ஏப்ரல் 30, 2010

கூட்டு


நாட்டுப் பாதுகாப்பு :

  பாகிஸ்தானில் நமது தூதரகத்தில் வேளை செய்தப் பெண் காதலுக்காக  நமது நாடு ஆவணங்களை பாகிஸ்தானிற்கு கொடுத்திருக்கிறார்.அந்தப் பெண் செய்த தவறு ஒருபுறம் இருக்கட்டும். இதை என் நமது உளவுத் துறையினர் இவ்வளவு காலம் இதை எவ்வாறு அனுமதித்தனர்? தூதரகத்தில் வேலை செய்யும் அனைவரையும் கண்காணிக்க வேண்டியது அவர்களின் முக்கிய பணி இல்லையா ?

அலட்சியம் :

 கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய பொருள் ஒன்றை பழைய பொருட்கள் விற்கும் கடையில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். அதை கண்டுபிடிக்கும் முன்பே பலர் அதான் கதிர் வீசினால் பாதிப்படைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு உபயோகப்பட்ட அந்தப் பொருள் எவ்வாறு இங்கே வந்தது? யார் இதற்குப் பொறுப்பு? வழக்கம் போல் இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் ஒரு குழு அமைத்துள்ளது ? இதற்கு விடை தெரியும் பொழுது சம்பந்தப்பட்ட நபர்கள் ஓய்வுப் பெற்று எங்காவது ஒரு நாட்டில் செட்டில் ஆகி இருப்பார். மீடியாவிற்கும் இரண்டு நாட்களில் வேறு ஒரு விஷயம் கிடைக்கும் இதுவம் மறக்கப்படும்.

வாழ்த்துக்கள் :

இந்த வாரம் நமது சகப்பதிவர்கள் சிலரின் படைப்புகள் யூத் விகடனில் வெளி வந்துள்ளது . அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளை உழைப்பாளர்கள் தினம். உழைக்கும் அனைவரும் உழைப்பாளர்கள்தான். எனவே உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மாற்றம் :

எனது வலைப்பூவின் பெயர் மாற்றம் செய்துள்ளேன். "என் எண்ணங்கள்" என்ற பெயரில் ஏற்கனவே இரண்டு மூன்று வலைப்பூக்கள் உள்ளதை இன்றுதான் பார்த்தேன். எனவே அதற்கு பதிலாக எனது அன்னையின் பெயரான "பாகீரதி" என்பதை  வைத்துள்ளேன்.


விடுமுறை :

கோடை விடுமுறை துவங்கி விட்டது. பள்ளிகளுக்கு விடுமுறையும் விட்டாயிற்று. இப்ப விடுமுறைகளில் கூட தமது குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை பலரும். அந்த கேம்ப் இந்த கோச்சிங் என்று அவர்களைப் போட்டு வாட்டி வதைக்கின்றனர். ஏற்கனவே பள்ளி பாடங்களின் சுமையால் கஷ்டப்படும் நமது குழந்தைகளை இப்பொழுதாவது சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்களுக்கு படிக்கும் வழக்கத்தை உண்டு பண்ண இதுவே சரியான காலம். நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள். முடிந்தால் எங்கேயாவது சுற்றுலா சென்று வாருங்கள். உங்களுக்கும் ஒரு மாற்றமாக அமையும்.

இன்று இரவு பழனி செல்கிறேன். எனவே மீண்டும் ஞாயிறு அன்று சந்திப்போம்.

ஏப்ரல் 29, 2010

கல்யாணத்திற்கு முன்பு

ஆறாவதோ இல்லை ஏழாவதோ படித்துகொண்டிருந்த சமயம் , எனது சித்தியின் (அம்மாவின் பெரியம்மாவின் பெண் ) திருமணத்திற்கு என் பாட்டி வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், எனது தாத்தா,பாட்டி, எனது பெரியம்மா அவருடைய பையன்(எனது தம்பி) மற்றும் அவனது தங்கை. அங்கிருந்து மண்டபத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.

இந்த இடத்தில என் தம்பியப் பத்தி சொல்லணும். தலைவர் கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி பண்ணுவார். பொதுவா யாருக்கும் பயப்படாத ஆளு. முதல் பேருந்தைப் பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு . அடுத்த பேருந்தைப் பிடித்து மண்டபத்துல போய் இறங்கி பார்த்தா ஆளக் காணோம். எல்லாத்துக்கும் தூக்கி வாரி போட்டுச்சு. அவன் ஊருக்கு வேற புதுசு. வர வழில எதாவது ஸ்டாப்ல இறங்கிட்டனா இல்லை இறங்கமா பஸ்ல போயிட்டானா யாருக்கும் தெரியல ..


எல்லாரும் என்னைக் கேள்வி கேக்க ஆரம்பிசிட்டாங்க. உன் பக்கத்திலதான இருந்தான் எங்க போனான்னு பார்க்க வேண்டாமா ? அவன விட பெரியவன்(அவனை விட 6  மாசம்தான் ) உனக்கு பொறுப்பு வேண்டாம் ? இது என் தாத்தா. எங்க குடும்பத்துல எல்லாரும் பயப்படற ஒரே ஆள் என் தாத்தாதான் அவ்ளோ கோபக்காரர்.

  ஒரு பக்கம் அவங்க அம்மா அழ ஆரம்பிக்க , இன்னொரு பக்கம் என் தாத்தாவும் பாட்டியும் கோபத்தில (இந்த இடத்துல யாருக்காவது கீதா பாட்டி நினைவு வந்தா கம்பெனி பொறுப்பல்ல )அவங்களை திட்ட ஆரம்பிக்க, மண்டபத்துல கல்யாண வேலை முழுக்க நின்னுப்போச்சு.

என் மாமா வந்தவழில போய் பாக்கலாம்னு வண்டிய எடுத்துகிட்டு போனார். எங்க வீடு மண்டபத்துக்கு பக்கத்தில்தான். நானும் (தேடறதுக்கு எவ்ளோ பெரிய ஆள்) என் பாட்டியும் அங்க ஒரு முறை போயிட்டு வந்தோம். அதுக்குள்ள தேடிட்டு போன மாமாவும் திரும்பி வந்துட்டார். அவருக்கும் அவன் அகப்படலை. இதுல யாரோ ஒருத்தர் , இப்படித்தான் சின்ன பசங்களை அடிக்கடி கடத்தி விக்கறாங்கனு போற போக்கில சொல்லிட்டு போய்ட்டார்.  அந்த மண்டபம் கல்யாண மண்டபமா மாதிரி இல்லை. எங்க சித்தி  பாவம், கல்யாணத்த நினச்சு  சந்தோஷப்படறத இல்ல இதை நினைச்சு டென்ஷன் ஆகறதானு தெரியாம ஒரு குழப்பத்தில இருந்தாங்க.

அப்பதான் ஒருத்தர் உருப்படியான யோசனை சொன்னார். எந்த பஸ்ல வந்தீங்களோ அந்த பஸ் எந்த இடத்துக்கு கடைசியா போறதோ அங்க போய் பாருங்க. பஸ்லயே போயிருந்தா அங்க இருக்க வாய்ப்பு இருக்குனு சொன்னார் . அப்புறம் எங்க மாமாவும் பெரியம்மாவும் கிளம்பி போய் பார்த்த, அங்க டிரைவர் கூட உக்காந்து டீ குடிச்சிட்டு இருக்கான் என் தம்பி.

ஏன்டா அங்கேயே இறங்கலைன்னு கேட்டா , இல்ல தாத்தா மாதிரியே ஒருத்தர் சட்டை போட்டுக்கிட்டு இருந்தார். அதான் இன்னும் நாம இறங்கற இடம் வரலைன்னு நினைச்சிட்டு உக்காந்திருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது நீங்க இறங்கிட்டீங்கன்னு .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதான் இது வரைக்கும் இவங்ககூடவே வந்துட்டேன்னு சொல்றான்.

எதோ ஆண்டவன் புண்ணியம் திருப்பி கிடைச்சது அப்படின்னு மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம்  தலைவர்க்கும் இவனால அவனோட அம்மாவுக்கும் எல்லார் கிட்ட இருந்தும் இலவச அர்ச்சனை கிடைச்சது.

இன்னும் கூட அந்த மண்டபம் இருக்கற ரோட்ல போறப்ப இந்த ஞாபகம் வரும் எனக்கு. ஒரு கல்யாண பத்திரிகை வந்துச்சு . அதில் இந்த மண்டபத்தின் பெற பார்த்த உடன் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சி .

இதனால நான் சொல்ல வர்றது  என்னன்னா , வெளில போறப்ப உங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க.

டிஸ்கி : தலைப்பை வைத்து என் கல்யாணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைத்து வந்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல

ஏப்ரல் 28, 2010

பிடித்த ஐந்து பாடகர்/பாடகியர்

இன்று பிறந்தநாள் காணும் எனது மனைவியின் தாயாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள அவருக்குகாக இந்த பதிவு .

எனக்கு இசையில் அவ்வளவு ஞானம் இல்லை. மனதுக்கு இதமாக இருந்தால் கேட்பேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த ஐந்து  பாடகர்/பாடகியரின் வரிசை.

திருமதி M . S . சுப்புலட்சுமி

கர்னாடக சங்கீதத்தில் ஞானம் இல்லாதவர்களை கூட கவர்ந்து இழுத்தவர். கர்நாடக சங்கீதத்தின் முடிசூடா ராணி என்றே இவரை அழைக்கலாம். இவரது அனைத்து பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, குறை ஒன்று இல்லை மற்றும் அனைத்து மீரா பஜன் பாடல்கள். இதோ அதிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக ..2 . திரு. S .P . பாலசுப்ரமணியம்

 "பாடும் நிலா" என்று அன்புடன் அழைக்கப்படும் SPB  அவர்களின் குரல் தேனருவி போல் காதுகளில் பாயும். 80 களில் SPB இளையராஜா கூட்டணியில் வந்த அனைத்துப் பாடல்களும் மனதிற்கு அமைதி தருவதை நம்மை தாலாட்ட வைப்பதாய் இருக்கும். கர்நாடக சங்கீதம் முறையாக பயிலாத இவர் பாடிய சங்கராபரண பாடல்கள் அனைத்தும் ஹிட். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனக்கு தெரியாது என்பதற்காக அவர் அதை தவறாக பாடவில்லை. இவர் பாடிய எண்ணற்ற பாடல்களில் இருந்து உங்களுக்காக ஒரு பாடல்
3. K .J . யேசுதாஸ்

 கர்நாடக சங்கீதம் மற்றும் சினிமா இரண்டிலும் ஒரே சமயத்தில் புகழ் பெற்று விளங்குவது என்பது மிகக் கடினமான ஒன்று. இந்த சாதனைக்கு உரியவர் இவர். இவர் பாடிய கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் பாடல்கள் மிகப் பிரபலம். ஆனால் இன்று வரை இவரால் அந்த கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய இயலாதது வேதனையான ஒன்று. இவரது குருநாதர் செம்பை அவர்கள் வருடம்தோறும் குருவாயூர் கோவிலில் கச்சேரி செய்வது வழக்கம். ஒரு முறை இவரை அனுமதிக்காத காரணத்தினால் கோவிலின் வெளியே கச்சேரி செய்தார் .4 . சித்ரா :
  "சின்னக் குயில்" என்று அழைக்கப் படும் சித்ரா, மலையாளத்தை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் உச்சரிப்புப்  பிழையின்றி பாடக்கூடிய ஒரு பாடகி. (இன்றைய பாடகர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று ). இவர் பாடிய ஒரு அமுத கானம்.

5 . அருணா சாய்ராம்:

 இசையை கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்த ஒரு பெண்மணி. இப்பொழுது பாடி வரும் கர்நாடகா இசை பாடகியரில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இவர்.  இவர் பாடும் மராட்டிய abangangal  மொழி தெரியாவிட்டாலும் நம்மை தாளம் போட வைக்கும் .இதுவரைக்கும் எனக்குப் பிடித்த பாடகர்களை பத்தி பாத்தோம். இப்ப உங்களுக்கு யாரை பிடிக்கும்னு பார்க்கலாமா?

இதை ஒரு தொடர் பதிவாக மாற்ற நான் அழைப்பது

அநன்யா
ஹரிணிஸ்ரீ
தக்குடு பாண்டி
பொற்கொடி
அமைதிசாரல்

விதிமுறைகள்

1 . உங்களுக்கு பிடித்த இந்திய பாடகர்கள் மட்டுமே

ஏப்ரல் 27, 2010

ஆபிஸ் நீதி


ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.  ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.  சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,  குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,  சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது.  சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.


கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.

********************************************************************************************************
இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப்புரிந்துக்கொண்டான்.

அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் "ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு" முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.

நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.  நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போன கழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி(CV) அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.பி.கு . இது இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இங்கு பதிவிட்டது மட்டுமே நான்.  


 

ஏப்ரல் 26, 2010

பப்பட வடை

என்னடா பெயரே வித்தியாசமா இருக்கேனு பாக்கறீங்களா? ஆமாங்க இது கொங்கனி ஸ்பெஷல் .

தேவையான பொருட்கள் :


கேரளா பப்படம்           50  .
பச்சை அரிசி                 250 கிராம்  .
கடலை மாவு               50 கிராம்
எள்ளு                             1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி              1 ஸ்பூன் 
மிளகாய் பொடி            2 ஸ்பூன் 
உப்பு                               தேவையான அளவு
எண்ணை                     தேவையான அளவு

செய்முறை :

பப்படத்தை வெயிலில் காய வெச்சு எடுக்கவும். அரிசி ரெண்டு மணி நேரம் ஊற வெச்சு பிறகு அரைக்கவும் . அரைக்கும்போதே  அதில்  கடலை மாவு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து நல்ல தோசை மாவு பதத்தில் அரைக்கவும் .அரைத்தப்பிறகு 1  ஸ்பூன் எள்ளை அதில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

எண்ணை சூடான பிறகு பப்படத்தை  இந்த மாவில் தோய்த்து  எண்ணையில் போட்டு பொரித்து  எடுத்தால் சுவையான மாலை சிற்றுண்டி தயார் . முக்கியமான ஒண்ணு பொரித்து  எடுத்ததை  காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.

பி. கு : இந்த உணவை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி சந்த்யாவிற்க்கு எனது நன்றி

ஏப்ரல் 25, 2010

மக்களே உஷார் V

சமீப காலமாக துணிக்கடைகள் கூட பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் துணி வாங்கினா அதை வீட்டில் வந்துதான் அணிந்துப் பார்ப்பார்கள். இப்ப அதெல்லாம் மாறிடுச்சு வாங்கறதுக்கு முன்னாடியே அது சரியா இருக்குதான்னு உடை மாற்றும் அறையில் சென்று அணிந்து உறுதிப் படுத்திக்கொள்கின்றனர். அங்கதாங்க பெண்களுக்கு பிரச்சனை .


துணி மாற்றும் அறைகளில் ரகசிய காமெராக்கள் பொருத்தப்பட்டு படம் எடுக்கப்படுவதாக சில காலம் முன்பு செய்தி பரவியது. ஆனால் அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்தது என்று தெரியவில்லை. இந்த மாதிரி இடங்களில் காமெராக்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாதவண்ணம் பொருத்தப்பட்டிருக்கும். அது அளவில் மிக சிறியதாக இருப்பதால் உங்கள் பார்வைக்குப் புலப்பட வாய்ப்புக்  குறைவு.எனவே இனிமேல் கடையில் துணியை அணிந்து பார்க்கவேண்டுமா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.


 துணிக்கடை மட்டும் இல்லீங்க , நீங்க சுற்றுலா போறப்ப தங்கும் விடுதிகளில் கூட இவ்வாறு இருக்கலாம். சுவர்களில் தடவிப் பார்த்தால் தட்டுப்பட வாய்ப்புண்டு. எனவே வெளி இடங்களில் தாங்கும் பொழுது கவனமாக இருத்தல் மிக அவசியம்.


இப்படி வெளி இடங்கள்தான் உங்களுக்கு ஆபத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சுற்றுபுறங்கள் கூட உங்களுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புகள் இருக்கு. இப்ப அடுக்கு மாடி வீடுகள்  அதிகம்.  கோடை காலத்தில காற்றிற்காக ஜன்னல்களை திறந்து வைக்கின்றனர். உங்கள் பக்கத்து வீட்டில் உங்கள் வீட்டு  ஜன்னல்களை பார்த்து ஒரு கேமரா பொருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மற்றவர்களின் பார்வைக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் . அதேபோல் வீட்டில் எதாவது குழாய் அல்லது மின்சார சாதனங்கள் பழுதடைந்தால் உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான நபர்களை கொண்டு சரி செய்யவும். புதியவர்களை அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு குளியல் அறையில் கூட கேமரா பொருத்தப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது இருக்கும் வயர்லெஸ் தொழில் நுட்பம் மூலம் படங்கள் எடுக்கப்படும்வாய்புகள் நிறையவே உண்டு.


காசோலைகளில் மாற்றங்கள் : இதுவரையில் காசோலைகளில் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம் இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வந்துள்ளது.வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து காசோலைகளில் நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால்  அந்த காசோலை செல்லாது. எனவே காசோலை நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.

ஏப்ரல் 24, 2010

தட்டுவடை செட் மற்றும் பொரி

சேலத்தில எனக்கு பிடிச்ச பல விஷயங்கள் உண்டு. அந்த பரபரப்பு இல்லாத வாழ்க்கை , ஓரளவு சுத்தமான காற்று (சென்னை கூட ஒப்பிட்டு பார்த்தால்  ) மற்றும் மாலை நேரங்களில் கிடைக்கும் வித விதமான உணவு வகைகள். மதுரைல எப்படி இட்லி கடைகள் புகழ்பெற்றதோ அந்த மாதிரி சேலத்தில இருக்கற தள்ளு வண்டி கடைகள் . அங்க உங்களுக்கு டிபன் மட்டும் இல்லைங்க மாலை நேரத்துல நொறுக்கு தீனி நிறைய கிடைக்கும்.

அதுல குறிப்பா சொல்ல வேண்டிய ஒண்னு தட்டுவடை செட் மற்றும் பொரி. எனக்கு தெரிஞ்சு இந்த தட்டுவடை செட்  சென்னைல கிடைக்கறது இல்லை. இதை செய்யறது ரொம்ப சுலபம்.

தேவையான பொருட்கள் :

தட்டு வடை - வேண்டிய அளவு
காரட் - 2(துருவியது)
பீட்ரூட் - 2(துருவியது)
தேங்காய் அல்லது புதினா சட்னி (கெட்டியா அரைச்சது )செய்முறை :

தட்டுவடை செட் செய்யறது ரொம்ப சுலபம். முதல்ல காரட் அண்ட் பீட்ரூட் துறுவல கலந்துருங்க .ஒரு தட்டுவடை எடுத்துகோங்க. கொஞ்சம் சட்னிய அதில தடவுங்க . இப்ப கலந்து வச்ச துருவலை கொஞ்சம் அந்த தட்டுவடை மேல வைங்க .இப்ப இன்னொரு தட்டுவடைல கொஞ்சம் சட்னிய வச்சி அதை இது மேல வச்ச தட்டுவடை செட் ரெடி . கொஞ்சம் காரம் வேணும்னா சட்னிக்கு பதிலா ஊறுகாய உபயோகப்படுத்திக்கலாம் .


இதுல நிறைய வகை இருக்குங்க. தக்காளி உபயோகப்படுத்தியும் இதை பண்ணலாம். தட்டுவடைக்கு பதிலா தக்காளிய வெட்டி (வட்டமா ) உபயோகப்படுத்திக்கலாம். கொஞ்சம் மிளகுப்பொடி தூவின இன்னும் நல்லா இருக்கும்.

பொரி :

சென்னைவாசிகளுக்கு பொரின்னு சொன்ன ஆயுத பூஜைதான் ஞாபகம் வரும். வெறும் பொரிய சாப்பிடாம அதுல கொஞ்சம் காய்கறிய கலந்து சாப்பிட்ட சத்தும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

தட்டு வடை -  நொறுக்கி போட 

காரட் - 2(துருவியது)
பீட்ரூட் - 2(துருவியது)
பொரி : வேண்டிய அளவு
நல்லெண்ணெய் : 1  அல்லது 2  தேக்கரண்டி
உப்பு : வேண்டிய அளவு


இட்லி மிளகாய் போடி : கொஞ்சம்.

செய்முறை :

முதல்ல ஒரு கிண்ணத்துல பொரி மற்றும் துருவி வாய்த்த காய்களை போட்டு நல்லா கலக்குங்க. அப்புறம் மிளகாய் பொடி,உப்பு ,நல்லெண்ணெய் ஊத்தி இரண்டு அல்லது மூன்று தட்டுவடைய நொறுக்கி போட்டு  ஒரு கலக்கு கலக்குங்க. சுவையான பொரி தயார்.


கொஞ்சம் மாறுதலா வேணும்னா தக்காளிய பொடிப்பொடியா வெட்டி கலந்துக்கலாம்.

இந்த ரெண்டுமே உடம்புக்கு கெடுதி இல்லாதது . சும்மா எப்பவும் சமோசா இல்லேன்னா பர்கர்னு சாப்பிடாம கொஞ்சம் மாறுதலா இருக்கும் .

ஏப்ரல் 23, 2010

மறந்த கதை

வாழ்க்கையில் நாம நெறைய தொலைக்கறோம் .சில பேரு வாழ்க்கையே தொலைக்கறாங்க(தத்துவம் ..) சில பொருட்கள் தொலைஞ்சி  உடனே கிடைக்கும் சிலது கிடைக்கவே கிடைக்காது .  நாம தொலைச்சிட்டோம்னு நினைக்கிற பொருள் திரும்பி கிடைச்சா எப்படி இருக்கும் ?

2007 ஆம் வருடம் சேலத்துக்கு போறதுக்கு கிளம்பிகிட்டு இருந்தோம் ( நான் + தங்கமணி). 9  மணிக்கு ட்ரெயின். அன்னிக்குன்னு பார்த்து ஆபிஸ்ல நெறைய ஆணி புடுங்க வேண்டி இருந்துச்சி. எப்பவும் இப்படித்தான் நமக்கு வீட்ல வேலை இருக்குனா அன்னிக்கு  ஆபிஸ்ல நெறைய ஆணி இருக்கும் புடுங்க. நான் வீட்டுக்கு வந்தப்பவே மணி ஏழு. அவசர அவசரமா ரெடியாகி வீட்டை பூட்டினப்ப மணி 8 . அன்னிக்குன்னு பார்த்து ஆட்டோவும் கிடைக்கல.எனக்கோ டென்ஷன் . 

 
ஒரு வழியா ஆட்டோ பிடிச்சு சென்ட்ரல் போனப்ப மணி 8 .55 . அங்க இருந்த கூட்டத்துல நுழைஞ்சு பிளாட்பார்ம் போனா ட்ரெயின் கிளம்ப சிக்னல் போட்டாச்சு. தமிழ் படத்துல கிளைமாக்ஸ்ல ஹீரோ ஓடற மாதிரி ஓடி ஏறி உக்காந்தாச்சு. இப்பதான் அடுத்த டென்ஷன் . சேலத்துக்கு போன் பண்ணி கிளம்பிட்டோம்னு சொல்றதுக்காக தங்கமணி செல்போன தேடினாங்க. அப்பதான் செல்போன காணோம்னு தெரிஞ்சது.


உடனே என்கிட்டே உங்ககிட்டதான கொடுத்தேன் எங்க வச்சீங்கன்னு ஒரு கேள்வி. (அதெப்படி இவங்க தொலைக்கற எல்லா பொருளையும்  ரங்கமணிகிட்டயே கொடுத்தேன்னு சொல்றாங்க ??). எனக்கோ செல்போன தொலைச்சிட்டா ஊர்ல இருந்து வந்துடனே எவ்வளவு செலவோனு கணக்கு ஓடிகிட்டு இருக்கு . என் செல்போன்ல இருந்து கால் பண்ணி பார்த்தா ரிங் போகுது  ஆனா யாரும் எடுக்கல. அப்போதைக்கு ஒண்ணும் பண்ண முடியாது தொலைஞ்சது தொலைஞ்சதுதான் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்துக்கலாம்னு சேலம் போயாச்சு .(வேற என்ன பண்ண ?).

ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்த, வீட்டு ஓனர் "இது உங்க செல்போனா ? கொஞ்சம் பாருங்கன்னு" கொடுக்கறார் .உங்களுக்கு எப்படி கிடைச்சதுன்னு கேட்டா அவர் ரொம்ப கூலா உங்க ஜன்னல் மேல இருந்துச்சி . நீங்க கிளம்பரப்பவே பார்த்தேன் . அவசரமா போறவங்கள ஏன் தடுக்கணும்னு சொல்லலைன்னு சொல்றார். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையோட (மவனே உன்னை... ) தேங்க்ஸ் சொல்லிட்டு தங்கமணிய ஒரு பார்வை பார்த்தேன். அவங்களோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி ஒரு பார்வை பாக்கறாங்க. 

அப்புறமா ஏம்மா நீ மறந்து போய் வச்சிட்டு என்னை குற்றம் சொன்னியே இது நியாயமானு கேட்டா அதான் திரும்ப கிடைச்சிருச்சே  ஏன் இப்ப டென்ஷன் ப்ரீயா விடுங்கன்னு ஒரு பதில் . நான் என்னத்த சொல்ல ????? அப்ப அந்த போன் கிடைக்காம போயிருந்தா நான்தான் குற்றவாளி . என்ன கொடுமை இது ????

ஏப்ரல் 21, 2010

மக்களே உஷார் IV


 இன்றைக்கு  எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி . நடந்த சம்பவம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அது உணர்த்தும் நீதி நமக்குத் தேவையான ஒன்று. நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் இதோ .
 அன்று அப்பெண் வெளியில் செல்லும்பொழுது அவளது கைப்பை களவாடப்படுகிறது. அந்த கைப்பையில் இருந்தவை அப்பெண்ணின்  அலைபேசி,ATM அட்டை மற்றும் கொஞ்சம் பணம். பத்து நிமிடம் கழித்து அவருடைய கணவருக்கு போன் செய்தால் அவருக்கு அதிர்ச்சி . காரணம் அப்பொழுதுதான் அவருக்கு அந்தப் பெண்ணின் அலைபேசியில் இருந்து "ATM குறியீட்டு எண்ணை கேட்டு குறுந்தகவல் வந்தது " அவரும் அதற்கு மறுமொழி அனுப்பி இருந்தார். 

இருவரும் சுதாரித்து வங்கியை தொடர்பு கொள்வதற்குள் அவர்கள் கணக்கில் இருந்து கணிசமான தொகை எடுக்கப்பட்டிருந்தது.

நீதி:

 1 . வெளியில் செல்லும் பொழுதெல்லாம் ATM  அட்டை எடுத்து செல்லவேண்டாம். 

 2 . அலைபேசியில் பெயர் போட்டு எண்களை பதிவு செய்யுங்கள். Home, Honey, Hubby, Sweetheart, Dad, Mum போன்ற பெயர்கள் இடுவதை தவிர்க்கவும். 

3.  இந்த மாதிரி குறுந்தகவல்கள் வந்தால் , உடனடியாக போன் செய்து உறுதி செய்துக்கொள்ளவும். 

4 . இதே போல் மின்னஞ்சல் மூலமாகவும் ஏமாற்று வேலை நடக்கிறது. எந்த வங்கியில் இருந்தும் உங்கள் ATM  குறியீட்டு எண்ணோ அல்லது உங்கள் வங்கி கணக்கிற்கான பாஸ் வோர்ட் கேட்டோ மின்னஞ்சல் செய்ய மாட்டார்கள். எனவே அவ்வாறு மின்னஞ்சல் வந்தால் அதை நம்ப வேண்டாம்.

5 . உங்கள் அலைபேசியில் உங்கள் வங்கி எண்ணோ அல்லது ரகசிய குறியீட்டு எண்களோ பதிவு செய்து வைக்க வேண்டாம்.

போற போக்குல ஒரு  கேள்வி ..
பந்தை மேலே எறிந்தால் அது மறுபடியும் கீழே விழுவது ஏன்? 

சரியான விடை எழுதுபவர்களுக்கு எனது பதிவு தொகுப்பு ஒன்று பரிசளிக்கப்படும்

ஏப்ரல் 20, 2010

எமனுலகில் பதிவர்எமன் : சித்திர குப்தா, இன்று முதலில் விசாரிக்கப்படவேண்டிய நபர் யார் ?

சி.கு : இதோ உங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கும்  இவர்தான் பிரபு .

எமன்  : இவன்  செய்த குற்றம்தான் என்ன ? பார்க்க மிகவும் நல்லவன் போல் தோன்றுகிறானே இந்த மானிடன் .

சி.கு : இல்லை இல்லை இவனை அவ்வாறு சாதராணமாக நினைக்காதீர்கள் . இவன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் மிக கடுமையானது .

எமன்: எங்கே சொல் அந்த குற்றம் என்னவென்று கேட்போம்.

சி.கு : இவன் பூவுலகில் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் பதிவுகளின் மூலம்  பலரை துன்புறுத்தி இருக்கிறான்.

எமன்: மானிடா, உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு  என்ன பதில் சொல்கிறாய் ?

பதிவர் : பிரபு, நான் அவ்வாறு என்ன செய்தேன்?  தொழில் நுட்பத்தின் உதவியால், பிறர் பணத்தை களவாடினேனா இல்லை பெண்களை தொந்தரவு செய்தேனா ? என் சிந்தனைகளயும் எண்ணங்களையும் தானே பதித்தேன் ? அது தவறா அது குற்றமா?என்ன கொடுமை இது பிரபு என்ன கொடுமை  இது ?

சி.கு : பிரபு, இவன் அதை மட்டும் செய்திருந்தால் பரவாயில்லை . இட்டப் பதிவை, பல இணைய தளங்களில் இணைத்தான். அங்கே ஒரு ஓட்டுப் பட்டையும் வைத்தான்.  அதுமட்டுமா, தனது நண்பர்களுக்கு இதை மின்னஞ்சல் வேறு செய்து அவர்களை  ஓட்டு மட்டுமாவது போட சொன்னான் .

எமன்: (இந்த மானிடர்களுக்கு ஓட்டு என்றாலே இவ்வாறு செய்யதோன்றுகிறதோ?) உண்மையா மானிடா?

பதிவர்  :  உண்மைதான் பிரபு. எழுதியதை பிறர் படிக்க வேண்டாமா? நான்  மட்டும் படிக்க எதற்கு எழுத வேண்டும் ?

 எமன்: சித்திர குப்தா, இந்த மானிடன் சொல்லுவது சரியாகத்தானே உள்ளது? பிறர் படிக்கத்தானே எழுதுகிறார்கள்.

சி.கு : உண்மைதான் பிரபு. ஆனால் இவன் எழுதியதைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள் .
இவன் சாதாரணமாக  எழுதுவதே மொக்கையாக இருக்கும் . இதில் தனியாக மொக்கை பதிவுகள் என்று தலைப்பில் சில பதிவுகள் . இவன் பதிவை பிறர் வந்து படிப்பதே பெரிய விஷயம். இதில் மற்ற பதிவர்களை வைத்து கிண்டல் வேறு . கவிதை என்ற பெயரில் பல கொடுமைகள் .ஆனால் பிரபு, உருப்படியாக சில பதிவுகளும் எழுதி இருக்கிறான் இந்த மானிடன். 

எமன்: எங்கே இவனது சில பதிவுகளை காட்டு . அதை படித்தப்பின் என் தீர்ப்பை கூறுகிறேன். 

பதிவர் : வேண்டாம் பிரபு வேண்டாம்.

ஏங்க யாருங்க அது பிரபு ? எதுக்கு இப்படி ராத்திரில கத்தறீங்க? இதுக்குத்தான் இந்த கொலை நாவல் பதிவுலாம் படிக்காதீங்கான கேட்டாதான?

பதிவர் : அப்ப இவ்ளோ நேரம் நடந்தது எல்லாம் கனவா?

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பதிவர் நான் என்று நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல 

ஏப்ரல் 19, 2010

அதிரம்பள்ளி நடந்தது என்ன ?


சென்ற வாரம் கொசுவர்த்தி வாரமா இருந்தது நம்ம பதிவர்  வட்டாரத்துல. சரி நம்ம பங்குக்கு நம்மளோட பழைய நினைவை கொஞ்சம் கிண்டுவோம்னு , கிண்டினதுல கிடைச்சது கல்லூரி சுற்றுலா.

கல்லூரி நாட்கள்ல பலரால் மறக்க முடியாதது சுற்றுலா. எங்க கல்லூரில பல விசித்திரமான விதிமுறைகள் உண்டு.  முதலாண்டு மாணவர்களுக்கு சுற்றுலா செல்ல அனுமதி இல்லைங்கறது அதுல முக்கியமானது  .(இது எந்த விதத்தில ஞாயம்  நீங்களே சொல்லுங்க ?)

வேற வழி இல்லாம ஒரு வருஷம் ஓட்டினோம். சரி ரெண்டாவது வருசமாவது அனுமதி தருவாங்கன்னு பார்த்த , எங்களுக்கு மூத்தவங்க (அதாங்க seniros)  பண்ண சில பல லீலைகள்னால ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்க வேண்டியது போச்சு. ஒரு வழியா எல்லாம் முடிவு பண்ணி கேரளா போலாம்னு கிளம்பினோம்.

கேரளாக்கு போனப்புறம்தான் தெரிஞ்சது அன்னிக்கு அங்க கடை அடைப்புன்னு.( கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா ....). எப்படியோ நிதானமா வண்டிய ஓட்டி ஒரு வழியா அதிரம்பள்ளி அருவிக்கு (புன்னகை மன்னன்ல வருமே அதேதாங்க) வந்து சேந்தோம். எப்பவும் பரபரப்பா இருக்கற இடத்துல ஆள் அரவமே இல்லை .


மக்களுக்குத்தான் பந்த் எனக்கில்லைன்னு அருவி அருமையா கொட்டிக்கிட்டு இருந்துச்சி .அருவி விழுகிற இடத்துல போய் குளிக்க முடியாது , சரி மேல போய் (அருவிக்கு மேல )
நதில குளிக்கலாம்னு போனோம்.. எப்பவும் அங்க பரிசல்ல உள்ளூர் மக்கள் கடை
இருக்கும். அன்னிக்கு ஒரே ஒரு கடைதான்.


இருந்த ஒரு கடைல கிடச்சதை குடிச்சிட்டு ( அட சாயாதாங்க) , குளிக்க ஆரம்பிச்சோம். நம்ம பசங்க எல்லாரும் நகரத்துலையே இருந்து பழகினவங்க , தண்ணிய பார்த்துடன் இறங்கினவன் எவனும் வெளில வரமாட்டேன்கறாங்க. அப்பதாங்க அது நடந்துச்சி. திடீர்னு நம்ம நண்பன் ஒருத்தனை நதி ரொம்ப வேகமா தள்ளிட்டு போய்டுச்சி. ஒரு ரெண்டு நிமிஷம் எங்களுக்கு ஒன்னும் புரியல. எங்களுக்கும் நீச்சல் தெரியாது. தெரிஞ்சாலும் அந்த நிமிசத்துல என்ன பண்றதுன்னு புரியாது . பயத்துல எவனாலயும் கத்தகூட  முடியல . அந்த ஒரு பரிசல்காரர் இருந்தார் பாருங்க , அவர்தான் டக்குனு நதியில குதிச்சி அவனை பிடிக்க போனார். இதுக்குள்ள அவன் கிட்டத்தட்ட விளிம்புக்கே போய்ட்டான், நல்லவேளை அங்க இருந்த ஒரு பாறைய கெட்டியா புடிச்சிட்டு சமாளிச்சிட்டு இருந்தான்.நம்ம ஹீரோ (பரிசல்காரர்) வேகமா அவன் கிட்ட போய் அவனை இழுத்துகிட்டு (நல்ல வாட்டசாட்டமா இருப்பான் ) எதிர் நீச்சல் போட்டு ஒரு வழியா கரைக்கு கொண்டுவந்தார். எங்க கூட வந்த லெக்சரர் முகத்தை பாக்கணுமே , எங்களை விட அவங்கதான் ரொம்ப டென்ஷன் ஆனாங்க. காலேஜ்க்கு பதில் சொல்ல வேண்டியது அவங்கதான . இவ்ளோ நடந்தப்புறம் ஒருத்தன் கேட்டான் பாருங்க அதான் ஹைலைட்டே . அவன் அப்படி என்ன கேட்டனா " சரி சரி வாங்க மறுபடியும் குளிக்க போலாமா "??? அவனுக்கு என்ன கிடைச்சிருக்கும்னு நான் சொல்லனுமா என்ன ????

ஏப்ரல் 18, 2010

மக்களே உஷார் III

மக்களே உஷார் I
மக்களே உஷார் II

பெண்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுக்கலாம் என்று நம்ம ஆட்கள்கிட்டதாங்க கத்துக்கணும் . உங்களுக்கு தெரியாமயே உங்கள் போட்டோ இணையதளங்களில் வலம் வரலாம். பல்வேறு கீழ்தரமான தளங்களில் இடம்பெறலாம். எப்படின்னு கேக்கறீங்களா? தொடர்ந்து படிங்க ..


இன்னிக்கு  பெண்களுக்கு எதிரான முக்கிய ஆயுதமே  கேமரா செல்போன்தான். இன்னிக்கு நெறைய பேர் இந்தமாதிரி போன்தான் உபயோகிக்கறாங்க. அதில சில பேர்தாங்க இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யறாங்க. இன்னிக்கு நாகரீகம்னு சொல்லிக்கிட்டு மேல்நாட்டு உடைகளை போடறீங்க.(குறிப்பா கல்லூரி மாணவிகள் மற்றும்  பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர்) கேட்டா வசதியா இருக்கு இந்த கோடைகாலத்தில அப்படின்னு. ஆனா பாருங்க உங்களுக்கு வசதியா இருக்கற விசயமே உங்களுக்கு ஆபத்தாக முடியும். உடலை மறைக்கற மாதிரி உடை என்றால்  பிரச்சனை இல்லை. பல உடைகள் அப்படியா இருக்கு?

இந்த மாதிரி உடை அணிந்து நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது உங்களுக்கே தெரியாமல் சில விஷமிகளின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு நீங்கள் பலி ஆகிறீர்கள். நீங்கள் படிக்கும் கல்லூரியோ அல்லது பொருட்கள் வாங்க செல்லும் ஸ்பென்சர், சிட்டி சென்ட்டர் அல்லது கடற்கரை போன்ற இடத்திலையோ நீங்கள் புகைப்படம் எடுக்கப்படலாம். பின்பு அது பலரிடம் கைமாறும் இணையதளத்திலும் போடப்படலாம்.  .

நீங்கள் கல்யாணமாகாத இளம்பெண்ணாக இருந்து உங்கள் படம் இவ்வாறு தளங்களில் வந்தால் உங்கள் வாழ்க்கை  ? . அதேபோல்தான் திருமணம் ஆனவர்களுக்கும். தேவையற்ற பல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்.வெளில போறப்ப நாம எப்படி உடை அணிகிறோம் என்பது முக்கியம்.  பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் எனவே முடிந்த வரை வெளியில்  செல்லும்பொழுது நமது உடையில் கவனம் செலுத்துவோம்.


செய்வீங்களா?

ஏப்ரல் 16, 2010

சிரிக்க மட்டும் II

 நேத்து கொஞ்ச நேரம் வெட்டியா இருந்தப்ப (நீ எப்பவுமே வெட்டிதான இதுல தனியா என்னன்னு  கேக்ககூடாது) ,மத்த வலை பதிவுகளை படிக்கறப்ப எனக்கு ஒரு சில சந்தேகம் வந்துச்சு . நானும் என்னோட ஒரு சில நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்களுக்கும் அதுக்கு பதில் தெரியல. சரி இதோ இத்தனை பேரு இருக்கீங்களே நீங்க விளக்கம் சொல்ல மாட்டீங்க? 


"பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!"
அப்ப பொய்யும் உண்மையும் கலந்து சொல்பவன் ???


அன்புடன் ஆனந்தி

அன்பில்லாத ஆனந்தி யாரு?? 

கொஞ்சம் வெட்டி பேச்சு

அப்ப மிச்சம் எல்லாம் உருப்படியான பேச்சா ???

அநன்யாவின் எண்ண அலைகள்

 சுனாமி எப்ப வரும்???

 நாளைய உலகம் நம்கையில்

 இன்றைய உலகம் யார் கையில இருக்குது ???

 குட்டிசாத்தான் சிந்தனைகள்

 அப்ப உன் சிந்தனைகள் எங்க ???  

அம்மாஞ்சி 

அத்தான் யாரு ??? 

அப்பாவி தங்கமணி

அப்ப உங்க ஊட்டுக்காரர் அடப்பாவி ரங்கமணியா ?

எல்லாரும் சேர்ந்து அடிக்கறதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்....

பி.கு:  இது படித்து சிரிக்க மட்டுமே. இந்த ஆட்டோலாம் அனுப்ப வேண்டாம், எனக்கு ஆட்டோ பிடிக்காது . எனவே ஒரு சுமோ, குவாலிஸ் அந்த மாதிரி அனுப்புங்க ...

 

 

ஏப்ரல் 14, 2010

ஏனடா...


காதல் என்றாய்
பெற்றோரைப் பிரிந்தேன் ...


உனக்காய் தாய்மொழி மறந்தேன்
உன்மொழி பயின்றேன் ...

குடும்பம் என்றாய்
வேலையைத்  துறந்தேன் ..

புருவம் நெளித்தாய்
நட்பை மறந்தேன்..


மோகம் என்றாய்
என்  நிலைப் பொறுத்தேன்  ..


பணம் என்றாய்
நகையைத் தந்தேன் ...

எல்லாம் உனக்காய் துறந்தும்
எனை நீ துறந்தது ஏனடா ???

ஏப்ரல் 13, 2010

தமிழ் புத்தாண்டு


விரோதி ஆண்டு முடிவடையப்  போகிறது . விக்ருதி ஆண்டு நாளை துவங்க உள்ளது . கடந்த ஆண்டு நாட்டில் மழை இல்லை.எங்கும் பஞ்சம், விலைவாசி உயர்வு ,பகைவர்களின் தாக்குதல்கள் , உள்நாட்டில் அரசியல்வ்யாதிகளினால் ஊழல் மற்றும் பல பிரச்சனைகள் . இவை அனைத்தும் விரைவில் நீங்கி நாடு வளம் பெற வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

வருடம் முழுவதும்தான் தொல்லைகாட்சியின்  முன் நமது நேரத்தை வீணடிக்கிறோம். புத்தாண்டு தினம் அன்றாவது டமில் பேசும் நடிகைகளின் பேட்டிகளையும், முதல்முறையாக (?!) காட்டப்படும் படங்களையும் மட்டுமே பார்க்காமல் , கோவிலுக்கும், உறவினர்/நண்பர்கள் வீட்டிற்கும் சென்று வருவோம். முன்பெல்லாம், பண்டிகை விசேஷ நாட்களில் உறவினர் /நண்பர்கள் வீட்டிற்கு செல்வோம். இப்பொழுது அந்த பழக்கமே அழிந்து வருகிறது. இந்த ஒரு நாள் இதை செய்து பார்க்கலாமே. இதனால் எந்தவிதமான நஷ்டமும் ஏற்படபோவதில்லை.

ஆங்கில புத்தாண்டை ஆர்பாட்டத்துடன் கொண்டாடும் நாம், தமிழ் புத்தாண்டிற்கு அத்தகைய முக்கியத்துவத்தை தருவதில்லை . இத்தகைய நிலை மாறவேண்டும்.

வருகிற விக்ருதி ஆண்டு அனைவருக்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். அனைவரும் குறை இல்லாமல் வாழ வேண்டும்.

இங்கு திருமதி M .S  அவர்கள் பாடிய "குறை என்றும் இல்லை" என்ற பிரபல பாடலின் காணொளி இணைத்துள்ளேன்.  அந்த பாட்டில் பாடுவது போல் அனைவரும் குறை இன்றி வாழ வேண்டும். அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டிஸ்கி : படம் கூகிளாரின் உதவி 


ஏப்ரல் 12, 2010

ஏனடியோ ??


நீ வருவாய் என காத்திருக்கையில்
வந்தது  மண ஓலை..

கண்ணீருடன் நான் நிற்கையில்
மகிழ்வுடன் அயலான் கரம் பற்றினாய் நீ ..

எனக்கு மட்டும் உரியவள் என்றாய்
மாற்றான் உரிமைபொருளாய் ஆனது ஏனடியோ ??

ஏப்ரல் 11, 2010

மக்களே உஷார் II

இதே தலைப்பில் கடந்த வாரம் எவ்வாறு அலைபேசி மூலம் பெண்களை தொல்லை படுத்துகின்றனர் என்று எழுதி இருந்தேன் . இந்த வாரம் இந்த இணைய உலகத்தில் எவ்வாறு பெண்களுக்கு தொல்லைகள் நேரிடலாம் என்பதை பார்ப்போம்.

இணைய உலகில் இன்று இளைய தலைமுறை இடையே மிக பிரபலமாக இருக்கும் முக்கிய தளம் ஆர்குட். உலகில் எங்கு இருந்தாலும், நமது ஒத்த ரசனை உள்ள குழுவில் இருந்து நமது கருத்துக்களை பறிமாறிகொள்ளலாம் . நல்ல விசயம்தான இதுல என்ன பிரச்சனைன்னு கேக்காம படிங்க. என்ன பிரச்சனைன்னு உங்களுக்கே புரியும்.

இந்த கருத்து பரிமாற்றம் மட்டும் இருந்துச்சுனா பிரச்சனை இல்லேங்க. அதற்கு அடுத்த லெவெலுக்கு போறப்பதான் பிரச்சனை. யாருனே தெரியாத ஒரு நபரை உங்க நண்பரா சேர்க்கறீங்க. கொஞ்ச நாள்ல உங்க போட்டோவும் பார்க்க அனுமதிக்கறீங்க. இங்கதாங்க பிரச்சனை. அந்த நபர் நல்லவரா  இருந்தா பிரச்சனை இல்லை இல்ல கொஞ்சம் மோசமானவனா இருந்தா உங்க படத்தை அவனோட சிஸ்டம்ல சேமித்து வைத்து அதை அவனுடைய விருப்பத்திற்கு ஏத்தமாதிரி எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்த முடியும்.

நான் என் கல்லூரி நண்பர்கள் அல்லது உறவினர்களை மட்டும்தான் என் நண்பர்கள வச்சிருக்கேன்.என் போட்டோசும் லாக் பண்ணி வச்சிருக்கேன் . வேற யாரும் பக்க முடியாதே அப்படின்னு நினைக்கறவங்களுக்கு  ஒன்னு சொல்லிகிறேன். இந்த இணையதளத்துல எத்தனையோ விதமான மென்பொருள்கள் உள்ளன. நீங்க பூட்டி  வச்சிருக்கற போட்டோக்களைப்  பாக்கறதுக்கும் மென்பொருள் உண்டு, எனவே உங்க போட்டோக்களை ஆர்குட்ல போடறத நிறுத்துங்க முதல்ல.

அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் உங்க அலைபேசி எண்ணோ இல்ல வீட்டு முகவரியோ தராதீங்க . உங்கள் அலைபேசி எண் வேறு விதத்தில் இணையதளங்களில் பரப்பப்பட வாய்ப்புகள் அதிகம்.

 இந்த மாதிரி இன்னொரு மோசடி இருக்கு. நீங்க பெண்ணாக நினச்சு பேசிட்டு இருக்கவர் ஆணாகக்  கூட இருக்க வாய்ப்புகள் அதிகம் .நீங்க பொண்ணுன்னு நினைத்து தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்துகிட்டா அதை வைத்து உங்களை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,

முடிஞ்ச வரைக்கும் இணைய நட்பை இணையத்தோட நிறுத்திக்கிறது நல்லது. இணைய பரிமாற்றங்கள் மூலமா நிறைய நன்மைகள் உண்டு. அதே போல் கெடுதியும் உண்டு. எனவே மிகவும் கவனமாக இருங்கள்.

நன்றி

ஏப்ரல் 10, 2010

வேழம் - புத்தாண்டு இதழ்

வேழம் பத்திரிக்கையின் இந்த இதழ் புத்தாண்டு மலராக மலர்ந்துள்ளது . புத்தாண்டை முன்னிட்டு திருமதி கீதா அவர்களின் புத்தாண்டு சிறப்பு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மேலும் திரு ஹரீஷ் நாராயண் அவர்களின் திகில் கலந்த குறும் தொடர் துவங்குகிறது .

இந்த இதழை படிக்க
http://vezham.presspublisher.us/issue/april-i


எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவை நல்கி...


LK

ஏப்ரல் 09, 2010

விருதுகள்

முதல் முறையாக சிலருக்கு விருதுகள் தர முடிவு செய்துள்ளேன். நான் படித்ததில் பிடித்த சில பதிவர்களுக்கு இந்த விருதுகளை தருகிறேன்.

ஆன்மீக பெட்டகம்

  பதிவுலகில் ஆன்மீகத்தில் சந்தேகம் என்றால் உடனே அனைவரும் தேடுவது திருமதி கீதாவைத்தான் . அந்த அளவுக்கு அவருக்கு ஆன்மீகத்தில் ஞானம் உண்டு. எனவேதான் இந்த ஆன்மீக பெட்டகம் விருதை அவருக்கு அளிக்கிறேன் .


 சிறந்த பயண பதிவர் 

    இந்தியாவில் ஏதேனும் இடங்களுக்கு சுற்றுலா போக உள்ளீர்களா? அந்த இடத்தை பற்றி அறிய வேண்டுமா? முதலில் செல்லுங்கள் துளசி அம்மாவின் பதிவிற்கு . எந்த இடத்திற்கு சென்றாலும் அங்குள்ள தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகளையும் தமது பதிவில் குறிப்பிடுவார். இது இரண்டும் சரியாக அமையவில்லை என்றால் சுற்றுலா சிறப்பாக அமையாது. அவருக்குத்தான் இந்த   சிறந்த பயண பதிவர் விருது.

சிறந்த நகைச்சுவை பதிவர்

தமது சொந்த நொந்த அனுபவங்களை கூட நகைச்சுவையாக சொல்ல ஒரு தனி திறமை வேண்டும். அந்த திறமை அனந்யாவிடம் நிறையவே உள்ளது. அவருக்குத்தான் சிறந்த நகைச்சுவை பதிவர் விருது .


ஏப்ரல் 07, 2010

மொக்கை பதிவு II

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில மொக்கைகள் ... இதை இங்கே பதிவாக போட்டது மட்டுமே என் வேலை.. படிச்சிட்டு எந்த மொக்கை நல்ல இருக்குனு சொல்லுங்க....

''பரீட்சையில் நீ எத்தனை மார்க்குடா..?'
'அண்ணனை விட நான் மூணு மார்க் கம்மிப்பா..!
''பரவாயில்லையே.. ​
அண்ணன் எத்தனை மார்க்குடா?
'மூணு மார்க்குப்பா!'
=================================================

.''என்ன அவர் தலையெல்லாம் காயமாயிருக்கு?
''''அவருக்கு முடி 'கொட்டு'தாம் !"
=================================================
 ''களிமண் பொம்மை சூப்பரா இருக்கே.​
எப்படிடா இதைச் செய்தே?
என் மூளையை உபயோகிச்சுத்தான்!"

=================================================
.''ஜியாமென்ட்ரிபாக்ஸ், ​​ பேனா,​​ பென்சில்,​​
ரப்பர் எல்லாத்தையும் ஏண்டா கட்டி வைக்கிறே?

''''பரீட்சை முடியும் வரை படிப்பைத் தவிர மற்ற
எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வையுன்னு நீங்கதானப்பா சொன்னீங்க..!

'=================================================
*''இந்தப் பேஷன்ட்டுக்கு கம்ப்யூட்டர்ல
 ரொம்ப ஆர்வம் இருக்குதுனு நினைக்கிறேன்!


''''எப்படி டாக்டர் சொல்றீங்க..?

''''அவருடைய இதயம் 'லப்-டப்'னு துடிக்கிறதுக்குப் பதிலா,​​
'லேப்-டாப்'னு துடிக்குதே

 =================================================
பாலு மருத்துவப் பரிசோதனை செஞ்சா
நீயும் ஏன் மருத்துவப் பரிசோதனைக்குப்
போகணும்னு சொல்றே..?'

'''எங்களுக்குள்ளே 'ஆரோக்கியமான போட்டி' நிலவுதும்மா!'

ஏப்ரல் 06, 2010

ஐம்பதாவது பதிவு - மக்களே உஷார்

முதலில் பதிவுலகில் நான்கு வருடங்களை கடந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்  திருமதி கீதா பாட்டிக்கு என் வாழ்த்துக்கள். (சத்தியமா இதுக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ).இது எனது 50 வது பதிவு. அதனால் வழக்கம் போல மொக்கை போடாம உருப்படியா ஒரு சில விசயங்களை உங்ககூட பகிர்ந்துக்கறேன்.

உங்க மொபைல்  ரீ சார்ஜ் பண்றப்ப தயவு செய்து உங்களுக்கு மிகவும் பழக்கமான வாடிக்கையான கடையில் மட்டுமே பண்ணவும். இப்ப மொபைல் எண்ணை வச்சி விளையாடறது ஒரு சிலரோட பொழுதுபோக்கா இருக்கு. என் சகோதரிக்கு இப்படித்தான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு நம்பர்ல இருந்து கால் வந்துச்சி.  என் சகோதரியோட மொபைல் எண் எங்க குடும்பத்தினற்கு மட்டும் தெரியும் .அவங்க நம்பர் வேற யாருக்கும் தர வில்லை. கால் பண்ணவன் நீங்கதான் எனக்கு மெசேஜ் பண்ணி கால் பண்ண சொன்னேங்கனு சொன்னான். அப்புறம் இல்லை என் நண்பனோட நம்பருக்கு மெசேஜ் பண்ணி என்னை கால் பண்ண சொன்னீங்கனு சொன்னான். இதை கேட்டவுடன் என் சகோதரிக்கு செம டென்ஷன். திட்டிட்டு லைன கட் பண்ணிட்டாங்க. அப்புறம் அடுத்த நாளும் அவன்கிட்ட இருந்து கால் வர ஸ்டார்ட் ஆச்சி. இது சரி வரதில்லன்னு , அந்த நம்பர் யாருடயுதுன்னு சைபர் க்ரைமில வேல பாக்கிற எங்க நண்பர் மூலமா  விசாரிச்சோம் . பார்த்த கடைசியா மயிலாப்பூர் போனப்ப அவசரத்துக்கு அங்க இருக்கற ஒரு கடைல ரீ சார்ஜ் பண்ணி இருக்காங்க. அப்ப அங்க இருந்த பையன்தான் இந்த மாதிரி கால் பண்ணி டென்ஷன் பண்ணி இருக்கான். அப்புறம் என்ன அந்த பையனை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சிட்டு வந்தோம்.


இதே மாதிரி எங்க வீடு தங்கமணிக்கும் அனாமதேய அழைப்பு ஒரு 5  மாசத்துக்கு முன்னாடி. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நம்பர்ல இருந்து வரும். 2 நாள் செம குழப்பமா இருந்துச்சி. அவங்க நம்பரும் யாருக்கும் தர வழக்கம் இல்லை. அப்புறம் யோசிச்சு பார்த்த ஒரு வங்கி கடன் வாங்க அப்ளை பண்ணி இருந்தேன். அதற்காக ஆவணங்களை சரி பார்க்க வந்த நபர், வீட்ல இருக்கவங்க நம்பர் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கார். அதை வச்சிகிட்டு அவர் தங்கி இருந்த அறையில் இருந்த நண்பர்கள் போன்ல இருந்து கால் பண்ணி இருக்கார். அதையும் சைபர் க்ரைமில இருக்கற நண்பர் மூலம்தான் சரி பண்ணோம். 


தயவு செய்து இந்த மாதிரி தெரியாத நபர்களிடம் உங்கள் போன் நம்பரை தரவேண்டாம். அப்புறம் இந்த மாதிரி தேவை இல்லாத பிரச்சனைகள்தான் . அதே மாதிரி அனாமதேய எங்களில் இருந்து கால் வர ஆரமிச்சி திட்டினபிறகும் தொடர்ந்தால் சைபர் க்ரைமை அணுகவும். கண்டிப்பாக அந்த நபருக்கு என்ன தரணுமோ தருவாங்க.இந்த விசயத்துல காவல் துறைய பாரட்டனும்.


அதே மாதிரி இணையத்துல பழக்கமாகின்ற நபர்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியோ அல்லது போன் நம்பரோ உடனே தர வேண்டாம். இதனால நிறைய பிரச்சனைகள் உருவாகின்றன. தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கோ அந்த அளவுக்கு அதை சார்ந்த குற்றங்களும் வளர்ந்து உள்ளன. எனவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


என்னை தொடர்ந்து வந்து ஓட்டு, பின்னூட்டம் அளித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி !!!


ஏப்ரல் 05, 2010

மொக்கை பதிவு I

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில மொக்கைகள் ... இதை இங்கே பதிவாக போட்டது மட்டுமே என் வேலை.. படிச்சிட்டு எந்த மொக்கை நல்ல இருக்குனு சொல்லுங்க

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

===================================================================================


வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

===================================================================================
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்


நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

===================================================================================
குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்


சந்தனம் - அடுத்த வாரம்!!!
===================================================================================

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
===================================================================================

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

===================================================================================

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் ஏழுமலை (Spider Man)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

===================================================================================
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.
சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

===================================================================================
கரப்பான்

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..
..
..
..
..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

===================================================================================
குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.
===================================================================================
இன்றைய தத்துவம் 3

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.
===================================================================================

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.
===================================================================================
இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

நபர் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.

ஏப்ரல் 03, 2010

சிரிக்க மட்டுமே

சில சீரியசான பதிவுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு காமெடி பதிவு முயற்சித்துள்ளேன் .

டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல

நான் வேழம் என்ற இணைய இதழை நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கு பதிவர்கள் அவர்கள் பாணியில் வாழ்த்து தெரிவித்தால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணியதன் விளைவு இந்த பதிவு

அமீரக பதிவர் : என்னவாக்கும் இது ? எனக்கு ஈமெயில் வந்திரும் இல்ல?

தலைமை பதிவர் : க்ர்ர்ரர்ர்ர்ர் வாழ்த்துகள் எல்கே !!!!

அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 1: வாழ்த்துகள் மக்கா!!!!

அமெரிக்க வாழ் நெல்லை பதிவர் 2 : congrats LK

டீச்சர் : நல்ல முயற்சி

மணியான பதிவர் : ரிப்பீட்டேய்...

மலை பதிவர் : ரைட்டு

சாத்தான் : waiting ...

பயண பதிவர் : வாழ்த்துகள் தல