மார்ச் 30, 2010

பதிவுலகில் ஜாதி வெறி

பதிவை ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுகிறேன் . இந்த பதிவின் நோக்கம் என்னுடைய உள்ள குமறல்களை சொல்லுவதற்க்கே, யாரையும் காயப்படுத்த அல்ல.

படிக்காதவர்கள் மத்தியில் மட்டுமே ஜாதி வெறி உள்ளது , படித்த மனிதர்கள் மத்தியில் அவ்வெறி இல்லை என்று நினைத்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். படிக்காத பாமர மனிதர்கள் மத்தியில் இருப்பதை விட, படித்த மிக நல்ல உயர்ந்த பதவியில் இருபவர்களிடம் இருக்கும் வெறி மிக மிகஅதிகம்,

கூகிள் ரீடரை தினமும் காலை திறந்தால் அதில் வரும் சரி பாதி பதிவுகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி எழுதியதாகவே இருக்கும். என் இந்த வெறி? படித்த மனிதர்கள் அதிகம் இருக்கும் இந்த வலை உலகிலுமா இந்த கொடுமை? இவர்களுக்கு எழுத வேறு எந்த தலைப்பும் இல்லையா? இல்லை நாட்டில் கவலைப்பட வேறு எந்த விஷயங்களும் இல்லையா? இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் பாரதியாரையே ஒருவர் மிக கேவலமான முறையில் தாக்கி எழுதுகிறார். அவருக்கு பாராட்டுக்கள் வேறு :(

இப்ப தமிழ் பதிவுலகில் மிக பரபரப்பா இருக்கற விசயம் சங்கம் துவங்குவதை பற்றி. அதை பத்தி எழுதறப்ப கூட ஒரு பதிவர் தன்னோட ஜாதி வெறிய வெளி காண்பிப்பது போல்தான் எழுதி இருந்தாரே தவிர நடந்த சந்திப்பை பற்றி அல்ல.

எதற்கு இந்த தேவை அற்ற பதிவுகள். ஜாதியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டிய தருணத்தில் எதற்கு மேலும் மேலும் வன்மத்தை வெறியை தூண்டும் பதிவுகள் ? நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் இது கண்டிப்பாக இல்லை. நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகள், வேலையின்மை இதை பற்றி எழுதுங்கள் அல்லது மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துகளையோ சிறுகதைகளையோ எழுதுங்கள்.
தயவு செய்து இனியாவது மாறுங்கள்.

மார்ச் 27, 2010

அரசு ஊழியர்கள்

கடந்த சில வாரங்களில் என்னை பாதித்த மூன்று சம்பவங்களும் அவற்றை பற்றிய எனது கருத்துகளும்

சம்பவம் 1
இடம் : கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னல்
நேரம் : காலை 8 மணி அளவில்

வழக்கம் போல் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன். சிக்னல் சிகப்பு விளக்கு காமித்தவுடன் , வண்டியின் இயக்கத்தை நிறுத்தி, சிக்னல் மாறுவதற்காக காத்துகொண்டு இருந்தேன். இதுவரைக்கும் வழக்கமா நடக்கறதுதான். ஒரு மாநகர பேருந்து எனக்கு பின்னே நின்றது. அந்த சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லை. இதை கண்ட டிரைவர், ஒலிப்பானை உபயோகபடுத்தி என்னை நகர சொன்னார். இன்னும் சிக்னல் மாறவில்லை. அதனால் நான் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தேன்.இத்தனைக்கும் சிக்னல்ல காமிச்சா நேரம் என்னவோ 30 விநாடிகள்தான். சிக்னல் மாறியவுடன் சிறிது சென்று என்னை கடந்து சென்றது பேருந்து , அப்பொழுது அந்த டிரைவர் கூறிய வார்த்தைகள் இங்கே கூற இயலாத அளவுக்கு கேவலமா இருந்தது.

அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு என்று சாலை விதிமுறைகள் உள்ளனவா? காவலர் இல்லை என்றால் சிக்னலில் நிற்காமல் செல்வது எந்த வகயில் நியாயம் ? இந்த சம்பவத்தில் நான் செய்த தவறுஎன்ன?

சம்பவம் 2
இடம் : மத்திய உணவு கழகம் , சென்னை பிராந்திய அலுவலகம்


கடந்த இரண்டு வாரங்களில் எனக்கு தெரிந்து மூன்று முறை தர்ணா போராட்டம் நடந்துச்சி. ஒவ்வொரு முறையும் சரியா காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்கு முடிச்சிட்டாங்க. போராட்டம் நடத்தறது அவங்க உரிமைன்னு சொல்லுவாங்க. அவங்க போராடட்டும் வேணாம்னு சொல்லல ஆனா அதை என் அலுவலக வேலை நாள்ல பண்ணனும்? ஒரு விடுமுறை நாளன்றோ இல்ல மாலை பணி நேரம் முடிந்தபுறமோ பண்ணலாமே?

சரி என்னமோ பண்ணிக்கோங்க அது உங்க ஆபீஸ், ஆனா பேசறேன் பேர்வழினு மைக் செட் போட்டுக்கிட்டு காதின பக்கத்தில இருக்கற அலுவலகத்தில இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாம்?

சம்பவம் 3

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி இருக்கறாங்க. இப்பதான் சமீபத்தில சம்பள உயர்வு தந்தாங்க . நல்ல கொடுக்கட்டும் வேண்டாம்னு சொல்லல . எந்த அடிப்படையில் இந்த உயர்வுகள் தரப்படுகின்றன ? எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் வேலை திறன் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே பதிவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தரப்படும். இப்ப ஒரு இரண்டு வருடமாக சில நிறுவனங்களில் பொருளாதார தேக்க நிலையின் காரணமாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை . இன்னும் பொருளாதார தேக்க நிலை முற்றிலுமாக சரியாகவில்லை. நிலைமை இப்படி இருக்கறப்ப அரசு ஓட்டை மட்டுமே குறிவைத்து இவ்வாறு உயர்வுகளை அளித்தால் நமது நாடு இன்னும் சில வருடங்களில் இன்று அமெரிக்கா எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையை சந்திக்க நேரிடும் .

Disclaimer :
இந்த பதிவு அரசு ஊழியர்களுக்கு எதிரான பதிவு அல்ல

மார்ச் 26, 2010

வேழம்

வேழம் பத்திரிகையின் இரண்டாவது இதழ் நாளை வெளியாகிறது. இந்த இதழில் புதியதாக ஒரு தொடர் கதை ஆரம்பிக்கிறது . காதுலும் சஸ்பென்சும் கலந்த கதை . அத்துடன் இரு சிறுகதைகளும் கவிதையும் இடம்பெற்றுள்ளன.

சந்தாதாராக பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உங்கள் விவரங்களை editor.vezham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
http://vezham.co.cc

மார்ச் 12, 2010

இதழில் கதை எழுதும் நேரம் I

இந்த மார்ச் மாதம் இரண்டு முக்கிய நிகழ்வுகள்.ஒன்று ஐ . பி . ல். மற்றொன்று வேழம் பத்திரிக்கை வெளியீடு .. நண்பர்களே நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருக்கும் வேழம் பத்திரிக்கை நாளை காலை 7 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.

பத்திரிக்கை வெளியாக உள்ள இணைய முகவரி http://vezham.co.cc

உங்கள் ஆதரவை தேடி

LK

மார்ச் 03, 2010

இதழில் கதை எழுதும் நேரம்

வணக்கம்.

இதுவரை வலைபதிவு மூலம் உங்களை சந்தித்து கொண்டு இருந்தேன். இதன் அடுத்த கட்டமாக ஒரு இலவச தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். இதுவரை எனது பதிவுகளை (மொக்கையா இருந்தாலும் ) படித்து பின்னூட்டம் இட்டு என்னை உற்சாக படுத்திய நீங்கள் எனது இதழுக்கும் உங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாதம் இருமுறை இவ்விதழ் வெளியாக உள்ளது. முதல் இதழை 13.03.2010 அன்று வெளியிட முடிவு செய்துள்ளேன். இதழ் பெயர் மற்றும் வெளியாகும் இணைய முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அனுப்ப வேண்டிய முகவரி editor.vezham@gmail.com

உங்கள் நண்பன்
கார்த்திக்