மே 31, 2010

பதிவுலக அரசியல்

பதிவுலகத்தைப் பற்றிய எனது பதிவுலகம் ஒரு பார்வை பதிவில் பதிவுலக அரசியலைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கண்மணி டீச்சர் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். நான் வேண்டும் என்றுதான் அதைப் பற்றி சொல்லவில்லை.  ஆனால் இந்த இரண்டு நாள்களாக பதிவுலகில் நடந்து வரும் சண்டை இங்கேக் கூட இவ்வாறு நடக்கிறதா என்று என்னும் அளவுக்கு மிகக் கேவலமாக உள்ளது.

நான் அந்த சண்டையில் சம்பந்தப்பட்ட யாரையும் ஆதரிக்க வில்லை . ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுதல் நல்லதே ஆனால் அதை தனிமனிதத் தாக்குதலுக்கு உபயோகப் படுத்துவது தவறு.

முதலில் ஒரு பதிவர் எதாவது  பதிவு எழுதினால் அதற்க்கு எதிர்வினை எழுதவதை நிறுத்துங்கள். அதை செய்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதேப் போல் பின்னூட்டம் இடும் அன்பர்கள், பதிவின் விசயத்தை உணர்ந்து பின்னூட்டம் இட வேண்டும் . ஆகா இன்று நமக்கு சரியான கும்மி கிடைத்து விட்டது என்று விசயத்தை பெரிது பண்ணக் கூடாது.

ஒரு பழமொழி சொல்வார்கள் "அரிசி சிந்தினா அள்ளலாம் ஆனால் , சொல் சிந்தினால் அள்ள முடியாது ". ஒரு முறை பதிவிட்டுவிட்டால் , பின்பு அதை நீங்கள் நீக்கினாலும், நீங்கள் சொன்னது இல்லை என்றாக முடியாது. எனவே பதிவிடும் முன்பு யோசித்து பதிவிடுங்கள்.


ஒரு நபர் எழுதியுள்ள பதிவு பிடிக்கவில்லை என்றால் அதைத் தவிர்க்கலாம். அதை விட்டுட்டு அதற்கு எதிர்வினை என்று அந்தப் பதிவரை தாக்கி எழுத வேண்டாம். இந்த பிரச்சனையில் சம்பந்தப் பட்ட பதிவர்கள் அனைரும் நன்கு அறியப்பட்ட பதிவர்களே. புதிதாய் பதிவுலகத்திற்கு வருபவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய இவர்களே இவ்வாறு நடப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

இதைப் போன்ற விசயங்களை இனித் தவிர்ப்போம். பதிவுலகம் இது போன்ற அரசியல்கள் இல்லாத ஒரு இடமாக, அனைவரும் மகிழ்ச்சியாக உலா வரும் ஒரு இடமாக மாற்றுவோம்.

மே 30, 2010

பதிவுலக போராட்டம்

இன்னிக்கு ஒரு பதிவை எழுதி அதை பப்ளிஷ் பண்றதுக்குள்ள எவ்வளவு சிரமம் ? முதல்ல மின்சாரம் இருக்கணும். அப்புறம் இணைய இணைப்பு இருக்கணும். இதையெல்லாம் தாண்டி பதிவை எழுதி பப்ளிஷ் பண்றப்ப தமிழிஷ் நல்ல நிலைமைல இருக்கணும். இல்லாட்டி அதில் யாரும் ஓட்டு போட மாட்டாங்க .

இன்னும் அலுவலகத்தில் இருந்து பதிவு போடுகின்ற  பதிவர்களாக இருந்தால்  மேலாளர் தொந்தரவு இல்லாமல்  இருக்கணும்.  இப்படி பலவித பிரச்சனைகளுக்கு இடையே நமது பதிவர்கள் இருப்பதால், பதிவர்கள் சார்பா ஒரு சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்பது என்றும் அதை அரசாங்கம் நிறைவேற்றாத பட்சத்தில்  தமிழகமே அதிரும் வண்ணம் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் பொதுக் குழு (யார் யார் உறுப்பினர்னு சின்ன புள்ளத் தனமா கேக்ககூடாது ) முடிவு பண்ணி இருக்கு.


நமது கோரிக்கைகள் :


பதிவர்களின் வீட்டிற்கு இருபத்துநான்கு மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும். மக்களுக்காக எவ்வளவு இன்றியமையாத அவசியமான பதிவுகள் போட வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாட்டி மக்கள் பணி தடைப் படுமே அதுக்காகத்தான் இதை கேட்கிறோம்.

பதிவர்கள் அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரவேண்டும், அனைத்து மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி அளித்த அரசுக்கு இலவச இணைய இணைப்பு வழங்குவது ஒரு பெரிய காரியம் அல்ல. இதுவும் மக்கள் பணி தங்கு தடையின்றி நடை பெற வேண்டுமே என்ற ஒரு எண்ணத்தில்தான் கேட்கிறோமே தவிர எதோ நாங்கள் இணையத்தில் இலவசமாக உலா வர அல்ல.

அலுவலகத்தில் இருந்து பதிவுகள் இடும் நண்பர்களின் நலனிற்காக தினமும் அலுவலக நேரத்தில் பதிவிற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் வேறு வேலைகள் செய்ய கட்டாயப் படுத்தக் கூடாது. ஏனென்றால் இப்பொழுது அலுவலகத்தில் இருந்து பதிவிடும் நண்பர்கள் மிகவும் சிரமப்பட்டு யாரும் பார்க்ககூடாது என்று மறைத்து மறைத்து எதோ திருட்டு வேலை செய்வது போன்று மறைத்து ஒளித்து செய்ய வேண்டி உள்ளது.

இந்த கோரிக்கைகள் மிக மிக எளிதான ஒன்றாகும். நாங்கள் என்ன ராஜ்ய சபா சீட்டா கேட்கிறோம் இல்லை ஆட்சியில் பங்குக் கேட்கிறோமா வெறும் மூன்று கோரிக்கைகள்தான் . அதை இந்த அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், ஏற்கனவே சொல்லியப் படி மாபெரும் போராடும் நடைபெறும்.

பி.கு : இதற்கு மாபெரும் ஆதரவு உலகெங்கிலும் இருந்து வந்துக் கொண்டுள்ளது,. அமீரகப் பெண் பதிவர்கள் சார்பில், அனன்யா இந்தப் போராட்டத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார், மேலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பதிவர்கள் சார்பில் ப்ரியாவும், கனடா நாடு பதிவர்கள் சார்பில், அப்பாவி தங்கமணியும் வாழ்த்து செய்திகளை அனுப்பி உள்ளனர். மிக முக்கியமாக, அம்பத்தூர் பதிவர், நமது கீதா பாட்டி இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை சொல்லி உள்ளார்.

டிஸ்கி : இது சிரிக்க மட்டும்

மே 29, 2010

மக்களே உஷார் VI

சமீப காலமாக தகவல் தொழில் நுட்பக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உங்களது ஆர்குட் , facebook மற்றும் மின்னஞ்சல் கடவு சொல்லை திருடும் பணி மிக அதிகமாக நடக்கிறது.

எதனால் செய்கிறார்கள் ?

 உங்கள் மின்னஞ்சலுக்குண்டான கடவு சொல்லை திருடுவதன் மூலம், அதில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களயும் பெற முடியும். அதுமட்டும் அல்லது, உங்கள் நண்பர்களுக்கும் அதில் இருந்து பொய்யான மின்னஞ்சல் அனுப்பி அவர்களை குழப்பி அதன் மூலமும் லாபம் அடைய முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு சேவை நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பவர். அரசாங்க அளவிலும் தொடர்பு வைத்திருப்பவர். அவருடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு மடல் வந்தது. நான் மலேசியா வந்துள்ளேன். வந்த இடத்தில் எனது பர்ஸ் ,பாஸ்போர்ட் மற்றும் விசா பறிப்போகிவிட்டது எனவே உடனடியாக எனது இந்த வங்கி கணக்கிற்கு இவ்வளவு தொகை அனுப்பவும். அப்பொழுதுதான் நான் இந்தியா திரும்ப முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரை நான் மற்றும் எனது  குடும்பத்தார் நன்கு அறிவோம். எனவே உடனடியாக அவரை தொடர்பு கொண்டபொழுது அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் அவருடைய மின்னஞ்சல் முகவரியை யாரோ ஹேக் செய்துவிட்டனர் எனவும் சொன்னார்.

இவ்வாறு உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால் உடனடியாக சம்பத்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரியுங்கள். இதுமட்டும் அல்லாது , இப்பொழுது ஜிமெயில் நிறுவனத்தின் பெயரிலேயே போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே அனைவரும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த நிறுவனமும் உங்களது கடவு சொல்லை கேட்டு மெயில் அனுப்பாது, எனவே அவ்வாறு மெயில் வந்தால் அதை உடனடியாக அழித்து விடவும் .


எவ்வாறு தவிர்க்கலாம்

உங்கள் கடவு சொல்லை அடுத்தவர் கண்டுபிடிக்க இயலாத வண்ணம் அமையுங்கள். முக்கியமாக உங்கள் பிறந்தநாள், மனைவி/காதலி/ குழந்தைகளின் பெயரை கடவு சொல்லாக வைக்காதீர்கள்.

உங்கள் கடவு சொல் அடுத்தவருக்கு தேவை இல்லை. என்னதான் நெருங்கிய தோழராக இருந்தாலும் கடவு சொல்லை தரவேண்டாம்.

அலுவலகம் மற்றும் வெளி இடங்களில் இருந்து நீங்கள் மெயில் அனுப்ப நேர்ந்தால் , அதில் உள்ள "remeber me" பக்கத்தில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்தப் பிறகே உள் நுழையுங்கள்.

அதே போல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவு சொல்லை வையுங்கள்.

உங்கள் மின்னஞ்சலில் எந்தவித வங்கி தொடர்பான கோப்புகளையும் வைக்கவேண்டாம். சம்பந்தப்பட்ட கோப்புகளை உங்கள் கணிணியில் சேமித்து வைத்துவிட்டு, அந்த மின்னஞ்சலை அழித்து விடலாம்.

அதேபோல் , ஆர்குட் போன்ற தளங்களில் நுழையும் முன் அது சரியானா முகவரியா என்று உறுதிபடுத்திக் கொள்ளவும். எப்பொழுதும் இணையத் தள முகவரிகளை நீங்களே டைப் செய்யுங்கள், ஏற்கனவே ஹிஸ்டரியில் இருக்கும் இணைப்புகளை உபயோகப்படுத்தாதீர்கள். இது முக்கியமாக பிரௌசிங் சென்டர்களில் இருந்து கணிணியை உபயோகிப்பவர்களின் கவனதிற்குதான்.

உங்களுக்கு மெயிலில் எதாவது ஒரு இணையத்தளத்தின் முகவரி வந்தால், அதைப் பற்றி சரியாக தெரியாமல் அதில் நுழைய வேண்டாம். குறிப்பாக, சாட் தளங்களின் போலி முகவரிகள்தான் அதிகமாக இருக்கின்றது.

இணையத் திருட்டு இப்பொழுது மிக அதிக அளவில் நடக்கிறது. எனவே அனைவரும் கவனமாக இருப்போம்.மே 28, 2010

இவர்களும் பிரபலங்களே III

இவர்களும் பிரபலங்களே I
இவர்களும் பிரபலங்களே II

கீதா சந்தானம்

  சிறு சிறு பதிவுகளாக ஒரு ஐம்பது பதிவுகள்  போட்டிருக்கிறார். இவரும் நல்ல கதை எழுதக் கூடிய எழுத்தாளரே.  "YES WE CAN"  என்ற தலைப்பில் பம்மலில் எக்ஸ்னோரா அமைப்பினர் செய்திருக்கும் வியத்தகு மாற்றங்களை நமக்கு அழகாக சொல்லி இருக்கிறார்.

இவரது பதிவுக்கான சுட்டி எண்ணச் சிதறல்

எங்கள் ப்ளாக் 

    பொதுவாக , தமது எண்ணங்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தத்தான் வலைப்பூக்களை தொடங்குவர். இவர்களோ, மற்றவர்களிடம் இருக்கும் திறமையை வெளிகொண்டுவரவே வலைப்பூ வைத்துள்ளனர். என்னையே வரைய வைத்துள்ளனர். இவர்களது திறமைக்கு இதுவே ஒரு சான்று. இவர்கள் தளங்களை இங்கு அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறேன்.

இவர்களுக்கான சுட்டி எங்கள் ப்ளாக்   மற்றும் இது நம்ம ஏரியா

கீதா

  பதிவுலகில் கீதாவிற்கு பஞ்சம் இல்லை .(கீதா பாட்டி கவனிக்கவும்). இதோ இன்னொரு கீதா . அந்த கீதா கதை எழுதினா இந்த கீதா கவிதை ப்ரியை. மிக நன்றாக எழுதுகிறார். சிட்டுக் குருவியைப் பற்றி மிக சிலாகித்து இவர் எழுதிய கவிதைப் படிக்க நீங்கள் செல்ல வேண்டியத் தளம் இனிக்கும் வரிகள்

அன்னு

  இந்த மாதம் வலைக்கு வந்திருக்கும் புது வரவு இவர். தமிழ் பதிவுலகிற்கு கிடைத்த மற்றொரு நகைச்சுவை பதிவர் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது தந்தையின் ஹிந்தி புலமையை பற்றி இவரின் பதிவைப் பாருங்கள்.

இவரது தளத்திற்கான சுட்டி என் இனியத் தமிழ் மக்களே
அன்புடன் கார்த்திக்

மே 27, 2010

ராஜகுமாரி


அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் ...

"ப்பா" உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்.

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்...

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே
எனக்கு வேதம் ...
உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்....


இன்று என் ராஜகுமாரி என் வீட்டு தேவதை " திவ்ய லக்ஷ்மியின் " பிறந்த நாள். இறைவன் அவளுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன். இந்த சந்தோசத்தை இரட்டிப்பாக அமைதிசாரல் எனக்கு ஒரு விருதையும் அளித்திருக்கிறார் . அவருக்கு எனது நன்றி....

டிஸ்கி : படங்கள் கூகிளாரின் உதவி

மே 26, 2010

கூட்டு III

ரோட்டில் வேண்டாமே 

 நேற்று மாலை கோடம்பாக்கம் அருகே நடந்த சம்பவம் இது. எனக்கு முன் வண்டியில் ஒரு ஜோடி சென்று கொண்டு இருந்தார்கள். சிக்னலுக்காக நின்றபொழுது அவர்களுக்குள் எதோ விவாதம் . திடீர் என்ற அந்தப் பெண் வண்டியில் இருந்து இறங்கி நடந்து சென்றுவிட்டார். யாராக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த சண்டை எங்கு நடக்கிறது என்பதுதான் பிரச்சனை. வீட்டிற்குள் நடந்தால் உங்களுக்குள் , இதுபோல் நடுரோட்டில் நடந்தால் உங்களுக்குத்தான் அவமானம்.
அதுமட்டும் அல்ல, வண்டி ஓட்டும் பொழுது இவ்வாறு காரசாரமாக விவாதிப்பது, ஆபத்தும் கூட. வண்டி ஓட்டுபவரின் கவனம் கலைந்து விபத்து ஏற்பட வழிவகுக்கும். உங்கள் சண்டைகளை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் வேண்டாம்.

சில்லரைப் பிரச்சனை 

 பொதுவாக மாநகரப் பேருந்துகளில் செல்வோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை இது. எப்பொழுது பேருந்தில் ஏறினாலும் சில்லரை இல்லை என்றே ஒரு சில நடத்துனர்கள் சொல்வார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் அனைவருக்கும் போதுமான சில்லரை தருகிறோம் என்றுதான் சொல்கிறார்கள். யார் சொல்வது உண்மை ? அப்படி அவர்கள் சில்லரை தருகிறார்கள் என்றால் அது எங்கு செல்கிறது ?

மங்களூர் விமான விபத்து 

வழக்கம் போல் அடுத்தவரைக் கை காட்டும் வேலை துவங்கி விட்டது இதிலும். இந்த விபத்துக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விமானியின் பணி நேரம். ஏர் இந்தியாவில் வேலை செய்யும் விமானிகள், ஆள் பற்றாக்குறையால் அவர்கள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை விட அதிகமாக வேலை செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் அவர்கள் கவனக் குறைவால் தவறு ஏற்படுகிறது . தனியார் நிறுவனங்களில் அளிக்கப்படும் சம்பளத்தின் காரணமாக பல விமானிகள் அங்கு சென்று விடுகின்றனர். இதை அரசாங்கம் எவ்வாறு சரி செய்யப்போகிறது ???

கடைசியாக ஒரு புகைப்படம் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒன்று

மே 25, 2010

பதிவுலகம் - ஒரு பார்வை

நண்பர் திரு ராஜன் அவர்கள், புதியதாக வலைப்பூ ஆரம்பிப்பதை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டிருந்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பதிவு.

வலைப்பூ :

   இது உங்களுக்காக உங்களால் தொடங்கப்படும் ஒரு தளம். இதில் நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று எந்த வித வரைமுறைகளும் இல்லை. உங்களுக்கு என்ன எழுத விருப்பமோ அதை எழுதித் தள்ளலாம். பன்னீர் சோடா பற்றிகூட எழுதலாம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதற்க்கு வரும் பின்னூட்டங்களை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். கருத்துகளுக்கு மட்டும் பதில் கருத்து சொல்லுங்கள். எந்த நிலையிலும் தனிப் பட்ட ஒருத்தரை தாக்கி பதிவு எழுதுவதோ அல்லது பின்னூட்டம் இடுவதோ வேண்டாம். அவை நாகரீகமற்றவை என்பது என் கருத்து.

வலைப்பூ வசதி தரும் தளங்கள்

   எண்ணற்ற இணையத்தளங்கள் இலவச வலைப்பூ தொடங்கும் வசதி அளித்தாலும் ,மிக அதிகமானோர் உபயோகிப்பது கூகிள் அளிக்கும் ப்ளாகர் மற்றும் வோர்ட்ப்ரஸ் அளிக்கும் இலவச வலைப்பூக்களே.

  கூகிள் அளிக்கும் வலைப்பூ வசதியை பெற உங்களிடம் கூகிள் ஐடி இருந்தால் போதுமானது . https://www.blogger.com/start தளத்திற்கு சென்று நீங்கள் உங்களுக்கென ஒரு வலைப்பூ தொடங்கலாம். அதேப்போல் வோர்ட்ப்ரஸ் சேவையைப் பெற நீங்கள் செல்லவேண்டிய  தளம் http://wordpress.com/ . இதில் முதலில் இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று உங்கள் ப்ளாக்கு என்னப் பெயர் வைப்பது மற்றும் முகவரி. ப்ளாக் பெயர் வைக்கறதுதான் கஷ்டமான விசயம். நீங்க ரொம்ப யோசிச்சு ஒரு பெயர் வச்சிருப்பீங்க. சில நாள் கழிச்சு பார்த்த ஏற்கனவே அதே பெயரில் வேறு ஒரு வலைப்பூ இருக்கும். இப்ப உங்க வலைப்பூ பேர மாத  வேண்டி இருக்கும். அதனால கொஞ்சம் கவனமா பெயர முடிவு பண்ணுங்க. (நான் ரொம்ப நாள் கழிச்சுதான் என் எண்ணங்கள்னு இன்னொரு வலைப்பூ இருக்குனு தெரிஞ்சிகிட்டேன் ).

திரட்டிகள் :

    பதிவுகளை திரட்டி நமக்கு தரதுதாங்க இந்த திரட்டிகளோட வேலை. இப்ப தமிழ்ல நிறைய திரட்டிகள் இருக்கு, இதுல அதிகப் பெயரால் உபயோகிக்கப் படுவது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ். இதுல உங்க வலைப் பூக்களை இணைப்பதால் நிறைய பேர் உங்கள் பதிவுகளைப் படிக்க வாய்ப்பு உள்ளது.

பின்னூட்டங்கள் :

 உங்க பதிவை படிப்பவர்கள் அவர்களது கருத்தை சொல்லுவது இந்தப் பின்னூட்டங்கள் மூலம்தான். முடிந்தவரை அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதில் அளியுங்கள்.அதேப் போல் மாற்றுக் கருத்து சொல்லி இருந்தால் ,அதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள், மாற்றுக் கருத்து சொல்பவரை தாக்கி பதில் சொல்லாதீர்கள். அதேப்போல் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் வசதி அவசியம். தேவையற்ற கருத்துக்களை இதன் மூலம் தவிர்க்கலாம்.

எனக்குத் தெரிந்த விசயங்களை சொல்லி விட்டேன்.  எதாவது விடுபட்டிருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

மே 24, 2010

விருதுகள்


சக பதிவர்களுக்கு விருதுகள் கொடுத்து நாள் ஆகிடுச்சி . அதனால இன்றைக்கு விருதுகளை வாரி வழங்க முடிவு பண்ணிட்டேன்.

நகைச்சுவை பதிவர்

நான் ரொம்ப ரசிச்சு படிக்கற பதிவு இது.  படிக்கறவங்க எப்பேர்பட்ட உம்மனமூஞ்சிய இருந்தாலும் இவர் பதிவை படிச்சா சிரிக்காம இருக்க முடியாது,. அவ்வளவு ஹாஸ்யமா எழுத நம்ம தக்குடுவை விட்ட வேற யாரு இருக்கா ?? இந்த முறை நகைச்சுவை விருதை பெறுபவர் நமது தக்குடு பாண்டி சிறந்த எழுத்தாளர்

பதிவு எழுதறவங்க எல்லாருமே நல்ல எழுத்தாளர்கள்தான். ஆனாலும் அதில் சிறுகதை , தொடர்கதை போன்ற விசயங்களை மிக சிறப்பா செஞ்சிட்டு வர சிலருக்கு இந்த விருது .
வாணி, அப்பாவி தங்கமணி மற்றும் பொற்கொடி இந்த மூவருக்கும் சிறந்த எழுத்தாளர் விருது.

சிறந்த புதுமுகம்

தினமும் நிறைய பேர் எழுத வராங்க. அதில் நான் படித்ததில் பிடித்த இருவருக்கு இந்த விருதை அளிக்கிறேன் . மாதங்கி, ஷஸ்னி இந்த இருவருக்கும் இந்த விருது.


 இதை உங்கள் பதிவில் வைத்து பதிவிற்கு அழகு சேர்த்துக் கொள்ளுங்கள்

மே 23, 2010

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு

இன்றைக்கு  எனது பெற்றோரின் 35ஆவது திருமண தினம். அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. வணங்குகிறேன்.  அவர்களுக்கு நீண்ட  ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

எனக்கு விருது குடுத்த ஜெய்லானிக்கு நன்றி 

***********************************************************

பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு பதிவுக்கு என்னை அநன்யா அழைத்து இருந்தார்கள். அதை இப்பொழுதுதான் எழுத முடிந்தது.

சமீப காலமா புதுப் படங்கள் எதையும் நான் பார்ப்பது இல்லை. அதனால் புதுப் படங்கள் இந்த வரிசையில் இடம் பெறவில்லை என்பதை இப்பவே சொல்லிடறேன்.

1 எதிர் நீச்சல் 

 திரு. கே. பாலச்சந்தர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று. நாகேஷின் நடிப்பின் மற்றொரு பக்கத்தை நமக்கு காண்பிப்பதை இருந்தது. இப்பொழுது நகைச்சுவை நடிகர்கள் என்று கூறிக் கொண்டு அலையும் சிலர் , இவரிடம் இருந்து கற்றுக்  கொள்ளவேண்டியது நிறைய. இந்தப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாட்டை யாராலும் மறக்க இயலாது.

2. காதலிக்க நேரமில்லை

 ஸ்ரீதர் அவர்கள் இயற்றிய மற்றொரு வெற்றிப் படம்.  ஒரு காதல் கதையை மிக வித்தியாசமாக கையாண்டு இருப்பார் இதில். அதேபோல் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லு இடமும் விதமும் மிக அருமை. இந்தப் படத்தில் பாடல்களும் மிக அருமை. அவற்றில் இருந்து ஒன்று.
3 . அபியும் நானும் 

    தாய்-மகன் , தாய்-மகள் பாசக் கதைகள் தமிழ் திரை உலகில் ஆயிரம். அவற்றில் இருந்து மாறுபட்டு, ஒரு தந்தையின் பாசத்தை காட்டும் விதமாக இந்தப் படம் . இதில் பிரகாஷ் ராஜின் நடிப்பு மிக அருமை. தன் மகளின் காதலை அறிந்து வரும் கோபம் ஆகட்டும் , பின்னால்  மகளுக்காக தன்னை மாற்றிக் கொள்வதாகட்டும் அந்தப் பாத்திரத்துக்கு கனம் சேர்த்துள்ளார் அவர். இதில் இருந்து ஒரு பாடல் 
4 . தளபதி 

 தலைவர் நடிச்ச எல்லாப் படங்களும் சூப்பர் படங்கள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தப் படத்தில் , நண்பனுக்காக எதையும் தியாகம் செய்யும் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த இரு பாத்திரங்களும், மகாபாரத துரியோதனன் ,கர்ணன் பாத்திரங்களை ஞாபகப் படுத்தும்.  இதில் இருந்து ஒருப் பாடல். 5 சலங்கை ஒலி

ரஜினி படத்தை சொல்லிட்டு கமல் படம் சொல்லாட்டி எப்படி? ஒரு கலைஞனின் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்களை மிக அருமையாக சொல்லியுள்ளனர் இதில் . இதில் வரும் பாடல்களும், நடனங்களும் மிக மிக அருமை. மாதிரிக்கு ஒன்று. 6 லவ் டுடே 

விஜய் நடித்து (உண்மையா நடிச்சாருங்க இதில) வந்த படங்களில் இது ஒரு நல்லப் படம். பொறுப்பற்ற ஒரு இளைஞனாக காதலியின் பின்னால் சுத்துவதாகட்டும், தந்தை இறந்தது தெரிந்து கதருவதாகட்டும் மிக நன்றாக செய்திருப்பார் விஜய். இப்பொழுது ஏன் இவ்வாறு நடிப்பதில்லை என்று புரியவில்லை.  இதில் விஜயை விட அவரது தந்தையாக வரும் ரகுவரன் கலக்கி இருப்பார். 7 . ஆசை 

அஜித் நடித்த சிறந்தப் படம் என்றே சொல்லுவேன் இதை. மனைவியின் சகோதரியை அடைய முயற்சிக்கும் வில்லனாக பிரகாஷ் ராஜ் , அதை எப்படி முறியடித்து சுவலக்ஷ்மியை அஜித் திருமணம் செய்கிறார் என்பதே கதை. மிக அழகாக படமாகி இருப்பார்கள் இந்த கதையை.


8 . வைதேகி காத்திருந்தாள்

  கேப்டன் நடித்து வந்த ஒரு சிறந்தப் படம். திரைகதையில் பெரியப் புதுமை இல்லை என்ற பொழுதும் இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது .9 . வஞ்சிக் கோட்டை வாலிபன் 

  காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து வந்த இந்தப் படம் இதில் வரும் நடனதிற்காகவே பலரால் விரும்பப் பட்டது. இதோ வைஜயந்தி மாலாவும், பத்மினியும் ஆடும் இந்தப் போட்டி நடனத்தை பாருங்கள். 10 . அஞ்சாதே 

   இரு வேறுபட்ட குணங்களை கொண்ட நண்பர்கள் , எதிர்பாராது ஏற்படும் ஒரு சம்பவத்தால் , விரோதிகளாகவும் அதற்கு முன்பு இருந்த குணநலன்களுக்கு மாறுபட்டும் நடக்கின்றனர். என்ன காரணமோ, இந்தப் படம் எனக்கு பிடித்து இருந்தது. தொடர் பதிவுனா கண்டிப்பா யாராவது கூப்பிடணுமாம். அதனால நான் கூப்பிட போறது 

1 தக்குடு பாண்டி

2 வானதி 

3 ஹரிணி 

4 கௌசல்யா 


மே 22, 2010

திருடன் - இறுதி பாகம்

பாகம் I
பாகம் IIஅவளின் குரல் கேட்டு அதிகாலை உறக்கத்தை கெடுத்த கோபம் பாதியும் , குழப்பம் மீதியுமாய்    ஓடி வந்தான் வெங்கட் .

அங்கு முன்பக்கம் செல்லும் வழியில் உள்ள மூன்று விளக்குகளும் உயிருடன் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. 

"நைட் லைட்லாம்  ஆப் செஞ்சுட்டு தான வந்தீங்க?"

"ஆமாம் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, மாடிக்கு போயிட்டு வரப்ப எல்லாம் ஆப் ஆகித்தான இருந்துச்சி ", தூக்கக் கலக்கமும், குழப்பும் இனணிந்த குரலில் வெங்கட். 


"சரி விடு வா. நேரம் ஆகுது , ஆபிஸ் கிளம்பனும் . சாயங்காலம் பார்த்துக்குவோம் "


"எனக்கு பயமா இருக்குங்க,. தனியா வேற இருப்பேன் பகல்ல. "

"எதுக்கு பயம். முன்னாடி கேட்டை பூட்டிரு. தெரியாதவங்க யார் வந்தாலும் திறக்காத. சாயங்காலம் நான் வந்தப்புறம் ., முன் பக்க மாடி வீட்ல கேட்டுப் பாக்கலாம்."


இன்னும் பயம் தெளியாத மனதுடன் , வேலைகளில் மூழ்கினாள் மீரா . வெங்கட்டுகோ அலுவலகம் செல்லும் அவசரம். 

மதிய  நேரம்  அலுவலகத்தின் வேலைகளில் மூழ்கி இருந்தான். அலைபேசியில் "பச்சை நிறமே " அலற,  அழைப்பை உயிர்ப்பிதவாறே "சொல்லு மீரா " என்றான்,


"சாயங்கலாம் சீக்கிரம் வந்துருவீங்களா ?"


"ஏன் என்ன விஷயம்? எங்கயாவது போகனுமா ?"


"இல்லைங்க . தனியா இருக்க பயமா இருக்கு "


அப்பொழுதுதான் இரவு நடந்த விஷயங்கள் நினைவுக்கு வர
"இன்னும் அதையே நினச்சிட்டு இருக்கியா ? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் எப்பவும் போலத்தான் வருவேன் ."

"சரி சீக்கிரம் வாங்க. லேட் பண்ணிறாதீங்க".


ஏழு ஆக சில நிமிடங்கள் பாக்கி. இன்னும் வராத வெங்கட்டை மனதில் திட்டியவாறே , வாயிலின் மேல் கண்ணாக நின்றுக் கொண்டு இருந்தால் மீரா. வெங்கட்டின் வண்டி சப்தம் கேட்டு வெளியில் வந்த அவளை, "சீக்கிரம் காபி கொடு. குடிச்சிட்டு முதல்ல மாடி வீட்டுக்குப் போயிட்டு வரேன் ".


அவன் தயாராகி வெளியில் செல்லவும், முன் வீட்டு பாபு வரவும் சரியாக இருந்தது,.


"வாங்க பாபு. உங்களைதான் பாக்க வந்தேன் நீங்களே இங்க வந்துட்டீங்க.  என்ன விஷயம் சொல்லுங்க "


"நேத்து நைட் யாரோ வந்த மாதிரி இருந்துச்சி. அதான் உங்களுக்கு எதாவது தெரியுமான்னு"


 "ஆமாம் நேத்து யாரோ வந்த சத்தம் கேட்டுச்சு. ஜன்னல் தட்டின மாதிரியும் இருந்துச்சி ஒரு 11 மணி வாக்கில"


"எனக்கு சத்தம் எதுவும் கேக்கல . ஆனா யாரோ டார்ச் அடிச்ச வெளிச்சம் பார்த்தேன் ."


வெங்கட்டின் மனதில் எதோ ஒன்று மின்னல் வெட்ட ,"ஒரு நிமிஷம். எத்தனை மணிக்கு நீங்க வெளிச்சத்தை பார்த்தீங்க? "


"ஒரு பத்தரை மணி இருக்கும்னு நினைக்கிறன் . "


வெங்கட்டுக்கு இப்பொழுது தெளிவாக புரிந்தது .

"பாபு ! நீங்கதான் லைட்ட போட்டதா ??"

"ஆமாம் ஏன் ??"

"திருடனும் வரல யாரும் வரல. அவங்க வீட்டு மீனுக்கு உணவுப் போட நாந்தான் டார்ச் எடுத்துட்டுப் போனேன். அப்ப அந்த வெளிச்சம் ஜன்னல் வழியா உங்க வீட்ல விழுந்திருக்கு . அதைப் பார்த்த நீங்க யாரோ வந்திருக்காங்கன்னு நினச்சு வந்து கேட்டை அசைச்சுப் பார்த்து இருக்கீங்க,. அந்த சத்தத்தைக் கேட்டு நாங்க யாரோன்னு நினைச்சு பயந்துப் போய்ட்டோம் . அவ்ளோதான் " இது வெங்கட்.
இதைக் கேட்டு மீரா , "ஆக உங்க நினைப்புல நாங்க திருடன், எங்க நினைப்புல நீங்க திருடன்னு சொல்ல, மூவரும் சிரித்தனர்.


முற்றும்

பி.கு இது எனது முதல் முயற்சி. இந்த கதையை தொடர்ந்துப் படித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி .

மே 21, 2010

திருடன் - பாகம் II

பாகம் I 

 
இப்பொழுது கதவு தட்டும் ஓசையுடன் யாரோ நடக்கும் ஓசையும் சேர்ந்து கொள்ள, மீராவின் இதயத்துடிப்பு அதிகரித்தது ...


"நான் போய் பாக்கறேன் . நீ இங்கயே இரு "


"இல்லை வேணாங்க. எனக்கு பயமா இருக்கு " , பயத்தில் அவனை நெருங்கி அவன் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்.  அவளின் அதீத பயத்திற்கு இரு நாட்கள் முன்பு நடந்த ஒரு சம்பவமும் ஒரு காரணம் . 


***************************************************************************************************************************
மாடி வீட்டிற்கு ட்யூசன் படிக்க வந்த மாணவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அதைக் கண்டாள் மீரா. அவள் வீட்டு ஜன்னலின் அருகே ஒரு பிளாஸ்டிக் பையும் அதினுள் ஒரு டப்பாவும். கிளம்பிக் கொண்டிருந்த மாணவர்களிடம் விசாரித்ததில் அவர்களது இல்லை என்பது தெரிந்தது. மாடி வீட்டு தாரிணியும் அவர்களது இல்லை என்று சொல்ல மீராவுக்கு குழப்பமும் பயமும் ஒன்றாக சேர்ந்தது. அன்றாடம் செய்திகளில் படிக்கும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தேவை இல்லாமல் நினைவுக்கு வந்தது. 
"அவர் வந்ததும் முதல் வேலையா  இதை தூக்கிப் போட சொல்லணும் ", மனதில் என்னும் பொழுதே வெங்கட் வர , "ஏங்க முதல்ல இதை போய் குப்பை தொட்டில போடுங்க ".


"வந்ததும் வராததுமா வேலையா?" அலுவலகக் களைப்பில் வெங்கட்டின் கேள்வி 
"ஆமாம் . முதல்ல அதை கொண்டு போய் போட்டுட்டு உள்ள வாங்க"
அவளை முறைத்துப் பார்த்து கொண்டே "எவன் கொண்டு வந்து வச்சானோ தெரியலை. நம்ம உசிரை வாங்கறதுக்குனே வருவாங்க எல்லாரும் " என்று முணுமுணுத்துக்  கொண்டே கொண்டு போய் போட்டான்.


"இப்ப திருப்தியா?" கோபத்துடன் கேட்ட வெங்கட்டை , ஏங்க சலிச்சுகறீங்க ? அதுல என்ன இருக்குனு தெரியாது . எதாவது குண்டு இருந்து வெடிச்சதுனா?


"ஆமாம் . நம்ம ரெண்டு பேரையும் கொல்ல யாரோ குண்டு வைக்கறாங்க "
சரி நீங்க எதுக்கு இப்ப டென்ஷன் ஆகரீங்க. விடுங்க 

***************************************************************************************************************************
இந்த சம்பவம் மீராவின் மனதில் மீண்டும் ஓடியது .


"நான் அன்னிக்கே சொன்னேன் யாரோ புதுசா வராங்கனு. அன்னிக்கு நோட்டம் பார்த்து வச்சிட்டு இன்னிக்கு வந்திருக்கணும் "


"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா. நான் ஜன்னல் வழியா பாக்கறேன் " என்று எழுந்த வெங்கட் மெதுவாக முன்னறைக்கு சென்று அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக முன் பக்கம் செல்லும் வழியை பார்த்தான். யாரும் இருக்கும் சுவடு தெரியவில்லை . எதற்கும் இருக்கட்டும் என்று டார்ச் அடித்தும் உறுதிபடுத்திக் கொண்டான்.


"யாரும் இல்ல.  பேசாம தூங்கு"
"இல்லீங்க. யாரோ வந்திருக்கா..." மீரா முடிக்கும் முன்னரே, இப்பதான் பார்த்தேன் யாரும் இல்ல. கம்முனு   தூங்கு, வெங்கட்டின் குரலில் கோபத்தின் சாயல் லேசாக தொனிக்க அரை மனதுடன் படுத்தாள் மீரா.


 மீராவுக்கு தூக்கம் வரவில்லை. அவளுக்கு மட்டும் எதோ சத்தங்கள் கேட்பதை போன்று இருந்தது. திரும்பிப் பார்த்தால் வெங்கட் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை மீராவுக்கு. நினைவுக்கு வந்த கடவுள்களை வேண்டிக்கொண்டே தூங்க முயன்றாள். எப்பொழுது  தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கியும் போனாள்.


எழுந்துடன் முந்தைய இரவு சம்பவங்கள் நினைவுக்கு வர , ஒருவித பய உணர்வுடன்

 கதவைத் திறந்து கோலமிட சென்றாள்.

" ஏங்க இங்க சீக்கிரம் வாங்க ".

அவளின் குரல் கேட்டு அதிகாலை உறக்கத்தை கெடுத்த கோபம் பாதியும் , குழப்பம் மீதியுமாய்    ஓடி வந்தான் வெங்கட் .


அங்கு ....
-தொடரும் 

திருடன் - பாகம் I

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று . அடுக்கு மாடி வீடுகளும் ,தனி வீடுகளும் கலந்த ஒரு பகுதி. அந்த வீடு இந்த இரண்டிலும் கலக்காமல் வித்யாசமான ஒன்றை இருந்தது. முன்னால் இரு வீடுகளும் அதற்கு பின்னால் ஒரு வீடுமாய் அமைந்த ஒன்று. பின் பக்க வீடுகள் தெருவில் இருந்து பார்த்தால் தெரியாத அமைப்பு.

"மீரா !" மேல் வீட்டு தாரிணி அழைக்கும் குரல் கேட்டு வாயிலுக்கு வந்த மீரா, புதிதாய் திருமணம் ஆகி அந்த வீட்டிற்கு வந்து சில மாதங்களே ஆகி இருந்தது.

"சொல்லுங்க தாரிணி  . என்ன விசயம் என் இவ்ளோ டென்சனா இருக்கீங்க ? "

 "ஊர்ல எங்க அப்பா தவறிட்டாங்க. அவசரமா கிளம்பிட்டு இருக்கேன். போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் . ஒரு சின்ன உதவி பண்ணா முடியுமா ?"

"என்னங்க இது ? அவசரத்துக்கு உதவாம இருந்த எப்படி? சொல்லுங்க "

எங்க வீட்ல ஒரு மீன் தொட்டி இருக்கு . நாங்க எப்ப வருவோம்னு சொல்ல முடியாது .

நான் அதை வெளில கம்பி கதவுகிட்ட வைக்கறேன் . அதுக்கு தினமும் உணவு மட்டும் போட்ருங்க .
"கண்டிப்பா பண்றேங்க."

"என்ன மீரா வீடே அமைதியா இருக்கு என்ன ஆச்சு ?". இது வெங்கட் , மீராவின் கணவன் .
ஆமாங்க. மேல் வீட்ல அவசரமா ஊருக்கு போயிருக்காங்க. ஏற்கனவே , முன் பக்கம் இருக்கற வீட்டு ஓனரும் ஊர்ல இல்ல. முன்னாடி மாடி வீட்ல இருக்கறவங்க வெளில வர மாட்டாங்க. அப்புறம் யாரு? நீங்களும் நானும்தானே ?
ஹ்ம்ம். அது சரி .

ஏங்க கதவை பூட்டியாச்சா?

இப்பதான் பூட்டினேன் . ஏன் எதாவது வாங்கனுமா ?

இல்லைங்க. மாடில அவங்க வீட்டு மீனுக்கு உணவு போடணும்னு சொன்னங்க. நான் மறந்தே போயிட்டேன். ஒரு எட்டு போய் போட்டு வந்திருங்களேன்.
இது வேறயா?

சலிப்போட வெங்கட் டார்ச் எடுத்துகிட்டு மாடிக்கு போனான். சில நிமிடங்கள் பூட்டோட போராடி பின் உள்நுழைந்து மீனுக்கு உணவைப் போட்டுட்டு கதவைப் பூட்டி உறுதி செய்தப் பிறகு கீழே தன் வீட்டுக்கு வந்தான். 

இருவரும் படுத்து உறங்க முற்பட்ட சமயம். சில சப்தங்கள் கேட்க ஆரம்பித்தது. "என்னங்க சத்தம் இது? யாரோ கதவை தட்டற மாதிரி இருக்கு " கலவரமான குரலில் மீரா.
ஏன் பயப் படர? முன்னாடி இரும்பு கேட் இருக்கு அதையும் பூட்டியாச்சு ? யார் வந்து  கதவ தட்ட முடியும் ?? முன்னலாம் இப்படி பயப்பட மாட்டியே நீ ??

பழசை நினைத்து  பெருமூச்சு விட்டாள் மீரா. சிறுவயதில் இருந்தே பயம் என்பதை அறியாமல் வளர்ந்த நான் ஏன் அப்படி ஆனேன்? சில நாட்களாக அவள் அடிக்கடி தன்னைதானே கேட்டுக் கொள்ளும் கேள்வி அது.
 
இப்பொழுது கதவு தட்டும் ஓசையுடன் யாரோ நடக்கும் ஓசையும் சேர்ந்து கொள்ள, மீராவின் இதயத்துடிப்பு அதிகரித்தது ...

-தொடரும்

மே 20, 2010

இவர்களும் பிரபலங்களே II

இவர்களும் பிரபலங்களே I


ஷஸ்னி


            மிக அழகாக சிறு சிறு கவிதைகளை எழுதி இவரது பதிவை அலங்கரித்துள்ளார். சில வரிகளே என்றாலும் அதில் தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிக அழகாக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.


இவரது பதிவுக்கான முகவரி அ..ஆ

ராதை 


       இவரும் ஒரு கவிஞரே . காதலை மிக அழகாக சொல்லும் அதே வேளையில் சமூக சிந்தனையும் கோபமாக வெளிப்படுகிறது இவரிடம். "பாரதி இன்று இருந்தால் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதை இன்றைய சமூகத்தின் மீதான உள்ளக்குமறலாக உள்ளது


இவரது பதிவுக்கான முகவரி ராதையின் நெஞ்சமே


மாதங்கி


    எட்டு பதிவுகள்தான் போட்டிருக்கிறார் இது வரை. இவரது ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். மஞ்சகாப்பு பதிவில் நமது கலாசாரத்தையும் ஸ்ரீரங்க கோவிலையும் அழகாக சொல்லி இருக்கும் இவர் , கார்தும்பி என்ற பதிவில் வண்ணத்துப்பூச்சியுடன் உறவாடுகிறார். இவரது வர்ணனை மிக மிக இயல்பாக பெரிய எழுத்தாளர்களின் பாணியில் உள்ளது


இவரது பதிவுக்கான முகவரி மைத்துளிகள்
இனியன் பாலாஜி 


 எழுதவேண்டாம் என்று நினைத்தே மூன்று அருமையான வலைப்பூக்கள் வைத்துள்ளார் இவர். ஆன்மீகத்தைப் பற்றியும் ,ஜோதிடத்தைப் பற்றியும் எழுதி வருகிறார்.


இவரது பதிவுக்கான முகவரி கண்கள் 


இவங்க பதிவை படிச்சி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும் 

LK

மே 18, 2010

காதல் பரிசு


என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்..


என் வெற்றியில் நீ
மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.

கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் -  வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...


என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

என் காதல் மனைவிக்கு நாளை (19.05.10) பிறந்தநாள் . இந்த கவிதையும் கீழே இருக்கும் பாட்டும் அவருக்கு நான் அளிக்கும் சிறு பரிசுHappy Birthday Sowmi ....

மே 17, 2010

இவர்களும் பிரபலங்களே I

பதிவுலகிற்கு தினமும் புதிதாக வருபவர்கள் ஏராளம். அவர்களில் நன்றாக எழுதுபவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சிலருக்கு திரட்டிகள் பற்றி தெரிந்து இருக்கிறது அதில் இணைவதின் மூலம் பலரின் அறிமுகங்கள் கிடைக்கிறது. ஆனால பலருக்கு திரட்டிகள் பற்றி தெரிவதில்லை தெரிந்தாலும் அவர்களின் பதிவை படிப்பவர்கள் மிகக் குறைவு . எனக்கு தெரிந்த நான் படிக்கும் அத்தகைய பதிவர்களை அறிமுகம் செய்வதே இந்த பகுதியின் நோக்கம் . என் பதிவை படிப்பவர்கள் இவர்களின் பதிவுகளையும் படித்து ஊக்கம் அளிக்குமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஹரிணி 

ஏறத்தாழ இரு வருடங்களாக பதிவுலகில் இருந்தாலும், இவர் இப்பொழுதுதான் தமிழில் எழுத ஆரம்பித்து இருக்கிறார். இவருக்கு கதை எழுதுவது நன்றாக வருகிறது. இவருடைய அந்த ஒரு மணி நேரம்! கதை இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மிக அழகாக சொல்லுகிறது.
இவரது பதிவை படிக்க http://vacantandpensive.blogspot.com/ 

 சந்தியா

மிக சமீபத்தில் பதிவுலகத்திற்கு வந்துள்ள புதுமுகம் இவர். இவர் தன் வாழ்க்கை அனுபவங்களையே பதிவாக எழுதுகிறார். கொச்சியில் பிறந்த கொங்கனி பெண்மணியாகிய இவர் தமிழை கற்று தமிழில் பதிவுகள் எழுதுகிறார். தமிழ்நாட்டில் பிறந்தவர்களே தமிழை மறந்து கொண்டு இருக்கின்ற இவ்வேளையில் இது ஒரு சிறப்பான விஷயம். 
இவரது பதிவை படிக்க http://sandhya-myfeelings.blogspot.com

கௌசல்யா 

மனதோடு மட்டும் என்ற தலைப்பில் மிக மிக அருமையான இன்றைக்கு நிறைய குடும்பங்களுக்கு தேவையான விசயத்தை எழுதுகிறார். எதனால் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வருகிறது என்று அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு சொல்ல முயற்சித்துள்ளார்.

இவரது பதிவை படிக்க http://kousalya2010.blogspot.com/

அஷ்வின்

வாழி நலம் சூழ என்ற தலைப்பில் இயற்கை மருத்துவத்தை பற்றியும் அதன் நலன்களை பற்றியும் எழுதி வருகிறார். அனைவரும் படிக்கவேண்டிய மிக அவசியமான பதிவு.

 இவரது பதிவை படிக்க http://frutarians.blogspot.com/

பத்மநாபன்
  
ஆனந்த வாசிப்பு என்ற தலைப்பில் எழுதும் இவர் சுஜாதாவின் பரம ரசிகர் ஆவார். என்ன காரணமோ தெரியவில்லை இவர் அதிகம் எழுதவில்லை. உங்கள் ஊக்கம் இவரை மேலும் எழுத தூண்டும் என்று எண்ணுகிறேன்.

இவரது பதிவை படிக்க http://aanandhavaasippu.blogspot.com/

தொடர்ந்து வாரம் ஒரு முறை புதிய மற்றும் அதிகம் படிக்கப்படாத பதிவுகளை வெளியிட எண்ணி உள்ளேன். உங்களுக்கு தெரிந்து இத்தகைய பதிவுகள் இருந்தால் எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மே 16, 2010

II

இராணுவத்தினரின் அவல நிலை

 நம்மை காக்க பனியோ வெயிலோ இல்லை கடும் பனிக் காற்றோ அதை பொருட்படுத்தாமல் , எல்லையிலே பணியாற்றும் நமது இராணுவத்திற்கு நமது அரசாங்கம் மிக நல்ல மரியாதை அளிக்கிறது. விடுமுறையில் வீடு திரும்பும் இராணுவ வீரர்கள் சந்திக்கும் கஷ்டங்கள்தான் எத்தனை ? இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எந்தவித வசதிகளும் இல்லை.  முன்பதிவு செய்யாமல் செல்லும் பயணிகள் பெட்டிப் போல்தான் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டியும் . அந்த வண்டியில் வரும் எந்த ஒரு உணவுப் பொருட்களும் இந்த பெட்டிக்கு போகாது. வண்டி ஏதாவது ஒரு நிலையத்தில் நிறுக்கும் பொழுது இவர்கள் சென்று வாங்கி வரவேண்டும் . இன்னும் சொல்லப்போனால், காற்றுகூட அந்த பெட்டியில் புக இயலாது. அவ்வளவு கூட்டம் இருக்கும் .  ஒரு வேலையும் செய்யாத அரசியல் வியாதிகளுக்கு எத்தனையோ சலுகைகள். தனது உயிரை பொருட்படுத்தாமல் நம்மைக் காக்க போராடும் இராணுவ வீரர்களுக்கு இப்படி ஒரு கேவலமான நிலை. என்று திருந்தும் இந்த பாரத நாடு ???

ஆட்டோ கட்டணங்கள்:

டெல்லி சென்றபொழுது , டெல்லியில் நான் கண்ட ஒரு நல்ல விசயம், ஆட்டோ கட்டணங்கள் . சென்னை போன்று சண்டைபோடும் ஆடோக்கரர்கள் அங்கு இல்லை. கட்டணமும் மிகக் குறைவுதான். சென்னையை விட பாதி கட்டணம்தான் அங்கு கேட்கின்றனர் . இறங்கும் பொழுது அதிகக் கட்டணம் கேட்டு தகராறு செய்வது இல்லை. இதற்கு காரணம் அங்கு ஆடோக்களில் உபயோகிக்கப்படும்  இயற்கை எரிவாயுதான் என்று சொல்கின்றனர். சென்னையிலும் இந்த மாற்றம் மிக அவசியம். காற்றும் மாசடையாமல் இருக்கும் கட்டணைமும் குறைவாக இருக்கும். நமது அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வருமா ??

செயற்கைப் பால் :

ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் இந்த செயற்கைப் பால் உபயோகிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துணி துவைக்கும் பவுடர்களில் தண்ணியை கலந்தால் பால் மணம் வருகின்றதாம் அதனால் அதை பால் என்று கூறி விற்கின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் இந்த மோசடி அதிகம் நடைப்பெறுகிறது. எனவே அங்கு செல்லும் மக்கள் கவனமாக இருங்கள்.LK

மே 08, 2010

அன்னையே


ஈரைந்து மாதம்
கருப்பையில்
வாழ் முழுதும்
உன் மனதில்...

அறியா வயதில்
தெரியாமல் செய்த பிழை

வாலிப வயதில்
தெரிந்து செய்த தவறு
இரண்டும் பொறுத்தாய்...

பள்ளி செல்லும் வயதில்
உனை வீட்டு நீங்கியதில்லை..
இன்று உனை கண்டே ஆகியது
மாதங்கள்   பல..

உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!!


தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் .

நான் இன்று இரவு தலைநகரத்திற்கு அலுவலக விசயமாக செல்கிறேன். எனவே இன்னும் ஒரு வாரம் எந்த ஒரு புதிய பதிவும் வராது (இதை பார்த்தஉடனே நிறைய பேரு நிம்மதி பெருமூச்சு விடற சவுண்ட் கேக்குது ).

மீண்டும் உங்களை அடுத்த ஞாயிறு சந்திக்கிறேன் .கார்த்திக்

மே 07, 2010

கசாப்புக் கடைக்கு செல்வாரா கசாப் ???


நவம்பர் 26 ,2008  இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். மும்பையில் தாஜ் ஹோட்டலிலும், CST என்றழைக்கப் படும் சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்திலும் இன்னும் சில இடங்களிலும் , பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நிகழ்த்திய நாள். அந்த தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவரவாதி கசாப் மட்டுமே .

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாய் நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது . கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தண்டனை நிறைவேற்றப்படுமா ???

காரணம் 1

ஏற்கனவே 2001 டிசம்பர் மாதம் நமது நாட்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியக் குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட அப்சல் குரு இன்றும் சிறைச்சாலையிலே நமது வரிப் பணத்தில் நன்றாக சாப்பிட்டு கொண்டு நிம்மதியாக இருக்கிறார். தாக்குதல் நடந்து பத்து வருடம் ஆகப் போகிறது .

காரணம் 2 

நமது நாட்டில் குற்றவாளிகளுக்கு உதவி புரிவதற்கென்ற சிலர் இருக்கின்றனர். மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் . இவங்களுக்கு வேலையே எந்த குற்றவாளிய அரசாங்கம் கடுமையா தண்டிக்குதோ அந்த குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிப்பது. அந்த பயங்கரவாதி சுட்டுக் கொன்ற, காவலர்களோ இல்லை போது மக்களோ இவர்கள் கண்ணுக்கு மனிதர்கள் இல்லை. அந்த தீவிரவாதி மட்டுமே மனிதனாய் இவர்களுக்கு தெரிவான்.

காரணம் 3

அடுத்து எதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் வரலாம். அப்பொழுது அங்கு சிறுபான்மை ஓட்டு அரசுக்குத் தேவைப்படலாம்( நான் அந்த சிறுபான்மை இனத்தவரை குற்றம் சொல்லவில்லை, அரசாங்கத்தையே குற்றம் சொல்கிறேன் ). அதனாலும் கசாபின் தண்டனை நிறைவேற்றப் படமால் தள்ளி வைக்கப் படலாம்.


நான் நினைக்கிறன் , கசாபுக்கு நல்லா  தெரிஞ்சிருக்குமோ, தீர்ப்பு எப்படி வந்தாலும், தன்னை தூக்குல அவ்வளவு சீக்கிரம் போட மாட்டாங்க  , அதனால குண்டடி பட்டு சாகாம, நிம்மதியா நல்லா அருமையா சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்னு ??

சட்டம் அதன் கடமையை செய்து விட்டது, பொருத்தமான ஒரு தீர்ப்பை வழங்கி விட்டது. ஆனால் அரசாங்கம் அதன் கடமையை செய்யுமா?  இந்த தீவிரவாதிகள் இருவரையும் ஒரே நாளில். தூக்கில் ஏற்றுவார்களா???

மே 06, 2010

அரியலூர் உப்புமா


அரியலூர் உப்புமாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னா ஒரு 15  வருஷம் பின்னாடி போவோம். 1995 ஆம் வருடம் கோடை விடுமுறை. அப்ப அமெரிக்கால இருந்து என்னோட மாமா வந்திருந்தார் . அவருக்கு ஒரு ஆசை தமிழ்நாட்ல இருக்கற ஒரு சில கோவிலுக்கு போயிட்டு வரணும்னு. அவருக்கோ இங்க சரியாய் வழிலாம் தெரியாது . சரி யாரை கூட்டிகிட்டு போறதுன்னு யோசிச்சார். அப்போதைக்கு வெட்டியா இருந்தது (அப்பவுமானு கேக்ககூடாது ) நானும் என்னோட இன்னொரு மாமா பையனும்தான். நாங்க ரெண்டு பேரும் ஒரே வயசு. அதிகமா எந்த இடத்துக்கும் போனது இல்லை.  இன்னும் சரியாய் சொல்லப் போனா எங்க அம்மாவை விட்டுட்டு நான் எங்கயும் போனது இல்லை . (இப்ப சேலம் போய் ஒரு வருஷம் ஆச்சு :(  )

ஒரு வழியா சேலத்தில இருந்து கிளம்பி சிதம்பரம் போய் அங்க இருந்து மாயவரம் கும்பகோணம் வழியா தஞ்சாவூர் வந்தோம். அங்க தெரிஞ்ச குடும்ப நண்பர் வீட்ல தங்கி இருந்தோம் . கோவிலுக்கு போயிட்டு வரப்ப , எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டு எதோ பொருள் வாங்கனும்னு என் மாமா போய்ட்டாரு . ஏன்டா அப்படி சொன்னோம்னு ரொம்ப பீல் பண்ணாரு  அப்புறமா. அப்படி என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா ? ரொம்ப சரியா தப்பான பாதைல போய்ட்டோம். தனியா போனவே ரொம்ப சீக்கிரம் வந்திருவோம் . இதுல கூட ஒருத்தன் வேற. அவன் ஒரு வழி சொல்ல நான் இன்னொரு வழி சொல்ல , கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேரம் சுத்தினோம் . அப்புறம் எங்க மாமாவே எங்களை கண்டுபிடிச்சிட்டார் . பாவம் அவர் எங்களை திட்டவும் முடியல . சின்ன பசங்க பாருங்க . ஊரு விட்டு ஊரு வேற கூட்டிகிட்டு வந்திருக்கோம்னு அமைதியா இருந்தார்.

(எங்கடா உப்புமான்னு கேக்கறது காதில விழுது. அடுத்தது அதைத்தான் சொல்லப்போறேன்).

இப்படி எல்லா இடத்தையும் சுத்திட்டு கடைசியா நாங்கப் போனது அரியலூர்ல
இருக்கற என் சித்தி வீட்டுக்கு. நாங்க போன நேரம் சித்தி ஊர்ல இல்லை. இரவு போறப்பவே வெளில சாப்ட்டுட்டு போய்ட்டோம். அதனால அப்ப உணவு பிரச்சனை இல்லை. காலைல ஒரு  ஆறு மணிக்கு எந்திருச்சேன். என் சித்தப்பா மட்டும்தான் எழுந்திருந்தார். மத்தவங்க நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. சும்மா சொல்லக் கூடாது அட்டகாசமான ஒரு காபி கொடுத்தார். சரி காலைல சாப்பிட உப்புமா பண்ணலாமான்னு கேட்டார் . சரி அவர்தான பண்ணப் போறார் நமக்கென்ன அப்படின்னு யதார்த்தமா தலைய ஆட்டினேன்

 நீயும் வா அப்படின்னு என்னையும் கூட்டிகிட்டு சமையலறைக்குப் போனார். அவர் ஒவ்வொரு பொருளா கேட்க , நானும் எடுத்துக் கொடுத்தேன். ஒரு வழியா உப்மாவும் ரெடி ஆய்டுச்சி. ஆனா, எனக்கு எதையோ போடாம விட்டுட்டோம்னு ஒரு எண்ணம்.  உப்பு சரியா இருக்கான்னு சாப்பிட்டுப்  பாருன்னு கொஞ்சம் கொடுத்தார். வாய்லப்  போட்டபுறம்தான் தெரியுது , உப்பைப் போடவே இல்லைன்னு, அப்புறம் என்ன பண்றது, கொஞ்சம் தண்ணில உப்பை கரைத்து அதை உப்புமாவில் ஊத்தி கொஞ்ச நேரம் அடுப்புல வச்சி இறக்கினோம். அப்பவும் உப்பு சரியா கலக்கல. இன்னிக்கு வரைக்கும் அவங்க வீட்டுக்கு கூப்பிடறப்ப நான் சொல்றது " நீங்க எதுவும் தராட்டி பிரச்சனை இல்ல ஆனா உப்புமா மட்டும் வேண்டாம் " .

இப்ப தெரிஞ்சதா அரியலூர் உப்புமாவைப் பத்தி .

உப்பு காரம் போட்டு பண்ணா உப்புமா . ஆனா சர்க்கரை போட்டு பண்ணா கேசரின்னு சொல்றோம், இனிப்பு உப்புமானுதான சொல்லணும் ?????

மே 05, 2010

பிரிந்தது ஏனோ ?


அலைபேசியின் அழைப்பில்
உன் குரலை  எதிர்பார்த்து
ஏமாந்தேன் ..

பேருந்து நிறுத்ததிலே
உன் இரு கண்களை
தேடி  விழிகள் பூத்தது ...

தினமும் நீ வரும் வழி
பார்த்து காத்திருந்தேன்
கரைந்தது நேரம்தான் ...

கடற்கரையில் அலைகள்
மட்டும் வந்து மோத
வெற்று  மனிதனாய் நான். ..

அன்னையாய் எனை
அரவணைத்து
கலக்கங்கள் தீர்த்தாயே ..

கோபத்தில் நான் கத்த 
தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..

சோகத்தில்  இன்று நான்
 எங்கே சென்றாய் நீ ??

(பி.கு காரணம் இன்றி எனை பிரிந்த தோழிக்காக எழுதியது )

மே 04, 2010

சில நினைவுகள்


வாழ்வின் மறக்க
இயலா சில நினைவுகள் ...

பெண் பார்க்கும் தருணத்தில் 
நாணத்தால் தலை குனிய
அறை ஓரம் நின்று கடைக்கண்ணால்
நீ பார்த்த பார்வை ..

முகம் பாராமல்
நிலம் நோக்கி நீ
பேசிய முதல் வார்த்தை ...

நீ செப்பிய  வார்த்தைகள்
கொஞ்சம் அவை
சொல்லிய அர்த்தமோ ஆயிரம் ..

நீ  பேசுவாய் என
நானும் - வெட்கத்தால்
நீயும் மௌனமாய் கழித்த
அந்த நிமிடங்கள் ...

அழைப்பு வராத தினங்களில்
எழும் கோபம் உன் குரல்
கண்டவுடன் மறைந்த தருணங்கள்..

வாழ்த்து தெரிவிக்க அழைத்து
குரலை கேட்டப்பின்
மௌனமாய் நீ இருந்த அந்த நொடிகள் ..

மணமுடித்தப் பின்னும்
தனிமையில் ஏங்கித்
தவித்த மாதங்கள் ..

மே 03, 2010

கேரட் சாதம்

ரொம்ப சுலபமான சத்தான  சாதம் இது.தேவையான பொருட்கள் 

             பச்சரிசி                        ஒருவருக்கு தேவையான அளவு
             கேரட்                               4
             பச்சை மிளகாய்             2
             மிளகுப் பொடி                 2 ஸ்பூன்
             உப்பு                                  தேவைக்கு ஏற்ப
            எண்ணை                         தேவைக்கு ஏற்ப

செய்முறை :

  முதல்ல சாதத்தை வச்சிடுங்க . ரொம்ப குழைய விடாதீங்க. கலவை சாதத்திற்கு நன்றாக இருக்காது. கேரட்டை நல்லா பொடி பொடியா துருவிக்கணும். இப்ப வாணலிய அடுப்பில் வைத்து எண்ணை ஊத்தி பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தப்பிறகு , மிளகாயை கிள்ளி போட்டு வதக்கிக்கொள்ளவும். இப்ப துருவி வச்சிருக்க கேரட்டை வாணலியில் கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் நன்றாக வதங்கியப் பிறகு உப்பு மற்றும் மிளகுப் பொடி போட்டு நன்றாக கிளறவும்.

இப்ப தயாரா  இருக்கும் சாதத்தை இந்த துருவலில் கொட்டி கிளறினால் சுவையான கேரட் சாதம் தயார்.சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் அருமையா இருக்கும். மிளகுப் பொடி இன்னும் கொஞ்சம் தேவை என்ற போட்டுக் கொள்ளவும்.

டிஸ்கி : படம் கூகிளாரின் உதவி .

மே 02, 2010

கொலைகாரர்களாய் நாம் ..


சிவகாசி
பட்டாசுகளின் சரணாலயம் ...
இளம் துளிர்களின் இடுகாடு!

நம் கணநேர மகிழ்ச்சியின்
கையூட்டுப் பொருளாய் இவர்கள்!

தந்தை குடியழிக்கும்
குடிமகன்
மகனோ தன்னையேத் தாரைவார்க்கும்
தியாகத் துளிர்..

ஏடுகளோடு தொடர்புக் கொள்ளாத
இளந்துறவிகள் இவர்கள்.
தீக்குச்சிகளோடு மட்டுமே
இவர்களது வாழ்க்கை ..


சிறகடித்துப்  பறக்கும்
பருவத்தில் பட்டாசின் நெடியில்
மக்கி மடியும்
மானுட மலர்கள் ..

பட்டாசுகளின் சப்தத்தில்
இவர்களின் ஓலங்கள் கேட்பதில்லை ...

இவர்களின் வாழ்க்கை வசந்தங்கள்
சருகுகளாய் உதிர
கொலைகாரர்களாய் நாம் ..