Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

அரசு ஊழியர்கள்

கடந்த சில வாரங்களில் என்னை பாதித்த மூன்று சம்பவங்களும் அவற்றை பற்றிய எனது கருத்துகளும் சம்பவம் 1 இடம் : கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னல்...

கடந்த சில வாரங்களில் என்னை பாதித்த மூன்று சம்பவங்களும் அவற்றை பற்றிய எனது கருத்துகளும்

சம்பவம் 1
இடம் : கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னல்
நேரம் : காலை 8 மணி அளவில்

வழக்கம் போல் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன். சிக்னல் சிகப்பு விளக்கு காமித்தவுடன் , வண்டியின் இயக்கத்தை நிறுத்தி, சிக்னல் மாறுவதற்காக காத்துகொண்டு இருந்தேன். இதுவரைக்கும் வழக்கமா நடக்கறதுதான். ஒரு மாநகர பேருந்து எனக்கு பின்னே நின்றது. அந்த சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லை. இதை கண்ட டிரைவர், ஒலிப்பானை உபயோகபடுத்தி என்னை நகர சொன்னார். இன்னும் சிக்னல் மாறவில்லை. அதனால் நான் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தேன்.இத்தனைக்கும் சிக்னல்ல காமிச்சா நேரம் என்னவோ 30 விநாடிகள்தான். சிக்னல் மாறியவுடன் சிறிது சென்று என்னை கடந்து சென்றது பேருந்து , அப்பொழுது அந்த டிரைவர் கூறிய வார்த்தைகள் இங்கே கூற இயலாத அளவுக்கு கேவலமா இருந்தது.

அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு என்று சாலை விதிமுறைகள் உள்ளனவா? காவலர் இல்லை என்றால் சிக்னலில் நிற்காமல் செல்வது எந்த வகயில் நியாயம் ? இந்த சம்பவத்தில் நான் செய்த தவறுஎன்ன?

சம்பவம் 2
இடம் : மத்திய உணவு கழகம் , சென்னை பிராந்திய அலுவலகம்


கடந்த இரண்டு வாரங்களில் எனக்கு தெரிந்து மூன்று முறை தர்ணா போராட்டம் நடந்துச்சி. ஒவ்வொரு முறையும் சரியா காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்கு முடிச்சிட்டாங்க. போராட்டம் நடத்தறது அவங்க உரிமைன்னு சொல்லுவாங்க. அவங்க போராடட்டும் வேணாம்னு சொல்லல ஆனா அதை என் அலுவலக வேலை நாள்ல பண்ணனும்? ஒரு விடுமுறை நாளன்றோ இல்ல மாலை பணி நேரம் முடிந்தபுறமோ பண்ணலாமே?

சரி என்னமோ பண்ணிக்கோங்க அது உங்க ஆபீஸ், ஆனா பேசறேன் பேர்வழினு மைக் செட் போட்டுக்கிட்டு காதின பக்கத்தில இருக்கற அலுவலகத்தில இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாம்?

சம்பவம் 3

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி இருக்கறாங்க. இப்பதான் சமீபத்தில சம்பள உயர்வு தந்தாங்க . நல்ல கொடுக்கட்டும் வேண்டாம்னு சொல்லல . எந்த அடிப்படையில் இந்த உயர்வுகள் தரப்படுகின்றன ? எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் வேலை திறன் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே பதிவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தரப்படும். இப்ப ஒரு இரண்டு வருடமாக சில நிறுவனங்களில் பொருளாதார தேக்க நிலையின் காரணமாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை . இன்னும் பொருளாதார தேக்க நிலை முற்றிலுமாக சரியாகவில்லை. நிலைமை இப்படி இருக்கறப்ப அரசு ஓட்டை மட்டுமே குறிவைத்து இவ்வாறு உயர்வுகளை அளித்தால் நமது நாடு இன்னும் சில வருடங்களில் இன்று அமெரிக்கா எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையை சந்திக்க நேரிடும் .

Disclaimer :
இந்த பதிவு அரசு ஊழியர்களுக்கு எதிரான பதிவு அல்ல

16 கருத்துகள்

Ananya Mahadevan சொன்னது…

ரொம்ப வருத்தமா இருக்கு.. முக்கியமா போக்குவரத்து அத்துமீறல்கள். எப்போ தான் திருந்துவார்களோ?

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எவ்வளவுதான் சொன்னாலும், எழுதினாலும் இந்த சாலை விதிமீறல்களை ஒண்ணும் பண்ண முடியறதில்லை. அதிலும் பேருந்துகளுக்கு எங்கியுமே தனிவழிதான் போலிருக்கு!!. :-(

தக்குடு சொன்னது…

அரபு நாடுகள்ல சிக்னலை கண்டுக்காம போனா இந்திய பணத்துக்கு ரூபாய் 75,000 மொய் எழுதவேண்டும். எவனாவது சிக்னலை தப்பா கிராஸ் பண்ணுவான்???...:)

எல் கே சொன்னது…

@ananya
never
@amaithisaaral
onnum panna mudiyathu. olunga rules follow panravanga muttalgal mathiri acchu

எல் கே சொன்னது…

@takkudu

inga traffic policeku 75 rooba kodutta podum :D :D :D

Vijayakrishnan சொன்னது…

It has been like this for a very long time that doing this is a norm these days. So how can they change?

Vijay.
www.rvijayakrishnan.com

எல் கே சொன்னது…

welcome vijay. Govt should change their thinking and govt staff should understand they also common man only. not super humans

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Ellamae sinthikka vendiya vishayam thaan.. tharnaa engira perla.. nadathura rowsu thaanga mudiyathu thaan..

signal matter-um appadi thaan..US-la even if you cross a signal when its red, you will be fined & you will get bad mark in your driving record.. which increses your car insurance amount..

Namma oorlayum ippadi yedhavathu vandhalavathu matram irukka paarkalaam..

Very nice posting.. Good luck..

எல் கே சொன்னது…

@ananthi
appadi kondu varanum. aanal adarku inga iruka political parties and official wont allow. everything shuld be computerized. lets hope for best

பெயரில்லா சொன்னது…

அடுத்தவங்கள படுத்தாமல் யாராவது போராட்டம் நடத்துவாங்களா?
ரெம்ப ஆசை படாதீங்க.

சாலை விதிகளை பின்பற்றி நடக்க கண்டிப்பாக எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் தண்டனையும் அதிகரிக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

//சம்பவம் 1 கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னல்
, அப்பொழுது அந்த டிரைவர் கூறிய வார்த்தைகள் இங்கே கூற இயலாத அளவுக்கு கேவலமா இருந்தது.

pavam neenga. yaar mugaththila michinga??

No Rules for those bus drivers especially in chennai.

எல் கே சொன்னது…

//அடுத்தவங்கள படுத்தாமல் யாராவது போராட்டம் நடத்துவாங்களா?//

etho nappasai

எல் கே சொன்னது…

//pavam neenga. yaar mugaththila michinga??

No Rules for those bus drivers especially in chennai.//

right

எல் கே சொன்னது…

@nan rasitha

i think its ur first visit to my page . please do visit http://vezham.co.cc also

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பதிவு

எல் கே சொன்னது…

nandri annamalayan