மார்ச் 30, 2010

பதிவுலகில் ஜாதி வெறி

பதிவை ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுகிறேன் . இந்த பதிவின் நோக்கம் என்னுடைய உள்ள குமறல்களை சொல்லுவதற்க்கே, யாரையும் காயப்படுத்த அல்ல.

படிக்காதவர்கள் மத்தியில் மட்டுமே ஜாதி வெறி உள்ளது , படித்த மனிதர்கள் மத்தியில் அவ்வெறி இல்லை என்று நினைத்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். படிக்காத பாமர மனிதர்கள் மத்தியில் இருப்பதை விட, படித்த மிக நல்ல உயர்ந்த பதவியில் இருபவர்களிடம் இருக்கும் வெறி மிக மிகஅதிகம்,

கூகிள் ரீடரை தினமும் காலை திறந்தால் அதில் வரும் சரி பாதி பதிவுகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி எழுதியதாகவே இருக்கும். என் இந்த வெறி? படித்த மனிதர்கள் அதிகம் இருக்கும் இந்த வலை உலகிலுமா இந்த கொடுமை? இவர்களுக்கு எழுத வேறு எந்த தலைப்பும் இல்லையா? இல்லை நாட்டில் கவலைப்பட வேறு எந்த விஷயங்களும் இல்லையா? இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் பாரதியாரையே ஒருவர் மிக கேவலமான முறையில் தாக்கி எழுதுகிறார். அவருக்கு பாராட்டுக்கள் வேறு :(

இப்ப தமிழ் பதிவுலகில் மிக பரபரப்பா இருக்கற விசயம் சங்கம் துவங்குவதை பற்றி. அதை பத்தி எழுதறப்ப கூட ஒரு பதிவர் தன்னோட ஜாதி வெறிய வெளி காண்பிப்பது போல்தான் எழுதி இருந்தாரே தவிர நடந்த சந்திப்பை பற்றி அல்ல.

எதற்கு இந்த தேவை அற்ற பதிவுகள். ஜாதியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டிய தருணத்தில் எதற்கு மேலும் மேலும் வன்மத்தை வெறியை தூண்டும் பதிவுகள் ? நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் இது கண்டிப்பாக இல்லை. நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகள், வேலையின்மை இதை பற்றி எழுதுங்கள் அல்லது மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துகளையோ சிறுகதைகளையோ எழுதுங்கள்.
தயவு செய்து இனியாவது மாறுங்கள்.

62 கருத்துகள்:

அநன்யா மஹாதேவன் சொன்னது…

ரொம்ப வருத்தமா இருக்கு. ஏன் இப்படி இருக்காங்கன்னே தெரிய மாட்டேங்கறது! யாவரும் கேளிர்ங்கற மனோபாவம் வந்துட்டா இந்த வேற்றுமைகள் அகலும் !

செந்தழல் ரவி சொன்னது…

அது நகைச்சுவைக்காக போடப்பட்ட பதிவு

LK சொன்னது…

@ravi

appadi teriyalye??

கண்மணி/kanmani சொன்னது…

:(

கள்ளபிரான் சொன்னது…

//இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் பாரதியாரையே ஒருவர் மிக கேவலமான முறையில் தாக்கி எழுதுகிறார். அவருக்கு பாராட்டுக்கள் //

சுப்ரமணிய பாரதியை கேவலமான முறையில் தாக்கி எழுதுவதுதான் உங்கள் பிர்ச்னையா? அல்லது, தாக்கியே எழுதக்கூடாது என்பதா?

LK சொன்னது…

//
சுப்ரமணிய பாரதியை கேவலமான முறையில் தாக்கி எழுதுவதுதான் உங்கள் பிர்ச்னையா? /

athuthan prachanai.. avarudaya karuthil udapadu illavidil nagareegama terivikklam. athai tavirthu avar jathiyai vaithu avarai vimarsippathu tavaru

LK சொன்னது…

@kallapiran
muthal murai varinga pola. tondarnthu vaanga

கோவி.கண்ணன் சொன்னது…

உங்க பதிவின் சாரம் குறித்து எனக்கு கருத்து இல்லை. ஆனால்

//இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் பாரதியாரையே ஒருவர் மிக கேவலமான முறையில் தாக்கி எழுதுகிறார்//

நீங்க கொடுமைன்னு சொல்வதே பெரும் கொடுமையாக இருக்கு. 'தந்தை' பெரியார் என்று பலரால் அழைப்பவரையும் கூடத்தான் சில பார்பனர்கள் மாமா என்கிறார்கள்.

விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள் என்று யாருமில்லை. வெற்றிவாகை சூடியதாக பாராட்டுவிழா நடத்தப்படும் மன்னன் இன்னொரு நாட்டை அழித்திருக்கிறான் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

LK சொன்னது…

vaarungal kovi.kannan

LK சொன்னது…

//விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள் என்று யாருமில்லை. /.
otthu kolgiren. periyaar karthukgalai avaroda jathiya vachi yarum niragarikka villai. inga naan sonnathum athan. karthugal tavarendraal ethirpu terivyungal aanal atharku jaathi mulam poosa vendam.

Kesavan சொன்னது…

//நீங்க கொடுமைன்னு சொல்வதே பெரும் கொடுமையாக இருக்கு. 'தந்தை' பெரியார் என்று பலரால் அழைப்பவரையும் கூடத்தான் சில பார்பனர்கள் மாமா என்கிறார்கள்.//

மாமா என்றால் தவறா. மாமாவிற்கு பலவித அர்த்தங்களை நீங்கள் கொண்டிருந்தால் அது உங்கள் தவறு .

கள்ளபிரான் சொன்னது…

//karthugal tavarendraal ethirpu terivyungal aanal atharku jaathi mulam poosa vendam.//

LK!

பெரியார் தன் ஜாதியைப்புகழ்ந்து எழுதியதில்லை; பாரதி செய்தார்.
ஜாதிப்பிரிவுகள் உண்டு என்று சொல்லாவிட்டாலும், வருணப்பிரிவுகளுண்டு என்றார். அதை அவர் வைதீக இந்து மதத்தின் வழியாகச் சொன்னார். அதாவது, வருணக்கொள்கையை ஆதரித்து, வேதம் படித்தலே பார்ப்பனர் தொழில் என்றார். பார்ப்பனர் தம்குலத்தொழிலை விட்டதால், நாட்டில் பஞ்சம் வந்தது என எழுதி அழுதார்.

இதோடு விட்டால் சரி.

’ஈனப்பறையர்க்ளேனும் அவர் நம்மிடம் வாழ்பவரன்றோ!’ என்றார்.

’ஈனப்பார்ப்பான்’ என்றாலும்...’ என்று ஒருவர் சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா, வராதா?

எனவே, மதிமாறன், ஏகலைவன், வினவு போன்றோர் கோபம் கொள்கின்றனர்.

அவர்களை விடுங்கள். நம்போன்றோரை எடுத்துக்கொள்ளுங்கள்.

பார்ப்பனர் சங்கமென்றாலோ, அல்லது வலைபதிவென்றாலோ, முகப்பின் பாரதி படம்தான் போட்டிருக்கும்.

ஏன்? அவர் மகாகவியென்பதாலா? இல்லை, அவர் ஜாதியில் பிறந்து புகழ்பெற்றதால் என்பதால்.

அதே போல, இராமானுஜன் என்றால், கணித மேதை என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் பார்ப்பனர் பதிவில் அவர் படம் இருக்கும். இதைப்போலவே, உ.வே.சா.

இதாவது பரவாயில்லை. தமிழ் இந்துத்வாவினரும், பாரதியை ஒரு தீவிர இந்து எனக்காட்ட அவர் படத்தைப் போடுகிறார்கள். ஜடாயு பதிவைப்பாருங்கள்.


In sum, Bharati's caste always comes with Bharati in the eyes of Tamil Brahmins. Do you have any complaint against them?

Bharati is passionately attached to his caste. It is a clear fact.

No wonder, he is assocated with that caste, both by brahmins and non-brahmins! But in your eyes, only Non-brahmins are guilty.

LK சொன்னது…

//வேதம் படித்தலே பார்ப்பனர் தொழில் என்றார்/

ithula ungaluku entha idathula problem?
ethanyo bramins communitya nan paarthu iruken athula bharatiyar padam paartha ninavu illai enakku.

V.Radhakrishnan சொன்னது…

இந்த பதிவு கூட அதைத்தான் செய்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து இருக்க வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன். ஜாதி வெறியை நாம் அனைவரும் ஒருவிதத்தில் ஊக்குவித்து கொண்டு தான் இருக்கிறோம்.

LK சொன்னது…

@radhakrishnan

nan entha jathiya adarichum itha podala. naan padicha paartha pathivugalil irunthadhai inga sonnen avlothan....ethila enga nan jaathiya ookuvikaren

V.Radhakrishnan சொன்னது…

இப்படியெல்லாம் இருக்கிறது எனும் ஒரு தோற்றத்தை நீங்கள் முன் நிலைப்படுத்துவது ஊக்குவித்தலே ஆகும். இதைத்தான் நாம் அனைவரும் செய்கிறோம். இதில் நீங்கள் விதிவிலக்கு அல்ல.

Kesavan சொன்னது…

//கூகிள் ரீடரை தினமும் காலை திறந்தால் அதில் வரும் சரி பாதி பதிவுகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி எழுதியதாகவே இருக்கும்.//

பாவம் அவர்களுக்கு இந்த ஜாதியினரை திட்ட வில்லை என்றால் தூக்கம் வராது. அதனால் இப்படி எழுதுகிறார்கள். எழுதுபவர்கள் அனைவரும் குறிப்பாக ஒரு பிரிவினரை மட்டுமே திட்டுவார்கள் . மற்றவரை சொன்னால் அவ்வளவுதான் ?

LK சொன்னது…

@kovi.kannan
ungaluku virivana pathilai indru iravu podugiren

LK சொன்னது…

@kesavan

thanks nanbare

கள்ளபிரான் சொன்னது…

////வேதம் படித்தலே பார்ப்பனர் தொழில் என்றார்/

ithula ungaluku entha idathula problem?
ethanyo bramins communitya nan paarthu//

எனக்கு problem கிடையாது.

மனிதர்களை வகுப்பு வாரியாகப்பிரித்து இன்னின்ன வகுப்பாருக்கு இன்னினன குலத்தொழில் என்று பறையும் வருணாஷ்ரமக்கொள்கையை எதிர்ப்போருக்கு இது ஒரு பெரிய problem.

யார் அக்கொள்கையை பறைசாற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு, பாரதி ஒரு எதிரியாகத்தான் தெரிவார்.

அது கிடக்கட்டும்:

உங்களை,

‘ஈனப்பாப்பானாராயினும் அவர் நம்முடன் வாழ்பவரன்றோ’ என்று தி.க காரர்களோ, மதிமாறனோ, வினவுவோ எழுதினால் ஏற்றுக்கொள்வீரகளா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

கொடுமையாகத்தான் இருக்கிறது. ஆனால் யார் கேட்பது.. ஒருவரைக் கேட்டால் அவரைக் கேள் என்பார்கள். அவரைக் கேட்டால் இவரைக் கேள் என்பார்கள்..!

அவர்களுக்கே இது தவறு என்று தோணவில்லையா..?

கள்ளபிரான் சொன்னது…

கேசவன் அப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. ஏன் அப்படிச்செய்கிறாரகள் என்றுதான் பார்க்கவேண்டும்.

அப்படி நீங்கள் செய்யாவரை you are an escapist.

Kesavan சொன்னது…

//‘ஈனப்பாப்பானாராயினும் அவர் நம்முடன் வாழ்பவரன்றோ’ என்று தி.க காரர்களோ, மதிமாறனோ, வினவுவோ எழுதினால் ஏற்றுக்கொள்வீரகளா? //

நீங்கள் சொன்னாலும் சொல்ல விட்டாலும் இன்று எல்லாரும் அப்படி தான் சொல்கிறார்கள் ( மறை முகமாக ) . இன்னும் சொல்ல போனால் இன்றைய வலை உலகில் அதை விட கேவலமாக தான் பார்பனரை சித்தரிகிரார்கள் . அதை இல்லை என்று சொல்ல முடியுமா . எதை பற்றி எழுதினாலும் அதற்கு சம்பந்தமே இல்லாத பார்பனரை பற்றி (thavaraga ) ஒரு வரியாவது எழுதி கொண்டு தான் இருகிறார்கள் .

LK சொன்னது…

//அவர்களுக்கே இது தவறு என்று தோணவில்லையா..?//

teriyalainuthan ninaikiren

nandri unmai tamilan

அமைதிச்சாரல் சொன்னது…

//நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகள், வேலையின்மை இதை பற்றி எழுதுங்கள்//

ரொம்ப சரி.

LK சொன்னது…

nandri saral

LK சொன்னது…

@ananya

thanks for visit and comment

LK சொன்னது…

//இப்படியெல்லாம் இருக்கிறது எனும் ஒரு தோற்றத்தை நீங்கள் முன் நிலைப்படுத்துவது ஊக்குவித்தலே ஆகும்//

இருக்கறத சொன்ன தோற்றத்தை உண்டு பண்ணுகிறோம் என்று சொல்கிறீர்களே

Chitra சொன்னது…

உங்கள் கருத்துக்களை, ஒரு வித ஆதங்கத்துடன் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் ப்லாக் என்று வைத்திருப்பது , தன் தனிப்பட்ட கருத்து, விருப்பு வெறுப்புகளை சுதந்தரமாக வெளியிடத்தான். இதைதான் எழுத வேண்டும், இப்படிதான் எழுத வேண்டும் என்ற நியதி இங்கு இல்லை. பதிவுலகில், ஒருவர் தனக்கு பிடித்ததை படித்து விட்டு, பிடிக்காததை விட்டு விட வேண்டியதுதான். நல்லது கெட்டது என்பதும், சரி தவறு என்பதும் அவர் அவர் புரிதலை பொறுத்தது என்பது என் கருத்து. ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் உரிமை.

LK சொன்னது…

nandri chitra

LK சொன்னது…

@thangamani prabhu

நீங்கள் எழுதிய தமிழர் தமிழர் அல்லாதோர் என்ற கருது உண்மை அல்ல. ஆங்கிலேயர்களால் நடுவில் திணிக்கப்பட்ட ஒன்று . எனவே உங்கள் கருத்தை இங்கே வெளியடவில்லை. அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான் ஆனால் அவர் பிறந்த ஜாதியை வைத்து அவருடைய எழுத்துகளை வகை படுத்துவது தவறு

LK சொன்னது…

//இதைப்போலவே, உ.வே.சா.//
@kallapiran

avar antha vaguppai sernthavar enbathalaye avar tamiluku aatriya tondai pangalippai maraithu kondu irukindranar. ithai marukka mudiuma ungalal???

கள்ளபிரான் சொன்னது…

ஜாதி வெறி என்றெல்லாம் சொல்ல முடியாது. பதிவர்கள் ஜாதிவாரியாக, கட்சிவாரியாக,மதவாரியாக, பிரிந்து நின்று எழுதிவருகிறார்கள்.

அவர்களில் ஒருசாரார் - பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனக்கொள்கைகளை ஆதரிக்கும் உணமைத்தமிழன் போன்றோர் - சங்கம் அமைப்போம் என முன்மொழியும் போது, டோண்டு ராகவன் போன்றோர் மிகவும் ஆர்வத்தோடு வந்து முன்வரிசையில் வந்தமர்கிறார்கள்.

இது மற்றவர்களை ஐயங்கொள்ள வைத்துவிடுகிறது: இவர்களா ஆதிக்கம் பண்ணப்போகிறார்கள் ?

இப்படிப்பட்ட உணர்வுகளை நீங்கள் மிதித்து ஒன்றுமே இல்லை எனவும், அபார்ப்பனரே வெறிகொண்டு அலகின்றாரெனவும் சொல்ல முயற்சித்திருக்கின்றீர்கள். அதை இங்கு ஒரு சிலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

LK சொன்னது…

//அவர்களில் ஒருசாரார் - பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனக்கொள்கைகளை ஆதரிக்கும் உணமைத்தமிழன் போன்றோர் - சங்கம் அமைப்போம் என முன்மொழியும் போது, டோண்டு ராகவன் போன்றோர் மிகவும் ஆர்வத்தோடு வந்து முன்வரிசையில் வந்தமர்கிறார்கள்.//

ithuku ennanu nan reply solla?? en ippadi ella visaythilaum jathiya puguthareenga.,ippa neenga sollithan enaku unmai tamilan antha vaguppai sernthavrnu enakku terium? shabba sathiyama ennala mudiyala kalla piran

கள்ளபிரான் சொன்னது…

உ.வே.சா, பாரதி போன்றோரைப்பற்றி நான் எழுதியதை நீங்கள் என்னிடமே திருப்பிப்போடுகிறீர்கள்?

பாரதி தலித்துகளைத்தான் ‘ஈனத்தனமானவர்கள் ‘ என்றார். தலித்துக்கள் கோபப்படலாமா கூடாதா என்பதே கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் மற்றவர்கள் எங்களைத்திட்டுகிறார்கள் என்கிறீர்கள்.

தலித்துகல் உங்களுக்கும் பார்தியாருக்கும் என்ன செய்தார்கள்?

உ.வே.சா தமிழுக்குச் செய்த பங்களிப்பு மகத்தனானது. அதைப்போற்றவேண்டியவர்கள் தமிழறிஞர்கள். அவர்கள் யாரேனும் செய்ய மறுத்தனரா?

ஏன், கழகங்கள் செய்யவேண்டும் என ஏங்குகிறீர்கள்?

கழக அரசு செய்யவேண்டும் என்கிறீர்களா? எப்படி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

அவர் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, அவர் குடும்பத்தாருக்கு பணம் வழங்கப்பட்ட்டது.

அரசுடமை என்றால் பணமில்லா ஒவ்வொரு பாமரத்தமிழனும் அவர் நூல்களை இல்வசமாகப் படித்திட முடியும். அரசு நூலகங்கள், கல்லூரிகள் என்று போய்.

இல்லாவிட்டால், பார்ப்பனர்களே அமுக்கிக்கொள்வார்கள் தேவாரத்தை இருட்டறையில் போட்டு அடைதவர்கள் அல்லவா?

அண்ணாவைப்போல அரசு பலபல விழாக்கள் எடுப்பதைப்போல உ.வே.சாவுக்கு வேண்டுமென்கிறீர்களா?

அண்ணாவுக்கு அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்பதால் மட்டுமல்ல. அவர் ஒட்டுமொத்த தமிழ்மக்கள் (பார்ப்பனரைத்தவிற) வாழ்க்கையில் நிலவி நின்றார்.

உ.வே.சா வாழ்க்கையைப்படியுங்கள். அவர் உங்கள் ‘ஜாதி வெறியர்’ என்ற அடைக்குள் நன்றாக வருவார். தமிழை வடமொழி கலந்து எழுதுவது சரியே என தனித்தமிழ் இயக்கத்தினரகளான மறைமலை போன்றோரை எதிர்த்தார்.வருணக்கொள்கையாயும், பார்ப்பனீயக்கோட்பாடுகளாயும் மூர்க்கத்த்த்னமாக கடைபிடித்து வாழ்ந்தார். பார்ப்பனரல்லாதோருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க மறுத்தார்.

இப்படியாக அவர் வாழ்க்கை.

My point is not that. It is how such persons like Bharati and UVeSaa are taken by tamil brahmins.

Thevars consider M.Ramalainga Theavar as their caste hero. So also, Tamil brahmins: they considere U.Ve.Saa and Bharati, not as a great savants, but as their caste icons.

You dont accept this point as evidenced from your statement that you have not seen such idolatry of these two men. That shows how much you have narrowed your vision. This narrowness is due to your caste attachment.

கள்ளபிரான் சொன்னது…

Why dont you write in Tamil? You have put up your blogpost in Tamil, havent u?

கள்ளபிரான் சொன்னது…

ஜாதியைப்புகுத்றாங்க...//


புகுத்தவேண்டிய தேவையேயில்லை.

அது பயத்தின் காரணமாக வருவது.

Once bitten twice shy.

ஆனால், இங்கே for ever shy.

எனவேதான், பதிவுலகம் ஒரு சங்கத்தை வைத்தால், பார்ப்பன ஆதிக்கம் வந்துவிடுமோ எனப்பயப்படுகிறார்கள

யுவ கிருஸ்ணா ஏன் உணமைத்தமிழன் வந்தால் மற்றவர்கள் ஜாக்கிரதையாக வேண்டும் என எழுதியிருக்கிறார். படித்துவிட்டு வாருஙகள்.

LK சொன்னது…

அலுவலகத்தில் இருந்து பின்னூட்டம் இடும் பொழுது அதை தவிர்க்க இயலவில்லை

LK சொன்னது…

//உங்கள் கருத்துக்களை, ஒரு வித ஆதங்கத்துடன் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் ப்லாக் என்று வைத்திருப்பது , தன் தனிப்பட்ட கருத்து, விருப்பு வெறுப்புகளை சுதந்தரமாக வெளியிடத்தான். இதைதான் எழுத வேண்டும், இப்படிதான் எழுத வேண்டும் என்ற நியதி இங்கு இல்லை. பதிவுலகில், ஒருவர் தனக்கு பிடித்ததை படித்து விட்டு, பிடிக்காததை விட்டு விட வேண்டியதுதான். நல்லது கெட்டது என்பதும், சரி தவறு என்பதும் அவர் அவர் புரிதலை பொறுத்தது என்பது என் கருத்து. ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் உரிமை.//
but orivarai thakki keeltharamana murayil elutha vendam enbathuthan ennudaya vendugol

LK சொன்னது…

//மிழை வடமொழி கலந்து எழுதுவது சரியே என தனித்தமிழ் இயக்கத்தினரகளான மறைமலை போன்றோரை எதிர்த்தார்//
ippadi mattra mozhigaludan kalakkamal irunthal ilappu tamilukuthan. matta mozhigalana latin, greek pondarvatravaigalai anithu sendrathalye intru athu ulaga alavil ubayogapaduttapadum mozhiyaga irukirathu

Kesavan சொன்னது…

//மிழை வடமொழி கலந்து எழுதுவது சரியே என தனித்தமிழ் இயக்கத்தினரகளான மறைமலை போன்றோரை எதிர்த்தார்//
இன்று தூய தமிழை யார் பேசுகிறார்கள். தூய தமிழ் என்று கேட்க வண்டுமனால் பள்ளியில் தமிழ் வகுப்பிற்கு சென்றால் மட்டுமே முடியும் . அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே . தமிழில் ஒன்று முதல் பத்து வரை எப்படி எழுதுவது என்று எவ்வளவு பேருக்கு தெரியும்
( நான் சொல்வது 1,2,3,4,5,---10௦ )

LK சொன்னது…

@kesavan
ada enga neenga vera. vitta athukum parpanargalthan kaaranamnu solluvanga

Kesavan சொன்னது…

//ada enga neenga vera. vitta athukum parpanargalthan kaaranamnu சொல்லுவாங்க //
இவங்களுக்கு பிடிகாத ஒரு நிகழ்வு நடந்தால் அதற்கு காரணம் பார்பனர்கள் தான் .

ஹுஸைனம்மா சொன்னது…

//"பதிவுலகில் ஜாதி வெறி"// - பயப்படவேண்டிய விஷயம்தான்.

பாரதியார் குறித்து இவ்வளவு சர்ர்ச்சைகள் உண்டு என்பதை இங்கு வந்ததில் தெரிந்துகொண்டேன்!!

LK சொன்னது…

வருகைக்கு நன்றி . இதை விடவும் நிறைய சர்ச்சைகள் உண்டு

அண்ணாமலையான் சொன்னது…

ரைட்டு

கள்ளபிரான் சொன்னது…

உ.வே.சா, தனித்தமிழை விரும்பவைல்லை. தனித்தமிழியக்கத்தினரை எதிர்த்து மேடைகளில் பேசினார்; எழுதினார்.

என்றுதான் நான் சொன்னேன்.

நான், தமிழை பிறமொழிகலக்காமல் எழுத முடியுமா, உ.வே.ச கருத்து சரியா என்றல்லாம் விவாதிக்கவில்லை. அது இங்கு தேவையில்லை.

கள்ளபிரான் சொன்னது…

//ada enga neenga vera. vitta athukum parpanargalthan kaaranamnu solluvanga//

இப்படிப்பட்ட எண்ணத்தைதான் நான் சரியல்ல என்கிறேன்.

தான் பார்ப்பனர் என்ற நிலையிலிருந்து நீங்கள் அனைத்தையும் பார்க்கும்போது, உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கமுடியும் இப்படிபட்ட கருத்துகளைத் தவிர.

ஏன் ‘பாப்பாந்தான் காரணம்’ என்கிறார்கள்/

அப்படிப்பட்ட இமேஜை பார்ப்ப்னர்கள் உருவாக்கிக்கொண்டார்கள்.

ஈழம்,இசுலாமியர்கள், தமிழ், பெரியார், திராவிட இயக்கங்கள் - போன்றவற்றில் பார்ப்ப்னர் என்ன கொள்கையுடைய்வராயிருக்கின்றனர் என முன்பேயே தெரிந்துவிடுகிறது.

தமிழை எடுத்தால், அதை எதிர்த்த ஒரே இனம் பார்ப்பனரே. தமிழ் தாழ்ந்தது அதற்கு இறைவன் பெயரைச்சொல்ல தகுதியில்லையென போராடி தமிழை நீச பாஷை என்று சொன்ன இனம் யார்?

தமிழுக்குச்சேவை செய்திருக்கலாம். தமிழ்நாட்டில் இருந்தபடியாலே. இதைப்போல மலையாளத்துக்கும், கன்னடத்துக்கும், தெலுன்குக்கும் அங்கு வாழும் தமிழ பார்ப்பனர் சேவை செய்து இருக்கிறார்கள்.

இன்று நம்மிடையஏ வாழும் சோ, சுப்பிர்ம்ணியம் சுவாமி, சிதம்பரம் தீக்சிதர்கள், பதிவுலகில் உங்களப்ப்போன்றோர் - தமிழ் பார்ப்பனரை பிறரோடு வாழும் வாழ்க்கையை பிளவு படுத்துகிறீர்கள்.

We are Ok. You are not Ok என மனப்பாங்கு நல்லதல்ல

Kesavan சொன்னது…

//உ.வே.சா தமிழுக்குச் செய்த பங்களிப்பு மகத்தனானது //
//உ.வே.சா, தனித்தமிழை விரும்பவைல்லை //

உ.வே.சா தமிழுக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது என்று சொல்லி விட்டு தனி தமிழை விரும்பவில்லை என்றால் எப்படி.

LK சொன்னது…

@kannapiran

pathiva nalla padinga. naan iru exampleku bharatiyarai takkratha sonnen. enna bramins matthavaganala thaaki eluthina antha pathivayum ithu varaikum nan padichathu illa ethavathu iruntha sollunga kandippa atharkum ennoda ethirpu undu. jathiya mayyama vachi takka vendamnuthan nan solla vanthen. atha neenga innum purinjikalainu ungal kadisi comment kamikuthu. ithuku mela unga commentku pathil podratha illa naan :|

Kesavan சொன்னது…

//தமிழை எடுத்தால், அதை எதிர்த்த ஒரே இனம் பார்ப்பனரே. தமிழ் தாழ்ந்தது அதற்கு இறைவன் பெயரைச்சொல்ல தகுதியில்லையென போராடி தமிழை நீச பாஷை என்று சொன்ன இனம் யார்? //

இன்று கோவில்களில் பாடப்படும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் , தேவாரம் , திரு வாசகம் போன்ற நூல்கள் தமிழில் தான் உள்ளது . அதை இன்றும் பிராமணர்கள் கோவில்களில் சொல்லி வருகின்றனர் . தமிழ் தாழ்ந்தது என்று சொல்லி விட்டு அந்த மொழியில் உள்ள பாசுரங்களை சொல்வார்களா . உங்களுக்கு தெரிந்தது எல்லாம் கோவில்களில் சொல்லப்படும் வட மொழியில் செய்யும் அர்ச்சனை மட்டுமே . இன்றும் திருப்தி கோவிலில் தினமும் காலை திருப்பாவை என்ற தமிழ் பாசுரத்தை தான் சொல்லி வருகின்றனர் . மற்றும் இந்தியாவில் உள்ள முக்கால்வாசி கோவில்களில் தமிழ் பிராமணர் தமிழ் பாசுரத்தை தான் சொல்கின்றனர் .

Kesavan சொன்னது…

//சோ, சுப்பிர்ம்ணியம் சுவாமி, சிதம்பரம் தீக்சிதர்கள் //

இவர்கள் என்ன மற்ற மதத்தினரை திட்டினார அல்ல அவர்களிடம் பொய் வம்பு செய்தனரா . இல்லையே . பிரமணர்களை பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . அவ்வளவுதான் . இன்று நம் நாட்டில் எந்த பிராமணனும் மற்றவரை பற்றி தவறாக பேசுவதில்லை . மாறாக அவர்களை தான் மற்றவர்கள் கேவலமாக நடத்துகின்றனர் .

Ananthi சொன்னது…

படிச்சவங்க.. படிக்காதவங்கன்னு என்ன பேசுறீங்க..கார்த்திக்??

எப்பவுமே நம்ம நாட்டுல எல்லா இடத்துலயும் பாரபட்சம் இல்லாம இருக்கற ஒரே விஷயம் ஜாதி வெறி தான்..

அது இல்லன்னா எவ்வளவோ நல்ல தான் இருக்கும்..!

உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு..!! வாழ்த்துக்கள்..!!

கண்மணி/kanmani சொன்னது…

cooooooooooooool....all in the game...ignore

பெயரில்லா சொன்னது…

கேசவன் வரிசையாக நிறைய எழுதிவிட்டீர்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லலாம். ட்ரை பண்ர்றேன்.

தமிழுக்கு மகத்தான் பங்களிப்பு என்றால், உவெசா இல்லாவிட்டால் ஐம்பெருன்காப்பியங்கள் இன்று இல்லை. சங்க இலக்கியங்களை ஆராய்ந்து தோய்ந்தவர். அதன் நயங்களையும் பாரம்பரீயத்தையும் அதில் காணப்படும் தமிழர் வாழ்க்கை நெறிகளையும் சுவைபட நம்மை பெரு வியப்பிலாழ்த்துமுறையில் சொன்னார்.

அதே சமயம், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு தீவிர வைதீக பார்ப்ப்னராகத்தான் வாழ்ந்தார். அவர் தனிப்பட்ட வாழ்க்கை வடமொழி கலந்த தமிழையே ஏற்றது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அக்கலப்பு மொழியே (இன்றைய் தன்கிலீசு போல) செல்லும் என்றும் சொன்னார்.

இது, தமிழ் தனித்து நிற்கும். அது வடமொழிக்கு முந்தியது. என்றெல்லாம் தமிழின் பெருமையை பறைச்சாற்ற விழைவோருக்கு ச்ம்மட்டியடியாகும்.

இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.

கேசவ்ன் என்னிடம் வாதிப்பதை விட, நேரடியாகவே உவேசாவின் நூல்களைப்படிப்பது நல்லது.

LK சொன்னது…

//இது, தமிழ் தனித்து நிற்கும். அது வடமொழிக்கு முந்தியது. என்றெல்லாம் தமிழின் பெருமையை பறைச்சாற்ற விழைவோருக்கு ச்ம்மட்டியடியாகும்.//
thanithu nirpen endral indraya soolnilayil tamil valarathu. matra mozhigalai aravanaithu sella vendum. ethuvum vendam endru othukinal namakuthan nastam

Kesavan சொன்னது…

இன்று பொதுவாக ஜாதி வெறி என்பது பார்பனர் அல்லாத மக்களிடம் மட்டுமே இருக்கிறது . இன்று நடக்கும் ஜாதி சண்டையில் எந்த பற்பனராவ்து ஈடு படுகின்றனரா என்றால் கிடையாது என்றே சொல்லலாம் . எதோ ஒருவர் இருவர் எதாவது வாய் தகராறில் சொல்வதை வைத்து பார்பனர் சாதி சண்டை செய்கின்றனர் என்றால் அதற்கு நாம் பதில் சொல்ல தேவை இல்லை . தினமும் தினசரியை படித்தால் அந்த ஜாதி இந்த ஜாதி யுடன் தகராறு என்று வருகிறது . அனால் எங்கும் பார்பனருடன் ஜாதி சண்டை என்ற செய்தி வருவதில்லை.

ஆனால் இன்றைய நிலையில் ஜாதி பெயரை சொன்னால் எந்த வேலையும் நடக்கிறது . பள்ளியில் ஜாதி சான்றிதழ் , வலைக்கு சேர்ந்தால் , தேர்தலில் நின்றால் மற்றும் சுடு காட்டிற்கு சென்றால் என்று எங்கு சென்றாலும் நீ என்ன ஜாதி என்ற கேள்வி கேக்க படுகிறது . சமிபத்தில் தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் தான் என்ன ஜாதி என்று தெரிவிக்காததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது . இதற்கு காரணம் பார்பனரா

இன்றைய பதிவுலகை எடுத்துகொண்டால் அதில் பார்பனர் எதிர்ப்பு தான் அதிகம் இருக்கிறது . அதை என் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் அன்று நீ செய்தாயே அதை தான் சொல்கிறோம் . இது சரியான பதிலா ? வாதம் செய்ய தெரியாதவன் தான் இந்த மாதிரி சாக்கு சொல்லுவான் .

பார்பனர் தமிழை இழிவு படுத்தி விட்டனர் என்று தமிழை நீச பாஷை என்று சொல்கின்றனர் . அதுவும் தவறு . இன்றும் பார்பனர்கள் எல்லா இடத்திலும் கொவிலாகட்டும் , தன்னுடைய வீடாகட்டும் திவ்ய பிரபந்தம் , தேவாரம் , திரு வாசகம் என்று தமிழ் பாடல்களை தான் பாடு கிறார்கள் .

பார்பனர் எதிர்ப்பு என்பது சும்மா பம்மாத்து வேலை .

BalajiVenkat சொன்னது…

//’ஈனப்பறையர்க்ளேனும் அவர் நம்மிடம் வாழ்பவரன்றோ!’ என்றார்.//

Kala piran neenga solrathu miga sari.. parayargalai anraya kalathil (tharpothaya kalathil alla) avaru nadathiyavargalai avaru seyathey enru athu thavaru enru sonna barathi, thangal kootru padi seythathu miga periya thavaru thaan...

sathi irandozhiya verillai enru sonna barathi kutra vali ungal parvayil..

ungal parvayil ela pugazhum thangal inathirkey(neengal pirithu kooruvathal matumey naan ivaru solgiren unmayil enaku ivaru pirithu kooruvathil udan padu kidayathu) seratum

neengal onrai elithaga maranthu viteergal... anraya thediyil keel ina makkal mel kudi vasikum idathirku vara koodathu enru sonna pothu avargal ingu varuvargal enru avargalin thol mel kai serthu azhaithu senrathal, anraya thethiyil inathilirunthey neekapatavar thaan Barathi enbathai sutti kata virumbugiren

elarukum iraivanai dharisanam seya urimai undu enbahathai nilai niruthi madurai meenakshi kovilil anraya dinathil thaazhthapttavargal sanadhikul alaithu senra vaithiyanatha iyer seythathum thavaru thaan enru ithan moolam solla varugireergal pola ..

mothalil varnasramam enna solla varugirathu enru yarum purinthu pesuvathu kidayathu.. elarum arai vetkattu thanamaga(Mannikavum enaku veru varthai pidapadavillai) thavaraga purinthu kondu athai sadugirargal..

oruvan seyum thozhilaley avan oru varnathirkul varugiraney anri avan pirapal antha varnathirku varuvathu kidayathu.. ithu naan solla villai manusmrithi koorugirathu...

inraya brhaman oru vayisiya pirivin keeley thaan inraya soozhnilayil varugiraney anri avan brahman varnathirkul illai, (naan solva varuvathu neengalaga adikadi suttikatum manu dharmathin adipadaiyil)

tharpothaya brahman inam enru neengal sollum evarum entha iratai kuvali murayai kadai pidipathu kidayathu..

tharpothaya kalathil yarum varnasrama muraipadi vazhvathu kidyathu..(Sattamum varnasrama muraipadi iyatra pada villai) sttathai uruvakiyathu perum thalaivar Ambedkar avargal... neengal avarai thangal inathirku nanmai seythavar thangal inam enru perumayudan koorikollum urimai kondvargal

aanal thangalai thavira matravargal ivargal maberum seyalgal seythavargal enru potra kodathu... athu thangalauku matumey sonthamana oru vishayam

inraya aatchiyalargal perumbalum akudiyai sernthavargaley anri veru oruvar illai .. aanalum iratai kuavali muraiyai maatra mudiyavillai .. ithu brahman seitha sathiyo ethum kidayathu... nammai aalbavargal avaru segiraargal... suthanthiram petru 60 aandugalgiyum inamum oru pizhai nadaimuraiyil ulathu athai agatra vendiya pathiviyil irupavrgal athai vaithu aathayam thedugirargal...

mothalil neengal tharpothu enna nadakirathu enbathai purinthu kondu pinnar kutram satungal, athai elarum sernthu thiruthikolalam.. aanal palaya kalathu vishayangalai inrum araithu kondirupathai enavenru solvathu... neengalagavey sinthithukollungal..

LK சொன்னது…

@kesavan and balaji

thanks. indriakukooda oruthar ithe velaya senji irukar. avaruku oru mettha paditha methai vera support. eppa thirunthuvangalo andava

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

பெயரில்லா சொன்னது…

நண்பரே ப்ரியமுடன் ரவி வலைப்பூவில் மந்திரங்களின் பொருளை சரியாக தெரியாமல் தவறாக பதிவிடாதீர்கள் என அவருக்கு சாட்டை அடி கொடுத்தமைக்கு நன்றி.அங்கு சென்று என் பின்னூட்டத்தை படிக்கவும்

பெயரில்லா சொன்னது…

நண்பரே ப்ரியமுடன் ரவி வலைப்பூவில் மந்திரங்களின் பொருளை சரியாக தெரியாமல் தவறாக பதிவிடாதீர்கள் என அவருக்கு சாட்டை அடி கொடுத்தமைக்கு நன்றி.அங்கு சென்று என் பின்னூட்டத்தை படிக்கவும்