Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மக்களே உஷார் V

சமீப காலமாக துணிக்கடைகள் கூட பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் துணி வாங்கினா அதை வீட்டில் வந்துதான் அணிந்துப்...

சமீப காலமாக துணிக்கடைகள் கூட பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் துணி வாங்கினா அதை வீட்டில் வந்துதான் அணிந்துப் பார்ப்பார்கள். இப்ப அதெல்லாம் மாறிடுச்சு வாங்கறதுக்கு முன்னாடியே அது சரியா இருக்குதான்னு உடை மாற்றும் அறையில் சென்று அணிந்து உறுதிப் படுத்திக்கொள்கின்றனர். அங்கதாங்க பெண்களுக்கு பிரச்சனை .


துணி மாற்றும் அறைகளில் ரகசிய காமெராக்கள் பொருத்தப்பட்டு படம் எடுக்கப்படுவதாக சில காலம் முன்பு செய்தி பரவியது. ஆனால் அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்தது என்று தெரியவில்லை. இந்த மாதிரி இடங்களில் காமெராக்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாதவண்ணம் பொருத்தப்பட்டிருக்கும். அது அளவில் மிக சிறியதாக இருப்பதால் உங்கள் பார்வைக்குப் புலப்பட வாய்ப்புக்  குறைவு.எனவே இனிமேல் கடையில் துணியை அணிந்து பார்க்கவேண்டுமா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.


 துணிக்கடை மட்டும் இல்லீங்க , நீங்க சுற்றுலா போறப்ப தங்கும் விடுதிகளில் கூட இவ்வாறு இருக்கலாம். சுவர்களில் தடவிப் பார்த்தால் தட்டுப்பட வாய்ப்புண்டு. எனவே வெளி இடங்களில் தாங்கும் பொழுது கவனமாக இருத்தல் மிக அவசியம்.


இப்படி வெளி இடங்கள்தான் உங்களுக்கு ஆபத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சுற்றுபுறங்கள் கூட உங்களுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புகள் இருக்கு. இப்ப அடுக்கு மாடி வீடுகள்  அதிகம்.  கோடை காலத்தில காற்றிற்காக ஜன்னல்களை திறந்து வைக்கின்றனர். உங்கள் பக்கத்து வீட்டில் உங்கள் வீட்டு  ஜன்னல்களை பார்த்து ஒரு கேமரா பொருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மற்றவர்களின் பார்வைக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் . அதேபோல் வீட்டில் எதாவது குழாய் அல்லது மின்சார சாதனங்கள் பழுதடைந்தால் உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான நபர்களை கொண்டு சரி செய்யவும். புதியவர்களை அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு குளியல் அறையில் கூட கேமரா பொருத்தப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது இருக்கும் வயர்லெஸ் தொழில் நுட்பம் மூலம் படங்கள் எடுக்கப்படும்வாய்புகள் நிறையவே உண்டு.


காசோலைகளில் மாற்றங்கள் :



 இதுவரையில் காசோலைகளில் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம் இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வந்துள்ளது.வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து காசோலைகளில் நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால்  அந்த காசோலை செல்லாது. எனவே காசோலை நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.

24 கருத்துகள்

Harini Nagarajan சொன்னது…

Nalla pathivu. Sila naal munnadi udai maatrum arayin kannadiyai sari paarpatharkku kooda oru mail vanthathu. aanaal yethanai per ellavatrayum sari paarkiraargal enbathu thaan kelvi. Pothys pondra periya kadaigalil vidumurai naatkalai ration kadaigalai vida periya queue intha thuni maatrum arai munbu thaan nirkkum. Ulle poga adi thadi nadakkatha kurai thaan!

Ananya Mahadevan சொன்னது…

நம்ம வீட்டு ஜன்னல் திறந்து வைக்க கூட யோசனையா இருக்கே! Technology has improved very much!!! என்னம்மோ போடா மாதவா..

பெயரில்லா சொன்னது…

seriya sonninga karthi.ladies enge ponalum romba carefulla irukka vendiyathu thaan. intha vishayam pathi april maadha vanitha( malayalam) magazine la vandha joke paaren...
hotel la sapida pona hus and wife..wife kku bathroom poganama,avanga hus kitte ketanga, nan bath room poyittu varen..
appo hus sonnala venda ni bathroom pogathe inge hotel veliyile utakandhu po yen na bathroom pona intha world fulla unne papanga veliyil irundha 4,5 per thaan papanga..
ippidi irukku ulagam.

ப.கந்தசாமி சொன்னது…

செக் எழுதுவது பற்றிய விவரம் எல்லோருக்கும் உபயோகமானது. நன்றி.

மதுரைக்காரன் சொன்னது…

Informative and nice.

manjoorraja சொன்னது…

பயனுள்ள பதிவு.

உடைமாற்றும் அறையிலுள்ள நிலைக்கண்ணாடியே காமிராவாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

செக் பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளது. நன்றி.

Menaga Sathia சொன்னது…

அவசியமான நல்ல பதிவு!!

sheik.mukthar சொன்னது…

A good one.Thanks for the alert.

malar சொன்னது…

நல்ல பதிவு

தக்குடு சொன்னது…

viitla ukkaanthu yoosippanga poolarukku!!!!

ஜெய்லானி சொன்னது…

கரெக்டா சொல்லியிருக்கீங்க . அதுமாதிரி நான் எழுதியது , நேரம் இருந்தால் பாருங்க.http://kjailani.blogspot.com/2010/03/blog-post.html

அன்புடன் மலிக்கா சொன்னது…

எப்படி போகுது காலம் அச்சோ எங்கேயும் யாரையும் பார்க்கக்கூட பயமாக இருக்கு.

எப்போது என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு.

சே மனித ஜென்மங்கலாக திரியும் மாபாவிகள் நடமாடும் உலகமாககிவிட்டது..

நல்லதொரு பதிவு..

Chitra சொன்னது…

http://www.amazon.com/gp/product/B002WK5TSY?&tag=shopwiki-us-20&linkCode=as2&camp=1789&creative=9325

no problem. :-)

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல விழிப்புனர்வான பதிவு இது.எல் கே, இதுபோன்ற ஆட்களைப் பிடித்து மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். பயம் இருந்தால் தான் நம்ம ஆளுக ஒழுங்கா இருப்பாங்க.

எல் கே சொன்னது…

@harini

enna panna..kalam kettu kidakku

@ananya
:(

@sandhya
sindika vendia visayam

எல் கே சொன்னது…

//Dr.P.Kandaswamy said...

செக் எழுதுவது பற்றிய விவரம் எல்லோருக்கும் உபயோகமானது. நன்றி.//

நன்றி சார்
//மதுரைக்காரன் said...

Informative and nice./
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரை
//Mrs.Menagasathia said...

அவசியமான நல்ல பதிவு!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@மஞ்சூர் ராசா

நீங்க சொல்றதும் நடக்குது .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@sheik.mukthar
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@malar

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@தக்குடுபாண்டி
aamam thakkudu

எல் கே சொன்னது…

@jailani
பார்த்தேன் ஜெய்லானி. நாம்தான் கவனமா இருக்கணும்

@அன்புடன் மலிக்கா

உண்மைதான் சகோதரி . யாரையும் நம்ப முடியறது இல்ல. வருகைக்கு நன்றி
@chitra
but i dont think its available in india

எல் கே சொன்னது…

@பித்தனின் வாக்கு

இவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனைதான் சரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப நல்ல பதிவு.. கார்த்திக்..
எங்கல்லாம் கேமரா வைக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு..

SathyaSridhar சொன்னது…

Rombha nalla information nga,,,kandippa jaakrathaya irukkanum veli idangalla sellum poedhum thangum poedhum seri,,check ezhuthurathu rombha usefulla na vishayam nga,,nalla posting innaiku..neenga kaetukitta maathiri naan word verification eduthuttenga..

எல் கே சொன்னது…

@ஆனந்தி

நன்றி

@சத்யாஸ்ரீதர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க வலைப்பூவை பார்த்தேன். அதற்க்கு ஒரு தனி நன்றி

Bhushavali சொன்னது…

Good informative post!!!
Musings at Elephanta Caves
Dressed up as a Bridesmaid

எல் கே சொன்னது…

நன்றி தோழி