டிசம்பர் 24, 2009

நான்காவது தூண்

நான்காவது தூண்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீடியானு சொல்றாங்க. நடைமுறைல இது எப்படி இருக்கு . மீடியா அவங்க கடமைய ஒழுங்கா பண்றாங்களா இல்லையா ???

மீடியால இப்ப 3 பிரிவு இருக்கு . ஒன்னு செய்திதாள் , ரெண்டாவது செய்தி தொலைகாட்சிகள், கடைசியா இணைய செய்தி தளங்கள்.

செய்திதாள்கள்

இவங்களுக்கு நாடு எப்படி பட்ட நிலைமைல இருந்தாலும் பரவாயில்லை , ஆனா இவங்க பேப்பர்க்கு பரபரப்பான செய்தி வேணும்.. எப்படி பட்ட செய்தி??? நடிகை பரபரப்பு பேட்டி!! இல்லேன்னா இந்த தலைவரும் அவரும் சந்திப்பு கூட்டணியில் மாற்றம் வருமா? என்னமோ இவன்தான் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி எழுதுவான்.. சரி எதோ விசயம் இருக்கும் போலன்னு நீங்க வாங்கி படிச்சா ஏமாந்து போவீங்க .. அந்த 2 தலைவர்களும் எதாவது விமான நிலையத்தில பார்த்துகிட்டு ஒரு ஹாய் சொல்லிடு போயிருப்பாங்க . நம்ம ஆளுங்க அத ஒரு தலைப்பு செய்தியா போட்ருவாங்க .. நாம்தான் காச வேஸ்ட் பண்ணுவோம் அத வாங்கி

அரசாங்கம் தப்பு பண்றப்ப அதை தட்டி கேட்பதுதான் பத்திரிகை தர்மம் .. எத்தனை பேர் அதை செய்கின்றனர்? அவனோட பிசினஸ் நல்லா நடந்தா போதும்.. நாடு எப்படி போன அவனுக்கு என்ன?
நாம்தான் இந்த பத்திரிகை நடு நிலைமை தவறாம இருக்குனு டீ கடை பென்ச்ல உக்காந்து பேசிகிட்டு இருப்போம்.

செய்தி தொலைகாட்சிகள்

இவங்க தொல்லை சொல்லி மாளாது .. 24 மணி நேர செய்திகள் என்னிக்கு ஸ்டார்ட் ஆச்சோ அன்னிக்கு இந்தியாக்கு பிடிச்சது சனி ... ஆமாம் . ஆனா ஊனா ஒரு வண்டிய எடுத்துகிட்டு வந்துர வேண்டியது ... அதுல ஒரு 25 - 30 வயசுல இருக்கற ஒரு பொண்ணு கூட ஒரு கேமரா ... ஒன்னும் இல்லாத விசயத்த எப்படி ஊத்தி பெருசு பண்ணனும்னு இவங்ககிட்டதான் கத்துக்கணும் ..

மும்பைல தாஜ்ல நம்ம கமண்டோஸ் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க ... இவங்க ரொம்ப முக்கியமா கமண்டோஸ் எங்க போறாங்க , வேற எதாவது கமண்டோஸ் குழு வருதா சண்டை போடணு கிரிக்கெட் மேட்ச் ரன்னிங் கமெண்டரி கொடுத்துகிட்டு இருக்காங்க... இதுல கொடுமை என்னன்னா இது அவங்க கடமை எதுவும் தப்பு இல்லைன்னு சாதிச்சங்க ஒருத்தங்க .. அது யாருன்னு எல்லாருக்கும் தெரியும் .. அதனால நான் அதை இங்க சொல்லல

அப்புறம் 9 மணிக்கு மேல பார்த்த சில பல விவாதங்கள் நடக்கும். முடிவா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. வந்து பேசினதுக்கு நன்றின்னு போனை கட் பண்ணிடுவாங்க.. கட்சிகாரனும் போய்டுவான்.. ஆனா நம்ம அதை நாலு நாளைக்கு பேசிட்டு இருப்போம்...

தேர்தல் கணிப்புகள்

இதுதாங்க செம காமெடிய இருக்கும். நம்ம வானிலை அறிக்கை கூட பலிச்சிரும் ஆனா இவங்க தேர்தல் அறிக்கை பலிக்காது..ஒரே சிட்டில நாலு தொலைக்காட்சி எடுக்கற கணிப்பும் 4 விதமா இருக்கும் ..எப்படியும்
இவங்க கணிப்பு பலிக்காது .. அதுக்கும் ரெடியா வச்சிருப்பாங்க காரணத்தை .. இவருடைய கடைசி நேர பிரச்சாரம் மாற்றிவிட்டது/ ஆளும் கட்சிக்கு எதிரான அலை(இது கணிப்பு எடுக்கறப்ப இவனுக்கு தெரியாதா!!??) .. இப்படி எதாவது ஒன்னு சொல்லி தேர்தல் கணிப்பை முடிச்சிருவாங்க ..

நீங்க பார்த்து இருப்பீங்க , உங்க டிவில கீழ ஒரு லைன் ஓட ஆரம்பிக்கும் Breaking நியூஸ்... ஒரு சில காலம் அது நாள்தான் இருந்துச்சி ஆனா எப்ப இவங்க மீடியாவோட கடமைல இருந்து மாறி TRP Ratingskaga வேலை செய்ய ஸ்டார்ட் பண்ணன்களோ அன்னிக்கு பிடிச்சது சனி ...இவர் கார்ல ஏறினர் அவர் விமானத்தை இறக்க சொன்னார் .. இதெல்லாம் ஒரு செய்தியா??? அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இத பத்தி ஒரு மணிநேரம் விவாதம் வேற நடக்கும்....


மீதம் அதுத்த பதிவில்

10 கருத்துகள்:

vinothamanavan சொன்னது…

Saavadiyaana post.. LK.. Romba serious aana all thaan LK........

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

நல்ல செய்தி படிச்சு ஒன்னும் ஆகபோவதில்லை....காரணம் படிச்சு பார்க்க வேண்டியவனுக்கு தெரிஞ்சாலும்....காட்டிக்க மாட்டான்

வல்லிசிம்ஹன் சொன்னது…

வெகு யதார்த்தமான பதிவு.
அலுத்துப் போய்விட்டது செய்திகளைப் பார்த்து. அதுக்கு டிஸ்கவரியும்,கார்டூன் நெட்டும் பார்த்துட்டுச் சும்மா இருக்கலாம்.
இதற்குத்தான் மின்வெட்டு ஒரு ஆசீர்வாதம்னு சொன்னீர்களா.:)

LK சொன்னது…

//இதற்குத்தான் மின்வெட்டு ஒரு ஆசீர்வாதம்னு சொன்னீர்களா.:)//

amam.. nan only sportsthan pakkarathu

LK சொன்னது…

//காரணம் படிச்சு பார்க்க வேண்டியவனுக்கு தெரிஞ்சாலும்....காட்டிக்க மாட்டான்//

athan indiavoda problem

LK சொன்னது…

//Romba serious aana all thaan LK........
//
tappa edaipodathenga

geethasmbsvm6 சொன்னது…

மெகா சீரியல் பத்தி எழுதவே இல்லையே??? அதில்லை முக்கியம்???

geethasmbsvm6 சொன்னது…

follow up

LK சொன்னது…

//மெகா சீரியல் பத்தி எழுதவே இல்லையே??? அதில்லை முக்கியம்???//

இந்த பதிவு முக்கியமா செய்தி தொல்லைகாட்சிகளை பத்திதான்... அதனால மெகா சீரியல் பத்தி எழுதல

Pradeep Venkat சொன்னது…

gud one lk.... sila news channel la oru satharana vishayatha appadiye hype kuduthu pesuvaanunga ennamo marunal ulagam azhiya pora mathiri... vara vara news ku etha mathairi nalla bgm vera tharanunga :P