Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஆபிஸ் நீதி

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.  ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள...


ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.  ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.  சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,  குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,  சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது.  சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.


கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.

********************************************************************************************************
இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப்புரிந்துக்கொண்டான்.

அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் "ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு" முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.

நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.  நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போன கழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி(CV) அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.



பி.கு . இது இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இங்கு பதிவிட்டது மட்டுமே நான்.  


 

10 கருத்துகள்

Geetha Sambasivam சொன்னது…

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர் லக்ஷத்து நூற்றெட்டாம் முறையாகப் படிக்கிறேன் இதையே! நச், நச், நச்! டமார்!!!!!!! கோபம்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கீதாம்மா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.ஏற்கனவே தலைவலி அதனால அப்புறம் முட்டிக்கிறேன். :-))))))

Porkodi (பொற்கொடி) சொன்னது…

இதுக்கு முன்னாடி ஏதோ பதிவு போட்டு எடுத்துட்டாப்புல இருக்கு?! என்ன ஏதும் கலவரமா? நான் வர்றதுக்குள்ள எப்படி நீக்கலாம்? :-(

தக்குடு சொன்னது…

//இது இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இங்கு பதிவிட்டது மட்டுமே நான்// neenga sollavey vendam, yengalukkey theriyum...:)

Harini Nagarajan சொன்னது…

hahahaha ithula yentha kazhuthai neenga?? muthala rendavatha?? :P

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Yerkanavae padichirukkaen :-))

SathyaSridhar சொன்னது…

Haa haaa haaa,,,Mr.Karthik,,neenga sonnathu rombha rombha seri office laa avaaavaa avaa vaelaya paarthundu iruntha rombha kshemama irukkalam illaiyo thalaila kuttu vizhum,,

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஒரு விசயம் நல்லா தெரியுது. நீங்க ஆபீஸ்ல வேலை செய்யாம பதிவு மட்டும் போடறீங்கன்னு... சோ நீங்க first example ஆ இல்ல செகண்ட் ஆ ? (சும்மா கேட்டேன்)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said...
இதுக்கு முன்னாடி ஏதோ பதிவு போட்டு எடுத்துட்டாப்புல இருக்கு?! என்ன ஏதும் கலவரமா? நான் வர்றதுக்குள்ள எப்படி நீக்கலாம்? :-(//

இதென்ன புது பஞ்சாயத்து... எனக்கும் சொல்லணும்... நானும் சங்கத்துல உறுப்பினர் என்ற முறையில் இந்த விசயம் பகிர பட வேண்டியது முக்கியம் என்பதனால்.....(முடியல... மூச்சு வாங்குது)

egglesscooking சொன்னது…

Idhukkum oru vazhaka mozhi dhaan enakku gyabgathukku varudhu. Vela seiyaravanuku veliaya kodu, summa irukiravanukku sambalatha kodu.