Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஹரிஹர தேவாலயம்

ஹரிஹர தேவாலயம் ஒரு சில கோவில்களை பற்றி ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினேன். இப்ப மறுபடியும் ஒரு கோவில் பத்தி எழுத போறேன் ..இது ரொம்ப பெரிய ...

ஹரிஹர தேவாலயம்


ஒரு சில கோவில்களை பற்றி ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினேன். இப்ப மறுபடியும் ஒரு கோவில் பத்தி எழுத போறேன் ..இது ரொம்ப பெரிய கோவில் இல்ல கண்டிப்பா பாடல் பெற்ற ஸ்தலம் இல்லை. நான் பிறந்து வளர்ந்த செவ்வாய்பேட்டையில் (அதுவே சின்ன ஊர்தான்) கடைவீதி அருகில் இருக்கு. சேலத்தில பல பெரிய கோவில் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கோவில்தான்.



ஹரி+ஹரன் இரண்டு பேரும் இருக்கறதுனால ஹரிஹர தேவாலயம். கோவிலோட வரலாறுன்னு பார்த்தால் ஒரு 200 வருசத்துக்கு முன்னாடி கட்ட பட்ட கோவில்னு சொல்லலாம். இப்ப 2002 ல கும்பாபிஷேகம் நடைபெற்றது .( அரசாங்க அனுமதி வாங்கி பண்றதுக்குள்ள நாங்க பட்ட பாடு இருக்கே அதை ஒரு புத்தகமா போடலாம்). அதுக்கு முன்னாடி முழுவதும் கருங்கல்லால் கட்டபட்டிருந்த கோவில் இது. இப்ப சிமெண்ட் திருப்பணிதான் பண்ண முடிஞ்சது.

பிரதான வாயிலான வடக்கு வாயில் வழியா உள்ள வந்த முதல்ல நம்மள வரவேற்கறது வழம்சுழி விநாயகர். அவரை வணங்கிட்டு அடுத்து சனீஸ்வரன் .நம்ம வாழ்க்கைல இவருக்கு பெரும்பங்கு இருக்கரதுனால இவருக்கு தனியா ஒரு இடம் கொடுத்து இருக்காங்க. அவருக்கு அடுத்து சூர்யன் மற்றும் சந்திரன். அப்புறம் காயத்ரி தேவி மற்றும் ஆதி சங்கரர் . இவங்களை வணங்கிட்டு உள் மண்டபம் போவோம்

கோதண்டபாணி

உள் மண்டபத்துல வடக்கு பார்த்த சன்னதியில் சீதா,லக்ஷ்மண அஞ்சநேய சகிதமா காட்சி அளிக்கிறார் ஸ்ரீராமன். பழைய சிலை என்பதாலோ என்னமோ சீதையின் முகம் மிக அருமையாக உள்ளது.. ஸ்ரீராமருக்கு நேர் எதிர் பக்கம் அவரை வணங்கியவாறு பக்த ஆஞ்சநேயர் ....

ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வலப்புறம் யோக நரசிம்மர் மற்றும் சுதர்ஷன மூர்த்தி ....(கோவில் திருப்பணி நடந்தபோது பிரதிஷ்டை செய்யப்பட்டது)

விஸ்வநாதர்

மேற்கு பார்த்த சந்நிதியில் லிங்க ரூபத்தில் நமக்கு அருள் பாலிப்பது விஸ்வநாதர் . சந்நிதிக்கு நேர் எதிரில் பெரிய நந்தி (பிரதோஷ அபிஷேகம் இவருக்குத்தான், இவரும் கோவில் திருப்பணி நடந்தபோது கோவிலுக்கு புதுசா வந்தவர்தான்). கர்ப்பக்ருகத்தின் முன்னால் மற்றுமொரு விநாயகர் . மூலவர் பாணலிங்கம் என்பதால் ஒரு விநாயகர் இருக்கணும் என்ற விதிப்படி இவர் இங்க இருக்கார்..

சிவன் சந்நிதியின் வலப்புற சுற்றில் வடக்கு பார்த்தவாறு துர்க்கை கிழக்கு பார்த்தவாறு லிங்கோத்பவர் , தெற்கு பார்த்தவாறு தக்ஷினாமூர்த்தி.

விசாலாக்ஷி

சிவன் சந்நிதயின் வலப்புறம் தெற்கு நோக்கி நின்று நமது கோரிக்கைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க கனிந்த முகத்துடன் அன்னை விசாலாக்ஷி வீற்றிருக்கிறாள். இங்கு அம்ப்ளிடம் வேண்டியது கிடைக்கும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தினமும் அம்பாள் சந்நிதி முன் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமம் படித்தால் நாம் வேண்டியதை அடையாளம்.(இது யாரும் சொல்லி கேட்டது இல்லை. நான் படிச்சு கேட்டது கிடைச்சு எழுதறேன் ).

அம்பாள் சந்நிதிக்கு வலப்புறம் வடக்கு நோக்கியவாறு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன். அவரை வணங்கி வெளி பிரகாரத்தில் பிரவேசித்தால் ஸ்ரீ அய்யப்பன் . அவருக்கு அடுத்தபடியா பிரம்மாண்டமாக நின்று கொண்டு இருப்பது கோவிலின் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவர் . தேய் பிறையில் வரும் அஷ்டமியன்று இவருக்கு அபிஷேகம் விஷேசமாக செய்யபடுகிறது ....இவருக்கு எதிர்பக்கம் நவக்ரக சந்நிதி.

முக்கிய விழாக்கள்

விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி ஸ்ரீராம நவமி வரைக்கும் அனைத்து முக்கிய விழாக்களும் உண்டு...

ஸ்ரீராம நவமி

சித்திரையில் வரும் ஸ்ரீராம நவமி இங்க ரொம்ப விஷேசம். பொதுவா ராம நவமி 2 விதமா செய்வாங்க.. ஒன்னு பஜனை சம்ப்ரதாயம் இன்னொன்னு வைதீக சம்ப்ரதாயம் . இந்த கோவில்ல இந்த 2 சம்பிரதாயத்தையும் கலந்து செய்யறாங்க ... திருகல்யாணத்திற்கு முதல் நாள் வரை வைதீக சம்ப்ரதாயம். கல்யாணம் முதற்கொண்டு ஆஞ்சநேயர் உற்சவம் வரை பஜனை சம்ப்ரதாயம்.

கல்யாணம் ஆகாத பெண்கள்/ஆண்களின் பெற்றோர் இங்கு வேண்டிக்கொண்டு அவர்கள் மகன்/மகளின் திருமணம் நடைபெற்றால் அடுத்த வருட கல்யாண உற்சவ செலவை ஏற்றுகொள்கிறார்கள்.


புகைப்படம் எதுவும் என்னிடம் இப்ப கைவசம் இல்லை. அடுத்த முறை செவ்வை செல்லும் பொழுது புகைப்படம் எடுத்து பதிவை புதுப்பிக்கறேன்..

மார்க்கம்

சேலம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம்தான் போகணும்.

6 கருத்துகள்

vinothamanavan சொன்னது…

மூலவர் பாணலிங்கம் என்பதால் ஒரு விநாயகர் இருக்கணும் என்ற விதிபதி இவர் இங்க இருக்கார்..
ஒரு மண்டலம் (48 நாட்கள்) தினமும் அம்பாள் சந்நிதி முன் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமம் படித்தால் நாம் வேண்டியதை அடையாளம்.(இது யாரும் சொல்லி கேட்டது இல்லை. நான் படிச்சு கேட்டது கிடைச்சு எழுதறேன் ).

chamse illa nanna anubavichu ezhuditirukkel

unga eluthuleye ungalukku. andha kovil mela ulla aasai nanna theriyarathu! well done.

regards
vinoth

Harini Nagarajan சொன்னது…

romba naal kazhichu nalla pathippu! adutha murai salem ponaa kandipa visit panren! :)

எல் கே சொன்னது…

thanks vino. yes i love to go to that temple and sit there for hours..

@harini

sure kandipa visit pannanum

imcoolbhashu சொன்னது…

It is very informative.Write more about the tembles in and out of Salem district.I have visited your blogs many times, but never gave comment.My son liked your photo blog.

எல் கே சொன்னது…

//It is very informative.Write more about the tembles in and out of Salem district.I have visited your blogs many times, but never gave comment.My son liked your photo blog//

is it so thanks.. i will write about other temples in salem in coming blogs. please do leave comment

Bhushavali சொன்னது…

Ahaa... Thala enna kalakkarel... Thanks for the info on this temple thala... Would try to visit sometime.. :)

Me and my Mannequin!!! - Fashion Panache
Interview at Speakbindas - My Travelogue