பிப்ரவரி 12, 2010

கல்லூரி நினைவுகள்

நமது இளமை பருவத்து நினைவுகளை மீண்டும் நினைத்து பார்ப்பதில் என்றும் ஒரு ஆனந்தம் ...நண்பர்களிடம் போட்ட சண்டைகள், அவர்களுடன் நாம் இருந்த அந்த தருணங்கள், கல்லூரியில் நாம் செய்த சிற்சில கலாட்டக்கள் .. இதை இங்கே பகிர்ந்து கொள்ள அழைத்த அமைதிசாரலுக்கு நன்றி...

நான் +2 படிக்கும் போதே முடிவும் பண்ணிட்டேன் பொறி இயல் படிப்பது இல்லை என்று .. அதுக்கப்புறம் +2 முடிச்சு ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வந்துச்சு . ஒரு வழியா திருசெங்கோட்ல இருக்கற செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில சேர்ந்தாச்சு .. தினமும் 100 கிலோ மீட்டர் பேருந்து பயணம். விடுதில சேர்க்க வேண்டாம்னு என்னோட உடன்பிறப்பு பண்ண சிபாரிசினால தினமும் பயணம் ...ஒரு கடுப்போடதான் இதுக்கு சம்மதிச்சேன் . ஆனால் அதுவே ஒரு சுகமாக மாறும்னு நினைக்க வில்லை ( உடனே பஸ்சில் ஒரு பொண்ணை பார்த்து டெய்லி காதல்னு முடிவு கட்டினா நான் பொறுப்பு இல்லை :D )

முதல் நாள் கல்லூரி போக சேலம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏற போனா, அந்த நேரத்துக்கு ஒரு தனியார் பேருந்துதான் . வேற வழி இல்லாம அதில ஏறினா என்னோட சீனியர்ஸ் எல்லாரும் உள்ளார இருக்காங்க.. அப்புறம்தான் விஷயம் தெரிஞ்சது. அந்த பேருந்து எங்க கல்லோரியோட அதிகாரபூர்வமற்ற கல்லூரி பேருந்துன்னு. மற்ற பயணிகளைவிட எங்களுக்கு கட்டணம் கம்மி.(அதுக்கே பாதி நேரம் டிக்கெட் எடுக்க மாட்டோம்) நான் பயந்தபடி பெருசா ராகிங்லாம் இல்லை. நான் கல்லூரியில் படித்த 3 வருடமும் எனக்கு என்னோட சீனியர்ஸ்தான் நெருங்கிய நண்பர்கள் ... வருடாவருடம் பெப்ரவரி 14 காதலர் தினம், ஆனால் எங்களுக்கோ அன்றுதான் பஸ் டே .அன்று தினமும் வரும் பிரயாணிகளுக்கு (regular customers ) டிக்கெட் இல்ல. (ஆனா பஸ் டே செலவுக்குன்னு ஒரு அமௌன்ட் வாங்கிடுவோம் :D) . ஓட்டுனர் , நடத்துனற்கு அன்று புது ஆடை மற்றும் ஒரு பரிசு உண்டு.( நாங்க பஸ்ல பண்ற அட்டகாசத்தை கண்டு கொள்ளாமல் இருக்க :D)

நான் படிச்சது இருபாலரும் பயிலும் கல்லூரியா இருந்தாலும் ஈசியா பொண்ணுங்ககிட்ட பேச முடியாது.. அப்படி ஒரு விதிமுறை அங்க.. (இப்ப எப்படின்னு தெரியாது).. வகுப்பறைல பேசலாம் அதுவும் தமிழ் இல்லை ஆங்கில வகுப்புனா முடியாது மற்றபடி கணிபொறி வகுப்புனா பிரச்சனை இல்லை..

மத்தபடி பிரதி பௌர்ணமி அன்று நடைபெறும் கவியரங்கம்தான் , கல்லூரில நம்ம சாகசத்தை கட்ட ஒரே வாய்ப்பு . அப்ப எழுதின கவிதைகள் இன்றும் பசுமையாக பல டைரிகளில் தூங்கி கொண்டு இருக்கிறது.. கல்லூரி காலத்தில் நாங்கள் செய்த சிலவற்றில் ஆலமர பஞ்சாயத்துகள் மறக்கமுடியாது. ஏற்கனவே சொன்ன மாதிரி நாம சீனியர்கூட சுத்திக்கிட்டு இருப்போம் . இதனாலயே நம்மள கண்ட பொண்ணுங்க எஸ்கேப் ஆய்டும் ..

கல்லூரியின் கடைசி நாள் என்னால மறக்க முடியாது . ஏன்னா , 6 மாசமா என்கிட்டே பேசாம இருந்த ஒரு நண்பன் அன்று பேசினான் ...

தொடர் பதிவு எழுத என்னை அழைத்த அமைதிசாரலுக்கு மீண்டும் ஒரு நன்றி

32 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

உங்க பஸ் டே நல்ல எஞ்சாய் பண்ணிருப்பீங்க போலிருக்கு.இனிமையானதுதான் பஸ் பயணம்.

ஆலமர பஞ்சாயத்துகளில் ஒன்னை எடுத்து விடுங்களேன். :-)))

சொல்ல மறந்தது... புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு.keep it up.(அதுக்காக பரண்ல போட்டுட வேண்டாம் :-))

LK சொன்னது…

//ஆலமர பஞ்சாயத்துகளில் ஒன்னை எடுத்து விடுங்களேன். :-)))

நன்றி ...ஆலமர பஞ்சாயத்து விவரம்லாம் இங்க வேண்டாம் அப்புறம் "A " போட்ருவாங்க ( அவ்ளோ வன்முறை உண்டு)

// புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு//

நன்றி.. அபப்டியே ஒட்டு போடவும் மறக்க வேண்டாம்

அண்ணாமலையான் சொன்னது…

மலரும் நினைவுகள சீக்ரம் ஆரம்பிங்க....

LK சொன்னது…

//புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு//

டெம்ப்ளேட் மட்டும்தான் கூகிள் தந்தது,. அதில மெனு சேர்த்தது நாந்தான்

@அண்ணாமலையான்

நீங்களும் எழுதலாமே

V.A.S.SANGAR சொன்னது…

ஒ நானும் இத மாதிரி போடுவம் எண்டுதான் இருதன் முந்திட்டிங்க

LK சொன்னது…

//ஒ நானும் இத மாதிரி போடுவம் எண்டுதான் இருதன் முந்திட்டிங்க//

இப்ப மட்டும் என்ன போடுங்க. வருகைக்கு நன்றி . மீண்டும் வருக

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

பஸ்டே சரி, அதென்ன Feb-14 ல கொண்டாடுறது?, இருந்தாலும் பழைய நினைவுகளை கிளறி எங்களையும் நினைக்க வைத்தமைக்கு நன்றி....

LK சொன்னது…

ராஜா அதை அந்த பழக்கத்தை ஸ்டார்ட் பண்ணவங்ககிட்ட கேக்கணும்

ஷங்கர்.. சொன்னது…

மத்தபடி பிரதி பௌர்ணமி அன்று நடைபெறும் கவியரங்கம்தான் , கல்லூரில நம்ம சாகசத்தை கட்ட ஒரே வாய்ப்பு . அப்ப எழுதின கவிதைகள் இன்றும் பசுமையாக பல டைரிகளில் தூங்கி கொண்டு இருக்கிறது.. கல்லூரி காலத்தில் நாங்கள் செய்த சிலவற்றில் ஆலமர பஞ்சாயத்துகள் மறக்கமுடியாது. //

அதெல்லாம் வெச்சிகிட்டு என்ன பண்றீங்க.. தூக்கி பதிவுல போடுங்க.. வரலாறு முக்கியமில்லையா..:))

பெயரில்லா சொன்னது…

//ஓட்டுனர் , நடத்துனற்கு அன்று புது ஆடை மற்றும் ஒரு பரிசு உண்டு.//

நிறைய ஓட்டுனர், நடத்துனர்கள் சந்தோஷமா பஸ் டே அன்னிக்கு இருக்கறத பாத்துருக்கேன்.

நல்லா இருக்கு

LK சொன்னது…

@shankar

ennoda palaya pathivugal silavatril irukum...

LK சொன்னது…

@chinna ammani
nammala daily safea kootikitu poitu vara conductor and driversku ethavathu pannanum. athan intha bus dayvoda basic idea. mathhapadi chennaila nadakarathu koncham overthan

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//நான் கல்லூரியில் படித்த 3 வருடமும் எனக்கு என்னோட சீனியர்ஸ்தான் நெருங்கிய நண்பர்கள் ...//

ஜூனியர்ஸ்க்கும் உங்களுக்கும் வெகுதூரம்ன்னு சொல்லுங்க

vinothamanavan சொன்னது…

பிரமாதம் .....கல்லூரி நினைவுகளை நினைத்து பார்க்க வைத்ததிற்கு நன்றி...

LK சொன்னது…

thanks vino

BalajiVenkat சொன்னது…

nice blog.. enna pala vishayatha nasuka marachu eluthitaru nu ninaikiren...:D

LK சொன்னது…

//enna pala vishayatha nasuka marachu eluthitaru nu ninaikiren//

public :D

Harini Sree சொன்னது…

நமது இளமை பருவத்து நினைவுகளை மீண்டும் நினைத்து பார்ப்பதில் என்றும் ஒரு ஆனந்தம் ...

ippa muthumai thazhuvi vittathunu othukareengala?? :P nalla pathivu! unga kalloori kavithaigalla silavatrai inga ezhuthalame! :)

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

LK in Autograph. Audience let us wait to find out who are those "Mallika, Gopika, and sneka". We already know who is "kanika".

Lk ji yeppadi sinnatha oru bomb pottoma, hahahahaha.

Pin kurippu : Indha samuga paniyil sera viruppam ullor vinnappikalam.

LK சொன்னது…

//ippa muthumai thazhuvi vittathunu othukareengala??//
actualy i should have put it as college days :)

ya will post..

LK சொன்னது…

@deshikan

kutti chatthan velaya katreengalae (JFF :) )

LK சொன்னது…

@suresh

appadi solla mudiyathu. en saga classmateskum enakum avlo nerukkam illai

தக்குடுபாண்டி சொன்னது…

//உடனே பஸ்சில் ஒரு பொண்ணை பார்த்து டெய்லி காதல்னு முடிவு கட்டினா நான் பொறுப்பு இல்லை //

LK உங்களோட தங்கமணி பதிவெல்லாம் படிப்பார்களா?? சும்மாதான் கேட்டேன்.....:)

LK சொன்னது…

//LK உங்களோட தங்கமணி பதிவெல்லாம் படிப்பார்களா?? சும்மாதான் கேட்டேன்.....//

@takkudu paandi

ohh yaa.. she will read. she has read my diaries already so no big deal

சசிகுமார் சொன்னது…

உங்கள் முயற்சி வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

thanks sasi

hayyram சொன்னது…

உங்கள் தளத்தின் நட்சத்திர மழை அழகாக இருக்கிறது.

அன்புடன்
ராம்.

LK சொன்னது…

Nandri RAM. please visit regularly

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல நினைவலைகள். ஆனா இன்னமும் பெரிசா எதிர்பார்க்கின்றேம். அந்தக் கவிதைகள் எல்லாம் அப்ப அப்ப பதிவுல எடுத்து விடுங்க. நன்றி எல் கே

LK சொன்னது…

நன்றி தல.. கண்டிப்பா.

Priya சொன்னது…

மலரும் நினைவுகள்....Nice one!

LK சொன்னது…

@பிரியா

வாங்க. முதல் முறை வரீங்க போல ... தொடர்ந்து வாங்க