்னது…

//உப்பு காரம் போட்டு பண்ணா உப்புமா . ஆனா சர்க்கரை போட்டு பண்ணா கேசரின்னு சொல்றோம், இனிப்பு உப்புமானுதான சொல்லணும் ?????//

Iya idhu kooda theriyala. Sarkarai pottu panna "sarkaraima" nu dhaan sollanum.

Chitra சொன்னது…

உப்பு காரம் போட்டு பண்ணா உப்புமா . ஆனா சர்க்கரை போட்டு பண்ணா கேசரின்னு சொல்றோம், இனிப்பு உப்புமானுதான சொல்லணும் ?????


......உப்பு - உப்புமா.... மெயின் ஐட்டம் இல்லாம ஒரு சப்புமா கிண்டி இருக்கீங்க.
இனிப்பு போட்டு பண்ணா, எப்படி இனிப்பு உப்புமா ஆகும்? இனிப்புமா வேணா ஆகும்.

Priya சொன்னது…

Superb photo... uppuma flashback ...nice!

Ananthi சொன்னது…

sappaahhhhhh.. mudiyala...

அப்பாவி தங்கமணி சொன்னது…

முடியல LK , முடியல... தாங்க்ஸ் தயவு செஞ்சு சீக்கரம் வாங்க... இங்க சமையல் அறையில் இருந்து புதுசு புதுசா ட்ரை பண்ணி ப்ளாக்க்கு flashback எல்லாம் போட்டு கொல்றார்... சிரிச்சு முடியல.... (அப்பாடா எனக்கு உப்புமா நல்லாவே செய்ய வரும்... சோ நான் என்ன வேணா பேசலாம் தைரியமா....)
சக்கரை போட்டு செஞ்சா அதுக்கு ஸ்வீட் கிச்சடினு கூட சொல்லாம்கறது என்னோட கருத்து (கார்த்திக் மட்டும் தான் கருத்து சொல்லணுமா... நாங்களும் சொல்லுவோம்ல

Kanchana Radhakrishnan சொன்னது…

super photo.

Malar Gandhi சொன்னது…

Thats a terrific upma, never knew about Ariyalur specialization. Loved this version, gonna try it this weekend, thanks for sharing this recipe, dear.

Mrs.Menagasathia சொன்னது…

இந்த உப்புமால இவ்வளவு பெரிய கதை இருக்கா?????

LK சொன்னது…

@சத்யா ஸ்ரீதர்
இந்த உப்புமா கூகிள் தந்தது .
வருகைக்கு நன்றி

@சேட்டைக்காரன்

ஆமாங்க ரொம்ப கிண்டிட்டேன்.
வருகைக்கு நன்றி

@ஹரிணி ஸ்ரீ
ஹஹா .. உனக்கு ஒரு உப்புமா பார்சல் அனுப்பறேன் இரு

LK சொன்னது…

@பாலமுருகன்

யாரும் விழுந்த மாதிரி தெரியல

@பாட்டி
//உப்புமாவிலே உப்புச் சேராதுங்கற கதை எல்லாம் என் கிட்டே வேண்டாம், தெரியுதா??//
உப்பு சரியாய் கலக்கலைன்னு தான சொன்னேன்

உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டது

LK சொன்னது…

@வெங்கட்

அது யாரு ஹேமா ???

@சந்தியா
கூகிள் கிட்டதான் கேக்கணும் அதை


@மதுரம்

சுத்தி போடா சொல்லுங்க உங்க வீட்ல. கண்ணு படப்போகுது உங்க புத்தி கூர்மைய பார்த்து

LK சொன்னது…

//......உப்பு - உப்புமா.... மெயின் ஐட்டம் இல்லாம ஒரு சப்புமா கிண்டி இருக்கீங்க.
இனிப்பு போட்டு பண்ணா, எப்படி இனிப்பு உப்புமா ஆகும்? இனிப்புமா வேணா ஆ///

@சித்ரா
சரிங்க அப்ப பேர மாத்த சொல்றேன்

@ப்ரியா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@ஆனந்தி

முடியலேன்னா விட்ருங்க. ஏன் கஷ்டப்படறீங்க

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@AT
அவங்க வந்தாலும் இது தொடரும் ..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@காஞ்சனா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@மலர் காந்தி

எங்க என்னை கிண்டல் பண்றீங்களா ? நான் எங்க உப்புமா செய்முறை சொன்னேன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@மேனகா
ஆமாங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அமைதிச்சாரல் சொன்னது…

நானும் சிலசமயம் உப்பு போடாமலே உப்புமா செஞ்சுட்டு, அப்றம் உப்புத்தண்ணி சேத்து சரிபண்ணுவேன். அதனால கீதாம்மாவை நான் ஆதரிக்கிறேன்.

கோச்சுக்கக்கூடாது, இது உப்புமா இடுகையா :-))))))

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

கதைய விட படம் சூப்பர்.

தக்குடுபாண்டி சொன்னது…

//அப்போதைக்கு வெட்டியா இருந்தது (அப்பவுமானு கேக்ககூடாது )//...:)))

LK சொன்னது…

@சாரல்

புரியலையே .. நான் கோச்சிக்க மாட்டேன்

@தக்குடு

:)

@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

எதாவது ஒன்னாவது நல்ல இருக்கணும் இல்லையா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆலந்துறையார் கட்டளை கிராமம் சொன்னது…

Vanakkam

Eppada enga district perilum oru pathivu vanthu irukkurathu entru pakkurappa romba santhosam.

Anbudan
Alanthuraiyar Kattalai

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

ப்பூ.. என்ன ஒரு பில்ட் அப்பு.. கையில கிடைச்சீங்கண்ணு வைய்யுங்க..

LK சொன்னது…

@ஆலந்துறையார் கட்டளை கிராமம்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@மைதிலி

நான் எஸ்கேப்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

எது எப்படியோ இந்த பதிவு மூலமா நீங்களும் "பிரபல உப்புமா பதிவர்" கிளப்பில ஐக்கியமாயிட்டீங்க.. கலக்குங்க!

LK சொன்னது…

thanks pors

Deivasuganthi சொன்னது…

:-)

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லா உப்புமா கிண்டுறீங்க!! தாங்கல சமையல் குறிப்புகளும், ஃபிளாஷ்பேக்கும்!! மிஸஸ்.எல்கே, தயவுசெஞ்சு சீக்கிரம் வந்துடுங்கோ!!

LK சொன்னது…

naan samayalkuriounu intha postla sollave illaye .. innum 1 1/2 weeks agum thangs varathuku